அன்று சிந்திய ரத்தம் தொடர் 11
புதிய தலைமுறை வார இதழுக்காக ..
புதிய தலைமுறை வார இதழுக்காக ..
இலங்கை பொதுத் தேர்தலையொட்டி 2005 ம் ஆண்டு புலிகளுக்கும் மகிந்தா தரப்புக்கும் இரகசியப் பேச்சுக்கள் தொடங்கியது புலிகள் தரப்பில் எமில் காந்தன் என்பவர் பேரம் பேசலில் ஈடுபட்டார் .ரணில்விக்கிரமசிங்க வுக்கு தமிழர்களின் வாக்குகள் சென்று விடாமல் தடுத்து மகிந்தாவை எப்படியும் வெற்றி பெறவைத்து விடுவதாக புலிகள் உறுதியளித்தார்கள் அதற்கு கைமாறாக பெருமளவு பணத்தை பெற்றுக்கொண்டார்கள் இந்தப் பணத்தை எமில்காந்தனே பெட்டிகளில் எடுத்துச் சென்றதாகவும் பெற்றுக்கொண்ட பணம் சுமார் இரு நூறு மில்லியன் ரூபாய்கள் என அன்று செய்திகள் கசிந்திருந்தது.மகிந்தராஜபக்ச வுடன் நடந்த பேரம் பேசலின் பின்னர் எமில்காந்தன் வெளிநாடு சென்று விட்டார் . தேர்தல் மூலம் மகிந்தா அரசு அகற்றப்பட்டு புதிதாக பதவுயேற்ற மைத்திரி அரசு எமில் காந்தனுக்கான சர்வதேச பிடியாணை பிறப்பித்திருந்தது .இந்தக்கட்டுரை எழுதப்படுக் கொண்டிருக்கும் நேரம் எமில்காந்தன் இலங்கை சென்று நீதி மன்றத்தில் மகிந்தாவுடன் நடந்த பேரம் பேசல் மற்றும் கைமாறிய பணம் பற்றி வாக்கு மூலம் அளிக்கப் போவதாக சேதிகள் வெளியாகியுள்ளது.இந்தக்கட்டுரை வெளியாகும்போது சிலநேரம் அவர் வாக்கு மூலம் அளித்திருக்கலாம் .
தேர்தல் நெருங்கும் வேளை வாக்களிக்க தமிழர்களும் ஆவலாக காத்திருந்தார்கள் ஆனால் தேர்தலை புறக்கணிக்கும் படியும் யாரும் வாக்களிக்கக் கூடாது அப்படி மீறி வாக்களித்தால் அவர்கள் துரோகிகளாக கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புலிகள் அறிவித்தார்கள்.தேர்தல் நடந்து முடிந்தது மகிந்தா புலிகள் கூட்டணி எதிர்பார்த்தது போலவே தமிழர்கள் எவரும் ஓட்டுப் போடாத நிலையில் குறைந்த ஒட்டு வித்தியாசத்தில் ரணில் விக்கிரமசிங்கே தோல்வியடைய இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று சனாதிபதியாக நவம்பர் 19, 2005 அன்று மகிந்தராஜபக்ச பதவியேற்றார்.அதே நேரம் பாம்பின் கால் பாம்பறியும் என்பதைப்போல தான் பதவியேற்றதும் புலிகள் தன்னைத்தான் குறி வைப்பார்கள் என்று மகிந்தா கணித்திருந்தார் .புலிகள் எப்போதுமே நம்ப நடப்பார்களே தவிர நம்பி நடக்கமாட்டார்கள்.ஒருவரிடம் தங்கள் தேவைகளை முடிதுக்கொண்டதுமே பிற்காலத்தில் அவரால் இரகசியங்கள் வெளியாகி எந்த பிரச்சனைகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரை போட்டுத்தள்ளிவிடுவார்கள்.அதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும் இலங்கை சனாதிபயாகவிருந்த பிரேமதாசா மிகச் சிறந்த உதாரணமாகும்.
இலங்கையில் இந்தியப்படைகள் நிலைகொண்டிடுந்த காலத்தில் அவர்களை வெளியேற்ற அப்போது சனாதிபதியாக பொறுப்பேற்ற பிரேமதாசாவுடன் கைகோர்த்துக்கொண்டதோடு அவரிடமிருந்து பெருமளவு ஆயுதங்களும் பணமும் பெற்றிருந்தார்கள்.
இந்தியப் படைகள் இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் அவர்களது வெளியேற்றத்தை எதிர்த்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அப்பாதுரை அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரையும் பிரேமதாசவின் உதவியோடு கொழும்பில் வைத்து சுட்டுக்கொலை செய்தவர்கள்.சிலகாலத்திலேயே பிறேமதாசவையும் தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்திருந்தனர்.எனவே பதவிக்கு வந்த மகிந்தவும் தனக்கும் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்ற கோத்தபாய ராஜபக்சே வுக்கும் தனித் தனியாக நூறு பேரடங்கிய விஷேட பயிற்ச்சி பெற்ற இராணுவ பாதுகாப்பு அணி ஒன்றை உருவாக்கியதோடு தனது நடமாட்டங்களையும் இரகசியமாகவே வைத்திருந்தார்.அவர் எதிர் பார்த்தது போலவே புலிகள் அவர்மீதும் கோதாபய ராஜபக்சே மீதும் பல கொலை முயற்சிகளை நடத்தினாலும் அதிஸ்ட வசமாக அவர்கள் உயிர் தப்பினார்கள்.
இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் புலிகள் ரணிலோடு போட்ட பேச்சுவார்த்தை ஒப்பந்தம் செல்லுபடியற்றது எனவே புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள வேண்டும் என மகிந்தா அறிவித்தார் .அப்படியெல்லாம் முடியாது முன்னர் போடப்பட்ட ஒப்பந்தம் தனியே இந்த இரண்டு தரப்பினரோடு மட்டும் நின்றுவிடாது நோர்ட்டிக் நாடுகள் உட்பட பல சர்வதேச நாடுகளையும் தொடர்பு படுத்திய ஓர் ஒப்பந்தமாகும் எனவே புதிய ஒப்பந்தம் எதுவும் போடத் தேவையில்லை என புலிகள் தரப்பும் அடம் பிடித்துக்கொண்டேயிருக்க பேச்சுவார்தைகள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது .புலிகளையும் இலங்கை அரசையும் மீண்டும் பேச்சு வார்த்தை மேசைக்கு இழுக்க நோர்வே தொடர்ந்து முயற்சி செய்துகொண்டேயிருந்தது.எதுவானாலும் மேசையில் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என இரு தரப்பையும் ஒருவாறு 2006 ம் ஆண்டு பெப்ரவரி 22ஜெனிவாவுக்கு கொண்டு வந்தார்கள் .அந்த பேச்சு வார்த்தைகளில் கருணா குழுவுக்கு இலங்கை அரசு ஆதரவு கொடுத்து புலிகளை பலவீனமக்குகிறார்கள் அவர்களிடமிருந்து ஆயுதங்களை களையுமாறு புலிகள் தரப்பு குற்றச்சாடு வைக்க அரசு தரப்பு அதை மறுக்க இரண்டு நாள் நடந்த பேச்சுக்கள் எந்தவித முன்னேற்றமும் இன்றி முடிவடைந்து இரண்டு தரப்புமே நாடு திரும்பியிருந்தார்கள்.
அதே நேரம் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் பல இடங்களில் சிறு சிறு உரசல்களும் சர்ச்சைகளும் தொடர்ந்துகொண்டேயிருந்தாலும் கருணா குழுவினரும் புலிகளும் காண்கிற இடத்தில் மாறி மாறி ஒருவரையொருவர் போட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்கள்.யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவினரோ என்ன செய்வது என்று விழிபிதுங்கி நின்றார்கள்.அப்போதுதான் 2006 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 திகதி காலை இலங்கை ராணுவத் தளபதி சரத்பொன்சேகா மீது கர்ப்பிணிப்பெண் போல வேடமிட்டு வந்த ஒருபெண் தற்கொலை தாக்குதல் நடத்துகிறார் அதில் பொன்சேகா மோசமான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டவர் கோமா நிலைக்கு நிலைக்கு சென்று விடுகிறார் .இந்த செய்தியறிந்ததும் இலங்கை இராணுவத்தினர் புலிகளின் நிலைகளை இலக்குவைத்து எறிகணை தாக்குதல்களை நடத்தினார்கள்.பதிலுக்கு புலிகளும் சில கண்ணிவெடி தாக்குதல்களை இராணுவத்தினரை குறிவைத்து தக்க பலர் கொல்லப்பட்டனர் .இப்படி நிலைமை மோசமாகிக்கொண்டேயிருந்தது.ஆனால் இறுதி யுத்தத்துக்கும், பெரும் மனிதப் பேரவலத்துக்கும், புலிகளின் முடிவுக்கான ஆரம்பமாக காலண்டரில் இருந்து கிழிக்கப் பட்ட அந்த நாள் 2006-ம் ஆண்டு, ஜூலை மாதம் 21-ம் தேதி நள்ளிரவு மாவிலாறு அணை பூட்டப்படுகிறது.
