Sunday, 26 June 2016

பிரபாகரன் தலையில் கோடரியால் கொத்தியது யார்..?

polpot3
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரை புலிகளின் புலனாய்வு பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானே படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கின்றார் என அரசியல் அவதானிகளில் ஒரு சாரார் சந்தேகிக்கின்றனர்.
அரசியல் அவதானிகளில் ஒருவரான சித்திரெஜினா என்பவரால் எழுதப்பட்டு இருக்கின்ற கட்டுரை, இக்கட்டுரையில் முன்வைக்கப்பட்டு இருக்கின்ற ஊகங்கள் இது போன்ற சந்தேகங்களை நியாயப்படுத்துவனவாகவும், வலுப்படுத்துவனவாகவும் உள்ளன.
கட்டுரையின் முதலாம் பாகத்தை உங்கள் வாசிப்புக்கு தருகின்றோம்.
“ சுமார் 38 வருடங்களுக்கு முன்.. பங்காளதேஷின் விடுதலை தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானுடன் அவரது 11 வயது பாலகன் ஷேக் றூசல் கொல்லப்பட்டது போலவே.. சுமார் 4 வருடங்களுக்கு முன்.. தமிழீழ விடுதலை தலைவர் பிரபாகரனுடன் அவரது 12 வயது பாலகன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டிருக்கிறான்.. அன்றும் இன்றும் இந்த‌ படுகொலைகள் நடந்த போது ஒன்றுமறியாத இந்த பச்சைப் பாலகர்களும் ஈவிரமிக்கமில்லாமல் கொல்லப்பட்டது மனித நேயத்தின் அடிப்படையில் ஒரு பஞ்சமா பாதகச் செயல் என்பதை எவராலும் மறுக்க முடியாது..
ஆனால் தன் எதிரியை அழிக்கும்போது.. எதிர்காலத்தில் தனக்கு இந்த குடும்பத்தில் எஞ்சியிருக்கும் யாராவது ஒருவரால் ஆபத்து நேரிடும் என்பதற்காக அவர்களையும் அந்த‌ எதிரியுடன் சேர்ந்தே அழிப்பது.. இன்று நேற்றல்ல அன்றைய மன்னர் காலத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு கொடூரமான‌ வழிமுறையாகும்.. தங்கள் எதிர்கால பாதுகாப்புக்காக‌ இப்படிப்பட்ட மனித நேயமற்ற படுகொலைகளை அன்றைய மன்னர்கள் தாராளமாகவே அரங்கேற்றியிருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக‌ இலங்கை இந்திய மன்னர் வரலாறுகளில் பல சம்பவங்கள் பதியப்பட்டிருக்கின்றன..
பிரபாகரனின் படுகொலை விடயத்தில்.. அவரை கொலை செய்தது இலங்கை இராணுவம்தான் என்பதற்கு கண்கண்ட சாட்சிகளோ அல்லது வலுவான ஆதாரங்களோ ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் இருப்பது போல.. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனையும் இலங்கை இராணுவம்தான் கொலை செய்தது என்பதற்கும் கண்கண்ட சாட்சிகளோ அல்லது வலுவான ஆதாரங்களோ எதுவும் இல்லை..
balachandran-1
ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவரை இலங்கை இராணுவம்தான் கொலை செய்தது என்பதை இலகுவில் நிரூபித்துவிட‌ முடியாது.. அதை நிரூபிப்பதற்கு மேலும் பல வலுவான‌ ஆதாரங்கள் தேவை.. சில வேளைகளில் இந்த படுகொலைகளை பிரபாகரனுடன் கூட இருந்த‌ புலிகள்கூட செய்திருக்கக் கூடிய வாய்ப்புகளும் இருந்திருக்கின்றன‌..
இப்படிப் பார்க்கும்போது அந்த படுகொலைகளை செய்தது யார்? புலிகளா அல்லது இலங்கை இராணுவமா? என்ற சர்ச்சை உருவாகி விடுகிறது.. இவைகள் பக்கச் சார்பற்று மிக நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகும்…
பிரபாகரன் உயிர் வாழ்ந்த காலத்தில்.. அவருக்கு இலங்கை இராணுவம் மட்டுமே எதிரியாக இருந்திருக்க‌ வில்லை.. அவருக்கு அவர் தலைமை தாங்கியிருந்த விடுதலை புலிகள் இயக்கத்திற்குள்ளும் அவரை ஒழித்துக் கட்டி.. அந்த பதவியை பறித்துக் கொள்ள தாராளமாக‌ எதிரிகள் பலர் இரகசியமாக இயங்கிக் கொண்டுதான் இருந்தார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன‌…
ஆகவே அப்படிப்பட்ட‌ புலிகளுக்குள் இயங்கிக் கொண்டிருந்த இரகசிய புலிக் குழு ஒன்றே போரின் இறுதிக் கட்டத்தில் பிரபாகரனையும் பாலச்சந்திரனையும் படுகொலைகளை செய்திருக்கக் கூடிய வாய்ப்புகளும் இருந்திருக்கின்றன….
பிரபாகரன் புலிகளால் கோரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கு அவர் கொலை செய்யப்பட்டிருக்கும் பாணியை வைத்து ஊகிக்க முடியும்.. போரில் கொல்லப்பட்ட மற்றைய புலி உறுப்பினர்கள்போல்.. அவர் யுத்தத்தில் ஈடுபட்டு குண்டடி பட்டு இறந்திருக்கக் கூடிய எந்த தடயங்களும் அவரது இறந்த உடலில் காணப்படவில்லை..
ஆனால் தலையில் மட்டும் கோடரி ஒன்றினால் ஆழமாக கொத்தப்பட்ட ஒரு பெருங்காயம் மட்டுமே காணப்பட்டது.. அப்படியானால் அவரை யாரோ உயிருடன் பிடித்து சித்திரவதை செய்து.. இப்படி அவரது தலையில் கோடரி ஒன்றினால் கொடூரமாக‌ கொத்தி கொலை செய்திருக்கலாம் என்று கருத‌ இடமிருக்கிறது.. ..
இந்த கூற்றை நீரூபிக்க‌.. ஒரு பெண் போராளியாக புலிகளுடன் வாழ்ந்த ஒரு முன்நாள் பெண்புலி எழுதியிருந்த ஒரு புத்தகத்தில் இருந்து ஒரு சம்பவத்தை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.. அதற்கு முன் இந்த புத்தகத்தை எழுதியவரின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அவரைப் பற்றி சில வரிகள் எழுத வேண்டியது இங்கு அவசியமாக இருக்கிறது…
1987 ம் ஆண்டு தனது 17 வயதில் .. இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் காலூன்றி இருந்த காலப் பகுதியில்.. விடுதலை புலிகளின் பிரச்சாரத்தில் மயங்கி.. தனது குடும்பத்தை.. கான்வென்ட் படிப்பை துறந்து.. புலிகள் அமைப்பில் சேர்ந்து கொண்டார் அந்த இளம் பெண்.. அவர்களுடன் பல வருடங்கள் பெண் போராளியாக கடமையாற்றிய காலப் பகுதியில்.. அவர்கள் கொடுமைகள் பலவற்றை நேரில் கண்டு.. அவர்களது வன்முறை தமிழீழத்திற்கு வழிகாட்டாது என்பதை உணர்ந்து.. அதிலிருந்து விலகி இந்தியாவிற்கு சென்று.. பின்னர் அங்கிருந்து அவுஸ்திரேலேயா சென்று.. அங்கு சட்டப்படிப்பு படித்து தற்போது ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறார்..
திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான இவர்.. புலிகளுடன் வாழ்ந்த காலங்களில் தான் நேரில் கண்ட பல காட்சிகளை.. அனுபவங்களை.. “நிரோமி டி சொய்சா” என்ற புனைபெயரில் ஒரு புத்தகமாக‌ வெளியிட்டிருக்கிறார்.. பெண் புலிகள் (Tamil Tigress) என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் அந்த புத்தகத்தில் இடம்பெறும் ஒரு சம்பவம்தான் பிரபாகரனை புலிகள் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தை உருவாக்க காரணமாயிருக்கிறது..
இவர் புலிகளை மட்டுமே விமர்சித்தவர் அல்ல.. இவர் இலங்கை அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்தவர்.. குறிப்பாக‌ வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் இலங்கை அரசாங்கள் இழைத்த குற்றங்களையும் தைரியமாக சுட்டிக் காட்டியவர்…. இவரது இந்த புனை பெயரான “நிரோமி டி சொய்சா” கூட.. ஒரு தமிழ் தாய்க்கும் சிங்கள தந்தைக்கும் பிறந்தவரான‌ ஒரு முன்னணி ஊடகவியாலாளரும் மனித உரிமைசெயற்பாட்டாளரும்..
மகன்களை இழந்த தாயார் என்ற சங்கத்தை ஆரம்பித்து மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவரான ரிசார்ட் டி சொய்சா என்ற ஊடகவியலாளர் 18 பெப்ரவர் 1990 ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாசாவின் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டத்தை கண்டித்து.. அவரது ஞாபகார்த்தமாகவே தனது பெயரையும் “நிரோமி டி சொய்சா” என்று வைத்துக் கொண்டார்..
ஆகவே இவர் எழுதியிருக்கும் பெண்புலிகள் என்ற அந்த ஆங்கில நாவல் பக்க சார்பற்றது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது…. எனவே இதில் அவர் குறிப்பிட்டிருக்கும் சம்பவங்கள் நம்பகத்தன்மை கொண்டவை.. இந்த புத்தகத்தில் இவர் குறிப்பிட்டிருக்கும் அந்த சர்ச்சைக்குரிய‌ சம்பவம் இதுதான்..
“ஒருநாள் பிற்பகல்.. யாழ்ப்பாணத்தில் சுதுமலையில் நானும் எனது புலி நண்பர்களும்.. இருந்த சமயத்தில்..”நான் அதைச் செய்யவில்லை.. நான் அதைச் செய்யவில்லை” என்று அலறிக் கொண்டிருந்த‌ வெள்ளை எனப்படும் இளம் புலி உறுப்பினர் ஒருவரை.. சில ஆண் தோழர்கள் உதைத்து வதைத்து சித்திரவதை செய்து கொண்டிருந்ததைக் கண்டோம்..
வெள்ளையை இந்திய இராணுவத்தின் ஒற்றனாக குற்றம் சுமத்தி.. தோள்வரை மண்ணில் புதைத்து சைனைட்டை விழுங்கும்படி சில சிரேஸ்ட புலி உறுப்பினர்கள் பலவந்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்…. அது அவனை என்ன செய்யும் என்று பார்ப்பதற்காக.. நானும் சில பெண் புலி உறுப்பினர்களும் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தோம்..
கடைசியாக “கொரில்லா ஜஸ்டின்” என்னும் ஒரு புலி போராளி.. வெள்ளையின் தலையில் கோடரியால் ஒரு போடுபோட்டார்.. அவ்வளவுதான் அங்கே கூடி நின்ற மற்றைய புலி போராளிகள் எல்லோரும் கொல்லென்று சிரிப்பொலி எழுப்பினார்கள்.. அவர்களைப் பொறுத்தளவில் வெள்ளையை கொல்வதற்கும் கரப்பான் பூச்சியைக் கொல்வதற்கும் வித்தியாசம் எதுவும் கிடையாது என்று அந்த‌ கொலையாளிகளைப் பற்றி நிரோமி குறிப்பிட்டிருக்கிறார்….
சுமார் 25 வருடங்களுக்கு முன் நடந்த இந்த சித்திரவதை கொலையில் இருந்து‍.. புலிகள் அமைப்புக்குள் இப்படிப்பட்ட ஒரு கொலை வழிமுறை இருந்திருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது.. ஆகவே போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரன் பலமிழந்து போயிருந்த நிலையில்.. புலிகளின் தலைமைப் பதவி மேல் குறி வைத்திருந்த ஒரு சிரேஸ்ட உறுப்பினர் குழுவொன்று.. அவரை இப்படி கோடரியால் தலையில் கொத்தி கொலை செய்யும் தங்கள் பழைய பழி வாங்கும் பாணியை கையாண்டு அவரின் கதையை முடித்திருக்கலாம்…
பிரபாகரன் இறந்த சமயத்தில்.. அவரது உடல் பல வடிவங்களில் புகைப் படங்களாக வெளி வந்திருந்தது.. அதில் எது முதலில் எடுக்கப்பட்டது என்பது எவருக்குமே ஊகிக்க முடியாதபடி இருக்கிறது.. இதில் ஒரு படத்தில் உடல் முழுவதும் சாம்பல் நிற மண் பூசியபடி வெறும் கோவணத்துடன் காட்சியளிக்கும் படமும் வெளியாகியிருந்தது.. சில வேளைகளில் இதுவே பிரபாகரனின் உடலை முதன் முதலில் எடுக்கப்பட்ட படமாகவும் இருக்கலாம்..
ஏனெனில் நிரோமி டி சொய்சா விபரித்த சம்பவத்தில்.. வெள்ளை என்ற‌ அந்த வாலிபனை முதலில் மண்ணில் புதைத்து.. சயனைட்டை விழுங்க வைத்து இறுதியில்தான் தலையில் கோடரியால் கொத்தினார்கள் என்று குறிப்பிடுவதை வைத்துப் பார்க்கும்போது.. பிரபாகரனையும் அன்று வெள்ளையை கொலை செய்த அதே பாணியில் அவரை ஆடையில்லாமல் வெறும் கோவணத்துடன் மண்ணில் புதைத்து.. சயனைட்டை விழுங்க வைத்து.. இறுதியில் கோடரியால் தலையில் கொத்தி கொலை செய்திருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது…
மேலும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் வன்னியில் சதா குண்டுகள் விழுந்து வெடித்துக் கொண்டிருந்தால்.. அந்த பிரதேசம் முழுவதும் நெருப்பும்.. புகையும்.. கரியுமாகவே காட்சியளித்தது.. அப்படிப்பட்ட ஒரு மண்ணில் பிரபாகரனை புதைத்து இப்படி கொலை செய்திருந்தால்.. அவர் உடலில் நிட்சயமாக இப்படிப்பட்ட‌ கருமை பூத்த சேற்று மணல் ஒட்டிக் கொள்ளும் சாத்தியம் இருந்திருக்கிறது….
மேலும் பிரபாகரனை தாங்கள்தான் கொலை செய்தோம் என்று இலங்கை இராணுவம் உறுதி செய்ததில்லை.. சில போராளிகளுடன் அவர் தப்பொயோடும்போது குண்டொன்று வெடித்துச் சிதறியதால் மரணமடைந்தார் என்றும்.. பின்னர் அவரது உடல் நந்திக் கடல் ஓரமாக கண்டெடுக்கப்பட்டது என்றும்தான் கூறப்பட்டது..
மேலும் பிரபாகரன் கொலை செய்யப்பட்டதை உலகிற்கும் உறுதிப்படுத்தி அடையாளம் காட்டும் முகமாக.. முகச்சவரம் கூட செய்யப்படாத நிலையில் இருந்த பிரபாகரன் உடலுக்கு முகச் சவரம் செய்து புலிகளின் சீருடை தரித்து புகைப்படமும்.. வீடியோ காட்சிகளும் எடுக்கப்பட்டிருக்கலாம்.. மேலும் வெள்ளை என்ற வாலிபனுக்கு முதலில் சயனட் கொடுத்ததுபோல் பிரபாகரனுக்கும் சயனைட் கொடுக்கப்பட்டிருக்கிறதா.. என்பதை உறுதிப்படுத்த அவர் உடலில் எந்த விதமான‌ பிரேத பரிசோதனைகளும்நடத்தப்படவில்லை.. சில வேளைகளில் அது மிகவும் இரகசியமாக நடத்தப்பட்டிருக்கலாம்..
மேலும் அந்த உடல் நந்திக் கடலில் கிடந்து கண்டெடுக்கப்பட்டதாக கூறுமிடத்தில்.. பிரபாகரன் அணிந்திருந்த அந்த யூனிபோர்மில் தண்ணீரில் ஊறிய எந்த அடையாளமும் காணப்படவில்லை‍‍.. அது கசங்காமல் மிகவும் நேர்த்தியாக இருந்தது இங்கே குறிப்பிடத் தக்கது..
பிரபாகரன் புலிகளால் கொல்லப்பட்ட விபரம் சிலவேளை இலங்கை அரசாங்கம் அறிந்திருந்தாலும் அதை வெளியில் சொல்வதற்கு தயக்கமே காட்டும்.. காரணம் பிரபாகரனை புலிகள்தான் கொன்றிருக்கிறார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டால்.. அதனால் தங்கள் வெற்றியின் இமேஜ் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்திலும் அந்த விவகாரம் மறைக்கப்பட்டிருக்கலாம்…. அதனால்தான் பிரபாகரன் தப்பியோடும்போது குண்டு வெடித்து மரணமடைந்தார் என்று இலங்கை அரசாங்கம் கூறியிருக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன..
நடந்து முடிந்த இந்த போரில் முக்கியமாக கவனிக்கப் வேண்டிய இன்னொரு விடயமும் இருக்கிறது.. .இந்தப் போரில் கொல்லப்பட்டவர்களின் பட்டியலில் புலிகளின் புலனாய்வு தலைவர் பொட்டமானின் பெயர் இடம் பெற்றிருந்தாலும்.. அவர் இறந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.. ஆகவே அவரேதான் பிரபாகரனின் அந்த பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அவரை கொன்றுவிட்டு தனது கூட்டத்தினருடன் தப்பிச் சென்றிருக்கலாம்..
lttepottan1பொட்டம்மான் உண்மையில் மிகுந்த திறமைசாலி.. கொழும்பில் காற்றுக்கூட புக முடியாத இடங்களில் அவர் நடத்திய பல படுகொலைகள் அவர் திறமைக்கு எடுத்துக் காட்டாக இருந்து வருகின்றன.. அப்படிப்பட்டவர் அந்த இறுக்கமான போர் சூழலிலும் தப்பிச் செல்வதற்கு ஏதோ ஒரு வழியை கண்டு பிடித்திருக்க வாய்ப்பிருக்கிறது…
ஆகவே அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அவர் தப்பிச் செல்வதற்கு முன் பிரபாகரனின் கதையை முடித்து.. அந்த தலைமை பதவியை கைப்பற்றி.. எதிர்காலத்தில் தனக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடிய‌.. எஞ்சியிருக்கும் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் கதையையும் முடித்து விட்டு தப்பிச் சென்றிருக்கலாம்.. அல்லது போர்க்களத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம்..
தலையில் கொத்திக் கொலை செய்யும் வழிமுறை சுமார் 25 வருடங்களுக்கு முன் புலிகளால் கடைப் பிடிக்கப்பட்டு வந்தது என்பதை நிரோமியின் புத்தகத்தில் இருந்து அறிய முடிகிறது.. ஆகவே அந்த நாட்களில் சித்திரவதைகளுக்கு பேர் போன பொட்டம்மான்.. அந்த வழியை கடைப் பிடித்து பிரபாகரனை தீர்த்துக் கட்டியிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன..
மேலும் இன்று வரை வெளி நாட்டுப் புலிகளின் ஒரு பகுதியினர் இன்னும் பொட்டம்மான் உயிருடன் இருப்பதாகவும்.. அவர் வெகு விரைவில் புலிகளின் தலைமையை ஏற்று அடுத்த கட்ட போரை ஆரம்பிக்கப் போவதாகவும் கூறி வருவதில் இருந்து இந்த சந்தேகம் மேலும் வலுப் பெற வாய்ப்பிருக்கிறது…
மேலும் பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அனரனி ஏற்கெனவே கொல்லப்பட்டு விட்ட நிலையில்.. கடைசியாக எஞ்சியிருக்கும் பிரபாகரனின் கடைசி மகனான பாலச்சந்திரன் எதிர்காலத்தில் தனக்கு எதிராக செயல்பட்டு தன்னை பழிக்குப் பழி வாங்கும் நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தில் அவருடைய கதையையும் பொட்டம்மானோ அல்லது அவரைப் போலவே திட்டமிட்டிருந்த‌ வேறு எவரோ கூட பாலச்சந்திரனின் கதையை முடித்திருக்கலாம்..
தாங்கள் செய்யும் படுகொலைகளை தந்திரமாக அரசாங்கத்தின் தலையில் சுமத்தி விடும் திறமையுள்ள‌ புலிகள்.. அவரை கொல்வதற்கு முன்.. ஒரு பதுங்கு குழிக்குள் அந்த இறுதி நேர புகைப்படத்தை எடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது… அப்படி எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அது ஒரு இலங்கை இராணுவ சிப்பாய்தான் எடுத்தார் என்று கூறவும் முடியும்.. ஏனெனில் அந்த படத்தில் இலங்கை இராணுத்தில் ஒருவரோ அல்லது புலிகளை சேர்ந்தவர்கள் எவருமோ காணப்படாமல்.. பாலச்சந்திரன் மட்டுமே தனித்திருக்கும் ஆதாரமற்ற ஒரு புகைப்படமாகவே அது இருந்து வருகிறது…
அத்துடன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை தாங்கள் கொலை செய்யவில்லை என்று கூறி வரும் அரசாங்க தரப்பின் கூற்றை ஆராய்ந்து பார்க்கும்போது.. சிலவேளைகளில் அவர்கள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம்.. ஏனெனில்.. கடல் புலி தளபதி சூசையை சுட்டுக் கொன்ற இராணுவம் அவரது மனைவியையும் பிள்ளைகளையும் கொலை செய்யவில்லை.. இன்று வரை அவர்கள் அனைவரும் இராணுவத்தின் பாதுகாப்பில் நலமாகவே இருந்து வருகிறார்கள்.. மேலும் சூசையின் பிள்ளைகளுக்கு அவர்கள் கல்வியை மேற்கொண்டு தொடர்வதற்கு இலங்கை அரசாங்கம் ஒழுங்கு செய்து கொடுத்திருக்கிறது..
அது மட்டுமல்ல‌.. போர் வலயங்களில் கைது செய்யப்பட்ட புலிகளின் பதினைந்து பதினாறு வயது நிரம்பிய பல இளம் புலிப் போராளிகளை இலங்கை இராணுவம் கொலை செய்யாமல் அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து வருகிறது .. இப்படிப் பார்க்கும்போது இலங்கை இராணுவம் பிரபாகரனின் மகனை மட்டும் எதற்காக கொல்ல வேண்டும்? என்று கேட்கவும் இடமிருக்கிறது…
புலிகள் அமைப்பு அப்படியொன்றும் ஒரு கட்டுக் கோப்பான அமைப்பு அல்ல.. அவர்கள் இருந்த காலத்தில்.. அவர்களுக்குள்ளும் தலைமை போட்டிகள் தாராளமாகவே நடைபெற்றிருக்கின்றன.. அவர்களும் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதிலும்.. போட்டுத் தள்ளுவதிலும் சளைத்தவர்கள் அல்ல‌ர் என்பதை பல சம்பவங்கள் மூலம் அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்….
பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்த மாத்தையா பிரபாகரனைப் போல் இரக்கமில்லாமல் பல படுகொலைகளை புரிந்தவர்தான்.. குறிப்பாக விதம் விதமாக சித்திரவதை செய்து கொலை செய்வதில் பொட்டமானுக்கு நிகரானவர்…. பிரபாகரனின் அடுத்த இடத்திற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்த கேணர் கிட்டுவுக்கு.. குண்டு வைத்து அவரை கொலை செய்ய எடுத்த முயற்சி.. கிட்டுவுக்கு தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போன கதையாக.. அவருடைய ஒரு காலை மட்டும் இழக்க வைத்து.. மற்ற அங்கங்களுடன் உயிர் பிழைக்க வைத்தது….
அடுத்த முயற்சியாக புலித் தலைமையை கைப்பற்ற மாத்தையா போட்ட சதித் திட்டமும் கண்டு பிடிக்கப்பட்டு.. அந்த சதியும் தவிடு பொடியாகி.. அவரும் அவருக்கு ஆதரவான 260 புலிப் போராளிகளும் பிரபாகரனால் கைது செய்யப்பட்டு பல சித்திரவதைகளின் பின்னர் வன்னிக் காட்டுக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.. மாத்தையாவை பிரபாகரனே தனது கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது..
ltte.pirabakaran-and-karuna
அதேபோல் கருணாவுக்கும் பிரபாகரனுக்கும் ஏற்பட்ட தலைமையை பிரித்துக் கொள்ளும் போட்டியில்.. கருணா பிரபாகரனால் குறி வைக்கப்பட்டார்.. ஆகவே தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள அவர் அரசாங்கத்துடன் இணைந்து இன்று அமைச்சராக பதவி உயர்வு பெற்றார்.. அதே போல‌ பிரபாகரனின் மறைவிற்கு பின் அந்த பதவியை குறி வைத்து தானே தமிழீழத் தலைவர் என்று அறிவித்த‌ கே‍.பியும் தனது உயிருக்கு இலங்கை அரசாங்கத்தால் ஆபத்து என்றதும் அரசாங்கத்துடன் சேர்ந்து வசதியாக வாழ பழகிக் கொண்டார்.. இப்படி பல உதாரணங்களை எடுத்துக் காட்ட முடியும்..
2007 நவம்பர் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுதலை புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் இலங்கை கிபீர் விமானத் தாக்குதலில் உயிரிழந்தார்.. இந்த தாக்குதல் அதிகாலை வேளையில்.. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான‌ கிளிநொச்சியில்.. மிகவும் இரகசியமான இடமொன்றில்.. கொன்கிறீட் சுவரினால் மிகுந்த‌ பாதுகாப்புடன் அமைக்கப்படிருந்த‌ ஒரு பதுங்கு குளியொன்றினுள் படுத்துறங்கிக் கொண்டிருந்த‌ தமிழ்ச் செல்வனை துல்லியமாக‌ குறிவைத்து இலங்கை விமானப்படையினரால் நடத்தப்பட்டிருந்தது..
அப்படியானால் அந்த அதிகாலை வேளையில் அந்த இடத்தில் தமிழ்ச்செல்வன் பதுங்கியிருக்கிறார் என்ற விபரத்தை இலங்கை விமானப்படையிருக்கு அறிவித்தவர் யார்?
முழுக்க முழுக்க புலிகளின் அமைப்புக்குள் இரகசியமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு அமைப்பினருக்கு மட்டுமே தமிழ்ச்செல்வனின் இரகசிய‌ நடவடிக்கைகள் அனைத்தையும் நன்கு அறியும் வாய்ப்பு இருந்திருக்கிறது.. மேலும் தனி ஒருவரால் இந்த காட்டிக் கொடுப்பை வெற்றிகரமாக நடத்தியிருக்க‌ முடியாது…. ஆகவே அது ஒரு குழுவினரின் கூட்டு முயற்சியின் மூலமே அன்று தமிழ்ச்செல்வன் காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறார் என்பது கண்கூடு..
இதிலிருந்து விடுதலை புலிகள் என்பது ஒரு கட்டுக் கோப்பான ஒற்றுமையுள்ள அமைப்பல்ல என்பதை உறுதிப்படுத்த முடியும்.. பிரபாகரனின் மறைவிற்கு பின்னர்கூட வெளிநாடுகளில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஆளுக்காள் குழி பறிப்பதும்.. குத்து வெட்டு கொலைகள் புரிவதிலும்தான் தங்கள் தமிழீழ தாகத்தை தணித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இதுதான் அன்று தொட்டு இன்றுவரை இருந்து வரும் புலிகளின் வழிமுறையாகும்..
மொத்தத்தில் தமிழீம் என்பது புலிகளின் ஒரு இலட்சியமல்ல‌.. அது இலங்கை தமிழர்களை முட்டாள்களாக்கி அவர்கள் வாக்குகளை பெறுவதற்காக.. த‌மிழர் விடுதலை கூட்டணியினரால் அவர்கள் தலையின் மேல் சுமத்தப்பட்ட ஒரு சுமை.. பின்னர் அந்த விடுதலை கூட்டணியினரை கொன்றொழித்து விட்டு அந்த தமிழீழ சின்னத்தை பறித்துக் கொண்ட புலிகள் அதை வியாபாரமாக்கினார்கள்.. அதன் விளைவாக அவர்களுக்குள் நடைபெற்று வந்ததெல்லாம் அதன் தலைமைப் பதவிக்கான இழுபறியேயல்லாமல் வேறொன்றுமில்லை…
சர்வதேச ஸ்கொட்லாண்ட் பொலிசார் ஒரு சர்ச்சைக்குரிய படுகொலையை துப்புத் துலக்க முற்படும்போது.. முன்னர் இதுபோல நடந்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட‌ இன்னொரு படுகொலையுடன் அதை ஒப்பிட்டு இந்த படுகொலைக்கான காரணத்தை கண்டு பிடிக்க முற்படுவது போல.. இலங்கையில் நடந்த விடுதலை போராட்டத்தையும் அதனால் கொல்லப்பட்ட அதன் தலைவர்களையும் பற்றிய பல முடிச்சவிழ்க்க முடியாத சந்தேகங்களை.. கடந்த காலமொன்றில் அதேபோன்றதொரு சூழலில் நடத்தப்பட்ட இன்னொரு விடுதலை போராட்டத்துடன் ஒப்பிட்டு ஓரளவுக்கு அந்த சந்தேகங்களுக்கு நிவர்த்தி காண முடியும்..
இலங்கையில் நடந்த போராட்டம் போலவே எழுபதாம் ஆண்டு காலப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு விடுதலை போராட்டம்தான் பங்காளதேஷ் விடுதலை போராட்டமும்.. அங்கும் இலங்கை தமிழர்கள் சிங்கள அரசாங்களிடன் அடிமைப்பட்டுக் கிடந்தது போலவே.. அவர்களும் மேற்கு பாகிஸ்தானிடம் அடிமைப்பட்டு கிடந்தார்கள்.. இங்கு போலவே அங்கும் மேற்கு பாகிஸ்தான் அன்றைய கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பங்காளதேஷில் தனது அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டிருந்தது..
இந்த கால கட்டத்தில்.. தற்போது உருத்திரகுமாரின் தலைமையில் அமெரிக்காவில் அமைக்கப்பட்டிருக்கும் நாடு கடந்த தமிழீழம் போலவே.. அன்றும் சில பங்காளதேசிகளால் இந்தியாவில் வைத்து நாடு கடந்த வங்காளதேசம் அறிவிக்கப்பட்டது.. ஆனால் அது வெற்றியளிக்கவில்லை..
இலங்கையில் வெலிக்கடை சிறைச்சாலையில் குட்டிமணி தங்கத்துரை முதலியோர் கொல்லப்பட்டது போலவே.. முஜிபுர் ரஹ்மானை கொலை செய்த பின்.. பங்காளதேஷின் உப ஜனதிபதி.. பிரதம மந்திரி.. மற்றும் விடுதலைக்காக குரல் கொடுத்த பலர் சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயும் படு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்..
பின்னர் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் தலையீட்டினால் அவர்களுக்கு விமோசனம் கிடைத்து.. சுதந்திர வங்காள தேசம் மலர்ந்தது….. ஆனால் இங்கே ராஜீவ் காந்தியின் தலையீட்டினால் கிடைக்க இருந்த தமிழர்களின் சுதந்திர தேசம்.. பிரபாகரனின் தலைக் கனத்தினால் பறி போனது.. இப்படியாக அங்கும் இங்கும் ஒரே மாதிரியான அரசியல் நிகழ்வுகளே அரங்கேறியிருக்கின்றன…
பங்காளதேஷில் முஜிபுர் ரஹ்மானின் தலைமையில் நடந்த விடுதலை போரில்.. சுமார் ஒரு கோடி பொது மக்கள் கொல்லப்பட்டனர்.. சுமார் பத்து கோடி பங்காளதேசிகள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்கள்.. சுமார் ஐந்து இலட்ச‌ம் பெண்கள் பாகிஸ்தான் இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டனர்.. இவர்களில் பெரும்பாலானோர் அந்த தேசத்தில் வாழ்ந்து வந்த‌ இந்து பெண்களாவார்….
பாகிஸ்தான் இராணுவம் இந்துமத பெண்களையே தேடித் தேடி கற்பளித்ததாக கூறப்படுகிறது.. வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.. பெரிய் நகரங்கள் தரை மட்டமாக்கப்பட்டன்.. பெரிய அங்காடிகள் முதல் சிறிய கடைகள் வரை பாகிஸ்தான் இராணுவத்தினரால் சூறையாடப்பட்டன.. இப்படியாக பாரிய அழிவை சந்தித்தது அந்த தேசம்..
இந்த நிலைமைகளை கண்டு கொதித்தெழுந்த இந்திரா காந்தி தனது இந்திய இராணுவத்தை அங்கே அனுப்பி.. பாகிஸ்தான் படையினரை புரட்டியெடுத்து விரட்டியடித்தார்.. பங்காளதேஸ் விடுதலையடைந்தது.. அதன் பின்னர் அந்த சுதந்திர பங்காளதேஷில் அமைதி நிலவியதா?.. இல்லை.. எவர்கள் அந்த நாட்டின் விடுதலைக்காக போரிட்டு அந்த நாட்டின் சுதந்திரத்தை வென்றெடுத்தார்களோ.. அவர்களே அந்த நாட்டின் தலைமை பதவிக்காக‌ ஒருவரை ஒருவர் கொன்றொழித்தார்கள்.. அதில் முதலாவதாக குறி வைக்கப்பட்டவர்தான் அதன் வெற்றிக்கு காரணமாக இருந்த முஜிபுர் ரஹ்மான்..
முஜிபுர் ரஹ்மானை அவரது வீட்டில் வைத்து கொலை செய்தபோது.. அவருடன் சேர்த்து அவரது மனைவி.. மூன்று மகன்கள்.. இரண்டு மருமகள்கள்மார் என்று மொத்தமாக ஏழு பேர் கொல்லப்பட்டார்கள்.. அத்துடன் அவரது சகோதரரும் அவர் குடும்பமும்.. அவரது சகோதரியும் அவரது குடும்பமும் என்று சுமார் 25 பேருக்கு மேற்பட்ட அவரது நெருங்கிய உறவினர்களும் அன்று கொல்லப்பட்டார்கள்.. இந்த கொலைகளை புரிந்தவர்கள் சாட்சாத் முஜிபுர் ரஹ்மானின் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள்தான்.. இவர்களுக்கு சுதந்திர பங்காளதேஷில் இராணுவ உயர் பதவிகளை வழங்கியிருந்தார் ரஹ்மான்.. இவர்களின் சதித் திட்டத்தினால்தான் அவர்களின் முழுக் குடும்பமும் அன்று கொலை செய்யப்பட்டார்கள்..
தங்கள் உயிருக்கு எதிர்காலத்தில் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படக் கூடாதே என்றுதான் ரஹ்மானின் 11 வயது றூசலையும் அன்று கொலை செய்தார்கள்.. இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரது வயது 49 ஆக இருந்திருக்கும்.. அன்று அவரை கொலை செய்தவர்கள்.. அவரை உயிருடன் விட்டு வைத்திருந்தால்.. சில வேளை அவர் இவர்களை எதிர்காலத்தில் பழிக்குப் பழி வாங்கியிருப்பார் என்பதை மறுக்க முடியாது..
ஏனெனின் இந்த படுகொலை சம்பவத்தின்போது மேற்கு ஜேர்மனியில் கல்வி பயின்று கொண்டிருந்த ரஹ்மானின் இரண்டு மகள்களும் உயிர் தப்பியிருந்தார்கள்.. ஆட்சியை கைப்பற்றிய கொலையாளிகள் இவர்கள் இருவரும் நாட்டுக்குள் வருவதற்கு தடை விதித்தார்கள்.. இந்த கொலை நடந்த காலப் பகுதியான 1975 ஆம் ஆண்டு.. ஜேர்மனியில் இருந்த அவரது இரண்டு மகள்களில் மூத்தவரான ஷேக் ஹசீனாவுக்கு (Sheikh Hasina) 26 வயதுதான் ஆகியிருந்தது..
அன்று அதிஸ்டவசமாக உயிர் தப்பிய‌ அந்த மகள்களில் ஒருவர் மூலம்தான் அந்த கொலைகாரர்களின் முடிவு 35 வருடங்களின் பின்னர் எழுதப்பட்டு.. தாங்கள் அனைவரும் தூக்கிக் தொங்கப் போகிறோம் என்பதை அறியாமல் ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளி பங்காளதேஷ் ஆட்சியில் ஜனாதிபதியாக வருவதில் தங்கள் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள்…. .
ஆம் அன்று ரஹ்மானின் இந்த இரண்டு குமாரிகளும் ரஹ்மானுடன் சேர்த்து கொலை செய்யப்பட்டிருந்தால் இன்று வரை அந்த கொலைகாரர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.. ஆனால் பல வருடங்களின் பின்னர்.. ரஹ்மானின் குமாரியின் வடிவில்தான் காலன் அவர்களுக்கு குறி வைத்திருக்கிறான் என்பதை.. அவர்களில் எவருமே அன்று கனவிலும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள்…….”

