Tuesday, 29 November 2016

நாட்டில் பெருகும் அந்நிய நாட்டு பயங்கரவாதிகளின் சித்தாந்தம் கொண்ட உள்ளூர் பயங்கரவாதிகள் ..

மருதநாயகம் சொல்லவந்த கதை இந்த தாலிபான் அல்கய்தா பயங்கரவாதிகள் மற்றும்
மெட்ராஸ் காப்பே சொல்லியது LTTE பயங்கரவாதிகள் என்ன செய்தார்கள்,இவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்று,
அவர்களின் உள்ளூர் ஏஜெண்டுகளின் பினாமிகள் இது நமக்கு ஆபத்தில்லை என்றார்கள் மதம் என்றார்கள், மொழி என்றார்கள், கருத்து சுதந்திரம் என்றார்கள், ஆனால் இவர்கள் சொல்லும் சப்பைகட்டுக்கு பழைய
கோவை குண்டுவெடிப்பு,
ராஜீவ் மற்றும் அப்பாவி 19 இந்தியர்கள் படுகொலை சம்பவங்களை அடுக்கினால் அதற்க்கு பதில் சொல்ல மாட்டார்கள் ...
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாமியர்களில் பலர், இனவெறியர்கள் பலர், நக்சல் பயங்கரவாதிகள் என்று நம் தேசத்தின் பாதுகாப்பை கேலி கூத்தாகி கொண்டுள்ளனர், தற்போதைய மதுரை கைது சம்பவம் மற்றும் கடந்த வருடம் சென்னை ரயிலில் குண்டு வைத்த
அருணன் இலங்கை முன்னாள் LTTE பயங்கரவாதி ISI ஏஜெண்டு கைது சம்பவங்கள் நிருபித்துக்கொண்டு உள்ளது,
இவர்களின் பிரச்சாரகர்கள் தொடர்ந்து இயங்கி கொண்டே உள்ளனர்,
எரிவதை புடுங்கினால் ஒழிய கொதிப்பது அடங்காது
முதலில் பயங்கரவாத ஆதரவு இயக்கங்களை, அவர்களின் பிரச்சார ஆதரவு நபர்களை வேட்டையாடுங்கள் NIA மற்றும் மாநில மத்திய புலனாய்வு துறைகளே
----------------------------------------------------
மதுரை சம்வம் பற்றிய செய்தி -
===========================
#அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேரை தேசிய புலனாய்வுப்படையினர் மதுரை, சென்னையில் கைது செய்தனர். இக்கும்பல் பிரதமர் மோடி உள்ளிட்ட 22 பேரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய அதிர்ச்சித்தகவல் வெளிவந்துள்ளது. கர்நாடக மாநிலம், மைசூர் நீதிமன்றத்தில் குண்டு வெடித்த வழக்கில் தொடர்புடையவர்கள் மற்றும் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் மதுரையில் பதுங்கி இருப்பதாக டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் கடந்த 2 நாட்களாக மதுரையில் முகாமிட்டு தேசிய புலனாய்வு படையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் 4வது தெருவைச் சேர்ந்த நயினார் அப்பாஸ் அலி (24), அய்யர் பங்களாவைச் சேர்ந்த முகம்மது அய்யூப் (23), புதூர் மண்மலைமேட்டை சேர்ந்த கரீம் ராஜா (26), ஆத்திகுளத்தைச் சேர்ந்த ஆசிக் ரகுமான் (23) ஆகிய 4 பேரை புலனாய்வுப்படையினர் நேற்று முன்தினம் அதிகாலையில் சுற்றிவளைத்துப்பிடித்தனர். இவர்களில் ஆசிக் ரகுமானை புலனாய்வு படையினர் விடுவித்தனர். மற்ற மூவரையும் கைது செய்த என்.ஐ.ஏ போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சிக்கியவர்கள் அல்கொய்தா தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு, ஆட்கள் சேர்ப்பு மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை வேகமடைந்துள்ளது.

மேலும், பிரதமர் மோடி உள்ளிட்ட 22 தலைவர்களை இக்கும்பல் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் தெரிகிறது. 6 வெளிநாட்டு தூதரகங்களுக்கு விடப்பட்ட மிரட்டல்களிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. அப்பாஸ் அலிக்கு மைசூர் கோர்ட்டில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பது தெரிந்தது. பிடிபட்டவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் 5 குண்டு வெடிப்பு சம்பவகங்களுக்கும் மூளையாக செயல்பட்டது மதுரை கரிம்சா பள்ளி வாசலை சேர்ந்த சுலைமான்(23) என்பது தெரியவந்தது. மென்பொருள் பொறியாளரான இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது அதன்படி நேற்று தேசிய புலனாய்வு போலீசார் சென்னை திருவான்மியூர் அருகே உள்ள பாலவாக்கத்தில் சுலைமானை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.
உள்ளூர் போலீசாருக்கு தகவல் இல்லை: பொதுவாக தீவிரவாத தொடர்பு வழக்குகளில் வெளிமாநில, வெளிமாவட்ட போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய வந்தால், உள்ளூர் போலீசார் உதவியை நாடுவது வழக்கம். ஆனால், மதுரையில் 4 பேர் சிக்கிய நிலையில், தேசிய புலனாய்வுப்படையினரின் எந்த நடவடிக்கையும் உள்ளூர் போலீசாருக்கு தெரிவிக்கப்படவில்லை. எஸ்ஐடி, எஸ்ஐயு, உள்ளிட்ட தீவிரவாத புலனாய்வுப்பிரிவினருக்கும் எந்த தகவலும் தெரிவிக்காமல், அவர்களிடம் குறிப்பிட்ட சிலரைப் பற்றிய தகவல்களை மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

Thursday, 24 November 2016

பழ. நெடுமாறனாக மாறிய காமாட்சி: 




இவரது இயற் பெயர் “பழனியப்பன் காமாட்சி” இந்த “காமாட்சி” என்னும் பெயரை மாற்றிக் கொண்டு பழ. நெடுமாறனாக அரசியலுக்குள் நுழைந்தார். பெயரைக் கேட்டால் தமிழருக்கு ஓரு பயம் வரவேண்டும் என்கிற நோக்கில் பெயரை மாற்றிக் கொண்டதாக மதுரையில் கூறினர்.

இவரது குடும்பத் தொழில் ஆண்டுக்கொருமுறை பஞ்சாங்கம் அச்சிட்டு விற்பனை செய்வது. வேறு எந்த வருமானமும் இல்லாத நிலையில்தான் ஈழத்தமிழரின் விடுதலைக்காகப் போராட வந்த இளைஞர்களின் தொடர்பை எற்படுத்திக் கொண்டார். குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா, இலங்கையிலிருந்து வருபவர்களை தமிழகத்தில் சில நபர்கள் ஏமாற்றிப் பொருள்கள், பணம் என்று பெற்றுக் கொண்டு அவர்களை மோசம் செய்த சம்பவங்கள் 1970 மற்றும் 1980 களில் வாடிக்கையாக இருந்தன. பழ. காமாட்சிக்கும் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்ட போது இலங்கையிலிருந்து வந்தவர்களுக்கு உதவிகள் செய்தால் வருவாய் கிடைக்கும் என்று நம்பினார். அவரது கணக்குச் சரியாக இருந்தது. அன்றைய நிலையில் ஈழத்து இளைஞர்களுக்குக் கட்சி, தொழில், வருவாய் இல்லாத நபர் தேவைப் பட்டது. அவர்களது தேவைக்கு இவர் சரியானவராக இருந்தார்.

காமாட்சியும் (நெடுமாறன்) எதிர்பார்த்த மாதிரியே வருவாய் கொட்டியது. இந்த வருவாய்க்கு நிகர் வேறு ஏதும் இருக்க முடியாது. தமிழகத்து மக்களுக்கு ஈழ விடுதலையின் தூணாகத் தன்னைக் காண்பித்தார். ஆனால் இவருக்குத் தூணாக இருந்தது பணம்தான் என்பது எவருக்கும் தெரியாது. இவரது தோற்றத்தைப் பார்த்தால் பஞ்சத்தில் அடிபட்ட பிச்சைக்காரன் போல் தோன்றும். “இவரிடம் பணமா! இருக்கவே வாய்ப்பில்லை” என்று அனைவரும் சொல்வர். பல கோடிகளுக்கு அதிபதி என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

“பழ நெடுமாறன்” புலிகள் இயக்கத்தின் தமிழ் நாட்டுத் தளபதி என்கிற அளவுக்கு தன்னைத் தானே விளம்பரங்கள் மூலமாக உயர்த்திக் கொண்டவர். அடிக்கடி அறிக்கை விடுவதும் எந்தக் கட்சியாவது ஈழத் தமிழ் மக்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தினால் அந்த இடத்தில் ஆஜராகி (அழைக்காமலேயே) புகைப்படம் எடுத்துப் பிற நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பார். படத்தைப் பார்த்த ஈழத் தமிழர்கள் பழ. நெடுமாறன்தான் தலைமை ஏற்றுப் போராட்டத்தை நடத்துகிறார் என்று நம்பி இவருக்கு அமெரிக்க டாலர்களாக பணம் அனுப்பி வைப்பார்கள்.

'எந்த இயக்கத்தையும் விடக்கூடாது. அனைவரையும் கொலை செய்ய வேண்டும்' என்பது விடுதலைப் புலிகளின் தலைவரது திட்டம். ஏனைய இயக்கங்கள் இருந்தால்தான் பின்நாளில் ஆட்சியில் பங்கு கேட்பார்கள். எனவே தீர்த்துக் கட்டிவிட்டால் புலிகளின் 'நானே ராஜா நானே மந்திரி' என்னும் கொள்கைக்கு வெற்றி கிடைத்துவிடும். இப்படியான கொள்கைக்குத் துணை போனவர்களில் நெடுமாறன் என்கிற இந்தக் காமாட்சி முக்கியமானவர்!

காமாட்சி ஈழத்தவரை ஏமாற்றும் வித்தை!

‘பழனியப்பன் காமாட்சியைப் பார்த்தால் அய்யோ பாவம், போராடிப் போராடி மெலிந்து சவரம் செய்யாமல் எலும்பும் தோலுமாகிவிட்டார்!’ என்றுதான் எண்ணத் தோன்றும். ஆனால் அவருக்குப் பின்னால் பல கோடிகள் புரள்வது யாருக்காவது தெரியமா? அண்மையில் பிரபாகரன் பற்றி ஓரு புத்தகம் வெளியிட்டார். முதலில் 10,000மும் அடுத்த பதிப்பில் 15,000மும் பதிப்பித்தார். ஒரு புத்தகத்தின் விலை 800ரூபா. 25000 ஒ 800 ஸ்ரீ 2,00,00,000 (இரண்டு கோடி), செலவு ஐம்பது இலட்சம். இலாபம் ஒன்றரைக் கோடி. இப்படி ஓர் புத்தக வியாபாரம் தமிழகத்தில் நடந்ததுண்டா? அடுத்த பதிப்பு இருபத்தையாயிரத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். தமிழர்களுக்குப் புலுடாக் கதைகள், நெடுமாறனுக்குப் பணம்!

தமிழகத்தில் இந்த விலையில் 500 முதல் 1000 புத்தகங்கள்தான் விற்பணை செய்ய முடியும். மீதம் அனைத்தும் ஈழத் தமிழர்கள் தலையில் கட்டுகிறார் காமாட்சி!