மாவிலாறு என்பது இலங்கையில்கிழக்கு மாகாணத்தில் திருகோணமலைக்கு அண்மித்து வேளாண்மைக்கு நீர் வழங்கும் ஆறுகளில் ஒன்று. இதில் தண்ணீர் திறந்து விடுவதற்கான அணைக்கட்டு கதவுகள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்தது. இந்தக் கதவுகள் திறந்து விடப்பட்டால், மாவிலாற்றின் நீர், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பாயும்.விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவிலாறு அணைக்கட்டு திறக்கப்பட்டால், தண்ணீர் பாய்ந்து செல்லும் பகுதிகள்: கல்லாறு, தெஹிவத்த, தோப்பூர், செருவில, செருநுவர ஆகிய கிராமங்களில் உள்ள வேளாண்மை செய்யும் வயல்கள்.இந்தப் பகுதியில் தமிழ் சிங்கள முஸ்லிம் என்று மூவின மக்களும் இந்த ஆற்றை நம்பியே விவசாயம் செய்வார்கள்.பேச்சு வார்த்தைகள் தொடங்கி யுத்த நிறுத்தம் அமுலில் இருந்ததால் ஆசிய அபிவிருத்தி வங்கியானது மேலும் பல கிராமத்து விவசாயிகள் பலனடையும் விதமாக மாவிலாறை புனரமைப்பு செய்து கொண்டிருந்தது.இதன் அணைகளையே தளபதி சொர்ணத்தின் கட்டளைக்கமைய புலிகள் அமைப்பினை சேர்ந்த இருவர் ஜூலை மாதம் 21-ம் தேதி நள்ளிரவு பூட்டி விடுகிறார்கள்.மறுநாள் காலை ஆற்றில் தண்ணீர் குறைவாக வருவதைக்கண்ட விவசாயிகள் வேளாண்மை அதிகாரியிடம் விடயத்தை சொல்ல அவரும் அணையை பார்வையிட சென்றபோது காவல் கடமையில் இருந்த புலிகள் அவரை தங்கள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்லவிடாமல் திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
உடனே நூற்றுக்கும் அதிகமான சிங்கள விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தவே பிரச்னை பெரிதாக உருவெடுத்தது.அதன் பின்னரே புலிகளின் தலைமைக்கும் விடயம் தெரியவந்திருந்தது.சொர்ணம் எதுக்காக மாவிலாறை பூட்டினார் என்று விசாரணைகள் நடத்திக்கொண்டிருக்க அவகாசம் இல்லாத காரணத்தால் திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் எழிலனிடம் (சசிதரன்) நிலைமைகளை கவனிக்கும்படி உத்தரவிட்டு விடுகிறார்.(இவரது மனைவியே ஆனந்தி பின்னாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானவர் .)சம்பவ இடத்துக்கு எழிலன் செல்லும்போதே அங்கு யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவினரும் வந்து விட்டிருந்தனர் .அணை பூட்டிய விவகாரம் புலிகள் மீது விழுந்து விடாமலிருக்க உடனடியாக அங்கு உள்ள தமிழ் விவசாயிகளை அழைத்து வந்து போராட்டம் நடத்த வைத்த எழிலன் அங்குள்ள விவசாயிகளுக்கு நீர் பற்றாக்குறை தமிழ் விவசாயிகள் பகுதி சரியாக புனரமைப்பு செய்யப்படவில்லை அதனால் அவர்களே அணையை பூட்டியதாக போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவினரிடம் சொல்கிறார் .
மறுபக்கம் சிங்கள விவசாயிகள் தாங்களே நேரில் சென்று அணையை திறக்கப் போவதாக புறப்பட இலங்கை இராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்த புலிகள் பாதையை பூட்டி விடுகிறார்கள். அங்கு நிலைமைகள் மோசமானதால் புலிகளின் தலைமையோடும் அரசோடும் பேசி நிலைமையை சரி செய்வதாக சொல்லிவிட்டு கண்காணிப்புக்குழுவினர் கொழும்பு திரும்பிவிடுகிறார்கள்.அதே நேரம் சொர்ணம் எதற்காக அணையை பூட்டும்படி கட்டளையிட்டார் என்று பார்த்துவிடலாம் .
தளபதி சொர்ணம் யாழ்ப்பாணம் மானிப்பாயை பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் திருகோணமலையில் தான் வளர்ந்து கல்வி கற்றுவந்தவர் 1983 ம் ஆண்டு புலிகள் அமைப்பில் இணைத்தவர் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பு அணிக்கு பொறுப்பாக பலகாலம் இருந்தார்.புலிகளின் ஆரம்ப காலத் தாக்குதல்கள் பலவற்றை திறம்பட நடத்தி சொர்ணம் என்கிற பெயரை கேட்டாலே ஸ்ரீலங்கா இராணுவம் கலங்கும் அளவுக்கு முன்னணித் தளபதியாகவும் வலம்வந்துகொண்டிருந்தவர்.இந்தியப்படைகள் மணலாறுப் பகுதியில் ஒப்பரேசன் பவான் என்கிற நடவடிக்கை முலம் பிரபாகரனை சுற்றி வளைத்திருந்தபோது அந்த முற்றுகையை உடைத்து பிரபாகரனை காப்பாற்றிய பெருமையும் சொர்ணத்துக்கு உண்டு .ஆனால் புதிய யுக்திகளை புகுத்தாது ஒரே முறையிலான தாக்குதல்கள் காலப் போக்கில் எதிரிக்கு பழகிப்போனதால் அவரது தாக்குதல்கள் புலிகளுக்கு பெரும் இழப்பைக் கொடுத்ததோடு சில தாக்குதல்கள் தோல்வியிலும் முடிந்தது.புதிய யுக்திகளை கையாண்டு பெரும் வெற்றிகளை குவித்த கருணா ,பால்ராஜ் ,பானு ,தீபன் ,ஜெயம் ,போன்றவர்கள் முன்னணித் தளபதிகளாக வலம்வரத் தொடங்கியதோடு தலைமைக்கும் நெருக்கமகிக்கொண்டிருக்க 90 களின் பின்னர் சொர்ணம் சண்டைக்களத்திலிருந்து ஓரம் கட்டப்பட்டு முற்றாகவே காணாமல்போயிருந்தார்.தன்னை நம்பி தலைவர் இப்போ எந்த சண்டையையும் தருவதில்லை என்பது சொர்ணத்துக்கு பெரும் அவமானமாகவே இருந்தது.வன்னியில் சும்மா இருந்த சொர்ணத்தை கருணா பிரிவின் பின்னர் கருணா அணிக்கு எதிராக படை நடத்த தலைமை கிழக்கிற்கு அனுப்பி வைத்தாலும் பானுவையும் கூடவே அனுப்பி வைத்தார் தலைவர் .
நீண்ட காலத்துக்குப் பின்னர் படை நடத்த ஒரு சந்தர்ப்பம் அதுவும் கிழக்கின் வீரத்தை உலகறிய வைத்து பலவருடங்கள் கூடவே இருந்து ஒன்றாகப் பழகி உண்டு உறங்கிய நண்பனுக்கு எதிராக படை நடத்தவேண்டும் என்பது மட்டுமல்ல இன்னொரு நெருங்கிய நண்பனாகவும் திருகோணமலை மாவட்ட தளபதியாக இருந்த பதுமனையும் கருணா பிரிவின் பின்னர் சந்தேகத்தில் புலிகளின் தலைமை வன்னிக்களைத்து கைது செய்திருந்தனர் இப்படி பல விடயங்களாலும் விரக்தியின் விளிம்புக்கு தள்ளப் பட்டிருந்த சொர்ணம் கருணாகுழுவுக்கு எதிரான நடவடிக்கையின் பின்னர் அனைவரும் வன்னி திரும்பியிருந்தாலும் அவர் மட்டும் திருகோணமலையிலேயே தங்கியிருந்தார்.அது மட்டுமல்லாது நீண்ட காலமாகவே தலைமை சண்டையை தொடக்கிவிட சந்தர்ப்பத்துக்காக காத்திருந்ததால் இனி நடக்கப் போகும் சண்டையில் எப்படியாவது ஒரு பெரு வெற்றியை பெற்று மீண்டும் தனது திறமையை தலைமைக்கு நிருபித்து விடுவதென மனதுக்குள்ளே சபதமெடுத்து விட்டு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார். வடக்கு கிழக்கில் சிறு சிறு மோதல்கள் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கு நடந்துகொண்டிருந்தாலும் பெரிய யுத்தம் எதுவும் நடக்கவில்லை எனவே மாவிலாறை பூட்டுவதன் மூலம் எப்படியும் இராணுவம் ஒரு தாக்குதல் நடவடிகையை செய்யும் அதனை முறியடித்து வெற்றி செய்தியை வன்னிக்கு அனுப்பி விடலாம் என்பது சொர்ணத்தின் திட்டமாக இருந்தது.
அன்று சிந்திய ரத்தம் தொடர் ...பாகங்கள் .7..8..9..10
அன்று சிந்திய ரத்தம் தொடர் ..பாகங்கள் .7..8..9..10
புதிய தலைமுறை வார இதழுக்காக .
