‘அன்று சிந்திய ரத்தம்’ தொடரை எழுதிவந்த கௌரிபால் சிறி என்கிற சாத்திரி., முன்னாள் ஈழப்போராளி, பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர், யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்த சாத்திரி, 1984இல் தமது பள்ளிப் பருவத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். தற்போது புலம்பெயர்ந்து பிரான்ஸில் அகதியாக வாழ்ந்து வருகின்றார்.
==============================================
அன்று சிந்திய ரத்தம் ..
புதிய தலைமுறை வார இதழுக்காக ..
சிறையில் இருந்த கருணாமீது மனிதவுரிமை மீறல்,யுத்தக் குற்றம் ,சிறுவர்களை படையில் இணைத்த சிறுவர் துஷ்பிரயோக குற்றம் என பல வழக்குகள் பாயும் என மனிதவுரிமை ஆர்வலர்களும் புலி ஆதரவாளர்களும் ஆவலோடு காத்திருக்க பிரித்தானியாவின் உளவமைப்பான M16 இன் Secret Intelligence Service (SIS) அதிகாரி ஒருவரோடு இணைந்து ஒரு ஸ்ரீலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவரும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய சில நாட்களிலேயே கருணா மீண்டும் ஜூலை 2, 2008 புதன்கிழமை, இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படுகிறான்.இலங்கை சென்ற கருணாவுக்கு பெரும் வரவேற்பு கொடுத்த மகிந்தா வேண்டிய வசதி வாய்ப்புகள் அனைத்தும் செய்து கொடுக்கிறார் .அடுத்தடுத்த நாட்கள் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சே, முப்படைத் தளபதிகள் அனைவரோடும் அலோசனைக் கூட்டம் தொடங்குகிறது.புலிகளை அழித்தொழிப்பதற்கான திட்டங்கள் தீட்டப் பட்டு நகர்வு வியூகங்களை வகுத்துக் கொடுக்கத் தொடங்கிய கருணா மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொன்ன விடயம் என்னவெனில் புலிகளுக்கு எதிரான நகர்வில் எந்தப் பெரிய பிரச்னை வந்தாலும் எந்தப் பெரிய அழுத்தம் வந்தாலும் புலிகள் முற்று முழுதாக அழிக்கப் படும்வரை ஒருநாள் ,ஒரு மணி நேரம் மட்டுமல்ல ஒரு வினாடி கூட தாக்குதல் நிறுத்தப் படக்கூடாது.அது தாரை ,வான் ,கடல் என்று இரவு பகலாக எதோ ஒரு மார்க்கமாக தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டும் ஒரு நிமிட தாக்குதல் நிறுத்த இடைவெளியிலும் புலிகள் மீள இணைந்து புதிய தாக்குதல் திட்டங்களை வகுத்து விடுவார்கள்.எனவே காயமடையும் படையினரை களத்திலிருந்து அப்புறப்படுத்தி உடனுக்குடன் புதிய படையினர் முன்னரங்குக்கு அனுப்பப் பட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லி முடித்தவன்.உடனடியாக தற்போது புலிகளின் படையணிகள் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் வரைபடங்களை தருவித்து ஆராய்ந்தவன் இதுவரை காலமும் புலிகளுக்காக இலங்கைப்படையினர் மீது பல வெற்றிகரமான ஊடறுப்பு தாக்குதல்களை நடத்தியவன் முதன் முதலாக புலிகள் அணிகளுக்கு எதிராக ஊடறுப்பு தாக்குதல்களை நடத்த இலங்கைப்படையினருக்கு திட்டங்களைப் போடத் தொடங்கினான்.