1983ஆம் ஆண்டு முதல் இவர் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் பரிந்து பேச ஆரம்பித்தார். ஆண்டுக்கு 2000 பஞ்சாங்கப் புத்தகங்கள் விற்பதைத் தவிர இவருக்கு வேறு எந்த வருவாயும் இல்லை. காங்கிரசிலிருந்து வெளியேறி “தமிழ்நாடு காமராசர் காங்கிரஸ்” என்று கட்சி நடத்தினார். அது போணியாகவில்லை! நாங்கள் தமிழகம் வந்த 1983,84ஆம் ஆண்டுகளில் சென்னை வீதிகளில் “மாவீரன் நெடுமாறன்” என்னும் சுவரொட்டிகளைப் பார்ப்போம். யாரோ நெப்போலியனுக்கு நிகரான மாவீரன் தமிழகத்திலும் இருக்கிறார் என்று நினைத்துச் சிலரிடம் விசாரித்தோம். இவர் ஏதாவது போர்க்களம் கண்டவரா? வாள்வெட்டு மற்றும் குண்டுகள் பட்டுப் பெரும் வீர வடுக்களைத் தாங்கியுள்ளாரா? என்றெல்லாம் விசாரித்தோம், அதற்கு அவர்கள் சொன்ன பதில்:

“மதுரையில் கல்லெறி” வாங்கினார். அதனால் அவர் தன்னைத்தானே “மாவீரன்” என்று சுவரொட்டி அச்சிட்டு வெளியிடுகிறார் என்ற உண்மையைச் சொன்னார்கள். எங்களுக்கு வியப்பாக இருந்தது. ‘கல்லெறிபட்டவன் மாவீரனா? இந்தியாவின் தெருக்களில் திரியும் நாய்களெல்லாம் தினமும் கல்லெறி படுகின்றனவே! அப்படியாயின் அவைகளும் மாவீரர்களாகத்தானே இருக்க வேண்டும்? இருப்பினும் அவைகளுக்காக யார் சுவரொட்டி ஒட்டப்போகிறார்கள்? என்று நினைத்துக்கொண்டோம். இவர் எவ்வளவு மட்டமான விளம்பரப் பிரியர் என்பதை மக்களுக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் காமாட்சி!

நெடுமாறனிடம் எப்படி ஏமாறுகிறார்கள் என்பதை இன்றுவரை அறிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை ஈழத் தமிழர்கள். இவரிடம் ஏமாறுபவர்கள் வெளிநாடுகளிலிருந்து வரும் ஈழத் தமிழர்கள்தான் அதிகம்.

இவருக்கு மொத்தம் ஆறு வீடுகள் இருக்கின்றன. இவற்றில் நான்கு சொந்தமானவை; மீதம் இரண்டும் வாடகை வீடுகள். இருந்தபோதிலும் வாடகை வீட்டையும் தனது பினாமிப் பெயரில் மடக்க முயற்சித்து வருகிறார். சென்னை, கோட்டூர் புரத்தில் இலங்கைத் தமிழருக்குச் சொந்தமான வீட்டில் பல ஆண்டுகள் வருவாய்க்கான தலமாகப் பயன்படுத்தி வந்தார். உரிமையாளர் கேட்டும் திருப்பி ஒப்படைக்கவே இல்லை இதுவரை.

கடந்த ஓர் ஆண்டுக்குள் ஈழத்தவரை ஏமாற்றிய பணத்தில் அவசர அவசரமாக ஓரு மாளிகை(பங்களா) வீட்டைக் கட்டினார். சென்னை, பாலவாக்கம், சங்கராபுரம், 2வது தெருவில் கட்டியுள்ளார் அந்தப் பங்களாவை. பினாமிப்(போலி ஆள்) பெயரில் கட்டிய அந்த வீட்டை 1,25,000 (ஒரு லட்சத்து இருபத்தையாயிரம்) ருபாய் வாடகைக்கு நல்ல வசதியான குடியிருப்பாளரை ஏற்பாடு செய்து தரும்படி உள்ளுர் தரகர்களிடம் இரகசியமாகச் சொல்லியுள்ளார். அதனுடன் ஒரு நிபந்தனையும் போட்டுள்ளார் தரகர்களிடம். தரகுக் கூலியாக ‘ஒரு மாத வாடகை ரூ.1,25,000 தர முடியாது, 25,000 ருபாய் மட்டுமே தருவேன்’ என்று கறாராகச் சொல்லி விட்டாராம். இதனால் இன்னமும் அவரது வீடு வாடகைக்கு விடப்படவில்லை. அதேவேளையில், நன்றி மறவாமல் ஈழத் தமிழர்களின் பணத்தில் வீட்டைக் கட்டியபடியால், ஈழத் தமிழர் ஒருவருக்கு மாபெரும் உதவி ஒன்றைச் செய்துள்ளார். அந்த அரிய பண்பு என்னவென்றால், ஈழத் தமிழர் ஒருவரை அந்த பங்களாவுக்குக் (மாளிகைக்கு) காவலாளியாக நியமித்துள்ளார் நெடுமாறன். பாராட்டப்பட வேண்டிய செயல்தான்! ஈழத் தமிழரின் பணத்தில் கட்டிய பங்களாவுக்கு ஈழத் தமிழரே காவலாளி!

இவைபோக மதுரை அண்ணா நகரில் ஒரு மாளிகையும், சென்னை அண்ணா நகரில் ஒரு மாளிகையும் கட்டியுள்ளார் காமாட்சி மாறன். இவை கடந்த நான்கு ஆண்டுகளில் கட்டப்பட்டவை! உபயம் இலங்கைத் தமிழர்கள்தான். குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்தான்.

தோற்றத்தைப் பாருங்கள் பரிதாபத்துக்குரியவர் போன்று தோன்றுகிறார். இந்த தோற்றத்தைக் கண்டுதான் ஈழத் தமிழர்கள் இன்றுவரை ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
சென்னை, பாலவாக்கம், சங்கராபுரம், இரண்டாவது தெருவில் உள்ள காமாட்சியின் மாளிகை. பிரெஞ்ச் நாகரிக வடிவில் (குசநnஉh ளுவலடந) கட்டப்பட்ட இந்த மாளிகைக்கு பிரான்சுகாரர் ஒருவரின் பெயரையே சூட்டியுள்ளார்.

                     பாசிசத்தின் உச்சக்கட்டம்

            பயங்கரவாதி பிரபாகரனால் கொல்லப்பட்ட

                                 தமிழ்ஈழ மக்களின் தாய் 

                                     மகேஸ்வரி வேலாயுதம்

                                                                   (1953- 2008)

அது தமிழ் தேசிய விடுதலை இயக்கங்கள் முளைவிட்ட 1972- 1977 காலப்பகுதி! இன்றிருப்பதுபோல் தமிழ் தேசிய இயக்கங்களிடையே பாஸிசமும் கொலைக் கலாச்சாரமும் காணக்கிடைக்காத காலமது. மகேஸ்வரி அக்கா சட்டக் கல்லூரி மாணவியாகவும், தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் உறுப்பினருமாயிருந்தார். அக்கால கட்டத்தில் ஒரு இளம்பெண் அரசியலில் ஈடுபடுவதென்பது ஒன்றும் எளிதான நிகழ்வல்ல. 1977 வன்செயல்கள் தமிழ் மக்களை அகதிகளாக்கி இடம்பெயரச் செய்ய மகேசக்கா இடம்பெயர்ந்தவர்களுக்காக உழைப்பதற்குத் தன்னை தயார்ப்படுத்தினார். அவர், புனர்வாழ்வுப் பணிகளில் TRRO அமைப்புடன் இணைந்து செயற்பட்டார். நீங்கள் வாய்கூசாமல் சொல்லுங்கள் அவர் துரோகியென்று!
1983 இனப்படுகொலைகளைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் சொல்லாமல் கொள்ளாமல் இயக்கங்களுக்கு ஓடிப்போன காலத்தில் ஒரு வீட்டில் கலந்தாலோசனை நடக்கிறது. அது மகேஸ்வரி அக்காவின் வீடு. மகேஸ்வரி அக்காவின் தாயும் பிள்ளைகளுமாக அனைவரும் தமது குடும்பத்திலிருந்து யாரை இயக்கத்துக்கு அனுப்புவதென்று விவாதிக்கிறார்கள். கடைசியாக மகேஸ்வரியக்காவின் தம்பி கணேஸை இயக்கத்துக்கு அனுப்புவதாக முடிவெடுக்கப்பட கணேஸ் TELOவில் இணைகிறார். இதுதான் அந்த குடும்பத்தின் அரசியல் வரலாறு. நீங்கள் வாய்கூசாமல் சொல்லுங்கள் மகேஸ்வரி துரோகியென்று!
அதே 1983 காலபகுதியில் மகேஸக்காவும் அவரின் இன்னொரு சகோதரர் கம்பனும் கணேசை தொடர்ந்து தமிழ் மக்களுக்கு சேவைசெய்ய தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர். இது இயக்கங்கள் அதிகாரமயமாக்கப்படாத காலகட்டம், வியாபார ஸ்தாபனக்களாக்கப்படாத காலகட்டம், சரியோ பிழையோ அனைவரும் விடுதலை என்பதை நம்பி இயக்கங்களில் இணைந்த காலகட்டம். அவர்களின் வீடு இயக்க உறுப்பினர்கள் வந்து போக விருந்து படைத்தது. இந்த வரலாறுகள் துப்பாக்கிதாரிகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்களுக்கு தெரிந்த ஒரே மந்திரம் ‘ துரோகம்’. அதற்குப் பரிசு மரணம். நீஙகள் வாய்கூசாமல் சொல்லுங்கள் மகேசக்கா ஒட்டுக் குழுவைச் சேர்ந்தவரென்று!
வசதி படைத்தவர்கள் தங்களது பிள்ளைகளை அய்ரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் தஞ்சம் கோர அனுப்ப, இராமேஸ்வரமும் மதுரையும் திருச்சியும் நாதியற்றவர்களின் தஞ்ச மடங்களாயின. மகேசக்கா நாதியற்ற அகதிகளின் நல்வாழ்வுக்காகத் தனது பணியை இந்தியாவில் தொடர்ந்தார். இலங்கை அகதிகள் புனர்வாழ்வு அமைப்புக்கூடாக செயற்பட்டு, பின்னர் தனியான அமைப்பொன்றை ஆரம்பித்து தன்னாலான அகதிகள் நலன் காக்கும் பணிகளைத் தொடர்ந்தார். நாதியற்றவர்களின் நலனுக்காக உழைத்த அவருக்கு நீஙகள் கொடுக்கும் வரைவிலக்கணம் ‘தேசத்துரோகி’!
1990களில் ஆயிரக்கணக்கான வாலிபர்களும் யுவதிகளும் அரசபடையினரால் காணாமல் ஆக்கப்பட்டபோது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில் அடைக்கப்பட்டபோது மகேசக்கா வெறும் அறிக்கைகளுடன் மட்டும் நிற்காமல் களத்திலிறங்கிக் கருமமாற்றினார். இலங்கையிலும் வெளிநாட்டிலும் தமிழ் சட்டதரணிகள் பலர் எரிகிற வீட்டில் கொள்ளி பிடுங்கும் சூழலில் பணம் பற்றிய சிந்தனையற்று, விசாரணையில்லாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்ய தன்னாலான அனைத்து முயற்சிகளையும் அவர் எடுக்கத் தவறவில்லை. சிறைப்பட்டிருந்தவர்கள் எந்த அமைப்பு, யாருக்கு வேண்டியவர்கள் என அவர் பாகுபாடு காட்டவில்லை. சிறைப்பட்டவர்கள் யாராயிருப்பினும் அவர்களுக்கு சட்டரீதியான ஆலோசனைகளை அளித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். அவர் அரசியற் பேதங்களைக் கடந்த ஒரு சமூக சேவகி. நீங்கள் வாய் கூசாமல் சொல்லுங்கள்: ‘அவர் ஒரு கைக்கூலி!
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை சர்வதேச மனித உரிமைச் சங்கங்களுக்கு எடுத்துரைத்தவர் மகேசக்கா. தனக்கென்று எதையும் அவர் சேர்த்து வைக்கவுமில்லை. ஐரோப்பாவிலும் கனடாவிலும் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்த தமிழர்கள் பலருக்கு ‘அவர்கள் நாடு திரும்பினால் ஆபத்து’ எனக் கூறி தனது கைப்பட கடிதங்களை எழுதி அனுப்பியவர் அவர். அவரது அமைப்ப்பான மனித கௌரவத்துக்கான அமைப்பின் இக்கடிதங்கள் எத்தனையெத்தனை தஞ்ச வழக்குகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும்! நீங்கள் வாய்கூசாமல் சொல்லுங்கள்: ‘அவர் ஒரு அரசாங்க எடுபிடி’!
மகேஸ்வரி அரசாங்கத்தோடு நின்றவர், EPDPக்கு ஆதரவாக நின்றவர் என்று என்னெனவோ எல்லாம் சாக்கு போக்குச் சொல்லி நீங்கள் கொலையை நியாயப்படுத்துங்கள். பிரேமதாஸ அரசுடன் சேர்ந்து நின்று மாற்று இயக்க உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் சுட்டு கொல்ல ஒருபோதும் மகேஸ்வரி அக்கா துணை போகவில்லை. ‘சமாதான’ காலகட்டத்தில் நோர்வேயும் ரணில் விக்கிரமிசிங்க அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாற்று அமைப்புகளிலிருந்து இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே ஒதுங்கி குடும்பம் குட்டிகளுடன் இருந்து தம் வாழ்வை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உட்பட நிராயுதபாணிகள் பலரை மாற்று இயக்கத்தில் இருந்த ஒரே குற்றத்திற்காக கொலை செய்வதற்கு உடந்தையாக மகேசக்கா ஒருபோதும் இருக்கவில்லை.
ஏதோ தனக்கு தெரிந்த வழியில் எவர் காலில் விழுந்தெனினும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்த ஒரு பெண்ணுக்கு நீங்கள் கொடுத்த பரிசு நான்கு துப்பாக்கி சன்னங்கள்! மகேசக்கா அடிக்கடி சொல்வாராம்: “என்னை ஏன் சுடப்போகினம், எனக்கு யாருடனும் பிரச்சனை இல்லை” என்று. அவர் அதீத கடவுள் நம்பிக்கை உடையவர். கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என அவர் முழுமையாக நம்பியவர். தனது தாய் நீண்ட நாள் சுகமில்லாமல் மரணப்படுக்கையில் இருக்கும்போது தான் தனது தாய்க்கு முன்பே போகப் போகிறேன் என்று தெரியாமல் தான் அவர் தனது சொந்தக் கிராமத்துக்குத் தனது இறுதிப் பயணத்தை மேற்கொண்டார். எந்தச் சமூகத்துக்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்து பணிபுரிந்தாரோ அதே சமூகத்திலிருந்து வந்த இரும்பு வைத்திருந்த ஒரு இரும்பு மனத்தினன் ஒரு செக்கனுக்குள் உத்தரவை நிறைவேற்றினான். அவன் ஒரு இனந் தெரியாதவனாம். இனந் தெரியாதவர்களெல்லாம் இனப் போராட்டம் புரியும் காலமிது. நீங்கள் கொலை நிகழ்ந்த இடம், காலம், மகேசக்காவின் அரசியல் பின்னணி அனைத்தையும் துப்புத்துலக்கி உடனடியாக அச்சில் ஏற்றுகிறீர்கள்… ஒருவிடயத்தை தவிர – அது இனந்தெரியாத ஆயுததாரி!
மகேசக்கா உங்களைப்போல் எத்தனையோ பேர் துரோகப் பட்டத்துடன் எம்மண்ணில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். நீங்களும் இப்பட்டியலில் இவ்வளவு சீக்கிரம் வருவீர்களென நீங்கள் எதிர்பார்க்கவில்லை.. நாங்களும் தான். உங்களைக் கொலை செய்தவனை விடக் கொலைக்கு நியாயம் கற்பிக்கும் கூட்டத்தின் மேல் நாம் காறியுமிழ்கிறோம் உங்கள் ஞாபகமாக. இதுவே உங்களுக்கு எமது இறுதி அஞ்சலி.