.கருணாவின் பிரச்சனைகள் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க மறுபக்கம் புலிகளுக்காக வந்த இரண்டு ஆயுதக் கப்பலில் ஒன்று தாக்கியழிக்கப்பட இன்னொன்று தப்பிச் சென்றிருந்தது தப்பிச் சென்ற இரண்டாவது கப்பலும் சில மாதங்களின் பின்ன புலிகள் அவனை இலங்கையில் தேடிக்கொண்டிருக்கும்போதே இந்தியா தற்காலிகமாக தத்தெடுத்திருந்தது.ஊட்டியில் தனியான ஒரு பங்களாவில் தங்க வைத்து புலிகளைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டதோடு புலிகளுக்கு எதிரான நவடிக்கையில் தங்கள் பக்கம் வைத்திருக்க விரும்பியிருந்தார்கள்.ஈழ விடுதலை இயக்கங்களில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (P.L.O.T ) அமைப்பின் உட்கட்சி மோதல் மற்றும் படுகொலைகளால் அதிலிருந்து பிரிந்தவர்களில் ஒருவரான ஞானப்பிரகாசம் ஞானசேகரன் (பரந்தன் ராஜன்) என்பவர் அந்த அமைப்பில் இருந்து பிரிந்தவர்களை வைத்து ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி (E.N.D.L.F) என்றொரு அமைப்பை உருவாக்கியிருந்தார்.இந்த அமைப்பானது முழுக்க முழுக்க இந்திய அரசின் உதவியோடு அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது.இலங்கையில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த 1987 ...1990 வரையான காலத்தில் இந்திய இராணுவத்தோடு இணைந்து புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடு பட்டிருந்தனர்.பின்னர் இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய போது அவர்களுன் E.N.D.L.F அமைப்பினரும் வெளியேறி இந்தியாவிற்கு சென்று விட்டிருந்தது மட்டுமல்லாது எவ்வித செயட்பாடுக்களுமின்றி முடங்கிப்போய் இருந்தனர்.கருணாவை வைத்து மீண்டும் அந்த அமைபிற்கு புத்துயிர் கொடுக்க விரும்பிய இந்தியா அதற்கான வேளைகளில் இறங்கியிருந்தது .கருணாவிற்கும் வேறு வழியின்றி ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைமை .இங்கு ஒரு ஆச்சரியப்படவேண்டிய விடயத்தையும் கூறவேண்டும் கருணா புலிகள் அமைப்பிலிருந்து பிரிவதற்கு சரியாக இரண்டு வருடங்களிட்கு முன்னரே 2002ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் இருந்து வெளிவரும் Frontline என்ற ஆங்கிலப் பத்திரிகையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணா கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராக இருந்தும் சக்தி மிக்க தலைவராக உருவாகி வருகின்றார்.
பிரபாகரனை மிஞ்சும் தலைவராகவும் அவர் வர முடியும். ஒரு நாள் பிரபாகரன் இடத்திலேயே கருணா அமரும் நிலை வரும் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருந்தது .
அன்றைய கால கட்டத்தில் கருணா பிரபாகரன் மோதல் வருமென்று யாருமே கனவில் கூட நினைத்துப்பார்த் திருக்காத காலகட்டம் .எனவே இப்படியொரு மோதலை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை சில உழவமைப்புகள் அன்றே ஆரம்பித்து விட்டிருந்தது புலனாகிறது.கருணா E.N.D.L.F இணைந்து புலிகளுக்கு எதிரான நவடிக்கைக்கான திட்டங்களை வகுத்து அதை நடை முறைப்படுதுவதட்காக சில இந்தியாவில் தங்கியிருந்த E.N.D.L.F உறுப்பினர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.ஆனால் கருணா எங்கே தெரியாமல் புலிகளின் தலைமை தலையை பிய்துக்கொண்டிருந்தபோது தான் 15.04.2005 அன்று மட்டக்களப்பு எல்லையில் காட்டுப்பகுதியில் கருணா அணியொன்று தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அந்த இடத்தை சுற்றி வழைத்து புலிகளின் அணியொன்று திடீர் தாக்குதலை நடத்துகின்றது.அங்கிருந்த கருணா அணியினர் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் அவர்களது ஆயுதங்களையும் உடமைகளையும் புலிகள் கைப்பற்றியபோது அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது கொல்லப்பட்டவர்களுள் விஜயன், ரவி என்ற இருவர் இந்தியக் கடவுச் சீட்டுக்களையும், இந்திய சாரதி அனுமதிப் பத்திரங்களையும் தம்வசம் வைத்திருந்தார்கள். இவர்கள் இருவருமே இந்தியாவில் தங்கியிருந்து பயிற்சி பெற்ற ஈ.என்.டீ.எல்.எப். உறுப்பினர்கள் என்பது தெரியவந்தது அவர்களிடமிருந்து கைப்பற்றிய தொலை பேசியில் அம்மான் என்றிருந்த இலக்கத்தை அழுத்தினார்கள் மறுமுனையில். "கலோ" என்ற கருணாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உன்னை விடமாட்டோம் என்றதோடு போன் கட்டாகிவிட்டது.தான் இந்தியாவில் தங்கியிருப்பதை புலிகள் கண்டுபிடித்து விட்டார்கள் இனி இந்தியாவில் இருப்பது புத்திசாலித் தனமில்லை என நினைத்தான் .காரணம் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தைக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருந்த நாடுகளில் இந்தியாவும் முக்கியமான நாடாக இருந்தது எனவே பேச்சு வார்த்தை மேசையில் கருணாவை தங்களிடம் ஒப்படைக்கும்படி புலிகள் அழுத்தத்தை கொடுத்தால் இந்தியா சில நேரம் தன்னை ஒப்படைத்து விடலாம் என சந்தேகித்தான்.அதே நேரம் கருணா குழுவின் திறமை இன்மையாலேயே தமது நீண்டகால உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் என்கிற குற்றச்சாட்டை E.N.D.L.F வைக்க அவர்களோடும் முறுகல் நிலை ஆரம்பித்தது .எனவே இந்தியாவை நம்புவதைவிட இலங்கையை நம்பலாமென முடிவெடுத்து மீண்டும் இலங்கைக்கே திம்பி விடுகிறான்.
தப்பிச் சென்ற இரண்டாவது ஆயுதக் கப்பலும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் வைத்து இலங்கை கடற்படையால் தாக்கி அழிக்கப்பட்டது.புலிகளும் தொடர்ந்து ஆயுதங்களை கொள்வனவு செய்துகொண்டிருந்தனர் எனவே பேச்சு வார்த்தை மேசையில் புலிகளோடு கடுமையாக நடந்து கொள்ள அமெரிக்கா முடிவெடுத்து அவர்களிடம் சில நிபந்தனைகளை முன்வைத்தார்கள்.ஒன்று ...குழந்தைப் போராளிகளை விடுவித்து அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் .இரண்டு.. கரும்புலிகள் அமைப்பை கலைக்க வேண்டும் .மூன்று ..வான் புலிகள் திட்டத்தை விரிவு படுத்தாது தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என மூன்று நிபந்தனைகளை வைத்து விட்டு வன்னியிலிருந்து பிரபாகரனின் பதிலுக்காக காத்திருக்கும் போது வெளிநாடுகளில் இருக்கும் புலி ஆதரவாளர்கள் சிலர் இந்திய அதிகாரிகள் சிலரோடு தனியாக ஒரு பேச்சு வார்த்தையை நடத்திக்கொண்டிருந்தார்கள் .காரணம் தென் கிழக்காசிய அரசியலில் இந்தியா தவிர்க்க முடியாத ஒரு சக்தி .இலங்கைத்தீவிலும் இந்தியாவின் தலையீடு இன்றி அவர்களை தவிர்த்து எந்தவொரு அரசியல் நகர்வையும் மேற்கொள்ள முடியாது என்பதை திடமாக நம்பினார்கள் .தமிழ்செல்வனின் மரணத்தின் பின்னர் புலிகளின் அரசியல் துறை பொறுப்பை ஏற்றுக்கொண்ட நடேசனும் அதே கருத்தை கொண்டவராகவே இருந்ததோடு இந்தியாவோடு மீண்டும் நட்புறவை புதிப்பிக்கும் முயற்சிகளை மேட்கொண்டிருந்தார் .