புலிகளின் அணிகள்ஊடறுக்கப் பட்டு அவர்களின் முக்கிய ஆயுதக் களஞ்சியங்கள்,வெடிபொளுள் கிடங்குகள் ,ஆட்லெறி பீரங்கி நிலைகள் ஒவ்வொன்றாக அழிக்கப்படத் தொடங்கியது மட்டுமல்லாமல் புலி முக்கியஸ்தர்களையும் ஊடறுப்பு தாக்குதல் அணிகளால் குறிவைக்கப் பட்டனர் .அப்படி அவர்களால் குறிவைத்து கிளைமோர் தாக்குதல் மூலம் புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் கர்னல் சார்லஸ் என்பவர் கொல்லப் பட்டார் கொழும்பில் பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திய இவரது இழப்பும் புலிகளுக்கு பேரிழப்பு என்று சொல்லலாம். புலிகள் படையினர் மீது திட்டமிட்ட தாக்குதல் எதுவும் நடத்தாமல் தற்காப்பு தாக்குதல் மட்டுமே நடத்தியபடி பின்வாங்கிக் கொண்டிருந்தனர்.ஆனால் எங்காவது ஒரு இடத்தில் நிறுத்தி படையினர் மீது திரும்ப ஒரு பாய்ச்சலை நிச்சயம் நடத்துவார்கள் அதற்கான திட்டம் அவர்களிடம் இருக்கும் .அந்த இடம் புலிகளின் நிர்வாக தலைநகரான கிளிநொச்சி நகராக இருக்கும் என்று எண்ணிய தமிழ் மக்களும் பெருமளவாக புலிகளின் பின்னாலேயே இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்தார்கள்.பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவருமே புலிகள் கிளிநொச்சியோடு தங்கள் பின்வாங்கலை நிறுத்தி திருப்பித் தாக்குவார்கள் என்றுதான் நினைதிருந்தர்கள்.அனைவரும் எதிர்பார்த்திருந்தது போல கிளிநொச்சி நகரை இராணுவம் நெருங்கிக்கொண்டிருந்தது.அதற்கிடையில் புலிகளோடு சண்டையிடுவது எமது படை வீரர்க்களே அப்படியிருக்க மகிந்தா அரசு தேவையில்லாமல் எதற்காக ஒரு முன்னாள் புலி உறுப்பினருக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்து பாதுகாப்பும் கொடுகிறார்கள் என்று சிங்கள எதிர் கட்சிகள் குடைச்சல் கொடுக்கத் தொடங்கவே உடனடியாக தேசியப் பட்டியல் மூலம் 2008 அக்டோபர் 7 ஆம் நாள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சராக கருணாவை அமர்த்தி எதிர் கட்சிகளின் வாயை அடைத்து அழகு பார்த்தார் மகிந்தா.
இலங்கை இராணுவம் கிளிநொச்சி நகரை நெருங்கும் வரை புலிகள் மரபுவழி இராணுவமாகவே தொடர்ந்தும் போரிட்டுக்கொண்டேயிருந்ததை இராணுவத் தளபதிகளும் கருணாவும் கவனிக்கத் தவறவில்லை.அதற்கான காரணம் கட்டுரையில் முன்னரே கூறப்பட்டது போல் புலிகளின் தளபதிகள் சொகுசு வாழ்க்கைக்கு பழக்கப் பட்டிருந்தனர் என்பதோடு மீண்டும் கெரில்லா வாழ்க்கைக்கு திரும்ப அவர்கள் தயாராயிருந்திருக்கவில்லை அதே நேரம் கருணா பால்ராஜ் ஆகியோருக்கு அடுத்த பெரும் நம்பிக்கை நட்சத்திர தளபதிகளாக இருந்த பானு ,தீபன் ,ஜெயம் ,துர்க்கா,ஜெயம் போன்றவர்கள் கூட திட்டமிட்ட தாக்குதல் எதையும் நடத்தாமல் தற்காப்பு தாக்குதல்களை மட்டுமே நடத்தியபடி பின்வாங்கிக் கொண்டிருந்தனர்.கிளிநொச்சியை வீழ்த்தவும் அது வீழ்த்த பின்னர் புலிகள் தங்களை தற்காத்துக் கொள்ள காடுகளுக்குள் இறங்கி கெரில்லாக்களா மாறி விடும் அபாயமும் இருந்தது .பெரும் படை பலத்தோடு தாக்குதல் நடத்திய இந்தியஇராணுவத்திடமிருந்து சிறு குழுவாக இருந்த புலிகளை மணலாற்று காடுதான் பாதுகாத்தது என்பது கடந்த கால வரலாறாக இருந்தது எனவே இது வரை மரபு இராணுவமாக போரிட்டுக் கொண்டிருந்த இலங்கை இராணுவத்தை கெரில்லாக்களாக மாற்ற வேண்டிய தேவை அவசியமாவிருந்தது.உடனடியாகவே இரண்டு பட்டாலியன் ( சுமார் ஐந்தாயிரம் )இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப் பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப் பட்டதோடு புலிகளை சுற்றி இது புலிகளுக்கான சவப்பெட்டி என்கிற குறியீட்டோடு "ப " வடிவில் பெட்டியடிக்கப் பட்டார்கள்.இப்போ இலங்கை இராணுவம் கெரில்லாக்களாகவும் புலிகள் மரபு இராணுவமாகவும் போரிட்டுக்கொண்டிருந்தார்கள்.எல்லாப் பக்கமும் ஊடறுத்து நடத்தப் பட்ட கெரில்லா தாக்குதல்களை புலிகள் தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டாடினார்கள்.3திகதி தை மாதம் 2009 ஆண்டு அதிகாலை புலிகளின் பாரிய மண் அணையை உடைத்துக்கொண்டு இராணுவம் உள் நுழைந்த போது அவர்களுக்கு ஆச்சரியம்.. எந்த எதிர்ப்பும் இல்லாமல் புலிகள் முழுவதுமாக நகரை விட்டு வெளியேறியிருந்தார்கள்.
அங்கிருந்த பெருமளவான பொது மக்கள் இராணுவத்திடம் சரணடையத் தொடங்குகிறார்கள்.