Tuesday, 15 November 2016

எச்சரிக்கை #சங்கரபதி_கோட்டையை காக தேவர் இனம் களம் காண நேரிடும்..



பராமரிப்பின்றி காணப்படும் வரலாற்று சிறப்பு மிக்க முக்குலத்து மாமன்னர்கள் #மருதுபாண்டியர்கள் #ஊமைத்துரை யை ஒளித்து வைத்த #சங்கரபதி_கோட்டை

====================
சிவகங்கை அருகே வரலாற்று சிறப்புமிக்க #சங்கரபதி_கோட்டை யை தமிழக அரசு சுற்றுலாத் தளமாக அறிவித்துள்ளது. ஆனால் அறிவிப்பு வெளியாகி ஆண்டுகள் பல ஆகியும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை ,
சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட போர் பயிற்சி களமாக பயன்படுத்தியதுதான் இந்த சங்கரபதி கோட்டை. சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோட்டை 200 ஆண்டுகள் பழமையான கோட்டை. இந்த கோட்டையில் யானை படைகளுக்கும், குதிரை படைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டதாக கல்வெட்டுகள் பறை சாற்றுகின்றன.

சங்கரபதி கோட்டை தூண்கள் சுடாத செங்கற்கல் , கருப்பட்டி , கடுக்காய் மற்றும் முட்டையின் வெள்ளை கருக்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இப்படி வரலாற்றின் சின்னமாக பதிவு செய்யப்பட்ட இந்த கோட்டை இன்று சிதிலமடைந்து கிடக்கிறது,

சிறப்புமிக்க இக்கோட்டை கட்டப்பட்ட ஆண்டுக்கான கல்வெட்டு மற்றும் ஆவணங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. ஆண்டுகள் தாண்டினாலும் இக்கோட்டையின் சுவர்களும் தூண்களும் இன்றுவரை கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்கின்றன.

இந்த கோட்டையிலிருந்து மருது சகோதரர்களின் சொந்த பூமியான காளையார் கோவிலுக்கும், சிவகங்கை அரண்மனைக்கும் சுரங்கப்பாதை இருக்கிறது,
கட்ட பொம்மனின் தம்பி ஊமத்துரை இங்குதான் மறைந்து வைத்திருந்தனர்,
இத்தனை சிறப்பு பெற்ற இக்கோட்டை இன்று தனது பெருமையை இழந்து காட்டு செடிகள் மண்டி சமூக விரோதிகளின் உறைவிடமாக மாறியுள்ளது . இக்கோட்டை சுற்றுத்தளமாக அறிவிக்கப்பட்டது. இது முக்குலத்து மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்த போதிலும், அந்த அறிவிப்பு வெற்று அறிவிப்பாக மாறிவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர் தேவர் சமூக மக்கள்,



காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று சிறப்புகளையும் பெருமைகளையும் அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டியது அரசின் கடைமை. அப்படி போற்றிப் பாதுகாக்க வேண்டிய சங்கரபதி கோட்டையை சுற்றுலாத்தளமாக மாற்றும் அறிவிப்பு பெயரளில் நின்றுவிடாமல் உண்மையிலேயே சுற்றுலாத்தளமாக மாற்றப்பட வேண்டும் முக்குலத்து மக்களுக்கு மட்டும் அல்ல விடுதலை போராட்ட தியாகிகள் வாழ்ந்த இடத்தை காப்பது தமிழக அரசின் கடமை, இல்லைஎன்றால் கடும்விளைவுகளை சந்திக்க நேரிடும் ...

Tuesday, 28 June 2016

பாலநடராஜா ‘சின்ன பாலா’ ஐயர்: சில நினைவுகள், குறிப்புகள்

16/08/2015

இன்று ஆகஸ்ட் 16 –  சரியாகப் பதினொன்று வருடங்களுக்கு முன், மனித நேயம் மிக்கவரும், பண்பாளரும் ஆன ‘சின்ன பாலா‘ அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட தினம்.