மேற்குலகம் வைத்த மூன்று கோரிக்கைகளில் குழந்தைப் போராளிகளை விடுவிப்பதாக சம்மதம் தெரிவித்திருந்தனர்.அதற்கு வேறொரு காரணமும் இருந்தது பெருமளவான குழந்தைப் போராளிகளை கருணாவே இணைத்ததாக பொதுவான குற்றச்சாட்டு இருந்தது.அவர்களை விடுவிப்பதன் மூலம் புலிகளின் தலைமைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை .கருணாவே குற்றவாளி என்று சர்வதேசத்திடம் நிருபித்து விடுவது என்பதுதான் நோக்கம் .அதுவும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு .செஞ்சிலுவைச்சங்கம் .மற்றும் உள்ளூர் வெளிநாட்டு பத்திரிகையாளர் முன்னால் முப்பது வரையான சிறுவர்களை ஒப்படைத்தனர்.ஆனால் கரும்புலிகளையோ வான் புலிகள் அமைப்பையோ கலைக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள்.இது மேற்குலகத்திற்கு ஏமாற்றத்தையும் சினத்தையும் கொடுத்திருந்தது.ஆனாலும் புலிகள் மீண்டும் சண்டைக்கு திரும்பி விடமால் பேச்சுவார்த்தை மேசையிலேயே வைத்திருக்க பெரும்பாடு பட்டனர். அதே நேரம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய புலிகளின் ஆதரவாளர்கள் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி அவர்களை அங்கீகரித்து ஈழப் போராட்டத்திற்க்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்திருந்தனர். .ஆனால் புலிகளால் நடத்தப்பட்ட ராஜீவ்காந்தி கொலை என்பது இந்திய தேசத்துக்கு நடந்த மிகப்பெரிய கௌரவப் பிரச்சனையாகவே அவர்கள் பார்த்தார்கள் .இந்தக்கொலையானது புலிகள் அமைபிற்கு ஒரு தற்காலிக மகிழ்ச்சியை கொடுத்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அவர்களது ஆயுதப் போராட்ட வரலாற்றில் தூர நோக்கற்று செய்த மிகப்பெரிய முட்டாள்தனம் என்பது உண்மை .புலிகளின் மீதான தடையை நீக்கி மீண்டும் நல்லுறவை ஏற்படுத்த வேண்டுமாயின் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கியமானவராக கருதப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப் பட்டுள்ள புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டம்மானை தங்களிடம் ஒப்படைத்தால் இழுபட்டுக்கொண்டேயிருக்கும் கொலை வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதோடு உறவுகளையும் புதுப்பிக்க முடியும் என்று இந்தியத் தரப்பில் கூறப்பட்டது. பேச்சுவார்த்தை குழுவினர் இந்தியாவின் பதிலில் மகிழ்ச்சியடைந்து உடனடியாக புலிகளின் தலைமைக்கு செய்தியை தெரிவித்தார்கள் .அவர்களது கோரிக்கை சுவரில் அடித்த பந்தைப்போல் முடியாது என்கிற பதிலோடு வேகமாக வந்தது.சோர்வடைந்த பேச்சுவார்த்தை குழுவினர் அப்போது நோர்வேயில் தங்கியிருந்த தமிழ்ச்செல்வனை சந்தித்து பொட்டம்மானை சரணடைய வைப்பது பற்றி விரிவாக விளக்கினார்கள்.நாட்டுக்காக மகளுக்காக எத்தனயோ போராளிகள் தங்கள் உயிரை கொடுத்து விட்டார்கள் .கரும்புலிகளாகவும் மாறிஇருகிறார்கள் அப்படியிருக்கும் போது அந்த மகளுக்கு ஒரு நல்லது நடக்க வேண்டுமானால் பொட்டம்மான் சரணடைவதில் தப்பில்லை.இந்தியாவும் பொட்டம்மானை உடனடியாக தூக்கில் போட்டுவிடப் போவதில்லை அவருக்காக வாதாட பெரிய லாயர்களை நாங்களே ஏற்பட்டு செய்கிறோம் என்று சொல்லி முடிக்கவும் அனைவரையும் பார்த்த தமிழ்ச்செல்வன் உங்களிடம் வேறு எதாவது ஆலோசனைகளும் உள்ளதா என்று நக்கல் சிரிப்போடு கேட்டார் .தாங்கள் பேசியது எதனையும் தமிழ்செல்வனும் காதில் வாங்கவில்லை என்று புரிந்து கொண்டவர்கள் தயங்கியபடியே .இன்னொரு ஆலோசனையையும் சொன்னார்கள்..புலிகளின் தலைமை மீது ஏகப்பட்ட வழக்குகளும், குற்றச்சாட்டுகளும், நம்பிக்கையீனங்களும் சர்வதேச அளவில் இருப்பதால் மகளுக்கு நல்லதொரு தீர்வு எட்டும்வரை தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே முகம் கடுமையாக மாறிய தமிழ்ச்செல்வன் ..தமிழீழம் எப்படி எடுப்பது என்று எங்களுக்கு தெரியும் நீங்கள் பொத்திக்கொண்டு போகலாம் .என்றதும் தலையை தொங்கப்போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறியவர்கள் அத்தோடு தங்கள் நல்லெண்ண நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டார்கள் ..
தமிழ் செல்வன் புலிகளின் பேச்சுவார்த்தை குழுவுக்கு தலைமை தாங்கத் தொடங்கிய பின்னர் பேச்சுக்கள் மந்தமடையத் தொடங்கியிருந்தது மட்டுமல்லாமல் பேச்சு வார்த்தை நிகழ்வுகளுக்கு ஒப்புக்கு சப்பாணி என்கிறதைப் போலவே எந்த ஆர்வமும் இல்லாமல் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் எப்படியாவது பேச்சுக்களை முறித்து மீண்டும் சண்டையை தொடங்காவிட்டால் புலிகள் அமைப்பு மேலும் பிளவுகளை சந்தித்து பலவீனம் அடைத்து விடும் என்று தலைமை நினைத்தது . எல்லா நாடுகளிலும் நடந்த பேச்சு வார்த்தைகளின் போதும் உள்ளே என்ன விடயங்கள் பேசப்பட்டது.என்ன முடிவுகள் எடுக்கப் பட்டது என்று எதுவுமே வெளியே சொல்லப் படவில்லை.உள்ளே என்ன பேசினார்கள் என்றும் மக்களுக்கு தெரியாது .ஒவ்வொரு பேச்சு வார்த்தை முடிவின் பின்னரும் இந்த சந்திப்பு எமக்கு பிரயோசனமாக இருந்தது .நாங்கள் சமாதானத்தில் உறுதியாக இருக்கின்றோம் என்று பத்திரிகையாளர்களிடம் தமிழ் செல்வன் தெரிவிப்பார் .அதே நாள் இரவு தமிழர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில் உரையாற்றும்போது எங்களிற்கு சமாதானத்தில் நம்பிக்கையில்லை விரைவில் யுத்தம் தொடங்கும் அதுதான் இறுதியுத்தமாக இருக்கும் எனவே இறுதி யுத்தத்திற்கு பெருமளவான நிதியினை பங்களிப்பு செய்யவேண்டும் எனகேட்டுக்கொள்வார் .வெள்ளைக் காரனிற்கு தமிழ் புரியாது என நினைத்து தமிழ்ச்செல்வன் பேசியிருக்கலாம் ஆனால் இதனை வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகள் உடனடியாகவே பதிவு செய்து மொழிபெயர்ப்பும் செய்து பேச்சு வார்த்தைக்கு அனுசரணை வழங்கும் நாடுகள் அனைத்திற்கும் அனுப்பிக் கொண்டிருந்தனர் .
அது மட்டுமல்லாது ஆயுதக் கொள்வனவுகளையும் தொடர்ந்துகொண்டேயிருந்தார்கள்.அவர்கள் கொள்வனவு செய்த ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஒன்பது கப்பல்கள் இரண்டு சரக்கு கப்பல்கள் என பதினோரு கப்பல்கள் தொடர்ச்சியாக ஒன்றுவிடாது இலங்கை அரசால் தாக்கி மூள்கடிக்கப் பட்டிருந்தது..இதுவரை காலமும் உலக நாடுகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடலில் தண்ணி காட்டிவிட்டு விட்டு பத்திரமாக கனரக ஆயுதங்களையும் ஏவு கணைகளையும் வன்னிக்கு கொண்டு போய் சேர்த்தவர்களுக்கு என்ன நடந்தது ..இப்போது ஒரு துப்பாக்கியைகூட கொண்டுபோய் சேர்க்க முடியாது அனைத்தும் அடிபட்டுப்போகும் மர்மம் என்ன ..எப்படி ...எங்கே நடந்தது என பார்த்துவிடலாம் ..
