Thursday, 1 December 2016

இலவச காப்பீடு உள்ளிட்ட சிறந்த சேவையை வழங்கும் 'ரூபே' கார்டு என்றால் என்ன..?


'ரூபே' என்பது ரூபாய் மற்றும் வழங்குதல் ('பே'மெண்ட்) என்ற இரு வார்த்தைகளின் கூட்டினால் கிடைக்கும் வார்த்தையாகும். ரூபே-வின் விஷவில் அடையாளங்கள் நவீனமாகவும் மற்றும் வேகமானதாகவும் உள்ளன.வீசா,மாஸ்டர் கார்டு போன்றது, கேஸ்லெஸ் ட்ரான்ஸ்சாக்ஸன்..

பிரதமரின் தண் ஜன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட அனைத்து வங்கி கணக்காளர்களுக்கு ரூபே அட்டையை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் சிறு சதவீதம் ரூபே அட்டையை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய தயாரிப்பு
இந்தப் பணப் பரிவர்த்தனை அட்டை இந்திய தயாரிப்பு என்பதால் இப் பணஅட்டையைக் குறைந்த செலவில் பெற முடியும். இந்த அட்டையின் சேவைகளும் சிற்பாக உள்ளது.
அன்னிய நிறுவனங்களிடம் ஒரு சேவை பெறும்போது பெரும் தொகை செலவிடப்படுகிறது. ரூபே கார்டுகளைப் பயன்படுத்தும் போது பெரும் பகுதி பணம் சேமிக்கப்படுவதுடன் அன்னிய நிறுவனங்களுக்கு இணையான சேவையும் கிடைக்கிறது.
விபத்துக் காப்பீட்டு
இந்த அட்டையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் எந்தவித கட்டணத்தையும் செலுத்தாமலேயே ரூ.1 இலட்சத்திற்கான விபத்துக் காப்பீட்டினைப் பெறுகிறார்.
இண்டர்நெட் பாங்கிங்
====================
இணையவழி பரிவர்த்தனைகள் மட்டுமல்லாமல் ஒரு தனித்தன்மையான ஷாப்பிங் அனுபவத்தையும் ரூபே அட்டையை வைத்திருப்பவர்கள் பெறுவார்கள். ரூபே அட்டையை அனைத்து ATM இயந்திரங்களிலும் மற்றும் பெரும்பாலான வணிக நிறுவனங்களின் விற்பனை புள்ளிகளிலும் பயன்படுத்த முடியும். மேலும், இணைய வழி பரிவர்த்தனைக்கும் பயன்படுத்த முடியும்.
கான்டெக்ட்லெஸ்
=================
புதுமையான பணப் பட்டுவாடாவிற்கான வாய்ப்புகளான தொடர்பில்லாத வழிநடத்துதல் (Contactless to facilitate) மற்றும் மின்னணு முறையில் சிறிய டிக்கெட் பேமண்ட்களின் செயல்வேகத்தை அதிகரித்தல் போன்றவற்றை நல்ல உறுதியுடன் ரூபே வழங்குகிறது.

தரமான சேவை
==============

அடுத்தச் சில வருடங்களில் விசா மற்றும் மாஸ்டர் அட்டைகளை நீங்கள் பயன்படுத்துவதைப் போலவே ரூபே அட்டைகளையும் உங்களால் எளிமையாகவும் மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் பயன்படுத்த முடியும் சூழல் உருவாகி உள்ளது.

No comments:

Post a Comment