பயங்கரவாதி பிரபாகரனால் கொன்று வீசப்பட்ட ஈழத்து பெண் ஆளுமைகள்!!!
சர்வதேச பெண்கள் தினத்தில் ஈழம் இழந்துபோன பெண் ஆளுமைகள் பற்றிய சில நினைவுகள் வந்து செல்கி ன்றன.அவர்களில் ராஜனி திரணகம, செல்வி,சிவரமணி,சரோஜினி யோகேஸ்வரன்,மகேஸ்வரி வேலாயுதம் ரேலங்கி செல்வராஜா..... ...... என்று நீண்டதொரு பட்டியலுக்கு நாம் சொந்தகாரர்க ளாயுள்ளோம்.இந்த இழப்புகள் இயற் கையில் வந்தவை யல்ல.தவிர்த்திருக்க முடியாதவையுமல்ல. ஆனால் கடந்த காலத்தில் இலங்கையில் கோலோச்சிய வன்முறை சூழலும் அதன் மீதான கண்மூடித்தனமான வழிபாட்டு கலாசாரமுமே நாம் இழந்துபோன இந்த ஆளுமைகளை தீர்த்து கட்டியிருந்தது. இன்று பெண்களை பாதுகாப்போம், பெண்களை மீட்டெடுப்போம், பெண் களுக்கு சுதந்திரம் வழங்குவோம் என்று நாம் ஒவ்வொருவரும் கோசங்களை உச்சரித்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் எம்மால் பல பெண் ஆளுமைகளின் இருப்புகளை கடந்த காலங்களில் காப்பாற்ற முடியவில்லை.எமது சமூகத்தை வழிநடத்தும் மிகப்பெரும் திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்த அந்த பெண்களை இன்று நாம் இழந்து நிற்கின்றோம்.அதன் பிரதிபலனானாகவே எமது பெண்சமூகம் இன்று மீளமுடியாத அகலபாதாலத்துக்கு சென்று கொண் டிருக்கிறது எனலாம்.
ராஜினி திரணகம
இலங்கையில் எழுத்துக்காக கொல்லப்பட்ட முதல் பெண்.யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் உடல்கூற்றியல் விரிவுரையாளராக கடமை´யாற்றியவர். சமூகம் சார் சிந்தனையை மாணவர்களிடையே உருவாக்க வேண்டுமென்பதில் தீராது அக்கறையுடன் செயல்பட்டவர். அவர் பற்றி அவரது மாணவனொருவர் பின்வருமாறு எழுதுகிறார்.
"அவர் வெறும் உடற்கூற்றியல் விரிவுரையாளராக மட்டும் இருக்கவில்லை. அவரின் வகுப்புகள் எப்போதும் மிக உற்சாகம் நிறைந்ததாகவே இருக்கும். தனது அன்றாட விரிவுரைகளுக்கு அப்பால் எமது சமூகப் பிரைச்சினைகளைப் பற்றி சிந்திக்கும் திசையிலும் மாணவர்களை மிகத் திறமையாக அவர் எடுத்து செல்வார். அப்போது அவரின் பரந்த அறிவையும் ஆழமான சமூக உணர்வையும் நாம் கண்டோம். எமக்கு அவற்றை புரிய வைப்பதற்காக சிறந்த திரைப்படங்கள் நாவல்கள் அவர் படித்து ரசித்த கவிதைகள் பலரின் உலக அனுபவங்கள் என சகலவற்றையும் எந்தவித தடங்கலும் இன்றி மள மளவென எம்முன் எடுத்துச் சொல்வார்".