2001 ஆண்டு புலிகள் அமைப்பு பெற்ற பெரு வெற்றியை அடுத்து வன்னி கிளிநொச்சியை தலைநகராக வைத்து நிழல் அரசொன்றை நிறுவியதோடு காவல்துறை, நீதிமன்றம், வாங்கி என சிவில் நிருவாகத் துறைகளை விரிவாக்கம் செய்தவேளை அவர்களின் பிரதான கட்டமைப்புகளிலும் மாற்றங்களை கொண்டு வந்தனர் .அந்த மாற்றமானது இயக்கத்துக்குள் ஒவ்வொரு பிரிவும் அதன் பொறுப்பாளர்களால் தனிப் பெரும் சக்திகளாக உருப்பெறத் தொடங்கியிருந்தது ..அப்படி உருப்பெற்றவைகளுள் பொட்டம்மானின் புலனாய்வு பிரிவு .தமிழேந்தியின் நிதிப்பிரிவு .சூசையின் கடற்புலிகள்அமைப்பு .தமிழ்செல்வனின் அரசியல் பிரிவு .கருணா கிழக்கு மாகாணத் தளபதி .இவைகளோடு மிக மிக முக்கியமான, வானளாவிய அதிகாரங்களைக் கொண்ட ,ஒருநாளில் மட்டும் பல மில்லியன் டாலர் பணம் புரளும் மிக பணக்கார அமைப்பான அனைத்துலகச் செயலகம் என்கிற அமைப்பும் ஆகும் . இந்த அனைத்துலகச் செயலகத்தின் கீழ்தான் ஆயுத பேரங்கள் ,வாங்கிய ஆயுதங்களை பத்திரமாக வன்னிக்கு கொண்டுபோய் சேர்த்தல் , போதைப்பொருள் கடத்தல்கள்,புலம்பெயர் தமிழர்களிடம் நிதி வசூலித்தல்,உலகெங்கும் பினாமிப் பெயர்களின் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் ,கோவில்கள் ,தமிழ் பாடசாலைகள் ,என அனைத்துமே இதற்குள் அடங்குவதால்தான் அதற்கு அனைத்துலகச் செயலகம் என்று பெயர் .இதற்கு லோரன்ஸ் திலகர் என்பவரே பொறுப்பாளராக பாரிஸ் நகரத்தில் இருந்து இயங்கிக்கொண்டிருந்தார்.பாரிஸில் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தங்கள் உறுப்பினர் இருவரை சுட்டுக்கொலை செய்திருந்தனர்.அந்தக் கொலையில் ஏற்பட்ட சிறு சொதப்பலால் லோரன்ஸ் திலகர் வன்னிக்கு அழைக்கப் பட்டு அவரது பதவியைப் பறித்து அவருக்கு தண்டனையும் தலைமையால் கொடுக்கப்பட்டது .அதற்குப் பின்னர் தாய்லாந்தில் இருந்தபடி ஆயுத பேரம் மற்றும் வழங்கல் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த கே.பி . என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் பொறுப்பில் அனைத்துலகச் செயலகம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.2001 ம் ஆண்டு நடந்த நிருவாக மாற்றங்களின்போது கே. பி யின் பொறுப்பிலிருந்த அனைத்துலகச் செயலகப் பொறுப்பு பறிக்கப்பட்டு காஸ்ட்ரோ என்பவரிடம் ஒப்படைக்கப் பட்டதோடு கே .பி யின் நிருவாகம் கலைக்கப்பட்டது அவரும் அவருக்கு கீழ் இயங்கியவர்களும் இயக்கத்தை விட்டு விலகி தங்கள் தனிப்பட்ட வாழ்கையில் ஈடுபடலாம் என தலைமை அறிவித்து விட்டிருந்தது. இந்த மாற்றங்களுக்கான கரணம் என்னவெனில் வெளிநாடுகளில் வணிகம், கடத்தல்கள் ,மற்றும்தமிழர்களிடம் சேகரிக்கப்படும் நிதி என்பனவற்றுக்கு சரியாக கணக்கு காட்டாமல் ஆயுதங்களை வாங்கி அனுப்பி வைப்பதோடு நிறுத்தி விடுகிறார்கள் . இலங்கை வான்படையினரின் சக்திவாய்ந்த இஸ்ரேலிய தயாரிப்பான ஒலி வேக IAI Kfir ரக குண்டு வீச்சு விமானங்களை தாக்கியழிக்கும் வல்லமை கொண்ட grouse ரக ஏவுகணைகளை கொள்வனவு செய்ய நீண்ட காலம் முயற்சி செய்தும் அதனை வாங்க முடியாது போனதும் ஒரு குற்றச் சாட்டாக வைக்கப் பட்டது .
கே.பி கொம்பனியில் பெரும்பாலும் கப்பல் மாலுமிகள் அதன் பணியாளர்கள் எல்லாருமே புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் அல்ல சம்பளத்திற்கு வேலை செய்த சாதாரணமானவர்களே அவர்களை இயக்க விதிகளால் கட்டுப்படுத்த முடியாது . அதே நேரம் புலிகள் அமைப்பானது போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபடுவதாக சர்வதேச போதைப்பொருள் தடுப்பு பிரிவும் உலக நாடுகளும் தொடர்து குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தார்கள் ஆனால் கடத்தல் வலையமைப்பை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தனர்.இத்தகைய குற்றச் சாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே கே .பி கொம்பனியை நிறுத்துவதாக தலைமை காரணம் சொல்லிக்கொண்டது .
புலிகள் அமைப்பானது தங்களுக்கு தாங்களே வைத்த முதலாவது ஆப்பு ராஜீவ் காந்தி கொலை என்று எடுத்துக்கொண்டால் அனைத்துலக செயலக கட்டமைப்பு மாற்றத்தை இரண்டாவது ஆப்பு என்று எடுத்துக் கொள்ளலாம் ...அனைத்துலக செயலகப் பொறுப்பு கொடுக்கப்பட்ட காஸ்ட்ரோ ஒரு சண்டையில் இரண்டு கால்களும் தொடைக்கு மேலே இழந்தவர். சிகிச்சைக்காக படகில் ஒரேயொரு தடவை தமிழ்நாட்டுக்கு சென்று வந்ததுதான் அவரது வெளிநாட்டுப்பயணம்.மற்றும்படி உலகநாடுகளை வரை படத்தில் மட்டுமே பார்த்து அறிந்திருந்தது மட்டுமல்லாது பெரும்பாலும் படுக்கையிலேயே வாழ்நாளை கழித்துக்கொண்டு இருப்பவரிடம் இருபத்து நான்கு மணி நேரத்தில் இருபது மணி நேரங்களாவது விழித்திருந்து ஓடியாடி வேலைகள் செய்யும் மிகப் பொறுப்பான பதவியை எப்படி பிரபாகரன் அவரிடம் ஒப்படைத்தார் என்பது இன்றுவரை விடைகிடைக்காத மில்லியன் சந்தேகக்களை அடக்கும் கேள்வி .
புதிதாக பொறுப்பெடுத்துக் கொண்ட காஸ்ட்ரோ தனது அமைப்புக்கும் புது இரத்தம் பாய்ச்சப் போவதாக சொல்லிக் கொண்டு புலிகள் அமைப்பால் உயர் கல்வி கற்பதற்காக வெளி நாடுகளுக்கு அனுப்பப் பட்டிருந்த இளையோர் சிலரிடம் பொறுப்புகளை பிரித்துக் கொடுத்தார்.அப்படி அவர் நியமித்தவர்களில் அனைத்துலக செயலகத்தை வெளியில் இருந்து இயக்க நெடியவன் என்பவரை நோர்வே நாட்டுக்கும் அவருக்கு உதவியாக நிதி விடயங்களை கவனிக்க வாகீசன் என்பவரை ஜெர்மனிக்கும் .அனுப்பியவர் ஆயுத பேரங்கள் மற்றும் புலிகளின் வணிக கப்பல்களை கவனிக்க ஸ்டீபன் .என்பவரை நியமிகிறார். இவர்களில் புதிதாக பொறுப்பெடுத்த ஸ்டீபன் உலகெங்கும் கள்ளச் சந்தைகளில் ஆயுத பேரங்களை நடத்துவதற்காக பல புதியவர்களை நியமித்தவர் வன்னிக்கு சென்று தலைவரிடம் நேரடியாக ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு வேலைகளை தொடங்க நினைத்து வன்னி சென்றவர் பிரபாகரனை சந்தித்து விட்டு அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக இந்தோனேசியா சென்றதும் இந்தோனேசிய விமான நிலையத்தில் தற்செயலாக ஒரு அதிகாரி சந்தேகத்தில் ஸ்டீபனை விசாரிக்கிறார். ஸ்டீபனின் பதில்களில் மேலும் சந்தேகம் வரவே அவர் கையோடு கொண்டு சென்ற இரண்டு மடிக்கணணி களையும் பரிசோதனை செய்யத் தொடங்கியவருக்கு தலை சுற்றத் தொடங்குகிறது .
நீண்ட காலமாகவே இந்தோனேசிய தீவுகள் புலிகளின் ஆயுதக்கடதல்களில் தளமாக இயங்கிவருவதோடு சில கப்பல்களும் அங்கு பதிவு செய்யப் பட்டிருந்ததை அந்த நாட்டு காவல்துறையினர் அறிந்திருந்தனர் .எனவே ஸ்டீபனும் புலிகள் அமைப்பை சேர்ந்தவனாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அவரை தடுத்து வைத்தபடி சர்வதேசப் பொலிசாரின் உதவியை நாடியிருந்தனர் .நீண்டகாலமாகவே புலிகள் அமைப்பின் கடத்தல் நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டிருந்த அமெரிக்க சி ஐ ஏ அதிகாரிகள் சிலர் இந்தக் கைது விபரம் அறிந்ததும் இந்தோனோசியாவிற்கு விரைந்தவர்கள் ஸ்டீபனை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து அவர் கொண்டு சென்ற மடிக்கணணினிகளை ஆராய்ந்த போது அதிச்சி கலந்த மகிழ்ச்சி அவர்களுக்கு ..தோண்டத்தோண்ட தகவல்களை அள்ளிக் கொடுக்கும் சுரங்கமாக ஆயுத பேரங்கள், தேவையான ஆயுதங்களின் பட்டியல்கள் ,அதனுடன் தொடர்புடையவர்கள் ,பண கொடுக்கல் வாங்கல்கள் ,கப்பல்களின் விபரங்கள் என இந்தனை காலங்களாக அவர்கள் தேடியலைந்த அத்தனை விபரங்களும் அதில் அடங்கியிருந்தது .ஆனாலும் பல விடயங்கள் சங்கேத மொழியில் எழுதப் பட்டிருந்ததால் தகவல்களை முழுமையாக பெற முடியாமல் இருக்கவே என்ன செய்யலாமென யோசிதவர்கள் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் வாழும் யாராவது ஒருவரின் உதவியை பெறுவது என முடிவெடுத்தார்கள் .உடனடியாக பல நாடுகளின் உதவியும் கோரப்பட்டபோது புலிகளின் தொலைத்தொடர்பு பிரிவில் நீண்டகாலம் பணியாற்றிவிட்டு தலைமையோடு முரண்பட்டு அங்கிருந்து வெளியேறி சுவிஸ் நாட்டில் அகதியாக வாழ்ந்து கொண்டிருந்த ஒருவரின் விபரம் கிடைக்கவே சுவிஸ் நாட்டு காவல்துறையின் உதவியோடு அவர் இந்தோனோசி யாவிற்கு கொண்டு செல்லப்பட்டார்.அனைத்து சங்கேத மொழிகளும் மொழிபெயர்க்கப் பட்டது.