எல்டிடிஇ தறுதலை விடுதலைப் புலிகளால் கொன்றொழிக்கப்பட்ட பலப்பல மகத்தான 'தமிழ் ஈழத்' தலைவர்களில் இந்த சின்னபாலாவும் ('ஐயர் பாலா' அல்லது 'ஈரோஸ் பாலா' என்றும் அறியப்பட்ட) ஒருவர். (ஜூன் 6, 1957 - ஆகஸ்ட் 16, 2004)
எல்டிடிஇ தறுதலை விடுதலைப் புலிகளால் கொன்றொழிக்கப்பட்ட பலப்பல மகத்தான ‘தமிழ் ஈழத்’  தலைவர்களில் இந்த சின்னபாலாவும் (‘ஐயர் பாலா’ அல்லது ‘ஈரோஸ் பாலா’ என்றும் அறியப்பட்ட) ஒருவர். (ஜூன் 6, 1957 – ஆகஸ்ட் 16, 2004)
…இரண்டு நாட்களாகவே மனம் ஒரு பிடியில் இல்லை. ஸ்ரீலங்கா தமிழர்கள் அமைதியாக வாழ, முன்னேற்றம் காண இருந்த/அமைந்த ஒவ்வொருசாத்தியக் கூற்றையும், அற்ப சுய நலத்துக்காக பேடித்தனமாக  அழித்த அந்த அயோக்கிய விடுதலைப் புலிகளையும், கொலைகாரப் பிரபாகரன்களையும் நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது.
நம் தமிழக இளைஞ அரைகுறைகள் பலர், ஒரு எழவையும் தெரிந்து கொள்ள முயற்சிக்காமல்,  ‘தமிழ் ஈழம் அமையும்’ என்றெல்லாம் இங்கேயேபாதுகாப்பாக உட்கார்ந்துகொண்டு உளறிக்கொட்டுவது இன்னமும் வெறுப்பை வளர்க்கிறது.
இதற்குக் காரணம்: என் குறிப்புகளைப் புரட்டியபோது கிடைத்த, அசைபோட்ட, பலப்பல சோக நிகழ்வுகளில், ரேலங்கி செல்வராஜா குறித்த விஷயங்களும், மிகமிக முக்கியமாக, என் மரியாதைக்குரியவராக இருந்த ‘சின்ன பாலா’ பற்றிய செய்திகளும்தான். :-(
ஆக எழுத ஆரம்பிக்கிறேன். மகத்தான ஷங்கர் குஹா நியோகிகளை, ராஜனி திராணகமக்களை, கில்யஸ்களை, லக்ஷ்மண் கதிர்காமர்களை, சின்ன பாலாக்களை நான் எப்படி மறக்கமுடியும்?
-0-0-0-0-0-0-0-
பலப்பல வருடங்களுக்கு முன், 1980களின் நடுவில் நான் ஒரு ‘இளம்கன்று’ கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் – படிப்பறிவு மட்டும் ஓரளவு பெற்று உலக அனுபவங்கள் அவ்வளவாகப் பெற வாய்க்காத, பிரமைகளாலான இளம் பிராயத்தில் – மார்க்ஸிய சிந்தனைகளால், புரட்சிகர கருத்தாக்கங்களால், ஒட்டுமொத்த மானுடவிடுதலைப் பகற்கனவுகளால் ஆட்கொள்ளப்பட்டு இருந்த நாட்களில் – இவருடன் ஓரிரு முறை பேசியிருப்பவன் (=அதாவது,  அவருடைய சிறு நண்பர்குழாமுடன் அவர் பேசுவதைச் சிலமுறை, பெரும்பாலும் ஒரு ஓரமாக நின்றுகொண்டு கேட்டிருப்பவன்) என்கிற முறையிலும், சுமார் 15 வருடம் போலவாவது நேரடியாகவோ, சிலபல அறிமுகங்கள் மூலமாகவோ சின்னபாலாவின் செயல்பாடுகளை அறிந்துள்ளவன் என்கிற முறையிலும், நான் தயங்காமல் சொல்வேன்:
சின்னபாலா போன்ற பல மனிதர்கள், அந்தத் தறுதலைப் புலி பிரபாகரனை விட – படிப்பறிவும், மார்க்ஸீய சித்தாந்தப் பயிற்சியும், தலைமை தாங்கும் பண்பும், நேர்மையும், ராஜரீக அறிவும், தன்முனைப்பும்,  விசாலமான மனமும், மக்களின் மீது கரிசனமும், அடிப்படை மானுட விழுமியங்களின் மீது மதிப்பும் கொண்டவர்கள். ஆனால், அவர்கள் அனைவரும் பிரபாகர கூலிப்படையினர்களால் அழித்தொழிக்கப்பட்டார்கள்!
 சரி. சின்னபாலாவிடமும்  சிலபல பிரச்சினைகள் இருந்தன: இதையெழுதும் எனக்கு –  1) முழுமுதலாக, நான் ஒரு இந்தியன் என்கிற முறையிலும், 2) ஈரோஸ் அமைப்பின், அபுஜிஹாத் எனும் கொலைவெறி பாலஸ்தீனிய இயக்கச் சார்பினாலும், 3) பிரபாகரன்-உமா மஹேஸ்வரன் போன்ற உதிரிகளுக்கு ஈரோஸ் கொடுத்த பயிற்சியாலும் 4) அவரால் அந்தசமயத்தில் சரியாக எனக்கு விவரிக்கமுடியாத / வெளிக்கொணரமுடியாத உள்ளுறை இந்திய எதிர்ப்புக்கான காரணங்களாலும், மிதவாதப் போக்குகளை மதிக்காத தன்மையாலும் — அவர் சார்ந்திருந்த இயக்கத்தின்மீது விமர்சனம் இருந்தது;   நான் அவதானித்தபடி, அவருடைய இயக்கப் பிறழ்வுகளால்  எழும்பியவை அந்தப் பிரச்சினைகள்!
…இருந்தாலும் – அவரிடம் சர்வநிச்சயமாக  இல்லாமல் இருந்தது – கொலைவெறியும், துப்பாக்கிமுதல்வாதமும், அற்பத்தனமும்; அதனால்தான் பிரபாகரன்களால் கொலை செய்யப்பட்டார்!
இம்மாதிரி ஒரு உரையாடலில், அவர் கிட்டு, திலீபன், பிரபாகரன் போன்றவர்களின் சிலபல செயல்பாடுகளைப் பற்றி – கிண்டலாக அல்ல, ஒரு விரக்தியடைந்த விமர்சன மனப்பான்மையுடன், சன்னமான குரலில், உணர்ச்சிவசப்படாமல் மிகத் தெளிவாகப் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
இந்த கிட்டு (இவர்தான் பிரபாகரன் சார்பாக, பிற இயக்க இளைஞர்களை, பல அப்பாவிக் குழந்தைகளை இரக்கமில்லாமல் கொன்றவர்!  ஊக்க போனஸாக, பிரபாகரனுக்குப் போட்டியாக இருந்த விடுதலைப் புலிகளையுமேகூட ஒழித்தவர்!), திலீபன் (இந்த அற்ப விடலை இளைஞர்தான் பிற்காலத்தில், உண்ணாவிரத பாவ்லா செய்து, வேறுவழியில்லாமல்போய் புலி()!களால் அச்சுறுத்தப்பட்டு, மூளைச்சலவை செய்யப்பட்டு – நாடகம் நிஜமாக மாறி, பலிகடாவாகச் செத்தவர்!) போன்ற புலிக்குஞ்சாமணி மாக்களின் – 1) தங்கள் சொந்த ஈழத்தமிழ் மக்கள் பற்றிய மட்டரகமான கருத்துகள் பற்றி, 2) எப்படி ஈழத் தமிழர்களை  ஏமாற்றவேண்டும் என்பதை மட்டுமே அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தது/பேசியது பற்றி, 3) புலிகள் ஈழமக்களை எலிகளுக்குச் சமமாக மட்டுமே மதித்தது பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்…
பிரபாகரனின் ஹிட்லர் வழிபாட்டையும், ஜெர்மனியின் நாட்ஸிகள் வளர்ந்தவிதத்திலேயே விடுதலைப்புலிகளும் வளர்த்தெடுக்கப்படவேண்டும் எனும் பிரபாகர ஹிட்லரியத்தையும், நாட்ஸி (=’நாஜி’) வழிமுறைகளை வரைமுறையில்லாமல் காப்பியடித்தலையும் – அந்த பிரபாகர லும்பன், நாட்ஸி கைவிரைப்பு வெறி ஸல்யூட் முறையைக்கூட வலுக்கட்டாயமாக, தன் இயக்கத்தில் செயல்படுத்தியமை பற்றியும்…
இவை அனைத்தைப் பற்றியும் – வெறுப்பில்லாமல், கொஞ்சம் தளர்வடைந்த சிரிப்புடன் மட்டும்  – மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தார்… (குறிப்பு:லும்பன், ஹிட்லரியம், புலிக்குஞ்சாமணிகள் போன்றவையெல்லாம் என் வார்த்தைகள் – அவர் அவற்றை உபயோகிக்கவில்லை!)
…ஆனால் – ‘விடுதலை’ இயக்கங்களின் கயமைத் தலைமைகள் மீது வெறும் விமர்சனம் வைப்பதை மட்டும் செய்யவில்லை அவர். பரந்துபட்ட மக்களை அரவணைத்தல் – அவர்களது ஆசைகளை, தேவைகளை அமைப்பின் மூலமாக ஒருங்கிணைத்து மேலெழும்பிச் செல்வது எப்படி – இனமைய வாதங்களின் (ஈழத்தமிழ் முதல்வாதம் உட்பட) அடிப்படை ஃபாஸ்ஷிஸ்ம் – அதனைக் கல்வி+களப்பணி மூலம் எதிர்கொள்வது எப்படி எனப் பலப்பல விஷயங்களையும் தொட்டுக்கொண்டிருந்தார் என நினைவு. (இதைப் பற்றியெல்லாம் பின்னொரு நாள், சாவகாசமிருந்தால் எழுதுகிறேன்)
-0-0-0-0-0-0-
இப்போது சுருக்கமாக, ‘சின்ன பாலா’ பற்றிய என் விவரணைகளை, அவர் சார்ந்திருந்த ஈரோஸ், பின்னர் ஈபிடிபி போன்ற பின்புலங்களினூடே கொடுக்கிறேன்:
  • யாழ்ப்பாணத்தில் 1957ல் பிறந்த அவர், ஒரு பிராம்மண-ஆசிரியக் குடும்பத்தைச் சார்ந்தவர்.  அவருடைய 15 வயதிலிருந்தே அரசியல் சமுதாய ஈடுபாடுகளில் முழுமூச்சாக முனைந்தவர்.
  • அவரோ, அவர் குடும்பத்தினரோ யாழ்ப்பாண மேட்டிமையையோ, ஜாதி-மத ரீதியான அற்பத்தனத்தையோ உயர்த்திப் பிடிக்காதவர்கள். அவர்கள் மூட நம்பிக்கைகளுக்கும், தீண்டாமை உள்ளிட்ட அயோக்கியக் கொடுமைகளுக்கும், பழமைமுதல்வாதங்களுக்கும், பத்தாம்பசலித்தனங்களுக்கும் எதிராகத் தொடர்ந்து செயல்பட்டவர்கள். பெண்ணுரிமைக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் போராடியவர்கள்.  பலப்பல சமூகங்களைச் சார்ந்த மக்களை அரவணைத்தவர்கள்.
  • இப்படி ஆயிரம் கல்யாணகுணங்கள் இருந்தாலும் பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல், கருமமே கண்ணாக இருந்திருக்கிறார்கள். பிரபாகரன்களைப் போல சொந்தத் தமிழ்க் குழந்தைகளைக் கூடக் கயமையுடன் கொன்றுகொண்டு வெறியுடன் எக்காளச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருப்பவர்களில்லை அவர்கள்!
  • 1975ல் (அப்போது சின்னபாலாவுக்கு 18 வயதுதான்!) மற்ற சகபயணிகளுடன்  சேர்ந்து ஈரோஸ் (ஈழ மாணவர்களின் புரட்சிகர அமைப்பு – Eelam Revolutionary Organization of Students) எனும் அமைப்பை உருவாக்கி அதன் தொடங்கிகளின் குழுவில் முழுமூச்சாக வேலைசெய்தார்.
  • சின்னபாலா போன்ற அழகான ஆசாமிகள் இருந்ததால்தான் — அனைத்து ஆயுதமேந்தி ‘ஈழ’ இயக்கங்களிலும் –  இந்த ஈரோஸ் மட்டுமேதான், சிந்தாந்த ரீதியில் நெடுநாள் நோக்கில் மக்கள் முன்னேற்றத்தைப் பற்றிய, விடுதலை பற்றிய கவலைகளுடன், செயல் திட்டங்களுடன் காத்திரமாக மக்களைத் திரட்டுவதில்/ஒருங்கிணைப்பதில் ஈடுபட்ட ஒன்று.
  • இதில் பலப்பல படிப்பாளிகள் இருந்தார்கள்; ஆகவே ஈரோஸினால் பல முன்னோடி முனைவுகள் ஆத்மார்த்தமாக முன்னெடுக்கப்பட்டன. ஒரு எடுத்துக்காட்டாக – இந்த ஈரோஸ் தான் ஸ்ரீலங்கா முஸ்லீம்களின் நிலையைப் புரிந்துகொண்டு அவர்கள் மீட்சிக்காகவும் செயல்திட்டங்களை வைத்திருந்தது. அவர்களை ஒருங்கிணைத்து தம் அமைப்பில் ஈடுபடுத்தியது.
  • 1975-77 வாக்கில் அபுஜிஹாத் (“ஜிஹாதின் குழந்தை” எனும் பாலஸ்தீனிய பயங்கரமுதல்வாத அமைப்பு) அரைகுறைகளுடன் ஈரோஸ் தொடர்பேற்படுத்திக்க்கொண்டு தம்முடைய சில தொண்டர்களை அங்கே பயிற்சிக்காக அனுப்பியது. ஸ்ரீலங்காவிலேயே பயிற்சி முகாம்களை நடத்திய ஈரோஸ்தான் – அந்த அயோக்கியப் பிரபாகரனுக்குமேகூட அடிப்படை ராணுவப் பயிற்சியை அளித்தது. டெலொ, ப்ளோட், ஈபிஆர் எல் எஃப் உட்பட பல அமைப்புகள் சார்ந்த தொண்டர்களும் ஈரோஸ் முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களே!  (நான் அறிந்தவரை சின்னபாலா இந்த பாலஸ்தீனிய பயிற்சிகளுக்குச் செல்லவில்லை; ஆனால், தராதரம் பார்க்காமல் கண்டகழுதைகளுக்கும் ஆயுதப் பயிற்சியளித்த ஈரோஸ் மீது எனக்கு மாளாப் பிரச்சினை!)
  • 1983-85 வாக்கில் சின்னபாலாவும் இந்திய ராணுவத்தினால், இந்தியாவில் கொடுக்கப்பட்ட ஆயுதப் பயிற்சிகளில் பங்கேற்றார். பிரபாகர உதிரி கும்பல்களும் இம்மாதிரி பயிற்சி பெற்றன. (இந்த கேடுகெட்ட விஷயத்தை இந்தியா செய்திருக்கவேகூடாது என்பது என் கருத்து; இதற்காக, ஒரு இந்தியன் என்கிற முறையில், நான் வெட்கித் தலைகுனிகிறேன். இந்த வரலாற்றுத் தவறினால் – இந்தியா வளர்த்த பிரபாகரக் கடாக்கள் இந்திய மாரிலேயே பாய்ந்து பலப்பல இந்தியக் குடிமகன்களின் உயிர்களை மாய்த்தது (ராஜீவ்காந்தி உட்பட! ஆயிரத்துக்கும் மேலான இந்திய உயிர்கள் உட்பட!!) நம் மகாமகோ வரலாறு அல்லவா!)
  • ஜூலை-ஆகஸ்ட் 1985 வாக்கில் – இந்திய அரசின் முனைப்பினால் நடந்த திம்பு(புடான்) பேச்சுவார்த்தைகளில் ஈரோஸ் சார்பாக, சின்னபாலாவும் கலந்துகொண்டார். (பிரபாகரன், இந்தப் பேச்சுவார்த்தையின்போது கூட அழிச்சாட்டியம் செய்து, ஒரு சிறுபிள்ளையைப்போல முதிர்ச்சியற்று விடலைத்தனமாக நடந்துகொண்டது, ஒத்திசைவைப் படிக்கும் சில வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம்)
  • ஆனால், ஈரோஸ் ஒரு ஆயுதம்தரித்த குழுவானாலும், தீவிர துப்பாக்கிமுதல்வாதத்தை முன்னெடுக்கவில்லை. பின்னர் இந்திய அமைதிப்படை, உட்போர்கள், அழித்தொழித்தல்கள் என நடந்து பிரபாகரன்கள் மேலேழும்பி வரும்போது 1990ல் ஈரோஸில் ஒரு பெரிய பிரிவு பாலகுமார் தலைமையில் எல்டிடிஇ கும்பலுடன் ஜோதியில் கலந்தது.
  • இதனுடன் எல்டிடிஇ-இல் ஐக்கியமாகி அதன் செய்திப்பத்திரிகை குழுவில் சேர்ந்தார், சின்னபாலா; ஆனால் – தறுதலைப் புலிகளின் அயோக்கியத் தன்மையை, அதன் தலைமையின் கயமையை, மக்களிம் முன்னேற்றத்துக்கு எதிரான ஃபாஸ்ஷிஸ்ட் போக்கை நன்கு அறிந்த சின்னபாலா முழுவதுமாக அந்த ஜோதியில் கலக்கவில்லை. இருந்தாலும்,  தறுதலைகளின் பிடியில் இருந்து அவர் தப்பித்து வெளியேற 1995 போல ஆகிவிட்டது.
  • பின்னர் அவர் ப்ளோட் அமைப்பில் சில நாள் இருந்து, பின்னர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி அமைப்பில் சேர்ந்து சில தேர்தல்களிலும் வென்றார்; . பின்னர் அதன் செய்தித் தொடர்பாளராக, ஊடகக் காரியதரிசியாகப் பலவருடம் இருந்தார். ஜனநாயகத்துக்காகவும், மக்களின் மேன்மைக்காகவும் ஆகவே எல்டிடிஇ கும்பலுக்கு எதிராகவும் குரலெழுப்புதலையும், முன்னெடுப்பகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்… (இதனைப் பற்றி, பலப்பல விவரங்கள் இருக்கின்றன; யாராவது, இது தொடர்பாக புத்தகம் ஒன்றை எழுதக் கூடுமானால், என் குறிப்புகளைத் தரமுடியும்)
  • எனக்குத் தெரிந்து, சின்னபாலா ஆயுதத்தை ஒருபோதும் உபயோகித்தவரில்லை. அவரது எழுத்துகள்தான், முற்போக்குச் சிந்தனைகள்தாம், மேலும் முக்கியமாக, அவரது களச் செயல்பாடுகள்தாம் அவருடைய ஆயுதம்.
  • ஆகவே போய்ச் சேர்ந்தார். அதாவது தறுதலைப் புலிகளால் அழித்தொழிக்கப்பட்டார்!
சுபம்.
சின்னபாலா – மேலதிகமாக,  ஒரு கவிஞரும், கதாசிரியரும், பத்திரிகையாசிரியரும் கூட! இவர் எழுதிய சில கட்டுரைகளையும் ஒரு புத்தகத்தையும் (திம்பு முதல் டோக்கியோ வரை: புலிகளின் பேச்சுவார்த்தைகளும் பயன்பெறாத தமிழ்மக்களும்) படித்திருக்கிறேன். இவருடைய கவிதைகள் சுகமில்லை; சிறுகதைகள் பரவாயில்லை. ஆனால் ஆத்மார்த்தமான விழைவுகளும் அவதானிப்புகளும், நுணுக்கமான பார்வைகளும் கொண்ட அவருடைய கட்டுரைகள் மிகமிகமுக்கியமானவை.
சின்னபாலாவின் மனைவியும் அவருடைய மூன்று குழந்தைகளும் கஷ்டஜீவனத்தில்தான் இருந்தார்கள் எனக் கேள்வி.  இப்போது, அக்குழந்தைகள் வளர்ந்திருக்கவேண்டும்…
-0-0-0-0-0-0-
நான் இப்பதிவின் ஆரம்பத்தில் எழுதிய பிரபாகரன்-சின்னபாலா பொருத்திப்பார்த்தலுக்கு, விரித்த சித்திரத்துக்கு ஒருமாதிரியான ஒத்திசைவுடன் –  என் மதிப்புக்குரிய பத்திரிகையாளரும் ஸ்ரீலங்காவிலிருந்து தேசம்மாறி கனடாவில் வசித்துக்கொண்டிருப்பவருமான டேவிட் ப்யூவல் சபாபதி ‘டிபிஎஸ்’ ஜெயராஜ் அவர்களும்  தம் கருத்தைத் தெரிவிக்கிறார்.
"Sinna Bala has been interlinked with the evolution and growth of the Tamil militant nationalist movement from its pioneering days. He has a history that is equal if not more to that of LTTE Leader Velupillai Pirapaharan. Sinna Bala has to a very great extent personified the various stages and phases of the course of Tamil political struggle."
“Sinna Bala has been interlinked with the evolution and growth of the Tamil militant nationalist movement from its pioneering days. He has a history that is equal if not more to that of LTTE Leader Velupillai Pirapaharan. Sinna Bala has to a very great extent personified the various stages and phases of the course of Tamil political struggle.”
அதாவது, என்னுடைய மொழி’பெயர்த்தலில்’:
‘தமிழ் ஈழ’ தேசிய தீவிரவாத இயக்கங்களில் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் – அவற்றின் ஆரம்ப நாட்களிலிருந்தே தொடர்புள்ளவராக இருந்திருக்கிறார், சின்ன பாலா; அவருடைய வரலாறு என்பதுகுறைந்தபட்சம் பிரபாகரனின் வரலாறுக்குச் சமமானது, அல்லது மேலானது. சின்னபாலா, பலவிதங்களில் – தமிழ் அரசியல் முனைவுகளின் பல படிகளை, போக்குகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியிருக்கிறார்.