தமிழீழ விடுதலைபோராட்டத்தின் தோல்வியை முன்னறிவித்த "முறிந்த பனை" என்னும் வரலாற்றுதொகுப்பின் ஆசிரியர்களில் ஒருவராக பணியாற்றியவர். புலிகளின் உளவுப்பிரிவில் பணியாற்றிய வரும் கொலையாளியுமான பொஸ்கோ என்பவனின் கரங்களால் 1989 செப்டெம்பர் 21ம் திகதியன்று யாழ் பல்கலைகழக வளாகத்தில் 2வது எம்.பீ.பீ.எஸ் பரீட்சையின் இறுதி அங்கம் முடிவடைந்து வெளியே வரும் போது சுட்டுகொல்லபட்டார்.அவரை சைக்கிளில் பின் தொடர்ந்த கொலையாளி அவரது தலையின் வலப்பக்கத்தில் முதல் வேட்டைத் தீர்த்தான். பின்னர் அவர் கீழே விழுந்ததும் இன்னும் இரண்டு தடவைகள் அவர் தலையில் சுட்டுவிட்டுச் சென்றான். கொல்லப்பட்ட மறுதினம் அவரின் உடல் மருத்துவ பீடத்திற்கு கொண்டு வரப்பட்ட பொழுது யாழ். பல்கலைக்கழகத்தின் பல மூத்த விரிவுரையாளர்கள் அங்கு சமூகமளிக்கவில்லை. ஏன்..? காரணம் அவர்களுக்கும் இக்கொலையை செய்த வர்கள் யார் என்று நன்றாக தெரியும். ஆனால் அனைவரும் மௌனம் காத்தனர்.
கவிஞை செல்வி
பெண்ணியவாதியான இவர் யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் நாடகமும் அரங்கியலும் எனும் துறையின் இறுதியாண்டு மாணவி.தோழி இதழின் ஆசிரியராக இயங்கியவர்.தனது கல்வி செயற்பாடுகளுக்கு அப்பால் சமூகம் சார்ந்து தீராது உழைத்தவர். யாழ்ப்பாண பெண்கள் ஆய்வுவட்டம், பூரணி பெண்கள் நிலையம் என்று பலவிதத்திலும் பெண்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபட்டவர். .1991ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் புலிகளால் கடத்தப்பட்ட இவரை விடுவிக்க கோரி சர்வதேச மனித உரிமை அமைப்பு பலவாறு முயன்றது. தனது இதழான Focus செல்வியைப் பற்றி 1994ம் ஆண்டு மார்ச் இதழில் விடுதலையைக் கோரி எழுதியது. புலிகள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. இந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது ((Poets Essayists and Novelists) PENஅமைப்பினால் செல்விக்கு வழங்கப்பட்டது. . இவ் விருதானது தங்களுடைய நம்பிக்கைகளுக்காகவும் இலட்சியத் திற்காகவும் எழுத்துத ¢தளத்திலும் கலைத்தளத்திலும் படைப்புக் களை உருவாக்கியவர்களுக்கு வழங்கப்ப டுவதாகும். செல்வி ஈழத்தின் நெருக்க டியான போராட்ட வழ்நிலையில் இத்துறைகளில் சேவை புரிந்தமைக்காக இவ்விருது வழங்க ப்பட்டது. இவரை புலிகள் இறுதிவரை விடுதலை செய்யவேயில்லை.
சரோஜினி யோகேஸ்வரன்
1997 ஆம் ஆண்டில் இவர் யாழ்ப்பாண நகர முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரோஜினி இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெ. யோகேஸ்வரனின் மனைவியும் ஆவார். திருமதி யோகேஸ்வரன் 1998 மே 17 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து புலிகளால் ஐந்து முறை துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் மரணமானார். தமிழீழ விடுதலைப் புலிகள் இவரது கணவர் வெ. யோகேசுவரனை1987 ஆம் ஆண்டில் கொழும்பில் வைத்து சுட்டுக் கொன்றனர்.இன்று யாழ்மாநகர சபையும் வட மாகாண சபையும் ஒரு ஜனநாயக சூழலுக்குள் இயங்குவதற்கு உரமாக தன்னுயிரை தந்தவர்.
சிவரமணி
பிரபாகரனால் நிர்பந்த கொலை செய்யப்பட்ட சிவரமணி!!