Saturday, 25 June 2016

அன்று சிந்திய ரத்தம் தொடர் 11
புதிய தலைமுறை வார இதழுக்காக ..


இலங்கை பொதுத் தேர்தலையொட்டி 2005 ம் ஆண்டு புலிகளுக்கும் மகிந்தா தரப்புக்கும் இரகசியப் பேச்சுக்கள் தொடங்கியது புலிகள் தரப்பில் எமில் காந்தன் என்பவர் பேரம் பேசலில் ஈடுபட்டார் .ரணில்விக்கிரமசிங்க வுக்கு தமிழர்களின் வாக்குகள் சென்று விடாமல் தடுத்து மகிந்தாவை எப்படியும் வெற்றி பெறவைத்து விடுவதாக புலிகள் உறுதியளித்தார்கள் அதற்கு கைமாறாக பெருமளவு பணத்தை பெற்றுக்கொண்டார்கள் இந்தப் பணத்தை எமில்காந்தனே பெட்டிகளில் எடுத்துச் சென்றதாகவும் பெற்றுக்கொண்ட பணம் சுமார் இரு நூறு மில்லியன் ரூபாய்கள் என அன்று செய்திகள் கசிந்திருந்தது.மகிந்தராஜபக்ச வுடன் நடந்த பேரம் பேசலின் பின்னர் எமில்காந்தன் வெளிநாடு சென்று விட்டார் . தேர்தல் மூலம் மகிந்தா அரசு அகற்றப்பட்டு புதிதாக பதவுயேற்ற மைத்திரி அரசு எமில் காந்தனுக்கான சர்வதேச பிடியாணை பிறப்பித்திருந்தது .இந்தக்கட்டுரை எழுதப்படுக் கொண்டிருக்கும் நேரம் எமில்காந்தன் இலங்கை சென்று நீதி மன்றத்தில் மகிந்தாவுடன் நடந்த பேரம் பேசல் மற்றும் கைமாறிய பணம் பற்றி வாக்கு மூலம் அளிக்கப் போவதாக சேதிகள் வெளியாகியுள்ளது.இந்தக்கட்டுரை வெளியாகும்போது சிலநேரம் அவர் வாக்கு மூலம் அளித்திருக்கலாம் .
தேர்தல் நெருங்கும் வேளை வாக்களிக்க தமிழர்களும் ஆவலாக காத்திருந்தார்கள் ஆனால் தேர்தலை புறக்கணிக்கும் படியும் யாரும் வாக்களிக்கக் கூடாது அப்படி மீறி வாக்களித்தால் அவர்கள் துரோகிகளாக கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புலிகள் அறிவித்தார்கள்.தேர்தல் நடந்து முடிந்தது மகிந்தா புலிகள் கூட்டணி எதிர்பார்த்தது போலவே தமிழர்கள் எவரும் ஓட்டுப் போடாத நிலையில் குறைந்த ஒட்டு வித்தியாசத்தில் ரணில் விக்கிரமசிங்கே தோல்வியடைய இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று சனாதிபதியாக நவம்பர் 19, 2005 அன்று மகிந்தராஜபக்ச பதவியேற்றார்.அதே நேரம் பாம்பின் கால் பாம்பறியும் என்பதைப்போல தான் பதவியேற்றதும் புலிகள் தன்னைத்தான் குறி வைப்பார்கள் என்று மகிந்தா கணித்திருந்தார் .புலிகள் எப்போதுமே நம்ப நடப்பார்களே தவிர நம்பி நடக்கமாட்டார்கள்.ஒருவரிடம் தங்கள் தேவைகளை முடிதுக்கொண்டதுமே பிற்காலத்தில் அவரால் இரகசியங்கள் வெளியாகி எந்த பிரச்சனைகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரை போட்டுத்தள்ளிவிடுவார்கள்.அதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும் இலங்கை சனாதிபயாகவிருந்த பிரேமதாசா மிகச் சிறந்த உதாரணமாகும்.
இலங்கையில் இந்தியப்படைகள் நிலைகொண்டிடுந்த காலத்தில் அவர்களை வெளியேற்ற அப்போது சனாதிபதியாக பொறுப்பேற்ற பிரேமதாசாவுடன் கைகோர்த்துக்கொண்டதோடு அவரிடமிருந்து பெருமளவு ஆயுதங்களும் பணமும் பெற்றிருந்தார்கள்.