கிளி நொச்சி நகர் வீழ்ந்த பின்னர் புலிகள் மீது இருந்த நம்பிக்கை உள்ளூர் மக்களிடம் பெருமளவு தகர்ந்து போனது.இதற்கு மேலும் புலிகளை நம்பி பின்னல் செல்ல முடியாது என முடிவெடுத்தவர்கள் கூட்டம் கூட்டமாக சரணடையத் தொடங்குகிறார்கள்.புலிகளும் தாங்கள் காடுகளுக்குள் இறங்க முடியாது பெட்டியடிக்கப் பட்டுள்ளது தெரியவந்தது .அவர்கள் பலஇடங்களில் உடைப்புகளை ஏற்படுத்தி காடுகளுக்குள் நுழையும் போதெல்லாம் காடுகள் முழுதும் இராணுவத்தினர் பரவலாக கெரில்லாக்களாக மறைந்திருந்து தாக்குதல்களை தொடுத்தார்கள்.அதனாலும் பெரும் இழப்புக்களை புலிகள் சந்தித்தது மட்டுமல்லாமல் இராணுவத்தினர் எங்கெங்கு மறைந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கவே முடியாமல் திண்டாடினார்கள் .எனவே அவர்கள் கட்டுப் பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளால் தொடர்ந்தும் முல்லைத்தீவு நகரை நோக்கி தலைமையையும் நகர்த்திக்கொண்டு பின்வன்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை.அதே நேரம் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி நகரமும் அதுவாகத்தான் இருந்தது .அதட்குப்பின்னல் வெள்ளை முள்ளிவாய்க்கால்,வட்டுவாகல் என்கிற கடற்கரை பிரதேசமே இருந்தது.அதட்குமப்பால் கடல் முழுதும் இலங்கைக் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் ரோந்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கிளிநொச்சி நகரை புலிகள் கைவிட்டு விட்டது மட்ட்டுமல்ல அதோடு அவர்களது கட்டமைப்புகளும் ஆட்டம் காணத் தொடங்கியிருந்தது.அவர்களது சிவில் நிருவாகத் துறைகளான காவல்த்துறை ,நீதி,நிதித்துறை ,வெளியீட்டுப்பிரிவுப் மட்டுமல்லாது அரசியல்துறையும் கலைக்கப்பட்டு அனைவரையும் ஆயுதம் தூக்கி போராட கட்டளையிட்டார்கள் .இராணுவம் மக்களையும் புலிகளையும் சரணடையுமாறு ஒலிபெருக்கியில் தொடர்ந்து அறிவித்துக்கொண்டேயிருந்தார்கள்.பொதுமக்கள் சாரை சாரையாக சரணடையத் தொடங்கவே அவர்களுடன் சேர்ந்து புலிகளின் சிவில் நிருவாக கட்டமைப்பினரும் பெருமளவில் சரணடையத் தொடங்கினார்கள்.நிலைமை இப்படியே போனால் புலிகள் தனிமைப் படுத்தப் பட்டு விரைவில் அழித்து முடிக்கப் படுவார்கள் என நினைத்து எவரையும் சரணடைய விடக்கூடாது என்கிற முடிவை புலிகள் அமைப்பில் ஒரு சாரார் எடுக்கின்றார்கள் அவர்களில் முக்கியமானவர் பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் அன்டனியே தான் அந்த முடிவை கடுமையக்கினார்.
அதற்கு சில தளபதிகள் எதிப்பும் தெரிவித்தார்கள்.இதனால் புலிகளின் இராணுவக் கட்டமைப்புக்குள்ளும் குழப்பங்கள் தொடங்கியதோடு அவர்களுக்குள் பிரச்சனைகளும் தொடங்கியது.உலகிலேயே மிகவும் கட்டுப்பாடான அமைப்பு எனப் பெயரெடுத்த புலிகள் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதன் கட்டுப்பாடுகளை இழந்து ஆட்டம் காணத் தொங்குகிறது.சரணடையும் மக்கள் மீது அவர்கள் தாக்குதல்களும் நடத்தத் தொடங்குகிறார்கள்.