விடுதலைப் போராட்ட நிழலாக “புதிய வாழ்வின் சுதந்திர கீதத்தை இசைத்துக் களிப்போம் வாருங்கள் தோழியரே” என்று எழுதிய நெருப்பு பற்றி, இளைஞர்களின் விடுதலை எழுச்சியின் பிண்ணனியில் “என்னிடம் ஒரேயொரு துப்பாக்கி, ஒரேயொரு கைக்குண்டு, என் எதிரிக்கெதிராய்ப் போரைப் பிரகடனம் செய்ய என்னிடம் ஒரேயொரு துப்பாக்கி ஒரேயொரு கைக்குண்டு எனினும் நான் தளரவில்லை......” என்று வீரமா உருவாகிய தமிழர் கலை இலக்கிய மலர்ச்சியின் எழுச்சியில் உருவாக்கிய ஒரு புதிய தலைமுறையைச் சேர்ந்தவர் சிவரமணி,
சிவரமணி எழுதிய எல்லாக் கவிதைகளையும்,சேர்த்து வைத்து இருந்த புத்தங்கங்கள் எல்லாத்தையும் ஒன்றாகப் போட்டு நெருப்பு பத்த வைத்துப் போட்டு ,நித்திரைக் குளிசையை அள்ளிப்போட்டு "....மூச்சறுத்த மரணத்தின் சுவடுகள் என் பாதங்களுக்கிடையில் மூச்சையுற என் வெளிச்ச நோக்குகை இன்மையை விரட்டுகிறது...." என்று விரக்தியாக எழுதிய சிவரமணி இருவத்தி மூன்று வயதில் பிரபாவின்த கொலை அச்சுறுத்துலுக்கு பயந்து தற்கொலை செய்து இறந்து பல வருடங்களாகிவிட்டன.
அறிவுவுள்ள பிண்ணனியில் இருந்த ஒரு குடும்பத்தில்ப் பிறந்தவா. பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் ,அப்பா சின்ன வயசில் இறந்துபோக ,அம்மாவுடனும் ஒரே ஒரு சிறிய சகோதரியுடனும் வாழ்ந்தவா. கொஞ்சம் எல்லாரோடும் சேராத,அரசாங்க உத்தியோகம் செய்த வசதியான குடும்பம், சிவரமணி யாருடனும் அதிகம் பழகாத ஒரு அப்பாவிப் பெண் போன்ற தோற்றம் உடைய, மிகவும் உயரம் குறைந்த, யாரையும் அதிகம் நிமிர்ந்தே பார்க்காத அந்தப் பெண்ணின் உள்ளே ஒரு எரிமலை இருந்து, அது கவிதை வடிவில் எப்பவுமே வெடித்து வெளியே வர ,சிவரமணி தற்கொலை செய்த பின் பல விமர்சனங்கள்,நிழலான கருத்துக்கள் இலங்கையிலும் புலம் பெயர்நாடுகளிலும் வெளிவந்தன.
மர்மமான அந்த நிகழ்வின் சில விசியங்கள் இன்னும் பலருக்கு தெரிய வரவேயில்லை,காரணம் சிவரமணியே ஒரு மர்மமான கவிதாயினி.மேடையில் ஏறி கவிதை வாசித்தோ,அல்லது அப்போது யாழ்பாணத்தில் இருந்து வெளிவந்த முக்கிய இலக்கிய சஞ்சிகைகளே அவரின் ஆக்கம் வெளிவரவில்லை எண்டு நினைக்கிறன்,அப்புறம் எப்படி சிவரமணி கவிதை உலகில் இவளவு தூரம் கவனிக்கப்பட்டது என்பதுக்குக் காரணம், சிவரமணி கவிதை எழுதிய விதம்,அதன் கவிதை மொழியின் வீரியம், அது ஏட்படுதிய ஜோசிக்க வைக்கும் சலசலப்பு எல்லாத் தரப்பையும் நீதி கேட்ட நியாயங்கள்.