உலகம் முழுதும் புலிகளுக்காக ஆயுத பேரத்தில் தொடர்புடைய அனைவருடைய விபரங்களையும் அவர்கள் வாங்க இருக்கும் ஆயுதங்களின் விபரங்களையும் சேகரித்தவர்கள் உடனடியாக யாரையும் கைது செய்யவேண்டாம் என முடிவெடுத்தார்கள்.காரணம் இவர்களை கைது செய்தால் புலிகள் அமைப்பு உடனடியாக உசாரடைந்து வேறு புதியவர்களை நியமித்து தங்கள் வேலைகளை தங்குதடையின்றி செய்துகொண்டே இருப்பார்கள் .எனவே அவர்களது சர்வதேச கடத்தல் வலையமைப்பை மீண்டும் கட்டியமைக்க முடியாத விதத்தில் அதனை முற்றாக அழித்து விடுவது தான் அவர்களது நோக்கம் .அதற்கான திட்டத்தை வகுத்தார்கள் .ஆயுத பேர வலையமைப்பில் இயங்கியவர்களில் அமேரிக்கா .கனடா நாடுகளில் வசிப்பவர்களே அதிகமாக இருந்ததால் அமெரிக்காவின் எப் .பி. ஐ. மற்றும் கனடாவின் சி .எஸ்.ஐ .எஸ் அதிகாரிகள் இணைத்து புலிகளின் சர்வதேச ஆயுதக் கடத்தல் வலையமைப்பை அழித் தொழிக்கும் திட்டத்தை வகுத்தவர்கள்.தங்களுக்கு உதவியாக ஐரோப்பிய காவல்துறையினரின் உதவியையும் நாடியிருந்தார்கள் . அதே நேரம் ஸ்டீபன் இந்தோனேசியாவில் கைதாகி அமெரிக்க அதிகாரி களிடம் கையளிக்கப் பட்ட விடயம் புகளின் தலைமைக்கு தெரிந்திருக்கவில்லை.அப்படியொரு சம்பவமே நடக்காத மாதிரி ஸ்டீபனை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்து இயக்கியபடியே அவருக்கு அடுத்த கட்டத்தில் இயங்கிய 1)சதாஜன் சரசந்திரன் 2) சகிலால் சபாரத்தினம் 3) திருத்தணிகன் தணிகாசலம் 4) நடராஜா யோகராஜா 5) முருகேசு விநாயகமூர்த்தி 6) விஜய்சாந்தர் பத்மநாதன் .7) நாச்சிமுத்து சோக்கிடடீஸ் ஆகிய ஏழு பேரும் சி.பி.ஐ யின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர் .இவர்கள் வாங்கிய ஆயுதங்கள் கப்பல்களில் ஏற்றப் பட்டு அவை சர்வதேச கடலை விட்டு முல்லைத்தீவு கடலுக்குள் நுழையும் போது இலங்கை அரசுக்கு கச்சிதமான தகவல்கள் வழங்கப்பட்டது.இலங்கை கடற்படையும் வான்படையும் இணைந்து புலிகளின் ஆயுதக் கப்பல்களை துல்லியமாக தாக்கியழித்துக் கொண்டிருந்தார்கள்.
அத்தனை ஆயுதக்கப்பல்கள் அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கும்போதும் ஸ்டீபன் கைதான விடயம் புலிகளின் தலைமைக்கு தெரிந்து விடாதபடி இந்த கூட்டு நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய எப் .பி.ஐ அதிகாரிகள் பார்த்துக்கொண்டார்கள்.புலிகளுக்கும் சந்தேகம் வரவில்லை.அப்போதுதான் புலிகள் தங்கள் நீண்ட நாள் முயற்சியான குருஸ் ரக ஏவுகணைகளை வாங்கும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள்.அதற்கிடையில் புலிகளின் ஒன்பது ஆயுதக் கப்பல்கள் இரண்டு சரக்கு கப்பல்கள் என பதினோரு கப்பல்கள் மூழ்கடிக்கப் பட்டிருந்தது இதற்கு மேலும் தொடர்ந்தால் புலிகள் வேறு வழிகளில் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள் எனவே இத்தோடு அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவரலாம் என நினைத்த அதிகாரிகள் ஏவுகணை வாங்க முகர்வர்களை தேடிக்கொண்டிருந்த வர்களிடம் தங்களை ஆயுதத் தரகர்கள் என்று சொல்லிக்கொண்டு அறிமுகமாகிறார்கள்.
ஏவுகணை வாங்கும் திட்டத்துக்கு டீல் போட லண்டனில் வாசித்த முருகேசு விநாயகமூர்த்தி என்பவரை வன்னியில் இருந்த காஸ்ட்ரோ நியமிக்கிறார்.முருகேசு விநாயகமூர்த்தி ஏற்கனவே எப் பி ஐ யின் கண்காணிப்பிலேயே இருந்தபடியால் ஆயுத தரகர்கள் என்று சொல்லிக்கொண்டு லண்டனில் அவரை சந்திப்பதில் எப் . பி .ஐ யினருக்கு எவ்வித சிரமும் இருந்திருக்கவில்லை.முருகேசு விநாயகமூர்த்தி ஒரு வைத்தியர் இவருக்கு வியாதிகள் பற்றி தெரியுமே தவிர விண்ணில் சென்று தாக்கும் ஏவுகணைகள் பற்றிய விபரங்கள் எதுவும் அறியாதவர்.எதோ கோயம்பேடு மார்க்கட்டில் கத்தரிக்காய் வாங்குவது போலவே ஏவுகணைகளை வாங்கிவிடலாம் என்பதுபோலவே நினைத்து ஆயுதத் தரகர்கள் போல வந்திருந்த இரண்டு எப் பி ஐ அதிகாரிகளிடமும் ஏவுகணைகள் ,வான் எதிர்ப்பு துப்பாக்கிகள் என்பவற்றின் பட்டியல்களை கொடுத்துவிட்டு எங்கே எப்படி பெறலாம்.பணத்தை எப்படி கை மாற்றுவது என்று கேட்கிறார். அடுத்த சந்திப்பில் சில ஏவுகணை மாடல்களை நேரடியாகவே காட்டுகிறோம் அவை இயங்கும் திறன் இந்த கட்லோக்கில் உள்ளது படித்துப்பாருங்கள். ஏவுகணை மாடலை நாங்கள் காட்டும் போது பாதிப்பணம் நாங்கள் சொல்லும் அக்கவுண்டுகளில் செலுத்திவிட வேண்டும் ஏவு கணைகள் உங்கள் கைகளுக்கு வந்ததும் மீதிப்பணத்தை செலுத்தி விடுங்கள் மீண்டும் சந்திப்போம் என விடை பெற்றவர்களிடம் ..அடுத்த சந்திப்பு எங்கே என்றார் .அடுத்த சந்திப்பு அமெரிக்காவில் டெக்ஸ்சாஸ் மானிலத்தில் நாங்களே உங்களை தொடர்பு கொள்கிறோம் என்று விட்டு முகவர்கள் விடை பெற்றார்கள்.
அடுத்த சந்திப்புக்கான அழைப்பு வந்தது முருகேசு விநாயகமூர்த்தி அமெரிக்காவுக்கு பறந்தார் .டேக்சாஸ் மாநிலத்தில் ஒரு பண்ணை வீட்டில் சந்திப்பு .அதே இரண்டு பாகங்களாக பிரித்து எடுத்து வரப்பட்ட ஏவுகணை ஒன்றின் மாடலை பொருத்தி அவருக்கு முன்னால் வைத்தார்கள் முகவர்கள் .விநாயகமூர்த்தியால் சந்தோசத்தை அடக்க முடியவில்லை ஒரு குழந்தையைப்போல் துள்ளிக்குதித்தவர் "தொட்டுப் பார்க்கலாமா" என்றதும் "ம் ..தாராளமாக " என்றார்கள் .ஆசை தீர தொட்டுத் தடவிப் பார்த்தவர் ஏவுகணை கிடைத்த மகிழ்ச்சியை உடனே வன்னிக்கு சொல்லிவிட நினைத்து கைத் தொலை பேசியை எடுத்தவருக்கு "மிஸ்டர் இங்கிருந்து எந்த தொலைபேசி அழைப்பும் வேண்டாம் உங்கள் தங்குமிடம் போனதும் தாரளமாக பண்ணிக்கொள்ளுங்கள் இப்போ பேரத்தை முடித்து விடலாம் என்றார்கள்" .அவர்களாலேயே உருவாக்கப்பட்ட போலியான வங்கிக் கணக்குகளை கொடுத்து அதில் பாதிப் பணத்தை வைப்பிலிடும் படியும் ஏவுகணைகள் புலிகளின் கப்பலில் ஏற்றப் பட்டதும் மிகுதிப் பணத்தை செலுத்தி விடும்படியும் சொல்லி விடுகிறார்கள் .அபோதுதான் விநாயகமூர்த்திக்கு ஒரு விடயம் நினைவுக்கு வந்தது புலிகள் அமைப்பு இதுவரை SAM ரக ஏவுகணைகளையே பயன்படுதியிருந்தார்கள். அதனை எவுவதட்காகவே சிலர் பயிற்ருவிக்கப் பட்டிருந்தனர்.ஏவுகணைகள் மிகப் பெறுமதியானவை என்பதால் ஒன்றைக் கூட வீணடிக்க முடியாது. எனவே அவற்றை சரியாகப் பயிற்ச்சி எடுத்தவர்களால் இயக்கப் படவேண்டும் .எனவே குருஸ் ரக ஏவுகணையை இயக்க உங்களில் ஒருவர் வன்னிக்கு சென்று சிலருக்கு பயிற்ச்சியும் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.சில நிமிடங்கள் யோசித்த முகவர்கள் பிரச்சனையில்லை ஒருவரை அனுப்பி வைக்கிறோம் ஆனால் பத்திரமாக அவரை வன்னிக்கு அழைத்துச்சென்று மீண்டும் இங்கு கொண்டுவந்து விடவேண்டும் என்றதும் .அதெல்லாம் பிரச்சனையில்லை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று விடை பெற்றவர் தங்கும் விடுதிக்கு வந்ததுமே முதல் வேலையாக வன்னிக்கு காஸ்ட்ரோவுக்கு போனடித்து ஏவுகணை வாங்கிவிட்ட செய்தியை சொல்லிவிட்டு விரைவில் வன்னிக்கு வருகிறேன் தலைவரை நேரில் சந்தித்து ஒரு படம் எடுக்க வேண்டும் அதற்கான ஒழுங்குகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கும் போதே அறைக்கதவு தட்டப்பட தொலைபேசியை நிறுத்தி விட்டு கதவைத் திறந்தார்.