 https://othisaivu.wordpress.com/2015/08/16/post-539/


பயங்கரவாதி பிரபாகரனால் கொன்று வீசப்பட்ட ஈழத்து பெண் ஆளுமைகள்!!!


சர்வதேச பெண்கள் தினத்தில் ஈழம் இழந்துபோன பெண் ஆளுமைகள் பற்றிய சில நினைவுகள் வந்து செல்கி ன்றன.அவர்களில் ராஜனி திரணகம, செல்வி,சிவரமணி,சரோஜினி யோகேஸ்வரன்,மகேஸ்வரி வேலாயுதம் ரேலங்கி செல்வராஜா..... ...... என்று நீண்டதொரு பட்டியலுக்கு நாம் சொந்தகாரர்க ளாயுள்ளோம்.இந்த இழப்புகள் இயற் கையில் வந்தவை யல்ல.தவிர்த்திருக்க முடியாதவையுமல்ல. ஆனால் கடந்த காலத்தில் இலங்கையில் கோலோச்சிய வன்முறை சூழலும் அதன் மீதான கண்மூடித்தனமான வழிபாட்டு கலாசாரமுமே நாம் இழந்துபோன இந்த ஆளுமைகளை தீர்த்து கட்டியிருந்தது. இன்று பெண்களை பாதுகாப்போம், பெண்களை மீட்டெடுப்போம், பெண் களுக்கு சுதந்திரம் வழங்குவோம் என்று நாம் ஒவ்வொருவரும் கோசங்களை உச்சரித்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் எம்மால் பல பெண் ஆளுமைகளின் இருப்புகளை கடந்த காலங்களில் காப்பாற்ற முடியவில்லை.எமது சமூகத்தை வழிநடத்தும் மிகப்பெரும் திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்த அந்த பெண்களை இன்று நாம் இழந்து நிற்கின்றோம்.அதன் பிரதிபலனானாகவே எமது பெண்சமூகம் இன்று மீளமுடியாத அகலபாதாலத்துக்கு சென்று கொண் டிருக்கிறது எனலாம்.

ராஜினி திரணகம

இலங்கையில் எழுத்துக்காக கொல்லப்பட்ட முதல் பெண்.யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் உடல்கூற்றியல் விரிவுரையாளராக கடமை´யாற்றியவர். சமூகம் சார் சிந்தனையை மாணவர்களிடையே உருவாக்க வேண்டுமென்பதில் தீராது அக்கறையுடன் செயல்பட்டவர். அவர் பற்றி அவரது மாணவனொருவர் பின்வருமாறு எழுதுகிறார்.

"அவர் வெறும் உடற்கூற்றியல் விரிவுரையாளராக மட்டும் இருக்கவில்லை. அவரின் வகுப்புகள் எப்போதும் மிக உற்சாகம் நிறைந்ததாகவே இருக்கும். தனது அன்றாட விரிவுரைகளுக்கு அப்பால் எமது சமூகப் பிரைச்சினைகளைப் பற்றி சிந்திக்கும் திசையிலும் மாணவர்களை மிகத் திறமையாக அவர் எடுத்து செல்வார். அப்போது அவரின் பரந்த அறிவையும் ஆழமான சமூக உணர்வையும் நாம் கண்டோம். எமக்கு அவற்றை புரிய வைப்பதற்காக சிறந்த திரைப்படங்கள் நாவல்கள் அவர் படித்து ரசித்த கவிதைகள் பலரின் உலக அனுபவங்கள் என சகலவற்றையும் எந்தவித தடங்கலும் இன்றி மள மளவென எம்முன் எடுத்துச் சொல்வார்".

தமிழீழ விடுதலைபோராட்டத்தின் தோல்வியை முன்னறிவித்த "முறிந்த பனை" என்னும் வரலாற்றுதொகுப்பின் ஆசிரியர்களில் ஒருவராக பணியாற்றியவர். புலிகளின் உளவுப்பிரிவில் பணியாற்றிய வரும் கொலையாளியுமான பொஸ்கோ என்பவனின் கரங்களால் 1989 செப்டெம்பர் 21ம் திகதியன்று யாழ் பல்கலைகழக வளாகத்தில் 2வது எம்.பீ.பீ.எஸ் பரீட்சையின் இறுதி அங்கம் முடிவடைந்து வெளியே வரும் போது சுட்டுகொல்லபட்டார்.அவரை சைக்கிளில் பின் தொடர்ந்த கொலையாளி அவரது தலையின் வலப்பக்கத்தில் முதல் வேட்டைத் தீர்த்தான். பின்னர் அவர் கீழே விழுந்ததும் இன்னும் இரண்டு தடவைகள் அவர் தலையில் சுட்டுவிட்டுச் சென்றான். கொல்லப்பட்ட மறுதினம் அவரின் உடல் மருத்துவ பீடத்திற்கு கொண்டு வரப்பட்ட பொழுது யாழ். பல்கலைக்கழகத்தின் பல மூத்த விரிவுரையாளர்கள் அங்கு சமூகமளிக்கவில்லை. ஏன்..? காரணம் அவர்களுக்கும் இக்கொலையை செய்த வர்கள் யார் என்று நன்றாக தெரியும். ஆனால் அனைவரும் மௌனம் காத்தனர்.