மிகவும் சிறப்பாக ஆங்கில அறிவுள்ள சிவரமணி யாழ் பல் கலைகழகத்தில் படித்து,அங்கேயே பின்னர் ஆங்கில இன்டலெக்சுவல் இலக்கிய,அரசியல் புத்தகம், கட்டுரைகளை மொழி பெயர்தவா, இன்னுமொரு கம்பஸ் கவிதாயினி செல்வி, போன்றவர்களுடன் வேலை செய்தவா. சிவரமணி ஆரம்பத்தில் ...... என்ற அமைப்பின் அரசியல் விசுவாசியா இருந்து விடுதலை எழுச்சி கவிதைகளை விடவும் பெண்களின் சமூக விழிப்புணர்வுக் கவிதைகள் எழுதியவா, மனித உரிமை அமைப்புக்களுடன் நிழலாக இயங்கியவா,நீங்களே சொல்லுங்க பார்ப்பம், இவளவும் போதாதா ஒரு பெண்னை இயல்பாக இயங்க விடாமல் செய்வதுக்கு.
சொல்லபோனால் அவாவின் எழுதும் முறை அப்போது எழுதிக்கொண்டு இருந்த கவிஞ்சர்களின் ஸ்டைலை விடவித்தியாசமானது. முக்கியமா அவா ஆங்கிலக் கவிதைகள் மொழி பெயர்ததால் சில்வியா பிளாத் இன் " கொன்பெஸ்சனல் " ஸ்டைலில்,அலன் ஜின்ச் பெர்கின் கோப வரிகளின் பாதிப்பு நிறையவே இருக்கு அவாவின் கவிதைகளில். எரிக்கா யங் எழுதிய கவிதைகள் போல சில தரமான கவிதைகள் எளிமையான தமிழில் எழுதிய சிவரமணி கடைசியில் சில்வியா பிளாத் போலவே தற்கொலை செய்ததுக்கு நிறைய மன அழுத்தக் காரணங்கள் அவாவின் வீட்டிலை அதிகமாயும் வீட்டுக்க்கு வெளியே நாட்டிலை கொஞ்சமும் இருந்தது..
ஈழ விடுதலைப் போராட்டதில் எல்லா இளஞர்,யுவதிகள் ஆர்வாமாய் இணைந்ததை " ..தேசத்தின் அறிவாளிகள் தெருக்களில் துப்பாக்கிகளுடன்...." என்று இயல்பாக எழுதிய சிவரமணி அவர்களே,ஜனநாஜகப் பாதையில் இருந்து கொஞ்சம் குளறுபடியாக பாதை மாறிய போது , சிவரமணியின் குரல் கொஞ்சம் காட்டமாக "....நிராகரிக்கப்பட முடியாதவள் நான்..... " என்று எழுதத் தொடங்கி ,துணிவோடு “....என்னிடம் ஒரு துண்டுப்பிரசுரத்தைப் போல நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க வார்த்தைகள் இல்லை...” என்று எழுதி இன்னும் குழப்பமாக அந்த நாட்களில் இயங்கிய ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளின் குறுகிய மனப்பான்மை,போட்டி,பொறமை,எல்லாத்தையும் “வினாக்களுக்குரிய விடைகள் யாவும் அச்சடிக்கப்பட்டுள்ளன.....”என்று எழுதிய பொழுதே சிவரமணியின் சிந்தனை வீச்சு கவனிக்கப்படத் தொடங்கி இருக்கலாம், அது அவாவுக்கும் தெரிந்து இருக்கலாம்.
எண்பதுகளின் புதுக் கவிதைப் போக்கில் கவிதை மொழியில் நிறைய புதுமை செய்த ஒரு அடக்கமான பெண் என்பதால் சிவரமணி ஈழத்துக் கவிதை வரலாற்றில், புரட்சிகர காலகட்டத்தின் மிக முக்கியமான கவிதாயினி என்பதுடன் இன்றைக்கு யாழ்பாணத்தில் இருந்து எழுதும் பெண் கவிதாயினிகளின் கவிதைகளில் சிவரமணி பற்ற வைத்த “..கூனல் விழுந்த எம்பொழுதுகளை நிமிர்த்தத்தக்க மகிழ்ச்சி எதுவும் எவரிடமும் இல்லை..” போன்ற பொறியைப் பார்க்கலாம்.