தொடர்ச்சியாக புலிகள் ஏதாவதொரு தாக்குதல் முயற்சியை தொடங்கும் போதெல்லாம் எப்படியோ படையினருக்கு செய்திசென்று விடுகிறது.அந்த இடத்தை குறிவைத்து அவர்கள் தாக்குதலை நடத்தி புலிகளின் தாக்குதலை முறியடித்து விடுகிறார்கள்.மிக இரகசியமான தாக்குதல் செய்திகள் எப்படி எதிரிக்கு உடனுக்குடன் கசிகிறது எப்படி அதை தடுப்பது என்பதும் புலிகளுக்கு இப்போ பெரும் பிரச்சனை. நிச்சயமாக அவை புலனாய்வுப்பிரிவை சேர்ந்தவர்களால்தான் கசிகிறது என்பது தெரிந்திருந்தது .இந்த விடயத்தில் பொட்டம்மானை பிரபாகரன் குற்றம் சுமத்த ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாய் தர்க்கம் நடடக்கும் அளவுக்கு விவகாரம் சென்றிருந்தது.புலிகளின் புலனாய்வுப் பிரிவில் கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்ட படி கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களே அதிகமாக இருந்தார்கள்.கருணா பிரிவின் பின்னர் பலர் இரட்டை உளவாளிகளாக மாறிவிட்டிருந்தனர்.புலிகளின் மற்றைய பிரிவுகளுக்குள் ஊடுருவியிருந்த எதிரிகளின் உளவாளிகளை புலனாய்வு பிரிவினர் கண்டு பிடித்து களையெடுத்த காலம் போய் இப்போ புலனாய்வுப் பிரிவுக்குள் எதிரிக்கு தகவல் கொடுப்பவனை கண்டுபிடிக்க வேண்டிய நிலைமை.அது முடியாத காரியம் என்பதால் புலனாய்வுப்பிரிவும் கலைக்கப் பட்டு அவர்களும் களமுனைக்கு அனுப்பப் பட்டார்கள்.அதன் பின்னர் புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள்.அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு செய்துகொள்ள சிலநாட்கலாவது யுத்தத்தை நிறுத்தவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுவார்கள் அந்த அவகாசத்தை பயன்படுத்தி ஒரு ஊடறுப்பினை செய்து காடுகளுக்குள் சென்று விடலாம் என்பது புலிகளின் திட்டமாக இருந்தது.
ஜனவரி 25, 2009 அன்று சுமார் 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட நிரம்பி வழிந்த கல்மடுக் குளத்தின் அணைகளை இராணுவம் முன்னேறி வரும் விசுவமடுப்பக்கமாக புலிகள் தகர்க்கிறார்கள்.
ஒரு மினி சுனாமியைப்போல பாய்ந்த சென்ற வெள்ளத்தில் ஏற்கனவே தயார் நிலையிலிருந்த சிறியகடற்புலிப் படகுகளின் புலிகளும் தாக்குதலை நடத்த சுமார் இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் .இது போன்றதொரு விபரீதத்தை இலங்கை இராணுவம் எதிர்பார்காததால் புலிகள் எதிர்பார்த்தது போலவே நிலை குலைந்து போனார்கள் என்பது உண்மை.பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய கைகளை பிசைந்தபடி கருணாவைப் பார்த்தார்.எதிர்பார்க்காத தாக்குதல்தான் ஆனாலும் புலிகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிடக்கூடாது அப்படி நிறுத்தினால் அவர்கள் நோக்கம் நிறைவேறி விடும் வேறு படை வளங்களை பாவித்து தாக்குதல் தொடர்ந்தும் நடக்கட்டும் என்றன்.இறந்த பெருமளவான படையினரை தாண்டிய படியே வான்படையின் உதவியோடு புதுக்குடியிருப்பை நோக்கி இராணுவத்தினர் தாக்குதலை தொடர்ந்தார்கள்.இதனை புலிகள் எதிர்பார்க்கவில்லை.
களநிலைமைகள் இப்படிப் போய்க்கொண்டிருக்கும்போது யுத்தத்தை நிறுத்துமாறு வெளிநாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கத் தொடங்கியிருந்தது.ஆரம்பத்தில் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் ஏற்பாட்டில் ஐய்ரோப்பவில் இயங்கும் அவர்களது கோவில்களில் சிலர் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்கள்.நாங்களும் போராட்டம் நடத்துகிறோம் என்று அவற்றை படம் பிடித்து வன்னிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.ஆனால் வன்னியில் மக்களின் இழப்பு அதிகரிக்க அதிகரிக்க மக்கள் தாங்களாகவே வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள்.மக்களின் உணர்வுகளை தூண்டி அவர்களை போராட வைப்பதற்காக கொல்லப்படும் மக்களின் வீடியோக்களும் படங்களும் பல கோணங்களில் எடுத்து வன்னியிலிருந்து அனுபிக்கொண்டிருந்தர்கள்.அதே நேரம் இதுதான் இறுதி யுத்தம் அனைவரும் உதவுங்கள் என்று பெருமளவான நிதி சேகரிப்பையும் அனைத்துலகச் செயலகத்தினர் செய்துகொண்டிருந்தனர்.புலிகளைப் பலப்படுத்தி எப்படியாவது எம் மக்களை அழிவிலிருந்து காப்பாற்றி விடலாமென அங்கலாய்ப்போடு இலட்சக் கணக்கில் வங்கிகளில் கடன் எடுத்துக் கொடுத்தவர்களும் உண்டு .இறுதி யுத்தத்துக்கு என சேகரித்த பல மில்லியன் யுரோக்களில் ஒரு சதம் கூட வன்னிக்கு அனுப்பப் படாமல் வெளிநாடுகளில் நிதி சேகரித்தவர்கலாலேயே அனைத்தும் அமுக்கப்பட்டது என்பது வேறு கதை.அதே நேரம் வெளி நாடுகளில் நடந்த போராட்டங்களில் கூட பல சிறுபிள்ளைத்தனமான மக்களை முட்டாள்களாக்கும் வேலைகளும் நடக்கத்தான் செய்தது.