கவிஞை செல்வி

பெண்ணியவாதியான இவர் யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் நாடகமும் அரங்கியலும் எனும் துறையின் இறுதியாண்டு மாணவி.தோழி இதழின் ஆசிரியராக இயங்கியவர்.தனது கல்வி செயற்பாடுகளுக்கு அப்பால் சமூகம் சார்ந்து தீராது உழைத்தவர். யாழ்ப்பாண பெண்கள் ஆய்வுவட்டம், பூரணி பெண்கள் நிலையம் என்று பலவிதத்திலும் பெண்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபட்டவர். .1991ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் புலிகளால் கடத்தப்பட்ட இவரை விடுவிக்க கோரி சர்வதேச மனித உரிமை அமைப்பு பலவாறு முயன்றது. தனது இதழான Focus செல்வியைப் பற்றி 1994ம் ஆண்டு மார்ச் இதழில் விடுதலையைக் கோரி எழுதியது. புலிகள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. இந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது ((Poets Essayists and Novelists) PENஅமைப்பினால் செல்விக்கு வழங்கப்பட்டது. . இவ் விருதானது தங்களுடைய நம்பிக்கைகளுக்காகவும் இலட்சியத் திற்காகவும் எழுத்துத ¢தளத்திலும் கலைத்தளத்திலும் படைப்புக் களை உருவாக்கியவர்களுக்கு வழங்கப்ப டுவதாகும். செல்வி ஈழத்தின் நெருக்க டியான போராட்ட வழ்நிலையில் இத்துறைகளில் சேவை புரிந்தமைக்காக இவ்விருது வழங்க ப்பட்டது. இவரை புலிகள் இறுதிவரை விடுதலை செய்யவேயில்லை.

சரோஜினி யோகேஸ்வரன்

1997 ஆம் ஆண்டில் இவர் யாழ்ப்பாண நகர முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரோஜினி இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெ. யோகேஸ்வரனின் மனைவியும் ஆவார். திருமதி யோகேஸ்வரன் 1998 மே 17 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து புலிகளால் ஐந்து முறை துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் மரணமானார். தமிழீழ விடுதலைப் புலிகள் இவரது கணவர் வெ. யோகேசுவரனை1987 ஆம் ஆண்டில் கொழும்பில் வைத்து சுட்டுக் கொன்றனர்.இன்று யாழ்மாநகர சபையும் வட மாகாண சபையும் ஒரு ஜனநாயக சூழலுக்குள் இயங்குவதற்கு உரமாக தன்னுயிரை தந்தவர்.








சிவரமணி


பிரபாகரனால்  நிர்பந்த கொலை செய்யப்பட்ட சிவரமணி!!
விடுதலைப் போராட்ட நிழலாக “புதிய வாழ்வின் சுதந்திர கீதத்தை இசைத்துக் களிப்போம் வாருங்கள் தோழியரே” என்று எழுதிய நெருப்பு பற்றி, இளைஞர்களின் விடுதலை எழுச்சியின் பிண்ணனியில் “என்னிடம் ஒரேயொரு துப்பாக்கி, ஒரேயொரு கைக்குண்டு, என் எதிரிக்கெதிராய்ப் போரைப் பிரகடனம் செய்ய என்னிடம் ஒரேயொரு துப்பாக்கி ஒரேயொரு கைக்குண்டு எனினும் நான் தளரவில்லை......” என்று வீரமா உருவாகிய தமிழர் கலை இலக்கிய மலர்ச்சியின் எழுச்சியில் உருவாக்கிய ஒரு புதிய தலைமுறையைச் சேர்ந்தவர் சிவரமணி,
சிவரமணி எழுதிய எல்லாக் கவிதைகளையும்,சேர்த்து வைத்து இருந்த புத்தங்கங்கள் எல்லாத்தையும் ஒன்றாகப் போட்டு நெருப்பு பத்த வைத்துப் போட்டு ,நித்திரைக் குளிசையை அள்ளிப்போட்டு "....மூச்சறுத்த மரணத்தின் சுவடுகள் என் பாதங்களுக்கிடையில் மூச்சையுற என் வெளிச்ச நோக்குகை இன்மையை விரட்டுகிறது...." என்று விரக்தியாக எழுதிய சிவரமணி இருவத்தி மூன்று வயதில் பிரபாவின்த  கொலை  அச்சுறுத்துலுக்கு  பயந்து  தற்கொலை செய்து இறந்து பல  வருடங்களாகிவிட்டன.
அறிவுவுள்ள  பிண்ணனியில் இருந்த ஒரு குடும்பத்தில்ப் பிறந்தவா. பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் ,அப்பா சின்ன வயசில் இறந்துபோக ,அம்மாவுடனும் ஒரே ஒரு சிறிய சகோதரியுடனும் வாழ்ந்தவா. கொஞ்சம் எல்லாரோடும் சேராத,அரசாங்க உத்தியோகம் செய்த வசதியான குடும்பம், சிவரமணி யாருடனும் அதிகம் பழகாத ஒரு அப்பாவிப் பெண் போன்ற தோற்றம் உடைய, மிகவும் உயரம் குறைந்த, யாரையும் அதிகம் நிமிர்ந்தே பார்க்காத அந்தப் பெண்ணின் உள்ளே ஒரு எரிமலை இருந்து, அது கவிதை வடிவில் எப்பவுமே வெடித்து வெளியே வர ,சிவரமணி தற்கொலை செய்த பின் பல விமர்சனங்கள்,நிழலான கருத்துக்கள் இலங்கையிலும் புலம் பெயர்நாடுகளிலும் வெளிவந்தன.
மர்மமான அந்த நிகழ்வின் சில விசியங்கள் இன்னும் பலருக்கு தெரிய வரவேயில்லை,காரணம் சிவரமணியே ஒரு மர்மமான கவிதாயினி.மேடையில் ஏறி கவிதை வாசித்தோ,அல்லது அப்போது யாழ்பாணத்தில் இருந்து வெளிவந்த முக்கிய இலக்கிய சஞ்சிகைகளே அவரின் ஆக்கம் வெளிவரவில்லை எண்டு நினைக்கிறன்,அப்புறம் எப்படி சிவரமணி கவிதை உலகில் இவளவு தூரம் கவனிக்கப்பட்டது என்பதுக்குக் காரணம், சிவரமணி கவிதை எழுதிய விதம்,அதன் கவிதை மொழியின் வீரியம், அது ஏட்படுதிய ஜோசிக்க வைக்கும் சலசலப்பு எல்லாத் தரப்பையும் நீதி கேட்ட நியாயங்கள்.
மிகவும் சிறப்பாக ஆங்கில அறிவுள்ள சிவரமணி யாழ் பல் கலைகழகத்தில் படித்து,அங்கேயே பின்னர் ஆங்கில இன்டலெக்சுவல் இலக்கிய,அரசியல் புத்தகம், கட்டுரைகளை மொழி பெயர்தவா, இன்னுமொரு கம்பஸ் கவிதாயினி செல்வி, போன்றவர்களுடன் வேலை செய்தவா. சிவரமணி ஆரம்பத்தில் ...... என்ற அமைப்பின் அரசியல் விசுவாசியா இருந்து விடுதலை எழுச்சி கவிதைகளை விடவும் பெண்களின் சமூக விழிப்புணர்வுக் கவிதைகள் எழுதியவா, மனித உரிமை அமைப்புக்களுடன் நிழலாக இயங்கியவா,நீங்களே சொல்லுங்க பார்ப்பம், இவளவும் போதாதா ஒரு பெண்னை இயல்பாக இயங்க விடாமல் செய்வதுக்கு.
சொல்லபோனால் அவாவின் எழுதும் முறை அப்போது எழுதிக்கொண்டு இருந்த கவிஞ்சர்களின் ஸ்டைலை விடவித்தியாசமானது. முக்கியமா அவா ஆங்கிலக் கவிதைகள் மொழி பெயர்ததால் சில்வியா பிளாத் இன் " கொன்பெஸ்சனல் " ஸ்டைலில்,அலன் ஜின்ச் பெர்கின் கோப வரிகளின் பாதிப்பு நிறையவே இருக்கு அவாவின் கவிதைகளில். எரிக்கா யங் எழுதிய கவிதைகள் போல சில தரமான கவிதைகள் எளிமையான தமிழில் எழுதிய சிவரமணி கடைசியில் சில்வியா பிளாத் போலவே தற்கொலை செய்ததுக்கு நிறைய மன அழுத்தக் காரணங்கள் அவாவின் வீட்டிலை அதிகமாயும் வீட்டுக்க்கு வெளியே நாட்டிலை கொஞ்சமும் இருந்தது..
ஈழ விடுதலைப் போராட்டதில் எல்லா இளஞர்,யுவதிகள் ஆர்வாமாய் இணைந்ததை " ..தேசத்தின் அறிவாளிகள் தெருக்களில் துப்பாக்கிகளுடன்...." என்று இயல்பாக எழுதிய சிவரமணி அவர்களே,ஜனநாஜகப் பாதையில் இருந்து கொஞ்சம் குளறுபடியாக பாதை மாறிய போது , சிவரமணியின் குரல் கொஞ்சம் காட்டமாக "....நிராகரிக்கப்பட முடியாதவள் நான்..... " என்று எழுதத் தொடங்கி ,துணிவோடு “....என்னிடம் ஒரு துண்டுப்பிரசுரத்தைப் போல நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க வார்த்தைகள் இல்லை...” என்று எழுதி இன்னும் குழப்பமாக அந்த நாட்களில் இயங்கிய ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளின் குறுகிய மனப்பான்மை,போட்டி,பொறமை,எல்லாத்தையும் “வினாக்களுக்குரிய விடைகள் யாவும் அச்சடிக்கப்பட்டுள்ளன.....”என்று எழுதிய பொழுதே சிவரமணியின் சிந்தனை வீச்சு கவனிக்கப்படத் தொடங்கி இருக்கலாம், அது அவாவுக்கும் தெரிந்து இருக்கலாம்.
எண்பதுகளின் புதுக் கவிதைப் போக்கில் கவிதை மொழியில் நிறைய புதுமை செய்த ஒரு அடக்கமான பெண் என்பதால் சிவரமணி ஈழத்துக் கவிதை வரலாற்றில், புரட்சிகர காலகட்டத்தின் மிக முக்கியமான கவிதாயினி என்பதுடன் இன்றைக்கு யாழ்பாணத்தில் இருந்து எழுதும் பெண் கவிதாயினிகளின் கவிதைகளில் சிவரமணி பற்ற வைத்த “..கூனல் விழுந்த எம்பொழுதுகளை நிமிர்த்தத்தக்க மகிழ்ச்சி எதுவும் எவரிடமும் இல்லை..” போன்ற பொறியைப் பார்க்கலாம்.
தற்கொலை ஒரு தற்காலிக பிரசினைக்கு நிரந்தரத் தீர்வு எண்டு சொல்லும் இந்த உலகத்தில், ஒரு படைப்பாளி வாழும் சுழல் எவளவு மன உளைச்சலை தனிப்படக் கொடுக்கும் என்பதுக்கு உதாரனமான சிவரமணியின் கவிதைகளைத் தொகுத்து கனடாவில் "விழிப்பு " பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ளன, பேராசிரியை சித்திரலேகா மவுனகுரு சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளா . மின்னியல் வெப் ஊடறுவின் நூலகப்பகுதியிலும் சில கவிதைகள் வாசிக்க முடியும்...
யாழ்பாணத்தில் பிறந்த சிவரமணி பற்றியோ,அவர் கவிதைகள் பற்றியோ யாழ்பாணத்தில் இருந்து எழுதும் எழுத்து ஜாம்பவான்கள் அதிகம் பேர் ஒண்டுமே எழுதவில்லை. தமிழ் நாட்டில் இருந்து எழுதும் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர் ஒரு அருமையான கட்டுரை "....என்னையும் நிர்வாணமாக்கும் என்கிற நம்பிக்கைக் கீற்றில் கணங்களைக் கொழுத்தி என்னைப் பட்டைதீட்டிக் கொள்கிறேன்.." என்ற வரிகள் வரும் கவிதையையும்,வேறு சில கவிதைகளையும் சிலாகித்து, கமலா தாஸ் போன்ற இந்திய உப கண்டப் பெண்ணியல் கவிதாயினிகளை விடவும் மிகவும் சிறந்த ஒரு கவிதாயினி சிவரமணி என்று எழுதி இருந்தார்,அது நிறைய பேர் தமிழ் நாட்டில் சிவரமணி யார் எண்டு தேடி வாசிக்க வைத்தது.
இலங்கை ராணுவத்தின் அட்டகாசம் ,சகோதர இயக்கப் படு கொலைக் குளறுபடிகள்  , வரலாற்று நிகழ்வுகளின் நடுவே, மொழி இழந்த அப்பாவி மக்கள்,விதவைப் பெண்கள்,இயக்கப் போராளிகள், போராட்டம், ஜனநாஜகம், இவற்றின் நொந்து போன குரலின் குரல்வளையாக மாறிய சிவரமணியின் கவிதை வரிகள் ஒரு காலகட்டத்தின் தவிர்க்க முடியாத தரவாகப் பதிவாகி “எனக்குப் பின்னால் எல்லாப் பரம்பரைகளும் கடந்து கொண்டிருந்த வெளியில் நானும் விடப்பட்டுள்ளேன்......” என்று கையறுநிலை பற்றி எழுதி வைத்துவிட்டுச் சென்றவர் ,சிவரமணி .
சிவரமணியின் மரண வீட்டில், அவாவின் யாழ் பல்கலைக்கழக நண்பர்கள் ஒரே ஒரு கவிதை எழுதி ஒரு துண்டுப் பிரசுரம் போலக் கொடுத்தார்கள்,அந்தக் கவிதையின் கடைசி வரி இப்படி முடியும் " ,,,எல்லாம் முடிய முன்னர் முற்றுப்புள்ளியை ஏனம்மா முன்னுக்கு வைத்தாய் ...." எண்டு. ஏனோ தெரியவில்லை எங்கள் அன்புக்கு உரிய சிவரமணி தற்கொலை செய்து இறந்து இன்றுடன் 24 வருடங்களாகிவிட்ட பின்னும் அந்த வரிகளை இன்னும் மறக்க முடியாமல், அதன் அர்த்தம் தானாகவே சொல்லும் வரிகளின் வேதனையை விளங்கிய எல்லா கவிதை ரசிகர்களுடனும் நானும் சேர்ந்து ,மனதில் நினைவு வைத்துக் கொண்டு , இதயத்தில்க் காவிக்கொண்டு தெரிகிறேன்.
...........சில கவிதை வரிகளையும் , அதை எழுதியவர்களையும் அவளவு சுலபமாக, இதயத்தை விட்டு இறக்கி வைக்கவே முடியாது.......இதுதான் வாழ்க்கை......