இந்தியப் படைகள் இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் அவர்களது வெளியேற்றத்தை எதிர்த்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அப்பாதுரை அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரையும் பிரேமதாசவின் உதவியோடு கொழும்பில் வைத்து சுட்டுக்கொலை செய்தவர்கள்.சிலகாலத்திலேயே பிறேமதாசவையும் தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்திருந்தனர்.எனவே பதவிக்கு வந்த மகிந்தவும் தனக்கும் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்ற கோத்தபாய ராஜபக்சே வுக்கும் தனித் தனியாக நூறு பேரடங்கிய விஷேட பயிற்ச்சி பெற்ற இராணுவ பாதுகாப்பு அணி ஒன்றை உருவாக்கியதோடு தனது நடமாட்டங்களையும் இரகசியமாகவே வைத்திருந்தார்.அவர் எதிர் பார்த்தது போலவே புலிகள் அவர்மீதும் கோதாபய ராஜபக்சே மீதும் பல கொலை முயற்சிகளை நடத்தினாலும் அதிஸ்ட வசமாக அவர்கள் உயிர் தப்பினார்கள்.
இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் புலிகள் ரணிலோடு போட்ட பேச்சுவார்த்தை ஒப்பந்தம் செல்லுபடியற்றது எனவே புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள வேண்டும் என மகிந்தா அறிவித்தார் .அப்படியெல்லாம் முடியாது முன்னர் போடப்பட்ட ஒப்பந்தம் தனியே இந்த இரண்டு தரப்பினரோடு மட்டும் நின்றுவிடாது நோர்ட்டிக் நாடுகள் உட்பட பல சர்வதேச நாடுகளையும் தொடர்பு படுத்திய ஓர் ஒப்பந்தமாகும் எனவே புதிய ஒப்பந்தம் எதுவும் போடத் தேவையில்லை என புலிகள் தரப்பும் அடம் பிடித்துக்கொண்டேயிருக்க பேச்சுவார்தைகள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது .புலிகளையும் இலங்கை அரசையும் மீண்டும் பேச்சு வார்த்தை மேசைக்கு இழுக்க நோர்வே தொடர்ந்து முயற்சி செய்துகொண்டேயிருந்தது.எதுவானாலும் மேசையில் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என இரு தரப்பையும் ஒருவாறு 2006 ம் ஆண்டு பெப்ரவரி 22ஜெனிவாவுக்கு கொண்டு வந்தார்கள் .அந்த பேச்சு வார்த்தைகளில் கருணா குழுவுக்கு இலங்கை அரசு ஆதரவு கொடுத்து புலிகளை பலவீனமக்குகிறார்கள் அவர்களிடமிருந்து ஆயுதங்களை களையுமாறு புலிகள் தரப்பு குற்றச்சாடு வைக்க அரசு தரப்பு அதை மறுக்க இரண்டு நாள் நடந்த பேச்சுக்கள் எந்தவித முன்னேற்றமும் இன்றி முடிவடைந்து இரண்டு தரப்புமே நாடு திரும்பியிருந்தார்கள்.

அதே நேரம் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் பல இடங்களில் சிறு சிறு உரசல்களும் சர்ச்சைகளும் தொடர்ந்துகொண்டேயிருந்தாலும் கருணா குழுவினரும் புலிகளும் காண்கிற இடத்தில் மாறி மாறி ஒருவரையொருவர் போட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்கள்.யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவினரோ என்ன செய்வது என்று விழிபிதுங்கி நின்றார்கள்.அப்போதுதான் 2006 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 திகதி காலை இலங்கை ராணுவத் தளபதி சரத்பொன்சேகா மீது கர்ப்பிணிப்பெண் போல வேடமிட்டு வந்த ஒருபெண் தற்கொலை தாக்குதல் நடத்துகிறார் அதில் பொன்சேகா மோசமான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டவர் கோமா நிலைக்கு நிலைக்கு சென்று விடுகிறார் .இந்த செய்தியறிந்ததும் இலங்கை இராணுவத்தினர் புலிகளின் நிலைகளை இலக்குவைத்து எறிகணை தாக்குதல்களை நடத்தினார்கள்.பதிலுக்கு புலிகளும் சில கண்ணிவெடி தாக்குதல்களை இராணுவத்தினரை குறிவைத்து தக்க பலர் கொல்லப்பட்டனர் .இப்படி நிலைமை மோசமாகிக்கொண்டேயிருந்தது.ஆனால் இறுதி யுத்தத்துக்கும், பெரும் மனிதப் பேரவலத்துக்கும், புலிகளின் முடிவுக்கான ஆரம்பமாக காலண்டரில் இருந்து கிழிக்கப் பட்ட அந்த நாள் 2006-ம் ஆண்டு, ஜூலை மாதம் 21-ம் தேதி நள்ளிரவு மாவிலாறு அணை பூட்டப்படுகிறது.

மாவிலாறு என்பது இலங்கையில்கிழக்கு மாகாணத்தில் திருகோணமலைக்கு அண்மித்து வேளாண்மைக்கு நீர் வழங்கும் ஆறுகளில் ஒன்று. இதில் தண்ணீர் திறந்து விடுவதற்கான அணைக்கட்டு கதவுகள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்தது. இந்தக் கதவுகள் திறந்து விடப்பட்டால், மாவிலாற்றின் நீர், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பாயும்.விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவிலாறு அணைக்கட்டு திறக்கப்பட்டால், தண்ணீர் பாய்ந்து செல்லும் பகுதிகள்: கல்லாறு, தெஹிவத்த, தோப்பூர், செருவில, செருநுவர ஆகிய கிராமங்களில் உள்ள வேளாண்மை செய்யும் வயல்கள்.இந்தப் பகுதியில் தமிழ் சிங்கள முஸ்லிம் என்று மூவின மக்களும் இந்த ஆற்றை நம்பியே விவசாயம் செய்வார்கள்.பேச்சு வார்த்தைகள் தொடங்கி யுத்த நிறுத்தம் அமுலில் இருந்ததால் ஆசிய அபிவிருத்தி வங்கியானது மேலும் பல கிராமத்து விவசாயிகள் பலனடையும் விதமாக மாவிலாறை புனரமைப்பு செய்து கொண்டிருந்தது.இதன் அணைகளையே தளபதி சொர்ணத்தின் கட்டளைக்கமைய புலிகள் அமைப்பினை சேர்ந்த இருவர் ஜூலை மாதம் 21-ம் தேதி நள்ளிரவு பூட்டி விடுகிறார்கள்.மறுநாள் காலை ஆற்றில் தண்ணீர் குறைவாக வருவதைக்கண்ட விவசாயிகள் வேளாண்மை அதிகாரியிடம் விடயத்தை சொல்ல அவரும் அணையை பார்வையிட சென்றபோது காவல் கடமையில் இருந்த புலிகள் அவரை தங்கள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்லவிடாமல் திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
உடனே நூற்றுக்கும் அதிகமான சிங்கள விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தவே பிரச்னை பெரிதாக உருவெடுத்தது.அதன் பின்னரே புலிகளின் தலைமைக்கும் விடயம் தெரியவந்திருந்தது.சொர்ணம் எதுக்காக மாவிலாறை பூட்டினார் என்று விசாரணைகள் நடத்திக்கொண்டிருக்க அவகாசம் இல்லாத காரணத்தால் திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் எழிலனிடம் (சசிதரன்) நிலைமைகளை கவனிக்கும்படி உத்தரவிட்டு விடுகிறார்.(இவரது மனைவியே ஆனந்தி பின்னாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானவர் .)சம்பவ இடத்துக்கு எழிலன் செல்லும்போதே அங்கு யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவினரும் வந்து விட்டிருந்தனர் .அணை பூட்டிய விவகாரம் புலிகள் மீது விழுந்து விடாமலிருக்க உடனடியாக அங்கு உள்ள தமிழ் விவசாயிகளை அழைத்து வந்து போராட்டம் நடத்த வைத்த எழிலன் அங்குள்ள விவசாயிகளுக்கு நீர் பற்றாக்குறை தமிழ் விவசாயிகள் பகுதி சரியாக புனரமைப்பு செய்யப்படவில்லை அதனால் அவர்களே அணையை பூட்டியதாக போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவினரிடம் சொல்கிறார் .
மறுபக்கம் சிங்கள விவசாயிகள் தாங்களே நேரில் சென்று அணையை திறக்கப் போவதாக புறப்பட இலங்கை இராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்த புலிகள் பாதையை பூட்டி விடுகிறார்கள். அங்கு நிலைமைகள் மோசமானதால் புலிகளின் தலைமையோடும் அரசோடும் பேசி நிலைமையை சரி செய்வதாக சொல்லிவிட்டு கண்காணிப்புக்குழுவினர் கொழும்பு திரும்பிவிடுகிறார்கள்.அதே நேரம் சொர்ணம் எதற்காக அணையை பூட்டும்படி கட்டளையிட்டார் என்று பார்த்துவிடலாம் .


தளபதி சொர்ணம் யாழ்ப்பாணம் மானிப்பாயை பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் திருகோணமலையில் தான் வளர்ந்து கல்வி கற்றுவந்தவர் 1983 ம் ஆண்டு புலிகள் அமைப்பில் இணைத்தவர் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பு அணிக்கு பொறுப்பாக பலகாலம் இருந்தார்.புலிகளின் ஆரம்ப காலத் தாக்குதல்கள் பலவற்றை திறம்பட நடத்தி சொர்ணம் என்கிற பெயரை கேட்டாலே ஸ்ரீலங்கா இராணுவம் கலங்கும் அளவுக்கு முன்னணித் தளபதியாகவும் வலம்வந்துகொண்டிருந்தவர்.இந்தியப்படைகள் மணலாறுப் பகுதியில் ஒப்பரேசன் பவான் என்கிற நடவடிக்கை முலம் பிரபாகரனை சுற்றி வளைத்திருந்தபோது அந்த முற்றுகையை உடைத்து பிரபாகரனை காப்பாற்றிய பெருமையும் சொர்ணத்துக்கு உண்டு .ஆனால் புதிய யுக்திகளை புகுத்தாது ஒரே முறையிலான தாக்குதல்கள் காலப் போக்கில் எதிரிக்கு பழகிப்போனதால் அவரது தாக்குதல்கள் புலிகளுக்கு பெரும் இழப்பைக் கொடுத்ததோடு சில தாக்குதல்கள் தோல்வியிலும் முடிந்தது.புதிய யுக்திகளை கையாண்டு பெரும் வெற்றிகளை குவித்த கருணா ,பால்ராஜ் ,பானு ,தீபன் ,ஜெயம் ,போன்றவர்கள் முன்னணித் தளபதிகளாக வலம்வரத் தொடங்கியதோடு தலைமைக்கும் நெருக்கமகிக்கொண்டிருக்க 90 களின் பின்னர் சொர்ணம் சண்டைக்களத்திலிருந்து ஓரம் கட்டப்பட்டு முற்றாகவே காணாமல்போயிருந்தார்.தன்னை நம்பி தலைவர் இப்போ எந்த சண்டையையும் தருவதில்லை என்பது சொர்ணத்துக்கு பெரும் அவமானமாகவே இருந்தது.வன்னியில் சும்மா இருந்த சொர்ணத்தை கருணா பிரிவின் பின்னர் கருணா அணிக்கு எதிராக படை நடத்த தலைமை கிழக்கிற்கு அனுப்பி வைத்தாலும் பானுவையும் கூடவே அனுப்பி வைத்தார் தலைவர் .
நீண்ட காலத்துக்குப் பின்னர் படை நடத்த ஒரு சந்தர்ப்பம் அதுவும் கிழக்கின் வீரத்தை உலகறிய வைத்து பலவருடங்கள் கூடவே இருந்து ஒன்றாகப் பழகி உண்டு உறங்கிய நண்பனுக்கு எதிராக படை நடத்தவேண்டும் என்பது மட்டுமல்ல இன்னொரு நெருங்கிய நண்பனாகவும் திருகோணமலை மாவட்ட தளபதியாக இருந்த பதுமனையும் கருணா பிரிவின் பின்னர் சந்தேகத்தில் புலிகளின் தலைமை வன்னிக்களைத்து கைது செய்திருந்தனர் இப்படி பல விடயங்களாலும் விரக்தியின் விளிம்புக்கு தள்ளப் பட்டிருந்த சொர்ணம் கருணாகுழுவுக்கு எதிரான நடவடிக்கையின் பின்னர் அனைவரும் வன்னி திரும்பியிருந்தாலும் அவர் மட்டும் திருகோணமலையிலேயே தங்கியிருந்தார்.அது மட்டுமல்லாது நீண்ட காலமாகவே தலைமை சண்டையை தொடக்கிவிட சந்தர்ப்பத்துக்காக காத்திருந்ததால் இனி நடக்கப் போகும் சண்டையில் எப்படியாவது ஒரு பெரு வெற்றியை பெற்று மீண்டும் தனது திறமையை தலைமைக்கு நிருபித்து விடுவதென மனதுக்குள்ளே சபதமெடுத்து விட்டு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார். வடக்கு கிழக்கில் சிறு சிறு மோதல்கள் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கு நடந்துகொண்டிருந்தாலும் பெரிய யுத்தம் எதுவும் நடக்கவில்லை எனவே மாவிலாறை பூட்டுவதன் மூலம் எப்படியும் இராணுவம் ஒரு தாக்குதல் நடவடிகையை செய்யும் அதனை முறியடித்து வெற்றி செய்தியை வன்னிக்கு அனுப்பி விடலாம் என்பது சொர்ணத்தின் திட்டமாக இருந்தது.

அன்று சிந்திய ரத்தம் தொடர் ...பாகங்கள் .7..8..9..10

2:10 PM Posted by Siva Sri No Comment
 அன்று சிந்திய ரத்தம் தொடர் ..பாகங்கள் .7..8..9..10
புதிய தலைமுறை வார இதழுக்காக .

.கருணாவின் பிரச்சனைகள் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க மறுபக்கம் புலிகளுக்காக வந்த இரண்டு ஆயுதக் கப்பலில் ஒன்று தாக்கியழிக்கப்பட இன்னொன்று தப்பிச் சென்றிருந்தது தப்பிச் சென்ற இரண்டாவது கப்பலும் சில மாதங்களின் பின்ன புலிகள் அவனை இலங்கையில் தேடிக்கொண்டிருக்கும்போதே இந்தியா   தற்காலிகமாக தத்தெடுத்திருந்தது.ஊட்டியில் தனியான  ஒரு பங்களாவில் தங்க வைத்து புலிகளைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டதோடு புலிகளுக்கு எதிரான நவடிக்கையில் தங்கள் பக்கம் வைத்திருக்க விரும்பியிருந்தார்கள்.ஈழ விடுதலை இயக்கங்களில் ஒன்றான  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (P.L.O.T ) அமைப்பின் உட்கட்சி மோதல் மற்றும் படுகொலைகளால் அதிலிருந்து பிரிந்தவர்களில் ஒருவரான  ஞானப்பிரகாசம் ஞானசேகரன் (பரந்தன் ராஜன்) என்பவர் அந்த அமைப்பில் இருந்து பிரிந்தவர்களை வைத்து ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி  (E.N.D.L.F) என்றொரு அமைப்பை உருவாக்கியிருந்தார்.இந்த அமைப்பானது முழுக்க முழுக்க இந்திய அரசின் உதவியோடு அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது.இலங்கையில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த 1987 ...1990 வரையான காலத்தில் இந்திய இராணுவத்தோடு இணைந்து புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடு பட்டிருந்தனர்.பின்னர்  இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய போது அவர்களுன் E.N.D.L.F அமைப்பினரும் வெளியேறி இந்தியாவிற்கு சென்று விட்டிருந்தது மட்டுமல்லாது எவ்வித செயட்பாடுக்களுமின்றி முடங்கிப்போய் இருந்தனர்.கருணாவை வைத்து மீண்டும் அந்த அமைபிற்கு புத்துயிர் கொடுக்க விரும்பிய இந்தியா அதற்கான வேளைகளில் இறங்கியிருந்தது .கருணாவிற்கும் வேறு வழியின்றி ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைமை .இங்கு ஒரு ஆச்சரியப்படவேண்டிய விடயத்தையும் கூறவேண்டும் கருணா புலிகள் அமைப்பிலிருந்து பிரிவதற்கு சரியாக இரண்டு வருடங்களிட்கு முன்னரே  2002ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் இருந்து வெளிவரும் Frontline என்ற ஆங்கிலப் பத்திரிகையில்   விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணா கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராக இருந்தும் சக்தி மிக்க தலைவராக உருவாகி வருகின்றார்.
பிரபாகரனை மிஞ்சும் தலைவராகவும் அவர் வர முடியும். ஒரு நாள் பிரபாகரன் இடத்திலேயே கருணா அமரும் நிலை வரும் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருந்தது .

அன்றைய கால கட்டத்தில் கருணா பிரபாகரன் மோதல் வருமென்று யாருமே கனவில் கூட நினைத்துப்பார்த் திருக்காத காலகட்டம் .எனவே இப்படியொரு மோதலை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை சில உழவமைப்புகள் அன்றே ஆரம்பித்து விட்டிருந்தது புலனாகிறது.கருணா E.N.D.L.F  இணைந்து புலிகளுக்கு எதிரான நவடிக்கைக்கான திட்டங்களை வகுத்து அதை நடை முறைப்படுதுவதட்காக சில  இந்தியாவில் தங்கியிருந்த E.N.D.L.F  உறுப்பினர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.ஆனால் கருணா எங்கே தெரியாமல் புலிகளின் தலைமை தலையை பிய்துக்கொண்டிருந்தபோது தான்  15.04.2005 அன்று மட்டக்களப்பு எல்லையில் காட்டுப்பகுதியில் கருணா அணியொன்று தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அந்த இடத்தை சுற்றி வழைத்து புலிகளின் அணியொன்று திடீர் தாக்குதலை நடத்துகின்றது.அங்கிருந்த கருணா அணியினர்  ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் அவர்களது ஆயுதங்களையும் உடமைகளையும் புலிகள் கைப்பற்றியபோது அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது கொல்லப்பட்டவர்களுள் விஜயன், ரவி என்ற இருவர் இந்தியக் கடவுச் சீட்டுக்களையும், இந்திய சாரதி அனுமதிப் பத்திரங்களையும் தம்வசம் வைத்திருந்தார்கள். இவர்கள் இருவருமே இந்தியாவில் தங்கியிருந்து பயிற்சி பெற்ற ஈ.என்.டீ.எல்.எப். உறுப்பினர்கள் என்பது தெரியவந்தது அவர்களிடமிருந்து கைப்பற்றிய தொலை பேசியில் அம்மான் என்றிருந்த இலக்கத்தை அழுத்தினார்கள் மறுமுனையில். "கலோ" என்ற கருணாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உன்னை விடமாட்டோம் என்றதோடு போன் கட்டாகிவிட்டது.தான் இந்தியாவில் தங்கியிருப்பதை புலிகள் கண்டுபிடித்து விட்டார்கள் இனி இந்தியாவில் இருப்பது புத்திசாலித் தனமில்லை என நினைத்தான் .காரணம் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தைக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருந்த நாடுகளில் இந்தியாவும் முக்கியமான நாடாக இருந்தது எனவே பேச்சு வார்த்தை மேசையில் கருணாவை தங்களிடம் ஒப்படைக்கும்படி புலிகள் அழுத்தத்தை கொடுத்தால் இந்தியா சில நேரம் தன்னை ஒப்படைத்து விடலாம் என சந்தேகித்தான்.அதே நேரம் கருணா குழுவின் திறமை இன்மையாலேயே தமது நீண்டகால உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் என்கிற குற்றச்சாட்டை E.N.D.L.F  வைக்க அவர்களோடும் முறுகல் நிலை ஆரம்பித்தது .எனவே  இந்தியாவை நம்புவதைவிட இலங்கையை நம்பலாமென முடிவெடுத்து மீண்டும் இலங்கைக்கே திம்பி விடுகிறான்.