தற்கொலை ஒரு தற்காலிக பிரசினைக்கு நிரந்தரத் தீர்வு எண்டு சொல்லும் இந்த உலகத்தில், ஒரு படைப்பாளி வாழும் சுழல் எவளவு மன உளைச்சலை தனிப்படக் கொடுக்கும் என்பதுக்கு உதாரனமான சிவரமணியின் கவிதைகளைத் தொகுத்து கனடாவில் "விழிப்பு " பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ளன, பேராசிரியை சித்திரலேகா மவுனகுரு சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளா . மின்னியல் வெப் ஊடறுவின் நூலகப்பகுதியிலும் சில கவிதைகள் வாசிக்க முடியும்...
யாழ்பாணத்தில் பிறந்த சிவரமணி பற்றியோ,அவர் கவிதைகள் பற்றியோ யாழ்பாணத்தில் இருந்து எழுதும் எழுத்து ஜாம்பவான்கள் அதிகம் பேர் ஒண்டுமே எழுதவில்லை. தமிழ் நாட்டில் இருந்து எழுதும் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர் ஒரு அருமையான கட்டுரை "....என்னையும் நிர்வாணமாக்கும் என்கிற நம்பிக்கைக் கீற்றில் கணங்களைக் கொழுத்தி என்னைப் பட்டைதீட்டிக் கொள்கிறேன்.." என்ற வரிகள் வரும் கவிதையையும்,வேறு சில கவிதைகளையும் சிலாகித்து, கமலா தாஸ் போன்ற இந்திய உப கண்டப் பெண்ணியல் கவிதாயினிகளை விடவும் மிகவும் சிறந்த ஒரு கவிதாயினி சிவரமணி என்று எழுதி இருந்தார்,அது நிறைய பேர் தமிழ் நாட்டில் சிவரமணி யார் எண்டு தேடி வாசிக்க வைத்தது.
இலங்கை ராணுவத்தின் அட்டகாசம் ,சகோதர இயக்கப் படு கொலைக் குளறுபடிகள் , வரலாற்று நிகழ்வுகளின் நடுவே, மொழி இழந்த அப்பாவி மக்கள்,விதவைப் பெண்கள்,இயக்கப் போராளிகள், போராட்டம், ஜனநாஜகம், இவற்றின் நொந்து போன குரலின் குரல்வளையாக மாறிய சிவரமணியின் கவிதை வரிகள் ஒரு காலகட்டத்தின் தவிர்க்க முடியாத தரவாகப் பதிவாகி “எனக்குப் பின்னால் எல்லாப் பரம்பரைகளும் கடந்து கொண்டிருந்த வெளியில் நானும் விடப்பட்டுள்ளேன்......” என்று கையறுநிலை பற்றி எழுதி வைத்துவிட்டுச் சென்றவர் ,சிவரமணி .
சிவரமணியின் மரண வீட்டில், அவாவின் யாழ் பல்கலைக்கழக நண்பர்கள் ஒரே ஒரு கவிதை எழுதி ஒரு துண்டுப் பிரசுரம் போலக் கொடுத்தார்கள்,அந்தக் கவிதையின் கடைசி வரி இப்படி முடியும் " ,,,எல்லாம் முடிய முன்னர் முற்றுப்புள்ளியை ஏனம்மா முன்னுக்கு வைத்தாய் ...." எண்டு. ஏனோ தெரியவில்லை எங்கள் அன்புக்கு உரிய சிவரமணி தற்கொலை செய்து இறந்து இன்றுடன் 24 வருடங்களாகிவிட்ட பின்னும் அந்த வரிகளை இன்னும் மறக்க முடியாமல், அதன் அர்த்தம் தானாகவே சொல்லும் வரிகளின் வேதனையை விளங்கிய எல்லா கவிதை ரசிகர்களுடனும் நானும் சேர்ந்து ,மனதில் நினைவு வைத்துக் கொண்டு , இதயத்தில்க் காவிக்கொண்டு தெரிகிறேன்.
...........சில கவிதை வரிகளையும் , அதை எழுதியவர்களையும் அவளவு சுலபமாக, இதயத்தை விட்டு இறக்கி வைக்கவே முடியாது.......இதுதான் வாழ்க்கை......