எமது விடுதலை

நாங்கள் எதைப் பெறுவோம்
தோழர்களே
நாங்கள் எதைப் பெறுவோம்?
இன்பமும் இளமையும்
இழந்து நின்றோம்
ஏக்கமும் ஏழ்மையும்
சுமந்து வந்தோம்
நாங்கள் எதைப் பெறுவோம்?
விடுதலை என்றீர்
சுதந்திரம் என்றீர்
எம் இனம் என்றீர்
எம் மண் என்றீர்
தேசங்கள் பலதிலும்
விடுதலை வந்தது இன்று
சுதந்திரம் கிடைத்தது
எனினும்
தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
இன்னும்
பிச்சைப் பாத்திரங்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
நாமும் பெறுவோமா
தோழர்களே
பிச்சைப் பாத்திரத்தோடு
நாளை ஒரு விடுதலை?
நாம் எல்லாம் இழந்தோம்
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்;
விலங்கொடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!
தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை.

4. வையகத்தை வெற்றி கொள்ள

என் இனிய தோழிகளே
இன்னுமா தலைவார
கண்ணாடி தேடுகிறீர்?
சேலைகளைச் சரிப்படுத்தியே
வேளைகள் வீணாகின்றன.
வேண்டாம் தோழிகளே
வேண்டாம்.
காதலும் கானமும்
எங்கள் தங்கையர் பெறுவதற்காய்
எங்கள் கண்மையையும்
இதழ்பூச்சையும்
சிறிதுகாலம் தள்ளிவைப்போம்.
எங்கள் இளம் தோள்களில்
கடமையின் சுமையினை
ஏற்றிக் கொள்வோம்.
ஆடையின் மடிப்புகள்
அழகாக இல்லை என்பதற்காக
கண்ணீர் விட்ட நாட்களை
மறப்போம்.
வெட்கம் கெட்ட
அந்த நாட்களை
மறந்தே விடுவோம்.
எங்கள் தோழிகள் பலரும்
உலகில் இன்று
கண்மையையும் இதழ்பூச்சையும்
மறது போயினர்.
ஆனால்
தமது மணிக்கரத்தைப்
பிணைத்த விலங்கை
அறுத்தனர்.
வாருங்கள் தோழிகளே
நாங்களும் வழிசெய்வோம்.
மண்ணால் கோலமிட்டு
அழித்தது போதும்.
எங்கள் செந்நீரில் கோலமிட்டு
வாழ்க்கைக் கோலத்தை
மாற்றி வரைவோம்
வாருங்கள் தோழிகளே.
சரிகைச் சேலைக்கும்
கண்ணிறைந்த காதலர்க்கும்
காத்திருந்த காலங்கள்!
அந்த வெட்கம் கெட்ட
காலத்தின் சுவடுகளை
அழித்து விடுவோம்.
புதிய வாழ்வின்
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்
வாருங்கள் தோழிகளே.

மகேஸ்வரி வேலாயுதம்

1983 ன் பின்னர் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு ஓடிச்சென்ற தமிழ் மக்களுக்கு ஒரு கலங்கரை விளக் கமாக நின்று உதவிகரம் நீட்டியவர். அகதிகளின் வாழ்வில் ஓடியோடி பங்கெடுத்து அயராது உழைத்தவர். நமது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஸ்ரீலங்கா அரசின் விசுவாசமான ஊழியனாய் உச்சநீதிமன்றில் இருந்துகொண்டு இருந்து எமது இளைஞர்களுக்கு ஐந்துவருடம் பத்து வருடம் என்று சிறைவாச சாபம் கொண்டி ருந்த வேளைகளில் இலங்கை சிறைகளில் வாடிய ஆயிர கணக்கான தமிழ் அரசியல் கைதிகளுக்கு இலவச வழக்காடி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். மனித உரிமை சட்டத்தரணியான 53வயதுடைய மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் சுகயீனமுற்றுள்ள தனது தாயாரான ஆசிரியை ஈஸ்வரி வேலாயுதம் அவர்களை பார்ப்பதற்காக தனது சொந்த ஊருக்கு சென்றிருந்த சமயம் 2008 மே மாதம் சுட்டு கொலை செய்யப்பட்டார்

ரேலங்கி செல்வராஜா

ரேலங்கி செல்வராஜா என்ற ஈழத்தமிழச்சியையும் அவர் கணவர் சின்னத்துரையையும் சுட்டுக்கொன்ற மலையாளி பிரபாகரனும்,விடுதலைப்புலிகளும்!!!
விடுதலைப்புலிகளின் கொலைகளை பற்றிய உண்மைகளை தைரியமாக விமர்சித்ததால் பிரபாகரனால், ரேலங்கி மற்றும் அவரது கணவர் சின்னத்துரை செல்வராசாவுக்கும் மரண தண்டனையை பரிசாக அளித்தான்.
இலங்கையில் இருந்த முன்னணி தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஆவார். தொடக்க நாட்களில் திரை ப்பட நடிகையாகவும் இருந்த இவர் தனது கணவருடன் சேர்த்து ஆகஸ்ட் 12 , 2005 கொழும்பில் வைத்து புலிக ளால் சுட்டுக் கொல்லப்பட்டார் இவர்களின் கொலையின்போது ஒரு வயதும் அடையாத அவர்களது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியது.

இப்படி இன்னும் பலர் துரோகிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு கொன்று வீசப்பட்டனர். போர் தின்ற மாந்தர்களான இந்த மாபெரும் பெண் ஆளுமைகளை இந்த சர்வதேச பெண்கள் தினபொழுதுகளில் நினைவுகூருவோம். 

நன்றி - தேனீ

Sunday, 26 June 2016

ராஜனி திராணகம படுகொலை தொடர்பாக வெளிவராத உண்மைகள்!



(இலங்கையில் இருந்து வெளிவந்த அமுது சஞ்சிகையில் வெளியாகிய கட்டுரை கீழே)
என் சத்தியப்பதிவு 21 - 09 - 2005

எங்கள் மெடம் ராஜனி ஒரு கலங்கரை விளக்கு!

1989 ம் ஆண்டு செப்டெம்பர் 21ம் திகதி, எங்கள் அன்புக்குரிய மெடம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் தன் கடமையை முடித்து விட்டு வீட்டிற்கு போகும்போது வீதியில் வைத்து கோழைத்தனமாகசுட்டுக் கொல்லப்பட்டார். அவரையும் அவரது நேர்மையையும் நேருக்கு நேராக முகம் கொடுக்க முடியாத 'தமிழீழ விடுதலைக் கோழைகள் முதுகுப் புறமாக வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். இந்தக்கோழைத்தனமான கொலையைக் கண்டித்து மருத்துவபீட மாணவர்களும் ஏனைய பல மாணவர்களும் எமது கைகளால் சுவரொட்டிகளை எழுதி யாழ்ப்பணம் எங்கும் ஒட்டினோம்.


அப்போது எமது விடுதலைப்போராட்டத்தைப் பற்றி எனக்குள் எழுந்த உணர்வை நான் பின்வருமாறு ஆங்கிலத்தல் எழுதினேன். இதுவும் ஒரு சுவரொட்டியாக அப்போது ஒட்டப்பட்டது
Free Doom
& Free Dump
ist our Freedom...?

இன்றோடு எங்கள் மெடம் கொல்லப்பட்டு 16 வருடங்கள் ஓடிவிட்டன. அவர் கொல்லப்பட்டு 15 வருடங்களின் பின்னராவது அவரைப்பற்றி ஒரு திரைப்படம் எடுக்கப் பட்டிருப்பது மிகவும் நன்றிக்குரிய விடயம்தான். ஆனால் இன்னும் அவரைக் கொன்றவர்களைப் பற்றிய பல உண்மைகள் சரியாக வெளிவரவில்லை என்பதுதான் மிகக் கவலையான விடயமாகும். இதற்கு முக்கிய காரணம் எம்மிடமிருந்த தத்தமது உயிர் பற்றிய பயம் பிரதானமானதாகும். அதேவேளை நாம் உண்மைகளைச் சொன்னால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் எமது சமூகம் இருக்கிறதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. இன்றல்ல 1989இல் மெடம் கொல்லப்பட்ட போதும்கூட அவரை யார் கொன்றார்கள் என்ற உண்மையை எமது சமூகம் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை என்பதை நான் கண்டேன்.