 தப்பிச் சென்ற இரண்டாவது ஆயுதக் கப்பலும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் வைத்து இலங்கை கடற்படையால் தாக்கி அழிக்கப்பட்டது.புலிகளும் தொடர்ந்து ஆயுதங்களை கொள்வனவு செய்துகொண்டிருந்தனர் எனவே பேச்சு வார்த்தை மேசையில் புலிகளோடு கடுமையாக நடந்து கொள்ள அமெரிக்கா முடிவெடுத்து அவர்களிடம் சில  நிபந்தனைகளை முன்வைத்தார்கள்.ஒன்று ...குழந்தைப் போராளிகளை விடுவித்து அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் .இரண்டு.. கரும்புலிகள் அமைப்பை கலைக்க வேண்டும் .மூன்று ..வான் புலிகள் திட்டத்தை விரிவு படுத்தாது தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என மூன்று நிபந்தனைகளை வைத்து விட்டு வன்னியிலிருந்து பிரபாகரனின் பதிலுக்காக காத்திருக்கும் போது வெளிநாடுகளில் இருக்கும் புலி ஆதரவாளர்கள் சிலர் இந்திய அதிகாரிகள் சிலரோடு தனியாக ஒரு பேச்சு வார்த்தையை நடத்திக்கொண்டிருந்தார்கள் .காரணம் தென் கிழக்காசிய அரசியலில் இந்தியா தவிர்க்க முடியாத ஒரு சக்தி .இலங்கைத்தீவிலும்  இந்தியாவின் தலையீடு இன்றி அவர்களை தவிர்த்து எந்தவொரு அரசியல் நகர்வையும் மேற்கொள்ள முடியாது என்பதை திடமாக நம்பினார்கள் .தமிழ்செல்வனின் மரணத்தின் பின்னர் புலிகளின் அரசியல் துறை பொறுப்பை ஏற்றுக்கொண்ட நடேசனும் அதே கருத்தை கொண்டவராகவே இருந்ததோடு இந்தியாவோடு மீண்டும் நட்புறவை புதிப்பிக்கும் முயற்சிகளை மேட்கொண்டிருந்தார் .
மேற்குலகம்  வைத்த மூன்று கோரிக்கைகளில் குழந்தைப் போராளிகளை விடுவிப்பதாக சம்மதம் தெரிவித்திருந்தனர்.அதற்கு வேறொரு காரணமும் இருந்தது பெருமளவான குழந்தைப் போராளிகளை கருணாவே இணைத்ததாக பொதுவான குற்றச்சாட்டு இருந்தது.அவர்களை விடுவிப்பதன் மூலம்  புலிகளின் தலைமைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை .கருணாவே குற்றவாளி என்று சர்வதேசத்திடம் நிருபித்து விடுவது என்பதுதான் நோக்கம் .அதுவும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு .செஞ்சிலுவைச்சங்கம் .மற்றும் உள்ளூர் வெளிநாட்டு பத்திரிகையாளர் முன்னால் முப்பது வரையான சிறுவர்களை ஒப்படைத்தனர்.ஆனால் கரும்புலிகளையோ வான் புலிகள் அமைப்பையோ கலைக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள்.இது மேற்குலகத்திற்கு ஏமாற்றத்தையும் சினத்தையும் கொடுத்திருந்தது.ஆனாலும் புலிகள் மீண்டும் சண்டைக்கு திரும்பி விடமால் பேச்சுவார்த்தை மேசையிலேயே வைத்திருக்க பெரும்பாடு பட்டனர். அதே நேரம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய புலிகளின் ஆதரவாளர்கள் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி அவர்களை அங்கீகரித்து ஈழப் போராட்டத்திற்க்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்திருந்தனர். .ஆனால் புலிகளால் நடத்தப்பட்ட ராஜீவ்காந்தி கொலை என்பது இந்திய தேசத்துக்கு நடந்த மிகப்பெரிய கௌரவப் பிரச்சனையாகவே அவர்கள் பார்த்தார்கள் .இந்தக்கொலையானது புலிகள் அமைபிற்கு ஒரு தற்காலிக மகிழ்ச்சியை கொடுத்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அவர்களது  ஆயுதப் போராட்ட வரலாற்றில் தூர நோக்கற்று செய்த மிகப்பெரிய முட்டாள்தனம் என்பது உண்மை .புலிகளின் மீதான தடையை நீக்கி மீண்டும் நல்லுறவை ஏற்படுத்த வேண்டுமாயின் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கியமானவராக கருதப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப் பட்டுள்ள புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டம்மானை தங்களிடம் ஒப்படைத்தால் இழுபட்டுக்கொண்டேயிருக்கும் கொலை வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதோடு உறவுகளையும் புதுப்பிக்க முடியும் என்று இந்தியத் தரப்பில் கூறப்பட்டது. பேச்சுவார்த்தை குழுவினர் இந்தியாவின் பதிலில் மகிழ்ச்சியடைந்து உடனடியாக புலிகளின் தலைமைக்கு செய்தியை தெரிவித்தார்கள் .அவர்களது கோரிக்கை சுவரில் அடித்த பந்தைப்போல் முடியாது என்கிற பதிலோடு வேகமாக வந்தது.சோர்வடைந்த பேச்சுவார்த்தை குழுவினர் அப்போது நோர்வேயில் தங்கியிருந்த தமிழ்ச்செல்வனை சந்தித்து பொட்டம்மானை சரணடைய வைப்பது பற்றி விரிவாக விளக்கினார்கள்.நாட்டுக்காக மகளுக்காக எத்தனயோ போராளிகள்  தங்கள் உயிரை கொடுத்து விட்டார்கள் .கரும்புலிகளாகவும் மாறிஇருகிறார்கள் அப்படியிருக்கும் போது அந்த மகளுக்கு ஒரு நல்லது நடக்க வேண்டுமானால் பொட்டம்மான் சரணடைவதில் தப்பில்லை.இந்தியாவும் பொட்டம்மானை உடனடியாக தூக்கில் போட்டுவிடப் போவதில்லை அவருக்காக வாதாட பெரிய லாயர்களை நாங்களே ஏற்பட்டு செய்கிறோம் என்று சொல்லி முடிக்கவும் அனைவரையும் பார்த்த தமிழ்ச்செல்வன் உங்களிடம் வேறு எதாவது ஆலோசனைகளும் உள்ளதா என்று நக்கல் சிரிப்போடு கேட்டார் .தாங்கள் பேசியது எதனையும் தமிழ்செல்வனும் காதில் வாங்கவில்லை என்று புரிந்து கொண்டவர்கள் தயங்கியபடியே .இன்னொரு ஆலோசனையையும் சொன்னார்கள்..புலிகளின் தலைமை மீது ஏகப்பட்ட வழக்குகளும், குற்றச்சாட்டுகளும், நம்பிக்கையீனங்களும் சர்வதேச அளவில் இருப்பதால் மகளுக்கு நல்லதொரு தீர்வு எட்டும்வரை   தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே முகம் கடுமையாக மாறிய தமிழ்ச்செல்வன்  ..தமிழீழம் எப்படி எடுப்பது என்று எங்களுக்கு தெரியும் நீங்கள் பொத்திக்கொண்டு போகலாம் .என்றதும் தலையை தொங்கப்போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறியவர்கள் அத்தோடு தங்கள் நல்லெண்ண நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டார்கள் ..

தமிழ் செல்வன் புலிகளின் பேச்சுவார்த்தை குழுவுக்கு தலைமை தாங்கத் தொடங்கிய பின்னர் பேச்சுக்கள் மந்தமடையத் தொடங்கியிருந்தது மட்டுமல்லாமல்  பேச்சு வார்த்தை நிகழ்வுகளுக்கு ஒப்புக்கு சப்பாணி என்கிறதைப் போலவே எந்த ஆர்வமும் இல்லாமல் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் எப்படியாவது பேச்சுக்களை முறித்து மீண்டும் சண்டையை தொடங்காவிட்டால் புலிகள் அமைப்பு மேலும் பிளவுகளை சந்தித்து பலவீனம் அடைத்து விடும் என்று தலைமை நினைத்தது . எல்லா நாடுகளிலும் நடந்த பேச்சு வார்த்தைகளின் போதும் உள்ளே என்ன விடயங்கள் பேசப்பட்டது.என்ன முடிவுகள் எடுக்கப் பட்டது என்று எதுவுமே வெளியே சொல்லப் படவில்லை.உள்ளே என்ன பேசினார்கள் என்றும் மக்களுக்கு தெரியாது .ஒவ்வொரு பேச்சு வார்த்தை முடிவின் பின்னரும்  இந்த சந்திப்பு எமக்கு பிரயோசனமாக  இருந்தது .நாங்கள் சமாதானத்தில் உறுதியாக இருக்கின்றோம் என்று பத்திரிகையாளர்களிடம் தமிழ் செல்வன் தெரிவிப்பார் .அதே நாள் இரவு தமிழர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில் உரையாற்றும்போது எங்களிற்கு சமாதானத்தில் நம்பிக்கையில்லை  விரைவில் யுத்தம் தொடங்கும் அதுதான் இறுதியுத்தமாக இருக்கும் எனவே இறுதி யுத்தத்திற்கு பெருமளவான நிதியினை பங்களிப்பு செய்யவேண்டும் எனகேட்டுக்கொள்வார் .வெள்ளைக் காரனிற்கு தமிழ் புரியாது என நினைத்து தமிழ்ச்செல்வன்  பேசியிருக்கலாம் ஆனால் இதனை வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகள் உடனடியாகவே பதிவு செய்து மொழிபெயர்ப்பும் செய்து பேச்சு வார்த்தைக்கு அனுசரணை வழங்கும் நாடுகள்  அனைத்திற்கும் அனுப்பிக் கொண்டிருந்தனர் .
அது மட்டுமல்லாது ஆயுதக் கொள்வனவுகளையும் தொடர்ந்துகொண்டேயிருந்தார்கள்.அவர்கள் கொள்வனவு செய்த ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஒன்பது கப்பல்கள் இரண்டு சரக்கு கப்பல்கள் என பதினோரு  கப்பல்கள் தொடர்ச்சியாக  ஒன்றுவிடாது இலங்கை அரசால் தாக்கி மூள்கடிக்கப் பட்டிருந்தது..இதுவரை காலமும் உலக நாடுகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடலில் தண்ணி காட்டிவிட்டு விட்டு பத்திரமாக கனரக ஆயுதங்களையும் ஏவு கணைகளையும்  வன்னிக்கு கொண்டு போய் சேர்த்தவர்களுக்கு என்ன நடந்தது ..இப்போது ஒரு துப்பாக்கியைகூட கொண்டுபோய் சேர்க்க முடியாது அனைத்தும் அடிபட்டுப்போகும் மர்மம் என்ன ..எப்படி  ...எங்கே நடந்தது என பார்த்துவிடலாம் ..
2001 ஆண்டு புலிகள் அமைப்பு பெற்ற பெரு வெற்றியை அடுத்து வன்னி கிளிநொச்சியை தலைநகராக வைத்து நிழல் அரசொன்றை நிறுவியதோடு காவல்துறை, நீதிமன்றம், வாங்கி என சிவில் நிருவாகத் துறைகளை விரிவாக்கம் செய்தவேளை அவர்களின் பிரதான கட்டமைப்புகளிலும் மாற்றங்களை கொண்டு வந்தனர் .அந்த மாற்றமானது இயக்கத்துக்குள் ஒவ்வொரு பிரிவும் அதன் பொறுப்பாளர்களால் தனிப் பெரும் சக்திகளாக உருப்பெறத் தொடங்கியிருந்தது ..அப்படி உருப்பெற்றவைகளுள் பொட்டம்மானின் புலனாய்வு பிரிவு .தமிழேந்தியின் நிதிப்பிரிவு .சூசையின் கடற்புலிகள்அமைப்பு  .தமிழ்செல்வனின் அரசியல் பிரிவு .கருணா கிழக்கு மாகாணத் தளபதி .இவைகளோடு மிக மிக முக்கியமான, வானளாவிய அதிகாரங்களைக் கொண்ட ,ஒருநாளில் மட்டும் பல மில்லியன் டாலர் பணம் புரளும் மிக பணக்கார அமைப்பான அனைத்துலகச் செயலகம் என்கிற அமைப்பும் ஆகும் . இந்த அனைத்துலகச் செயலகத்தின் கீழ்தான் ஆயுத பேரங்கள் ,வாங்கிய ஆயுதங்களை  பத்திரமாக வன்னிக்கு கொண்டுபோய் சேர்த்தல் , போதைப்பொருள் கடத்தல்கள்,புலம்பெயர் தமிழர்களிடம் நிதி வசூலித்தல்,உலகெங்கும் பினாமிப் பெயர்களின் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் ,கோவில்கள் ,தமிழ் பாடசாலைகள் ,என அனைத்துமே இதற்குள் அடங்குவதால்தான் அதற்கு அனைத்துலகச் செயலகம் என்று பெயர் .இதற்கு லோரன்ஸ் திலகர் என்பவரே பொறுப்பாளராக  பாரிஸ் நகரத்தில் இருந்து இயங்கிக்கொண்டிருந்தார்.பாரிஸில் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தங்கள் உறுப்பினர் இருவரை  சுட்டுக்கொலை செய்திருந்தனர்.அந்தக் கொலையில் ஏற்பட்ட சிறு சொதப்பலால் லோரன்ஸ் திலகர் வன்னிக்கு அழைக்கப் பட்டு அவரது பதவியைப் பறித்து அவருக்கு தண்டனையும் தலைமையால் கொடுக்கப்பட்டது .அதற்குப் பின்னர் தாய்லாந்தில் இருந்தபடி ஆயுத பேரம்  மற்றும் வழங்கல் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த கே.பி . என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் பொறுப்பில் அனைத்துலகச் செயலகம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.2001 ம் ஆண்டு நடந்த நிருவாக மாற்றங்களின்போது கே. பி யின் பொறுப்பிலிருந்த அனைத்துலகச் செயலகப் பொறுப்பு பறிக்கப்பட்டு காஸ்ட்ரோ என்பவரிடம் ஒப்படைக்கப் பட்டதோடு கே .பி யின் நிருவாகம் கலைக்கப்பட்டது அவரும் அவருக்கு கீழ் இயங்கியவர்களும் இயக்கத்தை விட்டு விலகி தங்கள் தனிப்பட்ட வாழ்கையில் ஈடுபடலாம் என தலைமை அறிவித்து விட்டிருந்தது. இந்த மாற்றங்களுக்கான கரணம் என்னவெனில்  வெளிநாடுகளில் வணிகம்,  கடத்தல்கள்  ,மற்றும்தமிழர்களிடம் சேகரிக்கப்படும் நிதி என்பனவற்றுக்கு  சரியாக கணக்கு காட்டாமல் ஆயுதங்களை வாங்கி அனுப்பி வைப்பதோடு நிறுத்தி விடுகிறார்கள் . இலங்கை வான்படையினரின் சக்திவாய்ந்த இஸ்ரேலிய தயாரிப்பான ஒலி வேக IAI Kfir ரக குண்டு வீச்சு விமானங்களை தாக்கியழிக்கும் வல்லமை கொண்ட grouse ரக ஏவுகணைகளை கொள்வனவு செய்ய நீண்ட காலம் முயற்சி செய்தும் அதனை வாங்க முடியாது போனதும் ஒரு குற்றச் சாட்டாக வைக்கப் பட்டது .
கே.பி கொம்பனியில் பெரும்பாலும்   கப்பல் மாலுமிகள் அதன் பணியாளர்கள் எல்லாருமே புலிகள்  அமைப்பின் உறுப்பினர்கள் அல்ல  சம்பளத்திற்கு வேலை செய்த சாதாரணமானவர்களே அவர்களை இயக்க விதிகளால் கட்டுப்படுத்த முடியாது . அதே நேரம் புலிகள் அமைப்பானது போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபடுவதாக சர்வதேச போதைப்பொருள் தடுப்பு பிரிவும் உலக நாடுகளும்  தொடர்து குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தார்கள் ஆனால் கடத்தல் வலையமைப்பை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தனர்.இத்தகைய குற்றச் சாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே கே .பி கொம்பனியை நிறுத்துவதாக தலைமை காரணம் சொல்லிக்கொண்டது .

புலிகள் அமைப்பானது தங்களுக்கு தாங்களே வைத்த முதலாவது ஆப்பு ராஜீவ் காந்தி கொலை என்று எடுத்துக்கொண்டால் அனைத்துலக செயலக கட்டமைப்பு மாற்றத்தை இரண்டாவது ஆப்பு என்று எடுத்துக் கொள்ளலாம் ...அனைத்துலக செயலகப் பொறுப்பு கொடுக்கப்பட்ட காஸ்ட்ரோ ஒரு சண்டையில் இரண்டு கால்களும் தொடைக்கு மேலே இழந்தவர். சிகிச்சைக்காக படகில் ஒரேயொரு தடவை தமிழ்நாட்டுக்கு சென்று வந்ததுதான் அவரது வெளிநாட்டுப்பயணம்.மற்றும்படி உலகநாடுகளை வரை படத்தில் மட்டுமே பார்த்து அறிந்திருந்தது மட்டுமல்லாது பெரும்பாலும் படுக்கையிலேயே வாழ்நாளை கழித்துக்கொண்டு இருப்பவரிடம் இருபத்து நான்கு மணி நேரத்தில் இருபது மணி நேரங்களாவது விழித்திருந்து ஓடியாடி வேலைகள் செய்யும் மிகப் பொறுப்பான பதவியை எப்படி பிரபாகரன் அவரிடம் ஒப்படைத்தார் என்பது இன்றுவரை விடைகிடைக்காத மில்லியன் சந்தேகக்களை அடக்கும் கேள்வி .
புதிதாக பொறுப்பெடுத்துக் கொண்ட காஸ்ட்ரோ தனது அமைப்புக்கும் புது இரத்தம் பாய்ச்சப் போவதாக சொல்லிக் கொண்டு   புலிகள் அமைப்பால் உயர் கல்வி கற்பதற்காக வெளி நாடுகளுக்கு அனுப்பப் பட்டிருந்த இளையோர் சிலரிடம் பொறுப்புகளை பிரித்துக் கொடுத்தார்.அப்படி அவர் நியமித்தவர்களில் அனைத்துலக செயலகத்தை வெளியில் இருந்து இயக்க நெடியவன் என்பவரை நோர்வே நாட்டுக்கும் அவருக்கு உதவியாக நிதி விடயங்களை கவனிக்க வாகீசன் என்பவரை  ஜெர்மனிக்கும் .அனுப்பியவர் ஆயுத பேரங்கள் மற்றும் புலிகளின் வணிக கப்பல்களை கவனிக்க ஸ்டீபன் .என்பவரை நியமிகிறார். இவர்களில் புதிதாக பொறுப்பெடுத்த ஸ்டீபன் உலகெங்கும் கள்ளச் சந்தைகளில் ஆயுத பேரங்களை நடத்துவதற்காக பல புதியவர்களை நியமித்தவர் வன்னிக்கு சென்று தலைவரிடம் நேரடியாக ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு வேலைகளை தொடங்க நினைத்து வன்னி சென்றவர் பிரபாகரனை சந்தித்து விட்டு அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக இந்தோனேசியா சென்றதும் இந்தோனேசிய விமான நிலையத்தில் தற்செயலாக ஒரு அதிகாரி சந்தேகத்தில் ஸ்டீபனை விசாரிக்கிறார். ஸ்டீபனின் பதில்களில் மேலும் சந்தேகம் வரவே அவர் கையோடு கொண்டு சென்ற இரண்டு மடிக்கணணி களையும் பரிசோதனை செய்யத் தொடங்கியவருக்கு தலை சுற்றத் தொடங்குகிறது .
நீண்ட காலமாகவே இந்தோனேசிய தீவுகள் புலிகளின் ஆயுதக்கடதல்களில் தளமாக இயங்கிவருவதோடு சில கப்பல்களும் அங்கு  பதிவு செய்யப் பட்டிருந்ததை அந்த நாட்டு காவல்துறையினர் அறிந்திருந்தனர் .எனவே ஸ்டீபனும் புலிகள் அமைப்பை சேர்ந்தவனாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அவரை தடுத்து வைத்தபடி சர்வதேசப் பொலிசாரின் உதவியை நாடியிருந்தனர் .நீண்டகாலமாகவே புலிகள் அமைப்பின் கடத்தல் நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டிருந்த அமெரிக்க சி ஐ ஏ  அதிகாரிகள் சிலர் இந்தக் கைது விபரம் அறிந்ததும் இந்தோனோசியாவிற்கு விரைந்தவர்கள் ஸ்டீபனை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து அவர் கொண்டு சென்ற மடிக்கணணினிகளை ஆராய்ந்த போது அதிச்சி கலந்த மகிழ்ச்சி அவர்களுக்கு ..தோண்டத்தோண்ட தகவல்களை அள்ளிக் கொடுக்கும் சுரங்கமாக  ஆயுத பேரங்கள், தேவையான ஆயுதங்களின் பட்டியல்கள் ,அதனுடன் தொடர்புடையவர்கள் ,பண கொடுக்கல் வாங்கல்கள் ,கப்பல்களின் விபரங்கள் என இந்தனை காலங்களாக அவர்கள் தேடியலைந்த அத்தனை விபரங்களும் அதில் அடங்கியிருந்தது .ஆனாலும் பல விடயங்கள் சங்கேத மொழியில் எழுதப் பட்டிருந்ததால் தகவல்களை முழுமையாக பெற முடியாமல் இருக்கவே  என்ன செய்யலாமென யோசிதவர்கள்  புலிகள் அமைப்பில்  இருந்து வெளியேறி வெளிநாடுகளில் வாழும் யாராவது ஒருவரின் உதவியை பெறுவது என முடிவெடுத்தார்கள் .உடனடியாக பல நாடுகளின் உதவியும் கோரப்பட்டபோது  புலிகளின் தொலைத்தொடர்பு பிரிவில் நீண்டகாலம் பணியாற்றிவிட்டு   தலைமையோடு முரண்பட்டு அங்கிருந்து வெளியேறி சுவிஸ் நாட்டில் அகதியாக வாழ்ந்து கொண்டிருந்த ஒருவரின் விபரம் கிடைக்கவே சுவிஸ் நாட்டு காவல்துறையின் உதவியோடு அவர் இந்தோனோசி யாவிற்கு கொண்டு செல்லப்பட்டார்.அனைத்து சங்கேத மொழிகளும் மொழிபெயர்க்கப் பட்டது.