சுவிஸ் நாட்டில் புலிகளின் பரப்புரைப் பொறுப்பாளரான அம்பலவாணர் என்பவர் வன்னியில் உடனடியாக யுத்த நிறுத்தம் கொண்டுவர வேண்டும் எனவே சாகும்வரை உண்ணாவிரதம் என அறிவித்து போராட்டத்தில் குதித்தார் .தமிழ் ஊடகங்களில் எல்லாம் செய்திகள் வெளியானது இரண்டு நாளுக்கு மேல் அவரால் தாக்குப்பிடிக்க முடியாமல் போகவே அவரது மனைவியே காவல்துறைக்கு போனடித்து கணவன் சாப்பிடாமல் தற்கொலை முயற்சியில் இறங்கியிருக்கிறார் அவரை காப்பாற்றுங்கள் என்று சொல்லவும் அங்கு விரைந்த பொலிசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டுபோய் வைத்தியசாலையில் போட்டுவிட்டு போய் விட்டார்கள்.அதேபோல லண்டனில் பரமேஸ்வரன் என்பவரும் சாகும்வரை உண்ணாவிரதம் என்று தொடங்கினார் இவர் கொஞ்சம் அதிகநாட்கள் உண்ணாவிரதம் இருந்தாலும் யுத்தத்தை நிறுத்த பிரித்தானிய அரசு சார்பில் வழங்கப்பட்ட சில உறுதி மொழிகளையடுத்து உண்ணாவிரதம் கை விடப்படுகிறது என அறிவித்தார் .ஆனால் யுத்தமும் நிறுத்தப்படவில்லை புலிகள் அழிக்கப்பட்டு இத்தனை வருடங்கள் கழிந்தும் பிரித்தானிய அரசு சார்பில் வழங்கப்பட்ட உறுதிமொழி என்ன என்றும் அவர் வாய் திறந்து சொல்லவும் இல்லை சொல்லப் போவதுமில்லை .பிரான்ஸ் ஜேர்மனி கனடா என சாகும்வரை எல்லா நாடுகளிலும் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தவர்களின் நிலைமைகளும் இதே நிலைமைதான் அரசு தந்த உறுதிமொழிகளை அடுத்து தங்கள் உண்ணாவிதங்களை முடிதுக்கொண்டார்கள்.
ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை உண்ணாவிரதம் என்பது சிலநாட்களாக இருந்தால் அது உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சி அதுவே தொடர்ந்தால் தற்கொலைக்கான முயற்சி.உண்ணாவிரதத்தை ஒரு போராட்ட வடிவமாக அவர்கள் பார்த்ததில்லை.அதனால்தான் மேற்குல நாடுகளில் போராட்டங்களை நடத்துபவர்கள் யாரும் உண்ணாவிரதம் இருப்பதில்லை.எனக்குத் தெரிந்து உலகத்திலேயே ஒரு பொது இலட்சியத்துக்காக அதன் இலக்கை குறிவைத்து ஒரு சாகும்வரை உண்ணா விரதமிருந்து இலட்சியதுக்ககவே உயிரை விட்டவர்கள் இரண்டு பேர்தான் .அந்த இருவருமே ஈழத்தில் இந்தியப்படை காலத்தில் தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உண்ணா விரதமிருந்து உயிரை விட்டவர்கள் அதில் ஒருவன் திலீபன் .அடுத்தது அன்னை பூபதி .இதில் அன்னை பூபதி கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்பதாலேயோ என்னமோ கொஞ்சம் கொஞ்சமாக அவரது பெயர் மறக்கடிக்கப்பட்டு தீலீபன் மடுமே நினைவுகளில் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறான் என்பதையும் குறிப்பிட்டேயாகவேண்டும் .
வெளிநாடுகளில் இப்படியான போராட்டங்கள் தொடங்கும்போதே தமிழகத்திலும் போராட்டங்கள் தொடங்கியிருந்தது முத்துக்குமாரின் மரணமும் அவன் எழுதிவைத்துவிட்டுப் போன கடிதமும் தமிழ்நாட்டு மக்களிடம் குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் பெரியதொரு எழுச்சியை உண்டுபண்ணியிருந்தது.இந்த மக்கள் எழுச்சியை தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே தாங்கள் அறுவடை செய்துவிடவேண்டும் என்கிற நோக்கில் போட்டி போட்டுக்கொண்டு அதனை சிதைத்து அழிதுவிட்டிருந்தனர்.