சி.பி.ஐ என அடையாள அட்டையை தூக்கி காட்டிய சிலர் அவரை இழுத்து விலங்கை மாட்டி அள்ளிப் போட்டுக்கொண்டு போய் ஒருவருக்கு முன்னால் நிறுத்தினார்கள்.அவர் வேறு யாருமல்ல.. ஆயுத முகவர் போல பேரம் பேசிய அதே நபர் தான் .இப்போதான் விநாயகமூர்த்திக்கு விடயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரியத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அமேரிக்கா,கனடா, ஐரோப்பா என எங்கும் கண்காணிப்பிலிருந்த முப்பதுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப் படுகிறார்கள்.அது மட்டுமல்லாது பல நாடுகளிலும் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பல கப்பல்களும் பறிமுதல் செய்யப்படுகின்றது .சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவி, சர்வதேச காவல்துறையினருக்கு தண்ணி காட்டி, உளவுத்துறையினருக்கெல்லாம் உச்சி விளையாடிய புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பானது அமேரிக்கா தலைமையில் 2006 ம் ஆண்டு முற்று முழுதாக சிதைக்கப் பட்டு முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது .அதன் பின்னர் வெளியே இருந்து ஒரு குண்டூசி கூட புலிகளுக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை ..
வெளியே சர்வதேச நிலைமைகள் இப்படி இருக்கும்போது உள்ளே வன்னியிலும் புலிகளின் இராணுவக் கட்டமைப்பை உடைக்கும் வேலைகளையும் மேற்குலகம் செய்யத் தொடக்கி விட்டிருந்தது.அது எப்படியென்றால் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்து பேச்சு வார்த்தைகள் தொடங்கியதுமே மக்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லிக் கொண்டு சில தொண்டு நிறுவனங்கள் (N.G.O) வன்னிக்குள்ளே காலடி எடுத்து வைத்தனர் .இப்போவெல்லாம் என் ஜி ஓக்கள் என்றாலே ஒரு நாட்டின் உளவு நிறுவனத்தின் முகவர்கள் என்கிற நிலைமையாகி விட்டது .காரணம் உளவு நிறுவனங்கள் தங்கள் முகவர்களை இந்த என் ஜி ஓக்களின் ஊளியர்களாகவே அனுப்பி வைகிறார்கள்.அப்படி பலர் வன்னிக்குள் நுழைந்ததும் மக்களுக்கு உதவியதை விட புலிகளின் தளபதிகள் முக்கிய உறுபினர்களை குறிவைத்து உதவத் தொடங்கினார்கள்.சுனாமி தாக்கத்தின் பின்னர் உலகத்திலுள்ள அனைத்து என் ஜி ஓக்களும் வன்னிக்கு படையெடுத்தனர் .
. இவர்கள் சுனாமியால் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வெறும் தரப்பாள்களும் பிளாஸ்ரின் கோப்பைகள் உணவுகள்.படுக்க பாய்களை மட்டும் கொடுத்துக்கொண்டு புலிகளின் தளபதிகள் பொறுப்பாளர்களிற்கு கணணிகள் மடிக்கணணிகள்.கைத்தொலைபேசி அவர்கள் வீடுகளிற்கு மின்சாரம் பெற்றுக்கொள்ள ஜெனரேர்ரர்கள். அல்லது இயற்கையில் சூரிய ஒளியில் மின்சாரம் பெறும் சோலார்கள் என சகல வசதிகளிற்கும் அவர்களை பழக்கப் படுத்திக்கொண்டிருந்தார்கள்.காரணம் இன்னொரு சண்டை தொடங்கும் போது புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் இந்த வசதி வாய்ப்புக்களை துறந்து மீண்டும் கெரில்லாக்களாக காடுகளிற்குள் இறங்கி போராப் போய் விடக்கூடாது என்பதே இவர்களது நோக்கமாக இருந்தது. அதே நேரம் சமாதான காலத்தில்புலிகள் அமைப்பில் இணைக்கப் பட்ட வயதில் குறைந்த போராளிகள் புலிகள் இயக்க பொறுப்பாளர்களின் வீடுகளில் வேலைக்காக அமர்த்தப் பட்டிருந்தனர்.அவர்களது வேலைகள் புலிகள் தளபதிகளின் பிள்ளைகளை பராமரித்தல் சமையல் செய்தல் அவர்களது துணிகளை துவைத்தல் என சம்பளமில்லாத தொழிலாளிகளாக புதிய போராளிகள் இருந்தார்கள். குழந்தைப் போராளிகளைப் பற்றி பக்கம் பக்கமாக அறிக்கை விட்ட மனிதவுரிமை அமைப்புக்களோ உலக நாடுகளோ இந்த குழந்தை போராளிகள் தளபதிகளின் வீடுகளில் வேலைக்கு அமர்த்தப் பட்டிருப்பவர்களைப் பற்றி வாயே திறக்கவில்லை காரணம் அது அவர்களிற்கு தேவையானதாக இருந்தது. அதிகாரங்களிற்கு எதிராகப் போராடப் புறப்பட்ட ஒரு இயக்கம் அதே அமைப்பில் போராட வந்த போராளிகளை வீட்டு வேலைகளிற்காக அமர்த்தி அடிமைப் படுத்தத் தொடங்கியதை என்னவென்று சொல்ல?? ...இப்படி வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த போராளிகள் பற்றி ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் ஒரு தளபதியிடம் கேட்டபோது இதுவும் போராட்டத்தின் ஒரு வடிவம்தான் என நகைச்வையாக பதில் சொல்லி நழுவிக்கொண்டார் .