 உலகம் முழுதும் புலிகளுக்காக ஆயுத பேரத்தில் தொடர்புடைய அனைவருடைய விபரங்களையும்  அவர்கள் வாங்க இருக்கும் ஆயுதங்களின் விபரங்களையும் சேகரித்தவர்கள் உடனடியாக யாரையும் கைது செய்யவேண்டாம் என முடிவெடுத்தார்கள்.காரணம் இவர்களை கைது செய்தால் புலிகள் அமைப்பு உடனடியாக உசாரடைந்து வேறு புதியவர்களை நியமித்து தங்கள் வேலைகளை தங்குதடையின்றி செய்துகொண்டே இருப்பார்கள் .எனவே அவர்களது சர்வதேச கடத்தல் வலையமைப்பை மீண்டும் கட்டியமைக்க முடியாத விதத்தில் அதனை முற்றாக அழித்து விடுவது தான் அவர்களது நோக்கம் .அதற்கான திட்டத்தை வகுத்தார்கள் .ஆயுத பேர வலையமைப்பில் இயங்கியவர்களில் அமேரிக்கா .கனடா நாடுகளில் வசிப்பவர்களே அதிகமாக இருந்ததால் அமெரிக்காவின் எப்  .பி. ஐ. மற்றும் கனடாவின் சி .எஸ்.ஐ .எஸ்  அதிகாரிகள் இணைத்து புலிகளின் சர்வதேச ஆயுதக் கடத்தல் வலையமைப்பை அழித் தொழிக்கும் திட்டத்தை வகுத்தவர்கள்.தங்களுக்கு உதவியாக ஐரோப்பிய காவல்துறையினரின் உதவியையும் நாடியிருந்தார்கள் . அதே நேரம் ஸ்டீபன் இந்தோனேசியாவில் கைதாகி அமெரிக்க அதிகாரி களிடம்  கையளிக்கப் பட்ட விடயம் புகளின் தலைமைக்கு தெரிந்திருக்கவில்லை.அப்படியொரு சம்பவமே நடக்காத மாதிரி  ஸ்டீபனை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்து இயக்கியபடியே அவருக்கு அடுத்த கட்டத்தில் இயங்கிய 1)சதாஜன் சரசந்திரன் 2) சகிலால் சபாரத்தினம் 3)  திருத்தணிகன் தணிகாசலம் 4) நடராஜா யோகராஜா 5) முருகேசு விநாயகமூர்த்தி 6) விஜய்சாந்தர் பத்மநாதன் .7) நாச்சிமுத்து சோக்கிடடீஸ் ஆகிய ஏழு பேரும்  சி.பி.ஐ யின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர் .இவர்கள் வாங்கிய ஆயுதங்கள் கப்பல்களில் ஏற்றப் பட்டு அவை சர்வதேச கடலை விட்டு முல்லைத்தீவு கடலுக்குள் நுழையும் போது இலங்கை அரசுக்கு கச்சிதமான தகவல்கள் வழங்கப்பட்டது.இலங்கை கடற்படையும் வான்படையும் இணைந்து புலிகளின் ஆயுதக் கப்பல்களை துல்லியமாக தாக்கியழித்துக் கொண்டிருந்தார்கள்.
அத்தனை ஆயுதக்கப்பல்கள் அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கும்போதும் ஸ்டீபன் கைதான விடயம் புலிகளின் தலைமைக்கு தெரிந்து விடாதபடி இந்த கூட்டு நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய எப் .பி.ஐ அதிகாரிகள் பார்த்துக்கொண்டார்கள்.புலிகளுக்கும் சந்தேகம் வரவில்லை.அப்போதுதான் புலிகள் தங்கள் நீண்ட நாள் முயற்சியான குருஸ் ரக ஏவுகணைகளை வாங்கும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள்.அதற்கிடையில் புலிகளின் ஒன்பது ஆயுதக் கப்பல்கள் இரண்டு சரக்கு கப்பல்கள் என பதினோரு கப்பல்கள் மூழ்கடிக்கப் பட்டிருந்தது இதற்கு மேலும் தொடர்ந்தால் புலிகள் வேறு வழிகளில் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள் எனவே  இத்தோடு அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவரலாம் என நினைத்த அதிகாரிகள்  ஏவுகணை வாங்க முகர்வர்களை தேடிக்கொண்டிருந்த வர்களிடம் தங்களை ஆயுதத் தரகர்கள் என்று சொல்லிக்கொண்டு அறிமுகமாகிறார்கள்.
ஏவுகணை வாங்கும் திட்டத்துக்கு டீல் போட லண்டனில் வாசித்த முருகேசு விநாயகமூர்த்தி என்பவரை வன்னியில் இருந்த காஸ்ட்ரோ நியமிக்கிறார்.முருகேசு விநாயகமூர்த்தி ஏற்கனவே எப்  பி ஐ யின் கண்காணிப்பிலேயே இருந்தபடியால் ஆயுத தரகர்கள் என்று சொல்லிக்கொண்டு லண்டனில்  அவரை சந்திப்பதில்  எப் . பி .ஐ யினருக்கு எவ்வித சிரமும் இருந்திருக்கவில்லை.முருகேசு விநாயகமூர்த்தி ஒரு வைத்தியர் இவருக்கு வியாதிகள் பற்றி தெரியுமே தவிர விண்ணில் சென்று தாக்கும் ஏவுகணைகள் பற்றிய விபரங்கள் எதுவும் அறியாதவர்.எதோ கோயம்பேடு மார்க்கட்டில் கத்தரிக்காய் வாங்குவது போலவே ஏவுகணைகளை வாங்கிவிடலாம் என்பதுபோலவே நினைத்து ஆயுதத் தரகர்கள் போல வந்திருந்த இரண்டு எப்  பி ஐ அதிகாரிகளிடமும்  ஏவுகணைகள் ,வான் எதிர்ப்பு துப்பாக்கிகள் என்பவற்றின் பட்டியல்களை கொடுத்துவிட்டு எங்கே எப்படி பெறலாம்.பணத்தை எப்படி கை மாற்றுவது என்று கேட்கிறார். அடுத்த சந்திப்பில் சில ஏவுகணை மாடல்களை நேரடியாகவே காட்டுகிறோம் அவை இயங்கும் திறன் இந்த கட்லோக்கில் உள்ளது படித்துப்பாருங்கள். ஏவுகணை மாடலை நாங்கள் காட்டும் போது பாதிப்பணம் நாங்கள் சொல்லும் அக்கவுண்டுகளில் செலுத்திவிட வேண்டும் ஏவு கணைகள் உங்கள் கைகளுக்கு வந்ததும் மீதிப்பணத்தை செலுத்தி விடுங்கள் மீண்டும் சந்திப்போம் என விடை பெற்றவர்களிடம் ..அடுத்த  சந்திப்பு எங்கே என்றார் .அடுத்த சந்திப்பு அமெரிக்காவில் டெக்ஸ்சாஸ் மானிலத்தில் நாங்களே உங்களை தொடர்பு கொள்கிறோம் என்று விட்டு  முகவர்கள் விடை பெற்றார்கள்.
அடுத்த சந்திப்புக்கான அழைப்பு வந்தது முருகேசு விநாயகமூர்த்தி அமெரிக்காவுக்கு பறந்தார் .டேக்சாஸ் மாநிலத்தில் ஒரு பண்ணை வீட்டில் சந்திப்பு .அதே இரண்டு   பாகங்களாக பிரித்து எடுத்து வரப்பட்ட ஏவுகணை ஒன்றின் மாடலை பொருத்தி அவருக்கு  முன்னால் வைத்தார்கள் முகவர்கள் .விநாயகமூர்த்தியால் சந்தோசத்தை அடக்க முடியவில்லை ஒரு குழந்தையைப்போல் துள்ளிக்குதித்தவர் "தொட்டுப் பார்க்கலாமா" என்றதும்  "ம் ..தாராளமாக "  என்றார்கள் .ஆசை தீர தொட்டுத் தடவிப் பார்த்தவர் ஏவுகணை கிடைத்த மகிழ்ச்சியை உடனே வன்னிக்கு சொல்லிவிட நினைத்து கைத் தொலை பேசியை எடுத்தவருக்கு  "மிஸ்டர்  இங்கிருந்து எந்த தொலைபேசி அழைப்பும் வேண்டாம் உங்கள் தங்குமிடம் போனதும் தாரளமாக பண்ணிக்கொள்ளுங்கள் இப்போ பேரத்தை முடித்து விடலாம் என்றார்கள்" .அவர்களாலேயே உருவாக்கப்பட்ட போலியான வங்கிக் கணக்குகளை கொடுத்து அதில் பாதிப் பணத்தை வைப்பிலிடும் படியும் ஏவுகணைகள் புலிகளின் கப்பலில் ஏற்றப் பட்டதும் மிகுதிப் பணத்தை செலுத்தி விடும்படியும் சொல்லி விடுகிறார்கள் .அபோதுதான் விநாயகமூர்த்திக்கு ஒரு விடயம் நினைவுக்கு வந்தது புலிகள் அமைப்பு இதுவரை SAM  ரக ஏவுகணைகளையே பயன்படுதியிருந்தார்கள். அதனை எவுவதட்காகவே சிலர் பயிற்ருவிக்கப் பட்டிருந்தனர்.ஏவுகணைகள் மிகப் பெறுமதியானவை  என்பதால் ஒன்றைக் கூட வீணடிக்க முடியாது. எனவே அவற்றை சரியாகப் பயிற்ச்சி எடுத்தவர்களால் இயக்கப் படவேண்டும் .எனவே குருஸ் ரக ஏவுகணையை இயக்க  உங்களில் ஒருவர் வன்னிக்கு சென்று சிலருக்கு பயிற்ச்சியும் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.சில நிமிடங்கள் யோசித்த முகவர்கள் பிரச்சனையில்லை ஒருவரை அனுப்பி வைக்கிறோம் ஆனால் பத்திரமாக அவரை வன்னிக்கு அழைத்துச்சென்று மீண்டும் இங்கு கொண்டுவந்து விடவேண்டும் என்றதும் .அதெல்லாம் பிரச்சனையில்லை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று விடை பெற்றவர்  தங்கும் விடுதிக்கு வந்ததுமே முதல் வேலையாக வன்னிக்கு காஸ்ட்ரோவுக்கு போனடித்து ஏவுகணை வாங்கிவிட்ட செய்தியை சொல்லிவிட்டு விரைவில் வன்னிக்கு வருகிறேன் தலைவரை நேரில் சந்தித்து ஒரு படம் எடுக்க வேண்டும் அதற்கான ஒழுங்குகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கும் போதே அறைக்கதவு தட்டப்பட தொலைபேசியை நிறுத்தி விட்டு கதவைத் திறந்தார்.
சி.பி.ஐ  என அடையாள அட்டையை தூக்கி காட்டிய சிலர் அவரை இழுத்து விலங்கை மாட்டி அள்ளிப் போட்டுக்கொண்டு போய் ஒருவருக்கு முன்னால் நிறுத்தினார்கள்.அவர் வேறு யாருமல்ல.. ஆயுத முகவர் போல பேரம் பேசிய அதே நபர் தான் .இப்போதான் விநாயகமூர்த்திக்கு விடயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரியத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அமேரிக்கா,கனடா, ஐரோப்பா என எங்கும் கண்காணிப்பிலிருந்த முப்பதுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப் படுகிறார்கள்.அது மட்டுமல்லாது பல நாடுகளிலும் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பல கப்பல்களும் பறிமுதல் செய்யப்படுகின்றது .சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவி, சர்வதேச காவல்துறையினருக்கு தண்ணி காட்டி, உளவுத்துறையினருக்கெல்லாம் உச்சி விளையாடிய புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பானது   அமேரிக்கா தலைமையில்  2006 ம் ஆண்டு முற்று முழுதாக சிதைக்கப் பட்டு முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது .அதன் பின்னர் வெளியே இருந்து ஒரு குண்டூசி கூட புலிகளுக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை ..
வெளியே சர்வதேச நிலைமைகள் இப்படி இருக்கும்போது உள்ளே வன்னியிலும் புலிகளின் இராணுவக் கட்டமைப்பை உடைக்கும் வேலைகளையும் மேற்குலகம் செய்யத் தொடக்கி விட்டிருந்தது.அது எப்படியென்றால்  யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்து பேச்சு வார்த்தைகள் தொடங்கியதுமே மக்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லிக் கொண்டு சில தொண்டு நிறுவனங்கள் (N.G.O) வன்னிக்குள்ளே காலடி எடுத்து வைத்தனர் .இப்போவெல்லாம் என் ஜி ஓக்கள் என்றாலே ஒரு நாட்டின் உளவு நிறுவனத்தின் முகவர்கள் என்கிற நிலைமையாகி விட்டது .காரணம் உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை இந்த என் ஜி ஓக்களின் ஊளியர்களாகவே அனுப்பி வைகிறார்கள்.அப்படி பலர் வன்னிக்குள் நுழைந்ததும் மக்களுக்கு உதவியதை விட புலிகளின் தளபதிகள் முக்கிய உறுபினர்களை குறிவைத்து உதவத் தொடங்கினார்கள்.சுனாமி தாக்கத்தின் பின்னர்  உலகத்திலுள்ள அனைத்து என் ஜி ஓக்களும் வன்னிக்கு படையெடுத்தனர் .
. இவர்கள் சுனாமியால் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  மக்களிற்கு  வெறும் தரப்பாள்களும் பிளாஸ்ரின் கோப்பைகள்  உணவுகள்.படுக்க பாய்களை மட்டும் கொடுத்துக்கொண்டு புலிகளின் தளபதிகள் பொறுப்பாளர்களிற்கு  கணணிகள் மடிக்கணணிகள்.கைத்தொலைபேசி அவர்கள் வீடுகளிற்கு  மின்சாரம் பெற்றுக்கொள்ள ஜெனரேர்ரர்கள். அல்லது இயற்கையில் சூரிய ஒளியில் மின்சாரம் பெறும் சோலார்கள் என சகல வசதிகளிற்கும் அவர்களை பழக்கப் படுத்திக்கொண்டிருந்தார்கள்.காரணம் இன்னொரு சண்டை தொடங்கும் போது புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் இந்த வசதி வாய்ப்புக்களை துறந்து மீண்டும் கெரில்லாக்களாக காடுகளிற்குள் இறங்கி போராப் போய் விடக்கூடாது என்பதே இவர்களது நோக்கமாக இருந்தது. அதே நேரம் சமாதான காலத்தில்புலிகள் அமைப்பில் இணைக்கப் பட்ட வயதில் குறைந்த போராளிகள் புலிகள் இயக்க பொறுப்பாளர்களின் வீடுகளில் வேலைக்காக அமர்த்தப் பட்டிருந்தனர்.அவர்களது வேலைகள் புலிகள் தளபதிகளின் பிள்ளைகளை பராமரித்தல் சமையல் செய்தல் அவர்களது துணிகளை துவைத்தல் என  சம்பளமில்லாத தொழிலாளிகளாக புதிய போராளிகள் இருந்தார்கள். குழந்தைப் போராளிகளைப் பற்றி பக்கம் பக்கமாக அறிக்கை விட்ட மனிதவுரிமை அமைப்புக்களோ  உலக நாடுகளோ இந்த குழந்தை போராளிகள்  தளபதிகளின் வீடுகளில் வேலைக்கு அமர்த்தப் பட்டிருப்பவர்களைப் பற்றி வாயே திறக்கவில்லை காரணம்  அது அவர்களிற்கு தேவையானதாக இருந்தது. அதிகாரங்களிற்கு எதிராகப் போராடப் புறப்பட்ட ஒரு இயக்கம்  அதே அமைப்பில் போராட வந்த போராளிகளை வீட்டு வேலைகளிற்காக அமர்த்தி அடிமைப் படுத்தத் தொடங்கியதை என்னவென்று சொல்ல?? ...இப்படி வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த போராளிகள் பற்றி ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர்  ஒரு தளபதியிடம் கேட்டபோது   இதுவும் போராட்டத்தின் ஒரு வடிவம்தான் என நகைச்வையாக பதில் சொல்லி நழுவிக்கொண்டார் .

இப்படி எல்லா தளபதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக சுக போக வாழ்க்கைக்கு பழக்கப் படுத்திக்கொண்டிருந்தபோது பால்ரச் மட்டும் அதற்கு விதி விலக்காக இருந்தார் .இவர் பெரும்பாலும் போராளிகளுடன் முகாமிலேயே தான் தங்குவார்.தனது உடல் சுகபோக வாழ்க்கைக்கு பழக்கப் பட்டு விடக்கூடாது என்பதற்காக எப்போதும்போல மரத்தாலான வாங்கு ஒன்றிலேயே துண்டை விரித்துப்போட்டு படுத்துக் கொள்வார்.ஆனாலும் அவருக்கு விதி வேறொரு வடிவத்தில் விளையாடியது.இருதய நோயாளியாகி 2003 ம் ஆண்டு சிங்கப்பூரிற்கு அனுப்பப் பட்டு அங்கு அமெரிக்காவில் இருந்து வந்த வைத்தியர்களால் சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டிருந்தார். ஆனால் புலிகள் அமைப்பின் பழைய சர்வதேச வலை கட்டமைப்பு கலைக்கப் பட்ட பின்னர் புதிய கட்டமைப்பினரால்  இவரிற்கான சிகிச்சை ஏற்படு செய்யப் பட்டு சிங்கப்பூரிற்கு பால்ராச் அனுப்பப் படும்போதே  பழைய கட்டமைப்பினரால்  ஒரு எச்சரிக்கை கொடுக்கப் பட்டிருந்தது அது என்னவெனில்  பால்ராச் என்கிற மனிதனை பற்றிய பெரும் வியப்பையும் அவரது தாக்குதல் வியூகங்களையும்  உலக இராணுவ வல்லுனர்களே  அதிசயத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் போது அவரிற்கு வெளிநாடு ஒன்றில் சிகிச்சை கொடுத்தால் புலிகள் அமைப்பை  பலவீனப் படுத்த நினைக்கும் சர்வதேசம் நிச்சயமாக தனது புலனாய்வு பிரிவை பயன் படுத்தி  பால்ராச்சை  கொன்றுவிடுவார்கள். அது  சிகிச்சையின் போதாக இல்லாது இருக்கும்  ஆனால் சிகிச்சையின் போது மிக மெல்ல கொல்லும் விசத்தை அவரது உடலில் ஏற்றி விட சந்தர்ப்பம் உள்ளது எனவே அவரிற்கு உள்ளுரிலேயே சிறந்த வைத்தியர்களை வைத்து சிகிச்சை செய்யவும் என அறிவுறித்தியிருந்ததோடு அதற்கு உலக நாடுகளின் போராளிகள் சிலர் வெளி நாடுகளில் சிகிச்சை பெற்றபின்னர் இறந்த உதாரணங்களும் எடுத்து சொல்லப் பட்டிருந்தது. ஆனால் நீங்கள் மட்டும் அன்ரன் பாலசிங்கத்தை வெளியில் எடுத்து சிகப்பூரில் சிகிச்சை செய்யலாம் எங்களால் முடியாதா என்கிற எகத்தளத்தில் பதில் வந்திருந்தது  அதே நேரம் பால்ராச்சும்  சிகிச்சை முடிந்த பின்னர் வன்னி சென்றதும் இறந்துபோய்விட்டிருந்தார். இது இயக்கத்திற்கு மாபெரும் இழப்பு என்பது மறுக்க முடியாதது. பால்ராச்சின் இறப்பு என்பது இலங்கையரசிற்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருந்தது
அது மட்டுமல்லாது சமாதானகாலத்தில்  பெருமளவான புலம் பெயர் தமிழர்களும் வன்னிக்கு படையெடுக்கத் தொடங்கியிருந்ததோடு புலிகள் அமைப்பின் பொறுப்பளர்களிற்கு  விலையுயர்ந்த  கைக் கடிகாரங்கள் மடிக்கணணிகளை பரிசாகக் கொடுத்து அவர்களோடு நின்று படம் எடுத்துக் கொண்டுவந்து  அதனை பெரிதாக்கி தங்கள் வீட்டு வரவேற்பறைகளில் வைத்து மகிழ்ந்திருந்தது மட்டுமல்லாமல் பிரபாகரனோடு நின்று படம் எடுப்பதற்காக  பெரும் கூட்டமே அலைந்தனர்.அதற்காக  வெளிநாடுகளில் உள்ள அனைத்துலக செயலக பொறுப்பாளர்களிடம் பணம் கொடுத்தும் சிபாரிசுகளை பெற்றுக் கொண்டும் வன்னிக்கு போயிருந்தார்கள். ஊரில் இயக்கத்திற்கு  ஆதரவகாவும்  போராளிகளையும் ஆதரித்தது மட்டுமல்லாமல் தங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் மாவீரராக பறிகொடுத்த பெற்றோர்களே  பிரபாகரனை நேரில் பார்க்கவோ படம் எடுக்கவோ முடிந்திராத நிலையில் பிரச்சனை என்றதுமே வெளிநாட்டிற்கு ஓடிவந்து விட்டு  ஊரைப் பற்றியோ போராட்டத்தைப் பற்றியோ எந்தக் கவலையும் இல்லாமல் தன்னுடைய சுய தேடல்களில் இறங்கியிருந்த ஒருவர் சமாதான காலத்தில் வன்னிக்குப் போய் கொஞ்சம் பணத்தைக் கொடுத்துவிட்டு பிரபாகரனிற்கு பக்கத்தில் நின்று படமெடுக்கலாமென்கிற நிலைமை உருவாகியிருந்தது. இப்படி பிரபாகரனுக்குப் பக்கத்தில் நின்று படம் எடுத்த ஒரேயொரு தகுதியை மட்டுமே வைத்துக்கொண்டு சீமான் தமிழ் நாட்டில் ஒரு அரசியல் கட்சியே தொடக்கி நடத்திக்கொண்டிருக்கிறார் . இதனை பார்க்கும்போது  இங்கு வெளிநாடுகளில் நத்தார் காலங்களில்  ஒருவர்  மக்கள் கூடும் இடங்களில் நத்தார் தாத்தா வேடம் போட்டிருப்பார் அவரிற்கு பக்கத்தில் நின்று படமெடுப்பதற்கு  குழந்தைகள் விரும்புவார்கள்  எனவே  அவரிற்கு கொஞ்சம் பணத்தை கொடுத்து விட்டு தங்கள் குழந்தைகளை நத்தார் தாத்தாவேடம் போட்டவரிற்கு பக்கத்தில் தங்கள் குழந்தைகளை  நிறுத்தி படமெடுத்துபோவார்கள்.இதைப்போல தலைவர் பிரபாகரனும் வெளிநாடுகளில் இருந்து போனவர்கள் பக்கத்தில் நின்று படம் எடுக்கும் நத்தார் தாத்தாவைப்போல மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுருந்தார். ஆனாலும் யுத்தத்தை எப்படியாவது தொடக்கி விடுவது என்கிற முனைப்போடு இருந்தார் .