அதில் எந்த கட்சிகளுமே சளைத்தவர்கள் அல்ல என்று நிருபித்திருந்தார்கள்.முத்துக்குமார் மட்டுமல்லாது ஈழத்தமிழருக்காக யுத்தத்தை நிறுத்தச்சொல்லி தமிழ்நாட்டில் சுமார் பதின்முன்று பேர் தீக்குளித்து இறந்து போனார்கள்.அவர்களது விலைமதிப்பற்ற உயிர்கள் உணர்வுகள் அனைத்துமே ஒரு காசுக்கு பிரயோசனமில்லாத தியாகங்களாகி விட்டது என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது .ஈழத் தமிழர்களுக்காக இத்தனை தமிழகத் தமிழர்கள் உணர்ச்சி வசப்பட்டு தீக்குளித்துள்ளர்களே ஒரு ஈழத் தமிழனுக்கும் சொந்த இனத்துக்காக உணர்வே வரவில்லையா என்கிற கேள்வி பலருக்கும் எழுந்தபோது 2009 ம் ஆண்டு மாசி மாதம் 12 ம் திகதி வியாழக் கிழைமை இரவு சுவிஸ் நாட்டில் ஜெனீவா ஜ.நா சபைக்கு முன்பாக இலண்டனில் இருந்து வந்து முருகதாசன் என்கிறவர் தீக்குளித்து இறந்து போகிறார் . முருகதாசனின் மரணமும் புலம்பெயர் தமிழர்களிடம் ஒரு உணர்வு ரீதியான எழுச்சியை கொடுத்திருந்தது என்பது உண்மை.அதே நேரம் முருகதாசனின் மரணத்தின் பின்னால் பல சந்தேகங்களும் இருக்கவே செய்கின்றது .அவை என்வெனில்,முருகதாசன் இலண்டனில் இருந்து ஜெனிவா நோக்கி ஒரு பச்சைக் நிற காரில் நண்பர்களோடு புறப்பட்ட வீடியோ ஒளிப்பதிவென்றை பிரித்தானிய காவல்த்துறையினர் கைப்பற்றி விசாரணைகளும் நடாத்தியிருந்தார்கள்.அடுத்ததாக ஈழத் தமிழர்களின் படுகொலைகளையும் அவர்களது நிலைமையையும் சர்வதேசத்திற்கும் ஜ.நா சபைக்கும் எடுத்துச் சொல்லி அதனை தடுத்து நிறுத்தக்கோரி தீக்குளித்தவன் எதற்காக ஜ.நா சபை சுற்றாடலில் யாருமேயற்ற இரவு நேரம் தீக் குளித்தான்?.முருகதாசன் தீக்குளித்து இறந்து போய் நீண்ட நேரத்தின் பின்னராகவே தீயணைக்கும்படையினர் அந்த இடத்திற்கு வந்துள்ளனர் .எனவே முருகதாசனுடன் சென்றவர்கள் அதுவரை என்ன செய்தார்கள்? அவர்கள் யார்??. ஈழத்தமிழர் விடயத்தில் சர்வதேசம் தலையிட வேண்டும் என முருகதாசனால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் ஏழுபக்க அறிக்கை என்று இணையத் தளங்களில் மட்டுமே செய்தியாக வெளியாகியிருந்தது. அதன் மூலம் எங்கும் இல்லை.குடும்பத்தின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த முருகதாசன் தனது இறுதிக் கணம் வரை தனது பெற்றோருடன் தொடர்பு கொள்வேயில்லை. அவன் இறந்துபோன செய்தியை மறுநாள் மாலையளவில் செய்திகளை பார்த்தே அவர்கள் அறிந்து கொண்டிருந்தார்கள்.
அதுவரை அவர்களிற்கு தங்கள் பிள்ளை எங்கே இருக்கிறான் என்றே தெரிந்திருக்கவில்லை இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் சந்தேககங்களும் முருகதாசனின் மரணத்திற்கு பின்னால் இருந்தாலும்.அதனை ஆராய்வது இந்தக்கட்டுரை யின் நோக்கமல்ல என்பதால் கடந்து செல்கிறேன் .
உலகமெங்கும் நடக்கும் ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் அனைத்தையும் அந்தந்த அரசுகளும் ஐ.நா சபையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அதே நேரம் கிளிநொச்சியை புலிகள் கைவிட்ட பின்னர் ஆயுதங்களை கைவிடத் தயார் என அறிவித்தால் மீண்டும் பேச்சுவார்தைகள் தொடங்குவதைப் பற்றி பரிசீலிக்கிறோம் என ஒரு செய்தியையும் ஐ.நா சபை நோர்வே ஊடாக புலிகளுக்கு அனுப்பியிருந்தார்கள்.அதனையும் நிராகரித்த புலிகள் யுத்தத்தை நிறுத்துங்கள் ஆயுதங்களை கடைசிவரை கைவிட முடியாது என அறிவித்து விட்டிருந்தார்கள்.சரி இனி உங்கள் விருப்பம் இனி ஆயுதங்களை கைவிட சொல்லி உங்களுக்கு தொந்தரவு கொடுக்கமாட்டோம் நீங்கள் விரும்பினால் எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லியதோடு ஐ.நா சபையும் புலிகளுடனான தொடர்புகளை நிறுத்தி விட்டது .
புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று கவனித்தவர்கள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சேவிடம் உங்களுக்கு இராணுவ ஆலோசனைகள் தேவைப்பட்டால் தாராளமா கேளுங்கள் வழங்க தயாராக இருக்கிறோம் என்றவர்களிடம் "புலிகளின் இதயம்தான் வன்னியில் இருக்கிறது புலிகளின் மூளை இங்கே எங்களிடம் உள்ளது " என்று கருணாவைக் காட்டி சிரித்தவர். எனவே உங்கள் ஆலோசனைகள் தேவையில்லை ஆயுதங்களை மட்டும் கொடுத்தால் போதும் என்றார் .ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் இராணுவம் புலிகளின் கட்டுப் பாட்டு பகுதியை நோக்கி தாக்குதல்களை கடுமைப் படுத்துவார்கள் காரணம் இலங்கையில் நடக்கும் யுத்தத்தை மட்டும் கண்காணிப்பதற்காக மேற்குலகமோ ஐ.நா சபையோ சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் தங்கள் அலுவலகங்களை திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்க மாட்டார்கள் இழுத்துப் பூட்டிவிட்டு போய் விடுவார்கள் .திங்கட்கிழமை காலை அவர்கள் தங்கள் அலுவலகங்களை திறந்து கணணியை இயக்கியதுமே இலங்கை இராணுவத்தின் தாக்குதலை நிறுத்துமாறு இலட்சக்கணக்காண மின்னஞ்சல்கள் கொல்லப்பட்டவர்களின் படங்களோடு குவிந்துபோய் கிடக்கும்.அதே நேரம் இலங்கை இராணுவமும் தாக்குதலை தணித்து தங்களிடம் சரணடைந்த பொதுமக்களின் படங்களோடு புலிகளிடமிருந்து மக்களை காப்பாற்றி வருகிறோம் என செய்திவெளியிட்டிருக்கும் .ஐ.நா சபையும் உடனே "இலங்கைத்தீவில் நடக்கும் யுத்தத்தை நாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம் பொது மக்களின் இழப்பு எமக்கு கவலையளிக்கிறது. இலங்கையரசு பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் " என்று ஒரு அறிக்கையை விடுவார்கள்.பின்னர் மீண்டும் அடுத்த வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல்கள் அகோரமாக இருக்கும் .மீண்டும் அதே மின்னஞ்சல்கள்.. திங்கள் காலை மீண்டும் ஐ.நா சபையின் நாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம் பொது மக்களின் இழப்பு எமக்கு கவலையளிக்கிறது அறிக்கை வழமையான ஒன்றாகிப் போனது.
இராணுவம் முல்லைத்தீவு நகரை நெருங்கிக்கொண்டிருந்தது அப்போது புலிகள் முதன் முதலாக ஆனந்தபுரம் பகுதியில் ஒரு ஊடறுப்பு தாக்குதல் ஒன்றுக்கு தயாரானார்கள்.அதுவும் பிரபாகரனே களத்தில் நின்று வழிநடத்தப் போகும் தாக்குதல் அனைத்து தளபதிகளும் தங்கள் படைகளை தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.புலிகள் ,மணலாறு காடுகளுக்குள் இறங்கி விடுவார்கள் என்பதால் காட்டுப் பகுதிகள் முழுதும் பலமான இராணுவத்தின் பாதுகாப்பு இருந்ததால் வடக்கு நோக்கிய ஒரு ஊடறுப்பை செய்தபடி ஒரு அணி போக்கு கட்டியபடி இருக்கும்போது இன்னொரு அணி யாழ் குடாநாட்டை நோக்கி நகர்வதே புலிகளின் திட்டமாக இருந்தது.அனைத்து இராணுவமும் வன்னிக்குள் குவிக்கப் பட்டிருந்ததால் யாழ் குடா பலவீனமாக இருக்கும் இலகுவாக முன்னேறலாம் என்பது அவர்களது கணிப்பு அதுமட்டுமல்ல புலிகள் அமைப்புக்கான வாழ்வா சாவா என்கிறதை தீர்மானிக்கப் போகும் தாக்குதலும் இதுதான் ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகளும் தளபதிகளும் தலைவரின் உத்தரவுக்காக காத்திருக்கும்போது இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்து விட்டிருந்தது மாத்திரமல்லாது புலிகள் கனரக ஆயுதங்களை நகர்த்துவதை ராடர்கள் மூலம் கண்காணித்துக்கொண்டேயிருந்தது மட்டுமல்லாமல் அவர்களது வாக்கி டாக்கி யிலான பேச்சுக்களையும் இடைமறித்து கேட்டுக்கொண்டிருந்தவர்கள் புலிகள் தாக்குததலை தொடங்க ஒரு மணி நேரத்துக்கு முன்னராகவே இராணுவம் புலிகள் அணி மீது தாக்குதலை தொடங்கியது .