எமது விடுதலை
நாங்கள் எதைப் பெறுவோம்
தோழர்களே
நாங்கள் எதைப் பெறுவோம்?
இன்பமும் இளமையும்
இழந்து நின்றோம்
ஏக்கமும் ஏழ்மையும்
சுமந்து வந்தோம்
நாங்கள் எதைப் பெறுவோம்?
தோழர்களே
நாங்கள் எதைப் பெறுவோம்?
இன்பமும் இளமையும்
இழந்து நின்றோம்
ஏக்கமும் ஏழ்மையும்
சுமந்து வந்தோம்
நாங்கள் எதைப் பெறுவோம்?
விடுதலை என்றீர்
சுதந்திரம் என்றீர்
எம் இனம் என்றீர்
எம் மண் என்றீர்
சுதந்திரம் என்றீர்
எம் இனம் என்றீர்
எம் மண் என்றீர்
தேசங்கள் பலதிலும்
விடுதலை வந்தது இன்று
சுதந்திரம் கிடைத்தது
எனினும்
தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
இன்னும்
பிச்சைப் பாத்திரங்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
நாமும் பெறுவோமா
தோழர்களே
பிச்சைப் பாத்திரத்தோடு
நாளை ஒரு விடுதலை?
விடுதலை வந்தது இன்று
சுதந்திரம் கிடைத்தது
எனினும்
தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
இன்னும்
பிச்சைப் பாத்திரங்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
நாமும் பெறுவோமா
தோழர்களே
பிச்சைப் பாத்திரத்தோடு
நாளை ஒரு விடுதலை?
நாம் எல்லாம் இழந்தோம்
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்;
விலங்கொடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்;
விலங்கொடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!
தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை.
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை.
4. வையகத்தை வெற்றி கொள்ள
என் இனிய தோழிகளே
இன்னுமா தலைவார
கண்ணாடி தேடுகிறீர்?
சேலைகளைச் சரிப்படுத்தியே
வேளைகள் வீணாகின்றன.
வேண்டாம் தோழிகளே
வேண்டாம்.
இன்னுமா தலைவார
கண்ணாடி தேடுகிறீர்?
சேலைகளைச் சரிப்படுத்தியே
வேளைகள் வீணாகின்றன.
வேண்டாம் தோழிகளே
வேண்டாம்.
காதலும் கானமும்
எங்கள் தங்கையர் பெறுவதற்காய்
எங்கள் கண்மையையும்
இதழ்பூச்சையும்
சிறிதுகாலம் தள்ளிவைப்போம்.
எங்கள் இளம் தோள்களில்
கடமையின் சுமையினை
ஏற்றிக் கொள்வோம்.
எங்கள் தங்கையர் பெறுவதற்காய்
எங்கள் கண்மையையும்
இதழ்பூச்சையும்
சிறிதுகாலம் தள்ளிவைப்போம்.
எங்கள் இளம் தோள்களில்
கடமையின் சுமையினை
ஏற்றிக் கொள்வோம்.
ஆடையின் மடிப்புகள்
அழகாக இல்லை என்பதற்காக
கண்ணீர் விட்ட நாட்களை
மறப்போம்.
வெட்கம் கெட்ட
அந்த நாட்களை
மறந்தே விடுவோம்.
அழகாக இல்லை என்பதற்காக
கண்ணீர் விட்ட நாட்களை
மறப்போம்.
வெட்கம் கெட்ட
அந்த நாட்களை
மறந்தே விடுவோம்.
எங்கள் தோழிகள் பலரும்
உலகில் இன்று
கண்மையையும் இதழ்பூச்சையும்
மறது போயினர்.
ஆனால்
தமது மணிக்கரத்தைப்
பிணைத்த விலங்கை
அறுத்தனர்.
உலகில் இன்று
கண்மையையும் இதழ்பூச்சையும்
மறது போயினர்.
ஆனால்
தமது மணிக்கரத்தைப்
பிணைத்த விலங்கை
அறுத்தனர்.