கருணாவின் பிளவு அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதி கையை விட்டுப்போன நிலைமை .கருணா விடயத்தை சரியாக கையாளவில்லை என்று பல தளபதிகள் குறிப்பாக கிழக்கு மாகாண தளபதிகள் தலைமையில் அதிருப்தியில் இருந்தார்கள் .தொடர்ச்சியாக ஆயுதக்கப்பல்களும் மூள்கட்டிகப் பட்டுக்கொண்டிருந்தது.மேற்குலக நாடுகளின் நெருக்குதல்கள் இயக்கத்தின் மீதான தடைகள் என இயக்கம் மிக நெருக்கடியான கட்டத்துக்குள் சென்று கொண்டிருப்பதை பிரபாகரன் உணர்ந்தார்.இவை எல்லாவற்றுக்கும் பின்னல் முக்கியமான இரண்டு நபரின் மூளைகள் இயங்கிக்கொண்டிருந்தது அவர்களின் இயக்கத்தை எப்படியாவது நிறுத்திவிட முடிவெடுத்தார்.முதலாவது மூளை அப்போதைய சந்திரிக்கா அரசில் வெளிநாட்டமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர். இவர் ஒரு தமிழர் என்பதால் துரோகியாகவே கருதப்பட்டவர் 2005 ஆண்டு நவெம்பர் மாதம் 13 ம் திகதி அவரது வீட்டு நீச்சல் குளத்தில் சினைப்பர் தாக்குதல் மூலம் கொல்லப் பட்டார் .இரண்டாவது மூளை அன்றும் இன்றும் இலங்கை அரசின் பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரம சிங்கே ஆவார் .ரணில் விக்கிரம சிங்கேயை போட்டுத் தள்ளுவது சுலபமாக இருந்தாலும் அதன் பின் விளைவுகள் மிக மோசமாதாய் இருக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும்.காரணம் யுத்த நிறுத்தத்தை அறிவித்து பேச்சு வார்த்தைக்கு தயார் என புலிகள் பல தடவை அறிவித்த போதும் அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா அதனை நிராகரித்திருந்தார் .ஆனால் 2001ம் ஆண்டு நடந்த தேர்தல் மூலம் பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்காவே நோர்வேயின் அனுசரணையுடன் தொடங்கப்பட்ட பேச்சு வார்த்தைக்கு சம்மதம் தெரிவித்து  பிரபாகரனோடு ஒப்பத்தில் கையெழுத்திட்டவர் . ஆகவே அவரை போட்டுதள்லாமல் சமாதனப் பேச்சுவார்த்தையில் இருந்து எப்படி அப்புறப் படுத்துவது என யோசித்துக் கொண்டிருந்த பிரபாகரனுக்கு 2005 ல் நடக்கவிருந்த சனாதிபதிக்கான பொதுத் தேர்தல் கைகொடுத்தது.அந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் மகிந்தராஜபக்சவும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்கவும் வேட்பாளர்களாக களத்தில் இறங்கினார்கள்.இலங்கையில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய பின்னர் புலிகள் அமைப்பின் அணுகுமுறைகள், நடவடிக்கைகள் ,அதன் சரி பிழைகளுக்கப்பால் இலங்கையானாலும் தமிழ் நாடானாலும் சரி தேர்தல் வெற்றி தோல்விகளில் அவர்களின் பங்கு அல்லது அவர்களின் தாக்கம் இன்றி எந்தத் தேர்தலும் நடைபெற்றிருக்கவில்லை என்பது மட்டுமல்லாமல் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சக்தியாகவும் இருந்திருகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதேபோல 2005 ம் ஆண்டு தேர்தலில் மகிந்தவுக்கு சிங்களவர்களின் பெரும்பான்மையான ஆதரவு இருந்தாலும் ரணில்விக்கிரமசிங்க  பெரும்பான்மையான தமிழர்களின் வாக்குகளால் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தது.அதற்க்கு காரணமும் இருந்தது .நீண்ட கால யுத்தத்தால் தமிழர்கள் களைத்துப்போயிருந்தனர் எனவே ரணிலை வெற்றி பெற வைப்பதன் மூலம் சமாதானம் நீடிக்கும் என நம்பினார்கள் .சந்திரிக்கா குமாரதுங்கா சமாதானக் கதவுகள் திறந்துள்ளது என சொல்லிக் கொண்டு தேர்தலில் குதித்த போதும் பெரும்பாலான தமிழர்களின் வாக்குகலாலேயே வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத் தக்கது.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்ட மகிந்தராஜபக்ச தனது வெற்றியை நிர்ணயம் செய்து விடுவதட்காக புலிகளின் உதவியை நாடினார்கள்.அதற்காகவே சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்த புலிகளுக்கோ எப்போதும்போல அதிஷ்ட்ரக் காற்று தங்கள் பக்கம் வீசுவதாக நினைத்து மகிழ்ந்தார்கள் .ஆனால் அதுதான் அவர்கள் எதிர் கொள்ளப்போகும் சூறாவளி என்று அப்போது நினைத்துப்பார்த்திருந்திருக்க மாட்டார்கள்.
அன்று சிந்திய ரத்தம்’ தொடரை எழுதிவந்த கௌரிபால் சிறி என்கிற சாத்திரி.முன்னாள் ஈழப்போராளி, பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர், யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்த சாத்திரி, 1984இல் தமது பள்ளிப் பருவத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். தற்போது புலம்பெயர்ந்து பிரான்ஸில் அகதியாக வாழ்ந்து வருகின்றார். 
==============================================

அன்று  சிந்திய ரத்தம் ..
புதிய தலைமுறை  வார இதழுக்காக ..

சிறையில் இருந்த கருணாமீது மனிதவுரிமை மீறல்,யுத்தக் குற்றம் ,சிறுவர்களை படையில் இணைத்த சிறுவர் துஷ்பிரயோக குற்றம் என பல வழக்குகள் பாயும் என மனிதவுரிமை ஆர்வலர்களும் புலி ஆதரவாளர்களும் ஆவலோடு காத்திருக்க பிரித்தானியாவின் உளவமைப்பான M16 இன் Secret Intelligence Service (SIS) அதிகாரி ஒருவரோடு இணைந்து ஒரு ஸ்ரீலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவரும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய சில நாட்களிலேயே கருணா மீண்டும்  ஜூலை 2, 2008 புதன்கிழமை, இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படுகிறான்.இலங்கை சென்ற கருணாவுக்கு  பெரும் வரவேற்பு கொடுத்த மகிந்தா வேண்டிய வசதி வாய்ப்புகள் அனைத்தும் செய்து கொடுக்கிறார் .அடுத்தடுத்த நாட்கள் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சே, முப்படைத் தளபதிகள் அனைவரோடும் அலோசனைக் கூட்டம் தொடங்குகிறது.புலிகளை அழித்தொழிப்பதற்கான திட்டங்கள் தீட்டப் பட்டு நகர்வு வியூகங்களை வகுத்துக் கொடுக்கத் தொடங்கிய கருணா மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொன்ன விடயம் என்னவெனில் புலிகளுக்கு  எதிரான  நகர்வில்  எந்தப் பெரிய பிரச்னை வந்தாலும் எந்தப் பெரிய அழுத்தம் வந்தாலும் புலிகள் முற்று முழுதாக அழிக்கப் படும்வரை ஒருநாள் ,ஒரு மணி நேரம் மட்டுமல்ல ஒரு வினாடி கூட தாக்குதல் நிறுத்தப் படக்கூடாது.அது தாரை ,வான் ,கடல் என்று இரவு பகலாக எதோ ஒரு மார்க்கமாக தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டும் ஒரு நிமிட தாக்குதல் நிறுத்த இடைவெளியிலும் புலிகள் மீள இணைந்து புதிய தாக்குதல் திட்டங்களை வகுத்து விடுவார்கள்.எனவே காயமடையும் படையினரை களத்திலிருந்து அப்புறப்படுத்தி உடனுக்குடன் புதிய படையினர்  முன்னரங்குக்கு அனுப்பப் பட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லி முடித்தவன்.உடனடியாக தற்போது புலிகளின்  படையணிகள் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் வரைபடங்களை தருவித்து ஆராய்ந்தவன் இதுவரை காலமும் புலிகளுக்காக  இலங்கைப்படையினர் மீது பல வெற்றிகரமான ஊடறுப்பு தாக்குதல்களை நடத்தியவன் முதன் முதலாக புலிகள் அணிகளுக்கு எதிராக ஊடறுப்பு தாக்குதல்களை நடத்த இலங்கைப்படையினருக்கு திட்டங்களைப் போடத் தொடங்கினான்.


புலிகளின் அணிகள்ஊடறுக்கப் பட்டு அவர்களின் முக்கிய ஆயுதக் களஞ்சியங்கள்,வெடிபொளுள் கிடங்குகள் ,ஆட்லெறி பீரங்கி நிலைகள் ஒவ்வொன்றாக அழிக்கப்படத் தொடங்கியது மட்டுமல்லாமல் புலி முக்கியஸ்தர்களையும் ஊடறுப்பு தாக்குதல் அணிகளால்  குறிவைக்கப் பட்டனர் .அப்படி அவர்களால் குறிவைத்து கிளைமோர் தாக்குதல் மூலம்   புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் கர்னல் சார்லஸ் என்பவர் கொல்லப் பட்டார் கொழும்பில் பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திய  இவரது இழப்பும் புலிகளுக்கு பேரிழப்பு என்று சொல்லலாம். புலிகள் படையினர் மீது திட்டமிட்ட தாக்குதல் எதுவும் நடத்தாமல் தற்காப்பு தாக்குதல் மட்டுமே நடத்தியபடி பின்வாங்கிக் கொண்டிருந்தனர்.ஆனால் எங்காவது ஒரு இடத்தில்  நிறுத்தி படையினர் மீது திரும்ப ஒரு பாய்ச்சலை நிச்சயம் நடத்துவார்கள் அதற்கான திட்டம் அவர்களிடம் இருக்கும் .அந்த இடம் புலிகளின்  நிர்வாக தலைநகரான கிளிநொச்சி நகராக இருக்கும் என்று எண்ணிய தமிழ் மக்களும் பெருமளவாக புலிகளின் பின்னாலேயே இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்தார்கள்.பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள்  மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவருமே  புலிகள் கிளிநொச்சியோடு தங்கள் பின்வாங்கலை நிறுத்தி திருப்பித் தாக்குவார்கள் என்றுதான் நினைதிருந்தர்கள்.அனைவரும் எதிர்பார்த்திருந்தது போல கிளிநொச்சி நகரை இராணுவம் நெருங்கிக்கொண்டிருந்தது.அதற்கிடையில் புலிகளோடு சண்டையிடுவது எமது படை வீரர்க்களே அப்படியிருக்க  மகிந்தா அரசு தேவையில்லாமல் எதற்காக ஒரு முன்னாள் புலி உறுப்பினருக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்து பாதுகாப்பும் கொடுகிறார்கள் என்று சிங்கள எதிர் கட்சிகள் குடைச்சல் கொடுக்கத் தொடங்கவே உடனடியாக தேசியப் பட்டியல் மூலம் 2008 அக்டோபர் 7 ஆம் நாள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சராக கருணாவை அமர்த்தி எதிர் கட்சிகளின் வாயை அடைத்து  அழகு பார்த்தார் மகிந்தா.


இலங்கை இராணுவம் கிளிநொச்சி நகரை நெருங்கும் வரை புலிகள் மரபுவழி இராணுவமாகவே தொடர்ந்தும் போரிட்டுக்கொண்டேயிருந்ததை இராணுவத் தளபதிகளும் கருணாவும் கவனிக்கத் தவறவில்லை.அதற்கான காரணம் கட்டுரையில் முன்னரே கூறப்பட்டது போல் புலிகளின் தளபதிகள் சொகுசு வாழ்க்கைக்கு பழக்கப் பட்டிருந்தனர் என்பதோடு மீண்டும் கெரில்லா வாழ்க்கைக்கு திரும்ப அவர்கள் தயாராயிருந்திருக்கவில்லை அதே நேரம்  கருணா பால்ராஜ் ஆகியோருக்கு அடுத்த பெரும் நம்பிக்கை நட்சத்திர தளபதிகளாக இருந்த பானு ,தீபன் ,ஜெயம் ,துர்க்கா,ஜெயம்  போன்றவர்கள் கூட திட்டமிட்ட தாக்குதல் எதையும் நடத்தாமல் தற்காப்பு தாக்குதல்களை மட்டுமே நடத்தியபடி பின்வாங்கிக்  கொண்டிருந்தனர்.கிளிநொச்சியை வீழ்த்தவும் அது வீழ்த்த பின்னர்  புலிகள் தங்களை தற்காத்துக் கொள்ள காடுகளுக்குள் இறங்கி கெரில்லாக்களா மாறி விடும் அபாயமும் இருந்தது .பெரும் படை பலத்தோடு தாக்குதல் நடத்திய இந்தியஇராணுவத்திடமிருந்து சிறு குழுவாக இருந்த புலிகளை மணலாற்று காடுதான் பாதுகாத்தது என்பது கடந்த கால வரலாறாக இருந்தது எனவே  இது வரை மரபு இராணுவமாக போரிட்டுக் கொண்டிருந்த இலங்கை இராணுவத்தை கெரில்லாக்களாக மாற்ற வேண்டிய தேவை அவசியமாவிருந்தது.உடனடியாகவே இரண்டு பட்டாலியன் ( சுமார் ஐந்தாயிரம்  )இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப் பட்டு  கெரில்லாக்கலாக  காடுகளுக்குள் இறக்கப் பட்டதோடு புலிகளை சுற்றி இது புலிகளுக்கான சவப்பெட்டி என்கிற குறியீட்டோடு   "ப " வடிவில் பெட்டியடிக்கப் பட்டார்கள்.இப்போ இலங்கை இராணுவம் கெரில்லாக்களாகவும் புலிகள் மரபு இராணுவமாகவும் போரிட்டுக்கொண்டிருந்தார்கள்.எல்லாப் பக்கமும் ஊடறுத்து நடத்தப் பட்ட கெரில்லா தாக்குதல்களை புலிகள் தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டாடினார்கள்.3திகதி தை மாதம் 2009 ஆண்டு அதிகாலை  புலிகளின் பாரிய மண் அணையை உடைத்துக்கொண்டு இராணுவம் உள் நுழைந்த போது அவர்களுக்கு ஆச்சரியம்.. எந்த எதிர்ப்பும் இல்லாமல் புலிகள் முழுவதுமாக நகரை விட்டு வெளியேறியிருந்தார்கள்.


அங்கிருந்த பெருமளவான பொது மக்கள் இராணுவத்திடம் சரணடையத் தொடங்குகிறார்கள்.
கிளி நொச்சி நகர் வீழ்ந்த பின்னர் புலிகள் மீது இருந்த நம்பிக்கை  உள்ளூர் மக்களிடம் பெருமளவு தகர்ந்து போனது.இதற்கு மேலும் புலிகளை நம்பி பின்னல் செல்ல முடியாது என முடிவெடுத்தவர்கள் கூட்டம் கூட்டமாக சரணடையத் தொடங்குகிறார்கள்.புலிகளும் தாங்கள் காடுகளுக்குள் இறங்க முடியாது பெட்டியடிக்கப் பட்டுள்ளது தெரியவந்தது .அவர்கள் பலஇடங்களில் உடைப்புகளை ஏற்படுத்தி காடுகளுக்குள் நுழையும் போதெல்லாம் காடுகள் முழுதும் இராணுவத்தினர் பரவலாக கெரில்லாக்களாக மறைந்திருந்து தாக்குதல்களை தொடுத்தார்கள்.அதனாலும் பெரும் இழப்புக்களை புலிகள் சந்தித்தது மட்டுமல்லாமல் இராணுவத்தினர் எங்கெங்கு மறைந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கவே முடியாமல் திண்டாடினார்கள் .எனவே அவர்கள் கட்டுப் பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளால் தொடர்ந்தும் முல்லைத்தீவு நகரை நோக்கி தலைமையையும் நகர்த்திக்கொண்டு  பின்வன்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை.அதே நேரம் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி நகரமும் அதுவாகத்தான் இருந்தது .அதட்குப்பின்னல் வெள்ளை முள்ளிவாய்க்கால்,வட்டுவாகல் என்கிற கடற்கரை பிரதேசமே இருந்தது.அதட்குமப்பால் கடல் முழுதும் இலங்கைக் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் ரோந்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கிளிநொச்சி நகரை புலிகள் கைவிட்டு விட்டது மட்ட்டுமல்ல அதோடு அவர்களது கட்டமைப்புகளும் ஆட்டம் காணத் தொடங்கியிருந்தது.அவர்களது சிவில் நிருவாகத் துறைகளான  காவல்த்துறை ,நீதி,நிதித்துறை ,வெளியீட்டுப்பிரிவுப் மட்டுமல்லாது அரசியல்துறையும் கலைக்கப்பட்டு அனைவரையும் ஆயுதம் தூக்கி போராட கட்டளையிட்டார்கள் .இராணுவம்  மக்களையும் புலிகளையும் சரணடையுமாறு ஒலிபெருக்கியில் தொடர்ந்து அறிவித்துக்கொண்டேயிருந்தார்கள்.பொதுமக்கள் சாரை சாரையாக சரணடையத் தொடங்கவே அவர்களுடன் சேர்ந்து புலிகளின் சிவில் நிருவாக கட்டமைப்பினரும் பெருமளவில் சரணடையத் தொடங்கினார்கள்.நிலைமை இப்படியே போனால் புலிகள் தனிமைப் படுத்தப் பட்டு விரைவில் அழித்து முடிக்கப் படுவார்கள் என நினைத்து எவரையும் சரணடைய விடக்கூடாது என்கிற முடிவை புலிகள் அமைப்பில் ஒரு சாரார் எடுக்கின்றார்கள் அவர்களில் முக்கியமானவர் பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் அன்டனியே தான் அந்த முடிவை கடுமையக்கினார்.