அப்போதும்கூட பலருக்கு அந்த உண்மை தெரிந்திருந்தும் அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளுவதற்கு துணிச்சல் இருக்கவில்லை. ஆனால் அந்த உண்மையை தமக்குள் மனதளவில் ஏற்றுக் கொண்டவர்களும் பலர் இருந்தார்கள் என்பதும் மறுபக்க உண்மைதான். அவ்வாறு உண்மை தெரிந்து உள்ளுக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். அன்று ஏனைய பலரைப் போன்று எனது உயிர், எனது எதிர்காலம் என்று நானும் இந்த உண்மைகளை எனக்குள் போட்டு அமுக்கிக் கொண்டேன். தற்போது நான் என் நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடொன்றில் ஒரு வைத்தியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் நாட்டில் பல ஒடுக்கு முறைகளுக்கு மத்தியில் வாழும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களோடு ஒப்பிடுகையில் எனது எதிர்காலத்திற்கும் உயிருக்கும் இவ்வெளிநாட்டில் அதிக உத்தரவாதம் இருக்கிறது. அந்த வகையில் மெடத்தின் கொலை தொடர்பாக எனக்கு தெரிந்த சில உண்மைகளை இன்றாவது வெளியிடடுவது எனது கடமை என்று நினைக்கிறேன்.
எமது அன்புக்குரிய மெடம் கலாநிதி ராஜினி திரணகம அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது நான் அங்கு மருத்துவபீட மாணவனாக இருந்தேன். அவர் எங்களுக்கு வெறும் உடற்கூற்றியல் விரிவுரையாளராக மட்டும் இருக்கவில்லை. அவரின் வகுப்புகள் எப்போதும் மிக உற்சாகம் நிறைந்ததாகவே இருக்கும். தனது அன்றாட விரிவுரைகளுக்கு அப்பால் எமது சமூகப் பிரைச்சினைகளைப் பற்றி சிந்திக்கும் திசையிலும் எம்மை மிகத்திறமையாக அவர் எடுத்து செல்வார். அப்போது அவரின் பரந்த அறிவையும் ஆழமான சமூக உணர்வையும் நாம் கண்டோம். எமக்கு அவற்றை புரிய வைப்பதற்காக சிறந்த திரைப்படங்கள், நாவல்கள் அவர் படித்து ரசித்த கவிதைகள் பலரின் உலக அனுபவங்கள் என சகலவற்றையும் எந்தவித தடங்கலும் இன்றி மள மளவென எம்முன் எடுத்துச் சொல்வார். அன்றைய கால கட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் நடந்தவைகள் இப்போதும் ஓர் திரைப்படத்தைப்போல் என் மனதிற்குள் ஓடுகின்றன.

இந்திய இராணுவத்தினரதும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்களினதும் கெடுபிடிகள் மிக அதிகமாக இருந்ததால் விடுதலைப் புலிகள் இயக்கம் யாழ்ப்பாண பல்கலைகழகத்தையும் தமது மறைவிடங்களில் ஒன்றாக பாவித்தார்கள். புலிகள் இயக்கத்தின் நபர்கள் மட்டுமன்றி அவர்களின் ஆயுதங்கள் கூட பல்கலைக்கழகத்திற்குள் சில ஊழியர்களினதும் மாணவர்களினதும் உதவியோடு மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த உண்மை பல்கலைக்கழகத்தில் உயர் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை பலருக்கும் தெரிந்திருந்தது. இதற்கு எமது மருத்துவ பீடமும் விதிவிலக்காக இருக்கவில்லை. இதனால் யாழ். பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்களிடையேயும் விரிவுரையாளர்களிடையேயும் புலிகளைப்பற்றி பேசுவது மிக மிக அச்சம் நிறைந்ததாக காணப்பட்டது. இந்த அச்சத்தின் காரணமாக அன்று புலிகள் இயக்கம்தான் சில மருத்துவபீட மாணவர்களின் உதவியுடன் மெடம் ராஜினி அவர்களை சுட்டுக் கொன்றது என்ற உண்மையைப்பற்றி எவரும் வெளிப்படையாக பேசத் துணியவில்லை. அதுமட்டுமன்றி அக்கொலையைச் செய்தது இந்திய இராணுவம் அல்லது அவர்களோடு நிற்கும் ஏனைய ஆயுதக் குழுக்களில் ஒன்று என்ற பொய்யான கருத்தையே பலரும் பரப்ப முயற்சித்தனர்.

மெடம் அவர்கள் கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இருந்தே புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மருத்துவ பீட மாணவர்களின் உதவியுடன் எமது வளாகத்திற்குள் நுழைந்து அவரை வேவு பார்த்தார்கள். மெடத்தோடு நெருங்கிப் பழகிய மாணவர்கள் பலருக்கு இவ்விடயம் தெரிந்திருந்தும் அதை எவ்வாறு வெளியிடுவது என்ற அச்சம் அவர்களிடம் காணப்பட்டது. அதே நேரம் இக்கொலையாளிகளை உள்ளே கூட்டிவந்த சில மாணவர்களும் கூட மெடத்தோடு மிக நெருக்கமாக பழகிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முக்கியமான இருவரை நான் இங்கு பெயர் குறிப்பிட விரும்புகிறேன்.
அவர்களில் ஒருவர் வடமராட்சியை சேர்ந்த சூரி எனப்படும் சூரியகுமாரன் மற்றவர் முல்லைத்தீவைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர்களாவர். புலிகள் இயக்கத்தின் உளவாளிகளும் கொலைகாரர்களும் சூரியோடும் தர்மேந்திராவோடும் மருத்துவபீட வளாகத்திற்குள் நின்று கதைத்து பேசுவதும் வளாக சிற்றுண்டிச் சாலையில் தேனீர் அருந்துவதும் அப்போது மிக வெளிப்படையான நிகழ்ச்சிகளாக இருந்தன. புலிகளின் சாவகச்சேரி பொறுப்பாளர் கேடில்சின் சகோதரரான காண்டீபன் என்னும் பிரபல கொலையாளியும்கூட தர்மேந்திராவோடு தேனீர் அருந்துவதை நான் பலமுறை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

1989 செப்டெம்பர் 21ம் திகதியன்று, 2வது எம்.பீ.பீ.எஸ் பரீட்சையின் இறுதி அங்கம் முடிவடைந்து மெடம் வெளியே வரும்வரை காத்திருந்த புலிகளின் உளவாளிகளில் ஒருவன் வீதியிலே தயாராக நின்றிருந்த கொலையாளிக்கு இரகசியமாக சிக்னல் கொடுத்தான். அதைச் செய்தவன் வேறு யாருமல்ல. அங்கு பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வக்குமார் என்பவனே. மெடம் தனது சைக்கிளில் வளாக பிரதான வாசலால் வீதிக்கு இறங்கியதும் அவரை சைக்கிளில் பின் தொடர்ந்த கொலையாளி அவரது தலையின் வலப்பக்கத்தில் முதல் வேட்டைத் தீர்த்தான். பின்னர் அவர் கீழே விழுந்ததும் இன்னும் இரண்டு தடைவைகள் அவர் தலையில் சுட்டுவிட்டுச் சென்றான்.

இந்த கொலையாளி யார் என்பதையும் நான் இங்கு சொல்லவேண்டும். புலிகளின் உளவுப்பிரிவில் பணியாற்றியவரும் கொலையாளியுமான பொஸ்கோ என்பவனே அவன். பொஸ்கோவை சாதாரண மக்களில் பலருக்கு தெரியாது. ஆனால் மெடம் கொல்லப்படுவதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பொஸ்கோவினதும் இன்னும் பல சந்தேகமான நபர்களினதும் நடமாட்டம் மருத்துவ பீடத்திற்குள் அதிகரித்திருந்தது. பொஸ்கோவிற்கு வயது 30 - 35 இடையில் இருக்கும். எப்போதும் மற்றவர்களை சந்தேகத்தோடு குரோதத்தோடும் பார்க்கும் அவனது விறைப்பான முகமே அவனைக் காட்டிக் கொடுத்து விடும். இந்த பொஸ்கோ சூரியோடும், தர்மேந்திராவோடும் அமர்ந்து வளாக சிற்றுண்டி சாலையில் தேனீர் அருந்துவதை நானும் பல மாணவர்களும் கண்டிருந்தோம். முதலில் எனக்கும் இவன் யார் என்று தெரியாது. எம்மோடு படித்த ஒரு மாணவனே எங்களுக்கு பொஸ்கோ யார் என்ற உண்மையைச் சொன்னான்.

மருத்துவ பீடத்திற்குள் இவனின் நடமாட்டம் பல தடவைகள் இருந்ததை நானும் சக மாணவர்களும் கண்டிருந்தோம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இக்கொலை நடக்கும்போது அச்சம்பவத்தை நேரில் பாக்த்த ஓர் மாணவன் இன்னும் உயிருடன் இருக்கிறான். அந்த மாணவனும் நானும் ஒன்றாக திரியும்போதும்கூட பல தடவை பொஸ்கோவை நாம் கண்டிருக்கிறோம். அன்று அந்த மாணவனும் நாங்களும் இணைந்து, 'புலிகள் இயக்கமும், அதன் கொலையாளி பொஸ்கோவும், அவனுக்காக உளவு வேலை செய்த சூரிய குமாரனும் தர்மேந்திராவும்தான் மெடத்தின் கொலைக்கு பொறுப்பு' என்று கூறியிருந்தால் நாங்கள் ஒருவரும் இன்று உயிருடன் இருக்கமாட்டோம். எனவே என் சக மாணவன் கண்ணால் கண்ட அந்தக் கொலையை யாரிடமும் வெளியே சொல்லாதே என எச்சரித்தவர்களில் நானும் ஒருவன். மெடம் கொல்லப்பட்ட மறுதினம் அவரின் உடல் மருத்துவ பீடத்திற்கு கொண்டு வரப்பட்டபொழுது யாழ். பல்கலைக்கழகத்தின் பல மூத்த விரிவுரையாளர்கள் அங்கு சமூகமளிக்கவில்லை. ஏன்..? காரணம் அவர்களுக்கும் இக்கொலையை செய்தவர்கள் யார் என்று நன்றாக தெரியும்.

சூரி, தர்மேந்திரா ஆகிய இருவரோடும் நெருங்கி பழகியவர்களும், புலிகளின் கொலைகார அரசியலுக்கு ஆதரவாக இருந்த பல மருத்துவபீட மாணவர்களுக்கும் இந்த உண்மை நன்கு தெரியும். மெடம் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி மருத்துவ பீடத்திற்குள் பரவியதுமே சூரி, தர்மேந்திரா உட்பட அவர்களின் நண்பர்களின் முகங்களை நான் பார்த்தேன். அவர்களின் முகங்களே உண்மையை தெளிவாக வெளிப்படுத்தின. அவர்களைக் காட்டிக் கொடுத்தன. எனது கண்களைக்கூட அவர்களால் நேரடியாக பார்க்க முடியவில்லை. தங்களுக்கு கல்வியை போதித்து வழிகாட்டி, எதிர்கால மாணவ சமூகத்திற்கு கலங்கரை விளக்காக நின்ற அந்த ஒப்பற்ற மேதையை சுட்டுக் கொன்றுவிட்டு அவர்கள் இன்று வெளிநாடுகளில் சுகம் அனுபவிக்கிறார்கள். சூரியகுமாரன் இன்று இங்கிலாந்தில் வைத்தியசாலை ஒன்றில் வேலை செய்கிறான். அன்று அந்த தாயின் இரு குழந்தைகளை அநாதையாக்கிய இக்கொலைத்திட்டத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவனாகிய இவன், இன்று தான் உயிர்களைக் காப்பாற்றும் வைத்தியனாக வேஷம் போடுகிறான். இவர்கள் நாளைய சமூகத்தில் பெரிய மனிதர்களாக உலவ நாம் அனுமதிக்கலாமா? இந்த நாகரீக உலகத்தின் முன்னால் இவர்களை நிறுத்தி அம்பலப்படுத்த வேண்டாமா. நிட்சயம் அதை நாம் செய்ய வேண்டும்.

எனது அன்புக்குரிய சக மாணவர்களே நாம் நீண்டகாலம் மௌனமாக இருந்துவிட்டோம் எமது கண் முன்னால் நடத்தி முடிக்கப்பட்ட இந்த அநியாயத்தை மூடி மறைக்க புலிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களும் இன்னமும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் நடந்த உண்மை வரலாற்றில் புதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நான் இங்கு இதைப் பதிவு செய்கிறேன் இது தொடர்பாக நீங்களும் உங்களின் மனட்சாட்சியின் அடிப்படையில் உண்மையை சமூகத்தின் முன் வைக்க கோரிக்கை விடுக்கிறேன்.

1989ம் ஆண்டில் யாழ். மருத்துவபீட மாணவன்