இப்படி எல்லா தளபதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக சுக போக வாழ்க்கைக்கு பழக்கப் படுத்திக்கொண்டிருந்தபோது பால்ரச் மட்டும் அதற்கு விதி விலக்காக இருந்தார் .இவர் பெரும்பாலும் போராளிகளுடன் முகாமிலேயே தான் தங்குவார்.தனது உடல் சுகபோக வாழ்க்கைக்கு பழக்கப் பட்டு விடக்கூடாது என்பதற்காக எப்போதும்போல மரத்தாலான வாங்கு ஒன்றிலேயே துண்டை விரித்துப்போட்டு படுத்துக் கொள்வார்.ஆனாலும் அவருக்கு விதி வேறொரு வடிவத்தில் விளையாடியது.இருதய நோயாளியாகி 2003 ம் ஆண்டு சிங்கப்பூரிற்கு அனுப்பப் பட்டு அங்கு அமெரிக்காவில் இருந்து வந்த வைத்தியர்களால் சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டிருந்தார். ஆனால் புலிகள் அமைப்பின் பழைய சர்வதேச வலை கட்டமைப்பு கலைக்கப் பட்ட பின்னர் புதிய கட்டமைப்பினரால் இவரிற்கான சிகிச்சை ஏற்படு செய்யப் பட்டு சிங்கப்பூரிற்கு பால்ராச் அனுப்பப் படும்போதே பழைய கட்டமைப்பினரால் ஒரு எச்சரிக்கை கொடுக்கப் பட்டிருந்தது அது என்னவெனில் பால்ராச் என்கிற மனிதனை பற்றிய பெரும் வியப்பையும் அவரது தாக்குதல் வியூகங்களையும் உலக இராணுவ வல்லுனர்களே அதிசயத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் போது அவரிற்கு வெளிநாடு ஒன்றில் சிகிச்சை கொடுத்தால் புலிகள் அமைப்பை பலவீனப் படுத்த நினைக்கும் சர்வதேசம் நிச்சயமாக தனது புலனாய்வு பிரிவை பயன் படுத்தி பால்ராச்சை கொன்றுவிடுவார்கள். அது சிகிச்சையின் போதாக இல்லாது இருக்கும் ஆனால் சிகிச்சையின் போது மிக மெல்ல கொல்லும் விசத்தை அவரது உடலில் ஏற்றி விட சந்தர்ப்பம் உள்ளது எனவே அவரிற்கு உள்ளுரிலேயே சிறந்த வைத்தியர்களை வைத்து சிகிச்சை செய்யவும் என அறிவுறித்தியிருந்ததோடு அதற்கு உலக நாடுகளின் போராளிகள் சிலர் வெளி நாடுகளில் சிகிச்சை பெற்றபின்னர் இறந்த உதாரணங்களும் எடுத்து சொல்லப் பட்டிருந்தது. ஆனால் நீங்கள் மட்டும் அன்ரன் பாலசிங்கத்தை வெளியில் எடுத்து சிகப்பூரில் சிகிச்சை செய்யலாம் எங்களால் முடியாதா என்கிற எகத்தளத்தில் பதில் வந்திருந்தது அதே நேரம் பால்ராச்சும் சிகிச்சை முடிந்த பின்னர் வன்னி சென்றதும் இறந்துபோய்விட்டிருந்தார். இது இயக்கத்திற்கு மாபெரும் இழப்பு என்பது மறுக்க முடியாதது. பால்ராச்சின் இறப்பு என்பது இலங்கையரசிற்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருந்தது
அது மட்டுமல்லாது சமாதானகாலத்தில் பெருமளவான புலம் பெயர் தமிழர்களும் வன்னிக்கு படையெடுக்கத் தொடங்கியிருந்ததோடு புலிகள் அமைப்பின் பொறுப்பளர்களிற்கு விலையுயர்ந்த கைக் கடிகாரங்கள் மடிக்கணணிகளை பரிசாகக் கொடுத்து அவர்களோடு நின்று படம் எடுத்துக் கொண்டுவந்து அதனை பெரிதாக்கி தங்கள் வீட்டு வரவேற்பறைகளில் வைத்து மகிழ்ந்திருந்தது மட்டுமல்லாமல் பிரபாகரனோடு நின்று படம் எடுப்பதற்காக பெரும் கூட்டமே அலைந்தனர்.அதற்காக வெளிநாடுகளில் உள்ள அனைத்துலக செயலக பொறுப்பாளர்களிடம் பணம் கொடுத்தும் சிபாரிசுகளை பெற்றுக் கொண்டும் வன்னிக்கு போயிருந்தார்கள். ஊரில் இயக்கத்திற்கு ஆதரவகாவும் போராளிகளையும் ஆதரித்தது மட்டுமல்லாமல் தங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் மாவீரராக பறிகொடுத்த பெற்றோர்களே பிரபாகரனை நேரில் பார்க்கவோ படம் எடுக்கவோ முடிந்திராத நிலையில் பிரச்சனை என்றதுமே வெளிநாட்டிற்கு ஓடிவந்து விட்டு ஊரைப் பற்றியோ போராட்டத்தைப் பற்றியோ எந்தக் கவலையும் இல்லாமல் தன்னுடைய சுய தேடல்களில் இறங்கியிருந்த ஒருவர் சமாதான காலத்தில் வன்னிக்குப் போய் கொஞ்சம் பணத்தைக் கொடுத்துவிட்டு பிரபாகரனிற்கு பக்கத்தில் நின்று படமெடுக்கலாமென்கிற நிலைமை உருவாகியிருந்தது. இப்படி பிரபாகரனுக்குப் பக்கத்தில் நின்று படம் எடுத்த ஒரேயொரு தகுதியை மட்டுமே வைத்துக்கொண்டு சீமான் தமிழ் நாட்டில் ஒரு அரசியல் கட்சியே தொடக்கி நடத்திக்கொண்டிருக்கிறார் . இதனை பார்க்கும்போது இங்கு வெளிநாடுகளில் நத்தார் காலங்களில் ஒருவர் மக்கள் கூடும் இடங்களில் நத்தார் தாத்தா வேடம் போட்டிருப்பார் அவரிற்கு பக்கத்தில் நின்று படமெடுப்பதற்கு குழந்தைகள் விரும்புவார்கள் எனவே அவரிற்கு கொஞ்சம் பணத்தை கொடுத்து விட்டு தங்கள் குழந்தைகளை நத்தார் தாத்தாவேடம் போட்டவரிற்கு பக்கத்தில் தங்கள் குழந்தைகளை நிறுத்தி படமெடுத்துபோவார்கள்.இதைப்போல தலைவர் பிரபாகரனும் வெளிநாடுகளில் இருந்து போனவர்கள் பக்கத்தில் நின்று படம் எடுக்கும் நத்தார் தாத்தாவைப்போல மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுருந்தார். ஆனாலும் யுத்தத்தை எப்படியாவது தொடக்கி விடுவது என்கிற முனைப்போடு இருந்தார் .
கருணாவின் பிளவு அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதி கையை விட்டுப்போன நிலைமை .கருணா விடயத்தை சரியாக கையாளவில்லை என்று பல தளபதிகள் குறிப்பாக கிழக்கு மாகாண தளபதிகள் தலைமையில் அதிருப்தியில் இருந்தார்கள் .தொடர்ச்சியாக ஆயுதக்கப்பல்களும் மூள்கட்டிகப் பட்டுக்கொண்டிருந்தது.மேற்குலக நாடுகளின் நெருக்குதல்கள் இயக்கத்தின் மீதான தடைகள் என இயக்கம் மிக நெருக்கடியான கட்டத்துக்குள் சென்று கொண்டிருப்பதை பிரபாகரன் உணர்ந்தார்.இவை எல்லாவற்றுக்கும் பின்னல் முக்கியமான இரண்டு நபரின் மூளைகள் இயங்கிக்கொண்டிருந்தது அவர்களின் இயக்கத்தை எப்படியாவது நிறுத்திவிட முடிவெடுத்தார்.முதலாவது மூளை அப்போதைய சந்திரிக்கா அரசில் வெளிநாட்டமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர். இவர் ஒரு தமிழர் என்பதால் துரோகியாகவே கருதப்பட்டவர் 2005 ஆண்டு நவெம்பர் மாதம் 13 ம் திகதி அவரது வீட்டு நீச்சல் குளத்தில் சினைப்பர் தாக்குதல் மூலம் கொல்லப் பட்டார் .இரண்டாவது மூளை அன்றும் இன்றும் இலங்கை அரசின் பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரம சிங்கே ஆவார் .ரணில் விக்கிரம சிங்கேயை போட்டுத் தள்ளுவது சுலபமாக இருந்தாலும் அதன் பின் விளைவுகள் மிக மோசமாதாய் இருக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும்.காரணம் யுத்த நிறுத்தத்தை அறிவித்து பேச்சு வார்த்தைக்கு தயார் என புலிகள் பல தடவை அறிவித்த போதும் அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா அதனை நிராகரித்திருந்தார் .ஆனால் 2001ம் ஆண்டு நடந்த தேர்தல் மூலம் பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்காவே நோர்வேயின் அனுசரணையுடன் தொடங்கப்பட்ட பேச்சு வார்த்தைக்கு சம்மதம் தெரிவித்து பிரபாகரனோடு ஒப்பத்தில் கையெழுத்திட்டவர் . ஆகவே அவரை போட்டுதள்லாமல் சமாதனப் பேச்சுவார்த்தையில் இருந்து எப்படி அப்புறப் படுத்துவது என யோசித்துக் கொண்டிருந்த பிரபாகரனுக்கு 2005 ல் நடக்கவிருந்த சனாதிபதிக்கான பொதுத் தேர்தல் கைகொடுத்தது.அந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் மகிந்தராஜபக்சவும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்கவும் வேட்பாளர்களாக களத்தில் இறங்கினார்கள்.இலங்கையில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய பின்னர் புலிகள் அமைப்பின் அணுகுமுறைகள், நடவடிக்கைகள் ,அதன் சரி பிழைகளுக்கப்பால் இலங்கையானாலும் தமிழ் நாடானாலும் சரி தேர்தல் வெற்றி தோல்விகளில் அவர்களின் பங்கு அல்லது அவர்களின் தாக்கம் இன்றி எந்தத் தேர்தலும் நடைபெற்றிருக்கவில்லை என்பது மட்டுமல்லாமல் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சக்தியாகவும் இருந்திருகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதேபோல 2005 ம் ஆண்டு தேர்தலில் மகிந்தவுக்கு சிங்களவர்களின் பெரும்பான்மையான ஆதரவு இருந்தாலும் ரணில்விக்கிரமசிங்க பெரும்பான்மையான தமிழர்களின் வாக்குகளால் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தது.அதற்க்கு காரணமும் இருந்தது .நீண்ட கால யுத்தத்தால் தமிழர்கள் களைத்துப்போயிருந்தனர் எனவே ரணிலை வெற்றி பெற வைப்பதன் மூலம் சமாதானம் நீடிக்கும் என நம்பினார்கள் .சந்திரிக்கா குமாரதுங்கா சமாதானக் கதவுகள் திறந்துள்ளது என சொல்லிக் கொண்டு தேர்தலில் குதித்த போதும் பெரும்பாலான தமிழர்களின் வாக்குகலாலேயே வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத் தக்கது.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்ட மகிந்தராஜபக்ச தனது வெற்றியை நிர்ணயம் செய்து விடுவதட்காக புலிகளின் உதவியை நாடினார்கள்.அதற்காகவே சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்த புலிகளுக்கோ எப்போதும்போல அதிஷ்ட்ரக் காற்று தங்கள் பக்கம் வீசுவதாக நினைத்து மகிழ்ந்தார்கள் .ஆனால் அதுதான் அவர்கள் எதிர் கொள்ளப்போகும் சூறாவளி என்று அப்போது நினைத்துப்பார்த்திருந்திருக்க மாட்டார்கள்.

No comments:
Post a Comment