வாருங்கள் தோழிகளே
நாங்களும் வழிசெய்வோம்.
மண்ணால் கோலமிட்டு
அழித்தது போதும்.
எங்கள் செந்நீரில் கோலமிட்டு
வாழ்க்கைக் கோலத்தை
மாற்றி வரைவோம்
வாருங்கள் தோழிகளே.
நாங்களும் வழிசெய்வோம்.
மண்ணால் கோலமிட்டு
அழித்தது போதும்.
எங்கள் செந்நீரில் கோலமிட்டு
வாழ்க்கைக் கோலத்தை
மாற்றி வரைவோம்
வாருங்கள் தோழிகளே.
சரிகைச் சேலைக்கும்
கண்ணிறைந்த காதலர்க்கும்
காத்திருந்த காலங்கள்!
அந்த வெட்கம் கெட்ட
காலத்தின் சுவடுகளை
அழித்து விடுவோம்.
கண்ணிறைந்த காதலர்க்கும்
காத்திருந்த காலங்கள்!
அந்த வெட்கம் கெட்ட
காலத்தின் சுவடுகளை
அழித்து விடுவோம்.
புதிய வாழ்வின்
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்
வாருங்கள் தோழிகளே.
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்
வாருங்கள் தோழிகளே.
மகேஸ்வரி வேலாயுதம்
1983 ன் பின்னர் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு ஓடிச்சென்ற தமிழ் மக்களுக்கு ஒரு கலங்கரை விளக் கமாக நின்று உதவிகரம் நீட்டியவர். அகதிகளின் வாழ்வில் ஓடியோடி பங்கெடுத்து அயராது உழைத்தவர். நமது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஸ்ரீலங்கா அரசின் விசுவாசமான ஊழியனாய் உச்சநீதிமன்றில் இருந்துகொண்டு இருந்து எமது இளைஞர்களுக்கு ஐந்துவருடம் பத்து வருடம் என்று சிறைவாச சாபம் கொண்டி ருந்த வேளைகளில் இலங்கை சிறைகளில் வாடிய ஆயிர கணக்கான தமிழ் அரசியல் கைதிகளுக்கு இலவச வழக்காடி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். மனித உரிமை சட்டத்தரணியான 53வயதுடைய மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் சுகயீனமுற்றுள்ள தனது தாயாரான ஆசிரியை ஈஸ்வரி வேலாயுதம் அவர்களை பார்ப்பதற்காக தனது சொந்த ஊருக்கு சென்றிருந்த சமயம் 2008 மே மாதம் சுட்டு கொலை செய்யப்பட்டார்
ரேலங்கி செல்வராஜா
ரேலங்கி செல்வராஜா என்ற ஈழத்தமிழச்சியையும் அவர் கணவர் சின்னத்துரையையும் சுட்டுக்கொன்ற மலையாளி பிரபாகரனும்,விடுதலைப்புலிகளும்!!!
விடுதலைப்புலிகளின் கொலைகளை பற்றிய உண்மைகளை தைரியமாக விமர்சித்ததால் பிரபாகரனால், ரேலங்கி மற்றும் அவரது கணவர் சின்னத்துரை செல்வராசாவுக்கும் மரண தண்டனையை பரிசாக அளித்தான்.இலங்கையில் இருந்த முன்னணி தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஆவார். தொடக்க நாட்களில் திரை ப்பட நடிகையாகவும் இருந்த இவர் தனது கணவருடன் சேர்த்து ஆகஸ்ட் 12 , 2005 கொழும்பில் வைத்து புலிக ளால் சுட்டுக் கொல்லப்பட்டார் இவர்களின் கொலையின்போது ஒரு வயதும் அடையாத அவர்களது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியது.
இப்படி இன்னும் பலர் துரோகிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு கொன்று வீசப்பட்டனர். போர் தின்ற மாந்தர்களான இந்த மாபெரும் பெண் ஆளுமைகளை இந்த சர்வதேச பெண்கள் தினபொழுதுகளில் நினைவுகூருவோம்.
நன்றி - தேனீ
No comments:
Post a Comment