அதற்கு சில தளபதிகள் எதிப்பும் தெரிவித்தார்கள்.இதனால் புலிகளின் இராணுவக் கட்டமைப்புக்குள்ளும் குழப்பங்கள் தொடங்கியதோடு அவர்களுக்குள் பிரச்சனைகளும் தொடங்கியது.உலகிலேயே மிகவும் கட்டுப்பாடான அமைப்பு எனப் பெயரெடுத்த புலிகள் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதன் கட்டுப்பாடுகளை இழந்து ஆட்டம் காணத் தொங்குகிறது.சரணடையும் மக்கள் மீது அவர்கள் தாக்குதல்களும் நடத்தத் தொடங்குகிறார்கள்.
தொடர்ச்சியாக புலிகள் ஏதாவதொரு தாக்குதல் முயற்சியை தொடங்கும் போதெல்லாம் எப்படியோ படையினருக்கு செய்திசென்று விடுகிறது.அந்த இடத்தை குறிவைத்து அவர்கள் தாக்குதலை நடத்தி புலிகளின் தாக்குதலை முறியடித்து விடுகிறார்கள்.மிக இரகசியமான தாக்குதல்  செய்திகள்  எப்படி எதிரிக்கு உடனுக்குடன் கசிகிறது எப்படி அதை தடுப்பது என்பதும் புலிகளுக்கு இப்போ பெரும் பிரச்சனை. நிச்சயமாக அவை புலனாய்வுப்பிரிவை சேர்ந்தவர்களால்தான் கசிகிறது என்பது தெரிந்திருந்தது  .இந்த விடயத்தில் பொட்டம்மானை பிரபாகரன் குற்றம் சுமத்த ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாய் தர்க்கம் நடடக்கும் அளவுக்கு விவகாரம் சென்றிருந்தது.புலிகளின் புலனாய்வுப் பிரிவில் கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்ட படி கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களே அதிகமாக இருந்தார்கள்.கருணா பிரிவின் பின்னர் பலர் இரட்டை உளவாளிகளாக மாறிவிட்டிருந்தனர்.புலிகளின் மற்றைய பிரிவுகளுக்குள் ஊடுருவியிருந்த எதிரிகளின் உளவாளிகளை  புலனாய்வு பிரிவினர் கண்டு பிடித்து களையெடுத்த காலம் போய் இப்போ புலனாய்வுப் பிரிவுக்குள் எதிரிக்கு தகவல் கொடுப்பவனை கண்டுபிடிக்க வேண்டிய நிலைமை.அது முடியாத காரியம் என்பதால் புலனாய்வுப்பிரிவும் கலைக்கப் பட்டு அவர்களும் களமுனைக்கு அனுப்பப் பட்டார்கள்.அதன் பின்னர் புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள்.அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு செய்துகொள்ள சிலநாட்கலாவது யுத்தத்தை நிறுத்தவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுவார்கள் அந்த அவகாசத்தை பயன்படுத்தி ஒரு ஊடறுப்பினை செய்து காடுகளுக்குள் சென்று விடலாம் என்பது புலிகளின் திட்டமாக இருந்தது.
ஜனவரி 25, 2009 அன்று  சுமார் 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட  நிரம்பி வழிந்த கல்மடுக் குளத்தின் அணைகளை  இராணுவம் முன்னேறி வரும் விசுவமடுப்பக்கமாக புலிகள் தகர்க்கிறார்கள்.


ஒரு மினி சுனாமியைப்போல பாய்ந்த சென்ற வெள்ளத்தில் ஏற்கனவே தயார் நிலையிலிருந்த சிறியகடற்புலிப் படகுகளின் புலிகளும் தாக்குதலை நடத்த  சுமார் இரண்டாயிரம் இராணுவத்தினர்  கொல்லப் பட்டனர் .இது போன்றதொரு விபரீதத்தை இலங்கை இராணுவம் எதிர்பார்காததால் புலிகள் எதிர்பார்த்தது போலவே நிலை குலைந்து போனார்கள் என்பது உண்மை.பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய கைகளை பிசைந்தபடி கருணாவைப் பார்த்தார்.எதிர்பார்க்காத தாக்குதல்தான் ஆனாலும் புலிகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிடக்கூடாது அப்படி நிறுத்தினால் அவர்கள் நோக்கம் நிறைவேறி விடும் வேறு படை வளங்களை பாவித்து தாக்குதல் தொடர்ந்தும் நடக்கட்டும் என்றன்.இறந்த பெருமளவான படையினரை தாண்டிய படியே வான்படையின் உதவியோடு புதுக்குடியிருப்பை நோக்கி இராணுவத்தினர் தாக்குதலை தொடர்ந்தார்கள்.இதனை புலிகள் எதிர்பார்க்கவில்லை.
களநிலைமைகள் இப்படிப் போய்க்கொண்டிருக்கும்போது யுத்தத்தை நிறுத்துமாறு வெளிநாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கத் தொடங்கியிருந்தது.ஆரம்பத்தில் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் ஏற்பாட்டில் ஐய்ரோப்பவில் இயங்கும் அவர்களது கோவில்களில் சிலர் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்கள்.நாங்களும் போராட்டம் நடத்துகிறோம் என்று அவற்றை படம் பிடித்து வன்னிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.ஆனால் வன்னியில் மக்களின் இழப்பு அதிகரிக்க அதிகரிக்க மக்கள் தாங்களாகவே வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள்.மக்களின் உணர்வுகளை தூண்டி அவர்களை போராட வைப்பதற்காக கொல்லப்படும் மக்களின்  வீடியோக்களும் படங்களும்  பல கோணங்களில் எடுத்து வன்னியிலிருந்து அனுபிக்கொண்டிருந்தர்கள்.அதே நேரம் இதுதான் இறுதி யுத்தம் அனைவரும் உதவுங்கள் என்று பெருமளவான நிதி சேகரிப்பையும் அனைத்துலகச் செயலகத்தினர் செய்துகொண்டிருந்தனர்.புலிகளைப் பலப்படுத்தி எப்படியாவது எம் மக்களை அழிவிலிருந்து காப்பாற்றி விடலாமென அங்கலாய்ப்போடு இலட்சக் கணக்கில் வங்கிகளில் கடன் எடுத்துக் கொடுத்தவர்களும் உண்டு .இறுதி யுத்தத்துக்கு என சேகரித்த பல மில்லியன் யுரோக்களில் ஒரு சதம் கூட வன்னிக்கு அனுப்பப் படாமல் வெளிநாடுகளில் நிதி சேகரித்தவர்கலாலேயே அனைத்தும் அமுக்கப்பட்டது என்பது வேறு கதை.அதே நேரம் வெளி நாடுகளில் நடந்த போராட்டங்களில் கூட பல சிறுபிள்ளைத்தனமான மக்களை முட்டாள்களாக்கும் வேலைகளும் நடக்கத்தான் செய்தது.


சுவிஸ் நாட்டில் புலிகளின் பரப்புரைப் பொறுப்பாளரான அம்பலவாணர் என்பவர் வன்னியில் உடனடியாக யுத்த நிறுத்தம் கொண்டுவர வேண்டும் எனவே சாகும்வரை உண்ணாவிரதம் என அறிவித்து போராட்டத்தில் குதித்தார் .தமிழ் ஊடகங்களில் எல்லாம் செய்திகள் வெளியானது இரண்டு நாளுக்கு மேல் அவரால் தாக்குப்பிடிக்க முடியாமல் போகவே அவரது மனைவியே காவல்துறைக்கு போனடித்து கணவன் சாப்பிடாமல் தற்கொலை முயற்சியில் இறங்கியிருக்கிறார் அவரை காப்பாற்றுங்கள் என்று சொல்லவும் அங்கு விரைந்த பொலிசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டுபோய் வைத்தியசாலையில் போட்டுவிட்டு போய் விட்டார்கள்.அதேபோல லண்டனில் பரமேஸ்வரன் என்பவரும் சாகும்வரை உண்ணாவிரதம் என்று தொடங்கினார் இவர் கொஞ்சம் அதிகநாட்கள் உண்ணாவிரதம் இருந்தாலும்  யுத்தத்தை நிறுத்த பிரித்தானிய அரசு சார்பில் வழங்கப்பட்ட சில உறுதி மொழிகளையடுத்து உண்ணாவிரதம் கை விடப்படுகிறது என அறிவித்தார் .ஆனால் யுத்தமும் நிறுத்தப்படவில்லை புலிகள் அழிக்கப்பட்டு இத்தனை வருடங்கள் கழிந்தும் பிரித்தானிய அரசு சார்பில் வழங்கப்பட்ட உறுதிமொழி என்ன என்றும் அவர் வாய் திறந்து சொல்லவும் இல்லை சொல்லப் போவதுமில்லை  .பிரான்ஸ்  ஜேர்மனி கனடா என சாகும்வரை எல்லா நாடுகளிலும் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தவர்களின் நிலைமைகளும் இதே நிலைமைதான் அரசு தந்த உறுதிமொழிகளை அடுத்து தங்கள் உண்ணாவிதங்களை முடிதுக்கொண்டார்கள்.
ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை உண்ணாவிரதம் என்பது சிலநாட்களாக இருந்தால் அது உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சி அதுவே தொடர்ந்தால் தற்கொலைக்கான முயற்சி.உண்ணாவிரதத்தை ஒரு போராட்ட வடிவமாக அவர்கள் பார்த்ததில்லை.அதனால்தான் மேற்குல நாடுகளில் போராட்டங்களை நடத்துபவர்கள் யாரும் உண்ணாவிரதம் இருப்பதில்லை.எனக்குத் தெரிந்து உலகத்திலேயே ஒரு பொது இலட்சியத்துக்காக அதன் இலக்கை குறிவைத்து ஒரு சாகும்வரை உண்ணா விரதமிருந்து இலட்சியதுக்ககவே உயிரை விட்டவர்கள் இரண்டு பேர்தான் .அந்த இருவருமே ஈழத்தில் இந்தியப்படை காலத்தில் தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உண்ணா விரதமிருந்து உயிரை விட்டவர்கள் அதில் ஒருவன் திலீபன் .அடுத்தது அன்னை பூபதி .இதில் அன்னை பூபதி கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்பதாலேயோ என்னமோ கொஞ்சம் கொஞ்சமாக அவரது பெயர் மறக்கடிக்கப்பட்டு தீலீபன் மடுமே நினைவுகளில் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறான் என்பதையும் குறிப்பிட்டேயாகவேண்டும் .
வெளிநாடுகளில் இப்படியான போராட்டங்கள் தொடங்கும்போதே தமிழகத்திலும் போராட்டங்கள் தொடங்கியிருந்தது முத்துக்குமாரின் மரணமும் அவன் எழுதிவைத்துவிட்டுப் போன கடிதமும் தமிழ்நாட்டு மக்களிடம் குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் பெரியதொரு எழுச்சியை உண்டுபண்ணியிருந்தது.இந்த மக்கள் எழுச்சியை தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே தாங்கள் அறுவடை செய்துவிடவேண்டும் என்கிற நோக்கில் போட்டி போட்டுக்கொண்டு அதனை சிதைத்து அழிதுவிட்டிருந்தனர்.

அதில் எந்த கட்சிகளுமே சளைத்தவர்கள் அல்ல என்று நிருபித்திருந்தார்கள்.முத்துக்குமார் மட்டுமல்லாது ஈழத்தமிழருக்காக யுத்தத்தை நிறுத்தச்சொல்லி தமிழ்நாட்டில் சுமார் பதின்முன்று பேர் தீக்குளித்து இறந்து போனார்கள்.அவர்களது விலைமதிப்பற்ற உயிர்கள் உணர்வுகள் அனைத்துமே ஒரு காசுக்கு பிரயோசனமில்லாத தியாகங்களாகி விட்டது என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது .ஈழத் தமிழர்களுக்காக இத்தனை தமிழகத் தமிழர்கள் உணர்ச்சி வசப்பட்டு  தீக்குளித்துள்ளர்களே ஒரு ஈழத் தமிழனுக்கும் சொந்த இனத்துக்காக உணர்வே வரவில்லையா என்கிற கேள்வி பலருக்கும் எழுந்தபோது 2009 ம் ஆண்டு மாசி மாதம் 12 ம் திகதி வியாழக் கிழைமை இரவு சுவிஸ் நாட்டில் ஜெனீவா ஜ.நா சபைக்கு முன்பாக இலண்டனில் இருந்து வந்து முருகதாசன் என்கிறவர் தீக்குளித்து இறந்து போகிறார் . முருகதாசனின் மரணமும் புலம்பெயர் தமிழர்களிடம் ஒரு உணர்வு ரீதியான எழுச்சியை கொடுத்திருந்தது என்பது உண்மை.அதே நேரம் முருகதாசனின் மரணத்தின் பின்னால் பல சந்தேகங்களும் இருக்கவே செய்கின்றது .அவை என்வெனில்,முருகதாசன் இலண்டனில் இருந்து ஜெனிவா நோக்கி ஒரு பச்சைக் நிற காரில் நண்பர்களோடு புறப்பட்ட வீடியோ ஒளிப்பதிவென்றை பிரித்தானிய காவல்த்துறையினர் கைப்பற்றி விசாரணைகளும் நடாத்தியிருந்தார்கள்.அடுத்ததாக ஈழத் தமிழர்களின் படுகொலைகளையும் அவர்களது நிலைமையையும் சர்வதேசத்திற்கும் ஜ.நா சபைக்கும் எடுத்துச் சொல்லி அதனை தடுத்து நிறுத்தக்கோரி தீக்குளித்தவன் எதற்காக ஜ.நா சபை சுற்றாடலில் யாருமேயற்ற இரவு நேரம் தீக் குளித்தான்?.முருகதாசன் தீக்குளித்து இறந்து போய் நீண்ட நேரத்தின் பின்னராகவே தீயணைக்கும்படையினர் அந்த இடத்திற்கு வந்துள்ளனர் .எனவே முருகதாசனுடன் சென்றவர்கள் அதுவரை என்ன செய்தார்கள்? அவர்கள் யார்??. ஈழத்தமிழர் விடயத்தில் சர்வதேசம் தலையிட வேண்டும் என முருகதாசனால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் ஏழுபக்க அறிக்கை என்று இணையத் தளங்களில் மட்டுமே செய்தியாக வெளியாகியிருந்தது. அதன் மூலம் எங்கும் இல்லை.குடும்பத்தின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த முருகதாசன் தனது இறுதிக் கணம் வரை தனது பெற்றோருடன் தொடர்பு கொள்வேயில்லை. அவன் இறந்துபோன செய்தியை மறுநாள் மாலையளவில் செய்திகளை பார்த்தே அவர்கள் அறிந்து கொண்டிருந்தார்கள்.


அதுவரை அவர்களிற்கு தங்கள் பிள்ளை எங்கே இருக்கிறான் என்றே தெரிந்திருக்கவில்லை இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் சந்தேககங்களும் முருகதாசனின் மரணத்திற்கு பின்னால் இருந்தாலும்.அதனை ஆராய்வது இந்தக்கட்டுரை யின் நோக்கமல்ல என்பதால் கடந்து செல்கிறேன் .
உலகமெங்கும் நடக்கும் ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் அனைத்தையும் அந்தந்த அரசுகளும் ஐ.நா  சபையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அதே நேரம் கிளிநொச்சியை புலிகள் கைவிட்ட பின்னர் ஆயுதங்களை கைவிடத் தயார் என அறிவித்தால் மீண்டும் பேச்சுவார்தைகள் தொடங்குவதைப் பற்றி பரிசீலிக்கிறோம் என ஒரு செய்தியையும் ஐ.நா  சபை நோர்வே ஊடாக புலிகளுக்கு அனுப்பியிருந்தார்கள்.அதனையும் நிராகரித்த புலிகள் யுத்தத்தை நிறுத்துங்கள் ஆயுதங்களை கடைசிவரை கைவிட முடியாது என அறிவித்து விட்டிருந்தார்கள்.சரி இனி உங்கள் விருப்பம் இனி ஆயுதங்களை கைவிட சொல்லி உங்களுக்கு தொந்தரவு கொடுக்கமாட்டோம் நீங்கள் விரும்பினால் எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லியதோடு  ஐ.நா  சபையும் புலிகளுடனான தொடர்புகளை நிறுத்தி விட்டது .


புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று கவனித்தவர்கள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சேவிடம் உங்களுக்கு இராணுவ ஆலோசனைகள் தேவைப்பட்டால் தாராளமா கேளுங்கள் வழங்க தயாராக இருக்கிறோம் என்றவர்களிடம்  "புலிகளின் இதயம்தான் வன்னியில் இருக்கிறது புலிகளின் மூளை இங்கே எங்களிடம் உள்ளது " என்று கருணாவைக் காட்டி சிரித்தவர். எனவே உங்கள் ஆலோசனைகள் தேவையில்லை ஆயுதங்களை மட்டும் கொடுத்தால் போதும் என்றார் .ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் இராணுவம் புலிகளின் கட்டுப் பாட்டு பகுதியை நோக்கி தாக்குதல்களை கடுமைப் படுத்துவார்கள் காரணம் இலங்கையில் நடக்கும் யுத்தத்தை மட்டும் கண்காணிப்பதற்காக மேற்குலகமோ ஐ.நா சபையோ சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் தங்கள் அலுவலகங்களை திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்க மாட்டார்கள் இழுத்துப் பூட்டிவிட்டு போய் விடுவார்கள் .திங்கட்கிழமை காலை அவர்கள் தங்கள் அலுவலகங்களை திறந்து கணணியை இயக்கியதுமே இலங்கை இராணுவத்தின் தாக்குதலை நிறுத்துமாறு இலட்சக்கணக்காண மின்னஞ்சல்கள் கொல்லப்பட்டவர்களின் படங்களோடு குவிந்துபோய் கிடக்கும்.அதே நேரம் இலங்கை இராணுவமும் தாக்குதலை தணித்து தங்களிடம் சரணடைந்த பொதுமக்களின் படங்களோடு  புலிகளிடமிருந்து மக்களை காப்பாற்றி வருகிறோம் என செய்திவெளியிட்டிருக்கும் .ஐ.நா சபையும் உடனே  "இலங்கைத்தீவில் நடக்கும் யுத்தத்தை நாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம் பொது மக்களின் இழப்பு எமக்கு கவலையளிக்கிறது. இலங்கையரசு  பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் " என்று ஒரு அறிக்கையை விடுவார்கள்.பின்னர் மீண்டும் அடுத்த வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல்கள் அகோரமாக இருக்கும் .மீண்டும் அதே மின்னஞ்சல்கள்.. திங்கள் காலை மீண்டும்  ஐ.நா சபையின் நாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம் பொது மக்களின் இழப்பு எமக்கு கவலையளிக்கிறது அறிக்கை வழமையான ஒன்றாகிப் போனது.
இராணுவம் முல்லைத்தீவு நகரை நெருங்கிக்கொண்டிருந்தது அப்போது புலிகள் முதன் முதலாக ஆனந்தபுரம் பகுதியில் ஒரு ஊடறுப்பு தாக்குதல் ஒன்றுக்கு தயாரானார்கள்.அதுவும் பிரபாகரனே களத்தில் நின்று வழிநடத்தப் போகும் தாக்குதல் அனைத்து தளபதிகளும் தங்கள் படைகளை தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.புலிகள் ,மணலாறு காடுகளுக்குள் இறங்கி விடுவார்கள் என்பதால் காட்டுப் பகுதிகள் முழுதும் பலமான இராணுவத்தின் பாதுகாப்பு இருந்ததால் வடக்கு நோக்கிய ஒரு ஊடறுப்பை செய்தபடி ஒரு அணி போக்கு கட்டியபடி இருக்கும்போது இன்னொரு அணி யாழ் குடாநாட்டை நோக்கி நகர்வதே  புலிகளின் திட்டமாக இருந்தது.அனைத்து இராணுவமும் வன்னிக்குள் குவிக்கப் பட்டிருந்ததால் யாழ் குடா பலவீனமாக இருக்கும் இலகுவாக முன்னேறலாம் என்பது அவர்களது கணிப்பு அதுமட்டுமல்ல புலிகள் அமைப்புக்கான வாழ்வா சாவா என்கிறதை தீர்மானிக்கப் போகும் தாக்குதலும் இதுதான் ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகளும் தளபதிகளும்  தலைவரின் உத்தரவுக்காக காத்திருக்கும்போது  இராணுவத்தினருக்கு  தகவல் கிடைத்து விட்டிருந்தது மாத்திரமல்லாது புலிகள் கனரக ஆயுதங்களை நகர்த்துவதை ராடர்கள் மூலம் கண்காணித்துக்கொண்டேயிருந்தது மட்டுமல்லாமல் அவர்களது வாக்கி டாக்கி யிலான பேச்சுக்களையும் இடைமறித்து கேட்டுக்கொண்டிருந்தவர்கள்  புலிகள்  தாக்குததலை தொடங்க ஒரு மணி நேரத்துக்கு முன்னராகவே இராணுவம் புலிகள் அணி மீது தாக்குதலை தொடங்கியது .மூன்று பக்கத்திலும் இருந்து மழை போல வந்து வீழ்ந்து வெடிக்கத் தொடங்கிய  எறிகணை குண்டுகளால் திணறிப்போன புலிகள் சுதாகரிக்கு முன்னரே குண்டு மழையில் புலிகளின் முன்னணி தளபதிகளான கேணல் பானு, கேணல் விதுஷா, கேணல் தீபன், கேணல் கடாபி, கேணல் மணிவண்ணன், கேணல் நாகேஸ், கேணல் சேரலாதன் ஆகியோருடன் நூற்றுக் கணக்கான போராளிகளும் கொல்லப் பட்டனர் .இந்த தாக்குதலில் இலங்கை இராணுவம் சுமார் 100,000 எறிகணைகளையும் , 15 நிமிடங்களுக்கு ஒரு வான் தாக்குதலையும் நிகழ்த்தியிருந்தது.என்பது பின்னர் செய்திகளில் வெளியானது உலகப் போர் வரலாற்றிலேயே ஒரு நாட்டு இராணுவம் குறுகிய ஒரு பிரதேசத்தில் ஒரு விடுதலைப்போரட்ட இயக்கத்தின் மீது நடத்திய தாக்குதலும் இதுதான் .இந்த தாக்குதலில் பிரபாகரனோடு பொட்டம்மான் ஆகியோரோடு கடற்புலி தளபதி சூசையும் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தர்கள் .அந்த சண்டையில் கொல்லப்பட்ட அனைவரையும்இராணுவம் புலிகள் என்கிற வித்தியாசமின்றி  புல்டோசர்கள் மூலம் குழி தோண்டி புதைத்தபடி இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தது.புலிகளின் இறுதி முயற்சியும் தோற்றுப் போயிருந்தது.அதே நேரம் அமெரிக்க கப்பல் ஒன்று  முல்லைத்தீவு வருகிறது. அது புலிகளின் தலைமையை காப்பாற்றும் என்றொரு கதையும் பரவலாக அடிபட்டது மட்டுமல்லாது செய்திகளாகவும் வெளியாகியிருந்தது.அதேபோல அமெரிக்காவும் பாரசீக வளைகுடாவில் நிறுத்தி வைத்திருந்த தனது ஒரு யுத்தக்கப்பலை இந்துசமுத்திர பிராந்தியத்துக்கு முல்லைத்தீவுக்கு மிக அண்மையாக நகர்த்தியிருந்தது அந்தக்கப்பல் எப்படியும் பிரபாகரனைக் காப்பாற்றி விடுமென புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்பியிருந்தார்கள்.ஆனால் அந்தக் யுத்தக்கப்பலானது புலிகளை காப்பாற்ற அங்கு நகர்த்தப் பட்டிருக்கவில்லை. மாறாக முல்லைத்தீவு கடல்வழியாக புலிகளின் முக்கியஸ்தர்கள் தப்பிச் செல்கிறார்களா என கப்பலில் இருக்கும் சக்திவாய்ந்த ராடார்கள் மூலம் கண்காணித்து இலங்கை இராணுவத்துக்கு தகவல் சொல்வதுதான் அவர்களது நோக்கம்.அப்படித் தப்பிச் சென்ற புலகளின் பல படகுகளை இலங்கை கடற்படையினர் தாக்கியது மட்டுமல்லாமல் பலரை கைது செய்துமிருந்தனர்.அப்படி  தப்பிச் செல்லும்போது  கடற்புலி தளபதி சூசையின் மனைவியும்  மகளும் கைதானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இனியும் தங்கள் வெளிநாட்டு பணியகமான அனைத்துலகச் செயலகத்தின் முயற்சிகளால்  அங்கு நடக்கும் மக்கள் போராட்டங்கலாலோ இனி எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை என புலிகளின் தலைமை உணரத் தொடங்கியிருந்தது எனவே உடனடியாக சர்வதேச தொடர்பாளராக மீண்டும் கே .பி  யை  நியமித்த பிரபாகரன் .உலக நாடுகளோடு தொடர்புகளை ஏற்படுத்தியோ அல்லது அதிரடியாக எதாவது திட்டத்தை நிறைவேற்றி  தங்களை எப்படியாவது காப்பாற்றி விடுமாறு கோரிக்கை வைத்திருந்தார்.இப்போ புலிகளின் தலைமைக்கு கே .பியை நம்புவதைத் தவிர வேறு தெரிவு இருந்திருக்கவில்லை.அனால் கே.பியின் நிலைமையோ வேறு விதமாக இருந்தது.அவர் ஏற்கனவே சர்வதேச புலனாய்வுத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தார்.அவரது ஒவ்வொரு அசைவும் புலிகளின் தலைமையுடனான உரையாடல்களும் கண்காணிக்கப் பட்டுக்கொண்டிருந்தது.தான் கண்காணிக்கப் படுகிறேன் என்பதை அறிந்திருந்தும் அதனையும் மீறி புலிகளின் தலைமையை காப்பாற்ற கே. பி  சில முயற்சிகளை எடுத்தார் ஆனால் அவைகள் சர்வதேச புலனாய்வுத்துறையினரால் முறியடிக்கப்பட்டது.அதன் பின்னர் ஆயுதங்களை கைவிட்டு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை ஆனால் சரணடைபவர்களின் உயிருக்கு உத்தரவாதமளிக்க தொடர்ந்தும் இந்தியா மற்றும் வெளி நாடுகளோடும் ஐ.நா சபை அதிகாரிகளோடும் பேசிக்கொண்டு இருப்பதாகவும் கட்டம் கட்டமாக சரணடைய புலிகள் அணியை தயார் படுத்துமாறு  புலிகளின் தலைமைக்கு அவரால் ஆலோசனை வழங்கப்பட்டது .இந்தப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் தரப்பில் கலந்துகொண்ட கே.பி. மற்றும் உருத்திரகுமாரன் (இன்றைய நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர்) தரப்பினர் ஆமோதிப்புடன், உலக நாடுகளால் முன்மொழியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு - சரணாகதி திட்டத்தை அதிகாரபூர்வமயப்படுத்தும் அறிக்கை ஒன்று, 03.02.2009 அன்று இணைத்தலைமை நாடுகளால் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதே நிலைப்பாட்டுடன் 05.02.2009 அன்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரால் ஊடக அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து  புலிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் நடந்தது. எம்மால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், அண்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்தது, ஒரு தளபதியால் குறிப்பிடப்பட்டது. ‘இப்போதும் அப்படியொரு நிலைப்பாட்டை எடுக்கலாம். ஈழம் கொள்கையைக் கைவிட்டால் இந்தியாவால் எந்தவிதத்தில் உதவ முடிகிறது என்று பார்க்கலாம்’ என்பது சில தளபதிகளின் கருத்து. இந்நிலையில், ‘ஈழம் கொள்கையைக் கைவிடுவது தொடர்பான எமது அறிவிப்பை (அல்லது ப்ரபோசலை) புதுடில்லியே தயாரிக்கட்டும். அதை அவர்கள் எமக்கு அனுப்பி வைத்தால், நாம் படித்துப் பார்த்துவிட்டு, ஏற்றுக்கொள்ளும் வகையில் அது இருந்தால் வெளியிடலாம்’ என்று பிரபாகரன் தன் முடிவை அறிவித்தார்.
இதையடுத்து, புலிகள் வெளியிடுவதற்கான ப்ரபோசலை டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாமே தம் கைப்படத் தயாரித்தார். மிக ரகசியமாகத் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணத்தைக் கொடுப்பதற்கு முன், சிதம்பரம் விதித்த நிபந்தனை, ‘இந்த ப்ரபோசலை புலிகள் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, இந்த ஆவணத்தில் உள்ள விபரம் குறித்து எக்காரணம் கொண்டும் இந்தியாவில் உள்ள யாருக்கும் தெரிவிக்கக்கூடாது’ என்பதுதான். சிதம்பரம் நிபந்தனையைப் பா.நடேசன் சீரியசாக எடுக்கவில்லையா அல்லது தமிழகத்தில் உள்ள தமக்குத் தெரிந்தவர்களுக்குக் கூறினால் தப்பில்லை என்று நினைத்தாரா தெரியவில்லை… விஷயத்தை வைகோவிடம் கூறிவிட்டார் .அதே ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நடக்கவிருந்தன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியும், மத்தியில் பா.ஜ.க. கூட்டணியும் அமோக வெற்றிபெறும் என்ற விதத்தில் இருந்தன. இந்நிலையில் , ‘நீங்கள் எக்காரணம் கொண்டும் காங்கிரஸ்காரர்களை நம்ப வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருக்கப் போவதே இன்னமும் சில மாதங்கள்தான். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வரப்போகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிப் பெறப்போகிறது. ஜெயலலிதா, ஈழத்துக்கு ஆதரவாக உள்ளார். இந்த நேரத்தில் ‘ஈழம் கொள்கையைக் கைவிடுகிறோம்’ என்று கூறி எல்லாவற்றையும் கெடுத்து விடாதீர்கள். மத்தியில் ஆட்சி மாறட்டும். மறுநாளே யுத்தத்தை நிறுத்திவிடலாம்’ என்றார் வைகோ .. குழம்பிப் போனார் நடேசன். செய்தி பிரபாகரனுக்கு தெரிவிக்கப் பட்டது. சில நிமிடங்கள் யோசித்த பிரபாகரன், தனது உதவியாளர் ஒருவரை அழைத்து, சிதம்பரம் தயாரித்துக் கொடுத்த ஆவணத்தில், ‘நிராகரிக்கப்பட்டது’ என எழுதி, கையெழுத்திட்டு, நடேசனிடம் கொடுத்தார்.அதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நகரங்கள் ஒவ்வொன்றாக ராணுவத்திடம் வீழ்ந்தன. புலிகள், சிறிய பகுதி ஒன்றுக்குள் முடக்கப்பட்டார்கள். அந்தப் பகுதியையும் ராணுவம் நெருங்கி வரத்தொடங்கியது. இந்த நிலையில், புலிகள் மீண்டும் இந்தியாவைத் தொடர்புகொள்ள முயன்றார்கள். இந்தியாவுடன் மீண்டும் பேசிப் பார்க்கும்படி கேபியிடம் பிரபாகரன் சொன்னார். ஆனால் தேர்தலுக்காக இந்தியா நாடாளுமன்றம் கலைக்கப் பட்டிருந்தது அங்கு யாருடனும் காத்திரமாக பேசமுடியாத நிலை .

மே மாதம் எட்டாம் ஒன்பதாம்  திகதிகளில் புலிகள் அமைப்பு தங்களின் இறுதி முடிவுநெருங்கி விட்டது சரணடைபவர்கள் சரணடையலாம் மற்றையவர்கள் இறுதி வரை போராடுவது என்கிற முடிவை பலர் எடுத்த பின்னர்  முக்கிய தளபதிகளின் மனைவிகள் மற்றும் அவர்களது பிள்ளைகளைகள் என சுமார் 56 பேர்வரையில் எப்படியாவது பத்திரமாக நாட்டை விட்டு வெளியேற்றிவிட முடிவுசெய்துகடற்புலிகளின் ஒரு பிரிவினர் அதற்கான  வேலைகளில் இறங்கியிருந்தார்கள். அவர்களது முதலாவது தெரிவாக தமிழ்நாடு இருந்தது  அங்கு கொண்டுபோய் சேர்த்து விட்டால் அவர்கள் சாதாரண அகதிகளைப் போல உயிர் பிழைத்து வாழ்ந்து விடுவார்கள் என்று நம்பினார்கள்.அது மட்டுமல்லாமல் அந்த இறுதிக கணங்களிலும் தங்களிற்கு ஆதரவான தமிழ்நாட்டுத் தலைவர்களிடம் அவர்களிற்கு நம்பிக்கையிருந்து கொண்டேதான் இருந்தது.அதே நேரம் தமிழ் நாட்டு தலைவர்களது தொலைபேசிகள் அனைத்தும் ஒட்டுக் கேட்கப் படும் என்பதால் புலிகள் அவர்களோடு நேடியாக தொடர்புகளை ஏற்படுத்தாமல் ஜரோப்பிய நாடுகளில் இருந்தவர்கள் மூலமாக தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.
ஜரோப்பாவிலிருந்து வை.கோ வை தொடர்பு கொண்டவர்கள் நிமையை அவரிற்கு சொல்லி கடற்புலிகள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது  பெண்களையும் குழந்தைகளையும் தமிழ் நாட்டுகரைகளில் இறக்கி  விடுவார்கள் நீங்கள் அதற்கு உதவவேண்டும் என்றதும்.எனக்கு இப்போ தேர்தல் வேலைகள் அதிகம் ஊர் ஊராக பயணம் செய்யவேண்டும் அதெல்லாம் முடியாது என்று தனது தொலைபேசியை நிறுத்தி விட்டிருந்தார்.அதே போல திருமாவளவன்.சு.ப.வீரபாண்டியன் .நெடுமாறன்.என்று தொடர்புகொண்ட ஈழத் தமிழ் ஆதரவுத் தலைவர்கள்  பட்டியல் நீளமானது.தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லையென இப்போது அவர்கள் மறுப்பறிக்கை விடலாம் அவர்கள்தான்  அறிக்கைகள் விடும் அரசியல் வாதிகளாச்சே.. .தமிழ் நாட்டு தலைவர்களிடம் இருந்து சாதகமான பதில்கள் எதாவது வரும் என காத்திருந்தபோதுதான் மே.11 ந்திகதி இலங்கை இராணுவத்தின் மோசமான செல் தாக்குதலில் பலர் கொல்லப் படவே இனியும் இந்த தமிழ்நாட்டு தலைவர்களை நம்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை என முடிவெடுத்து. பின்னர் தனிப்பட்ட நட்புகள் மூலம்  தொர்புகள் ஏற்படுத்தப் பட்டு சிறிய படகுகள் மூலம்பலர் தமிழ் நாட்டிற்கும் பலர் இந்தோனேசியா தீவுகளிற்கும் கொண்டு போய் சேர்க்கப் பட்டனர்.சிலர் கடற்படையினரின் தாக்குதலில் இறந்து போனார்கள்.இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் ஜெயித்தது. அதன்பின்னர் தமிழகத்தோடு மட்டுமல்ல இந்தியாவில் யாரோடும் தொடர்புகொள்வதில் பிரயோசனம் இல்லை என்கிற நிலைமை. புலிகளின் தலைமையும் சுமார் ஒரு லட்சம் மக்களும் சுமார் ஒன்றரை சதுர கிலோமீட்டர் பரப்புக்குள் சுற்றி வளைக்கப் பட்டு பெட்டியடிக்கப் படுகிறார்கள். புலிகளின் தலைமை தங்கள் சுற்றி வளைப்புக்குள் அகப்பட்டு விட்டது என்பதை உறுதி செய்த இராணுவம்  அப்போ ஜோர்தான் நாட்டுக்கு சென்றிருந்த மகிந்தா ராஜபக்சேவுக்கு தகவல் அனுப்புகிறார்கள்.அவசரமாக நாடு திரும்பிய மகிந்தா முப்பதாண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பயங்கரவாதத்தை தோற்கடித்து விட்டேன் என்று விமான நிலையத்திலேயே நிலத்தில் விழுந்து மண்ணை முத்தமிடுகிறார்.

அடுத்த நாள் இரவு நான்கு பக்கமும் இராணுவத்தால் சூழப்பட்ட நிலையில் நந்திக்கடல் பகுதியில் சுமார் இருபது படகுகளில் கடற் புலிகள் மற்றும் கரும்புலிகள் பிரபாகரனை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டுமென  எந்த இலக்குமற்று ஒரு ஊடறுப்பை நடத்துகிறார்கள் .. அந்தச் சண்டையில் பிரபாகரன் இறந்து போகிறார் .அவர் சண்டையில் இறந்தாரா தற்கொலை செய்தாரா என்பது இன்றுவரை தொடரும் சர்ச்சை .காரணம் அவருடன் இறுதியாக நின்றிருந்த எவரும் உயிரோடு இல்லை ..மே 18ஆம் தேதி  காலை இலங்கை ராணுவத்தின் 53ஆம் டிவிஷனின் கீழ் செயல்பட்ட 4ஆம் விஜயபாகு ரெஜிமென்ட் படைப்பிரிவு, லெப்டினென்ட் கர்னல் ரொஹித அலுவிஹர தலைமையில் தேடுதலை மேற்கொண்டபோது, நந்திக்கடல் ஓரம், கோரைப் புற்களில் சிக்கிய நிலையில் பிரபாகரனின் உடல் கிடைத்ததாக இலங்கை ராணுவம் மே 19ஆம் தேதி அறிவித்தது.அத்தோடு விடுதலைப் புலிகளுக்கு எதிரான முப்பதாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்தது.
அன்று தமிழ்நாட்டு தலைவர்கள் உதவ மறுத்து தங்கள் கைத் தொலைபேசிகளையும் நிறுத்தி வைத்தபோது கட்டுக்கடங்காத கோபமே அவர்கள் மீது வந்திருந்தது ஆனால் பின்னர் ஆறுதலாக ஆழமாகச் சிந்தித்து பார்தத்தில் ஒரு உண்மை புரிந்தது அவர்களால் ஈழத் தமிழர்கள் பற்றியும் புலிகள் பற்றியும்.பிரபாகரன் பற்றியும்.மேடைகளில் அடுக்கு வசனங்களில் உணர்ச்சி பொங்க பேசவும் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடவும் மட்டுமே முடியும்.நடைமுறை அல்லது செயல் என்று வரும்போது பாவம் அவர்களால் அங்கு எதுவுமே செய்ய முடியாது.அப்படி ஏதாவது செய்ய நினைத்தால் மத்திய.மானில உளவுப் பிரிவினர் ஏதாவது ஒரு வழக்கில் அவர்களை உள்ளே தள்ளிவிடுவார்கள்.அதே நேரம் அன்று முதலமைச்சராக இருந்த கலைஜர் புலிகளோடு பேச்சுவார்த்தை மேசையில் தீர்வை வைத்து அது சரிவராத பட்சத்தில் அவர்களை முற்றாக அழித்து இலங்கைத் தீவில் ஆயுத மோதலை கொண்டுவருவதற்காக உலக நாடுகள் பெரும்பாலானவை 2001 ம் ஆண்டு மிக நுணுக்கமாக திட்டமிட்டு நகர்த்தத் தொடங்கியிருந்தார்கள்.அதில் பெரும்பங்கு மேற்குலகத்தினுடையது.இங்கு இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலென்ன பி.ஜே .பி இருந்தாலென்ன எல்லாம் ஏற்கனவே திட்டமிட்டபடியே தான் நடந்து முடிந்திருக்கும்.இங்கு . உலகமயமாக்கல்.புதிய பொருளாதாரக்கொள்கை.சர்வதேச அரசியல் என்று அவைகளைப் புரிந்து அதன் நெளிவு சுளிவுகளோடு தம்மை நம்பிய மக்களின் அபிலாசைகளை அரசியல் ரீதியாக  வென்றெடுத்து  தங்களையும் பாதுகாத்து பயணிக்க பல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தும் அத்தனையையும் தட்டி விட்டு..உலகத்தில் எவரையுமே நம்பாது  கொண்ட கொள்கைக்காக இறுதிவரை ஆயுதத்தையே நம்பி தாங்களும் அழிந்ததோடு ஈழத் தமிழர் அரசியல் எதிர்காலத்தையும் சூனியத்தில் தள்ளி விட்டு சென்றது மட்டுமல்லாமல் உலகத்திலேயே விடுதலைக்காக  ஆயுதப் போராட்டம் தொடங்கிய அனைத்து குழுக்களுக்கு முன்னுதாரணமா இருந்தது மட்டுமல்லாது முப்படைகளையும் கட்டியெழுப்பி ஒரு நிழல் அரசையும் நடத்திக்காட்டியதோடு மட்டுமல்லாமல்.  தோற்றுப் போய் இப்படியான ஒரு மோசமான அழிவை சந்திக்கக் கூடாது என்பதற்கும் ஒரு முன்னுதாரணமாக புலிகள் அமைப்பு எப்போதும் வரலாற்றில் எழுதி நிக்கும் ..பிரபாகரன் என்கிற பெயர் என்றென்றும் உலகத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு குறியீடு ....
இந்த வாய்ப்பை எனக்களித்த புதிய தலைமுறை ஆசிரியர் குழுமத்துக்கு நன்றிகள் அன்புடன் சாத்திரி ..