மூன்று பக்கத்திலும் இருந்து மழை போல வந்து வீழ்ந்து வெடிக்கத் தொடங்கிய எறிகணை குண்டுகளால் திணறிப்போன புலிகள் சுதாகரிக்கு முன்னரே குண்டு மழையில் புலிகளின் முன்னணி தளபதிகளான கேணல் பானு, கேணல் விதுஷா, கேணல் தீபன், கேணல் கடாபி, கேணல் மணிவண்ணன், கேணல் நாகேஸ், கேணல் சேரலாதன் ஆகியோருடன் நூற்றுக் கணக்கான போராளிகளும் கொல்லப் பட்டனர் .இந்த தாக்குதலில் இலங்கை இராணுவம் சுமார் 100,000 எறிகணைகளையும் , 15 நிமிடங்களுக்கு ஒரு வான் தாக்குதலையும் நிகழ்த்தியிருந்தது.என்பது பின்னர் செய்திகளில் வெளியானது உலகப் போர் வரலாற்றிலேயே ஒரு நாட்டு இராணுவம் குறுகிய ஒரு பிரதேசத்தில் ஒரு விடுதலைப்போரட்ட இயக்கத்தின் மீது நடத்திய தாக்குதலும் இதுதான் .இந்த தாக்குதலில் பிரபாகரனோடு பொட்டம்மான் ஆகியோரோடு கடற்புலி தளபதி சூசையும் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தர்கள் .அந்த சண்டையில் கொல்லப்பட்ட அனைவரையும்இராணுவம் புலிகள் என்கிற வித்தியாசமின்றி புல்டோசர்கள் மூலம் குழி தோண்டி புதைத்தபடி இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தது.புலிகளின் இறுதி முயற்சியும் தோற்றுப் போயிருந்தது.அதே நேரம் அமெரிக்க கப்பல் ஒன்று முல்லைத்தீவு வருகிறது. அது புலிகளின் தலைமையை காப்பாற்றும் என்றொரு கதையும் பரவலாக அடிபட்டது மட்டுமல்லாது செய்திகளாகவும் வெளியாகியிருந்தது.அதேபோல அமெரிக்காவும் பாரசீக வளைகுடாவில் நிறுத்தி வைத்திருந்த தனது ஒரு யுத்தக்கப்பலை இந்துசமுத்திர பிராந்தியத்துக்கு முல்லைத்தீவுக்கு மிக அண்மையாக நகர்த்தியிருந்தது அந்தக்கப்பல் எப்படியும் பிரபாகரனைக் காப்பாற்றி விடுமென புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்பியிருந்தார்கள்.ஆனால் அந்தக் யுத்தக்கப்பலானது புலிகளை காப்பாற்ற அங்கு நகர்த்தப் பட்டிருக்கவில்லை. மாறாக முல்லைத்தீவு கடல்வழியாக புலிகளின் முக்கியஸ்தர்கள் தப்பிச் செல்கிறார்களா என கப்பலில் இருக்கும் சக்திவாய்ந்த ராடார்கள் மூலம் கண்காணித்து இலங்கை இராணுவத்துக்கு தகவல் சொல்வதுதான் அவர்களது நோக்கம்.அப்படித் தப்பிச் சென்ற புலகளின் பல படகுகளை இலங்கை கடற்படையினர் தாக்கியது மட்டுமல்லாமல் பலரை கைது செய்துமிருந்தனர்.அப்படி தப்பிச் செல்லும்போது கடற்புலி தளபதி சூசையின் மனைவியும் மகளும் கைதானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இனியும் தங்கள் வெளிநாட்டு பணியகமான அனைத்துலகச் செயலகத்தின் முயற்சிகளால் அங்கு நடக்கும் மக்கள் போராட்டங்கலாலோ இனி எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை என புலிகளின் தலைமை உணரத் தொடங்கியிருந்தது எனவே உடனடியாக சர்வதேச தொடர்பாளராக மீண்டும் கே .பி யை நியமித்த பிரபாகரன் .உலக நாடுகளோடு தொடர்புகளை ஏற்படுத்தியோ அல்லது அதிரடியாக எதாவது திட்டத்தை நிறைவேற்றி தங்களை எப்படியாவது காப்பாற்றி விடுமாறு கோரிக்கை வைத்திருந்தார்.இப்போ புலிகளின் தலைமைக்கு கே .பியை நம்புவதைத் தவிர வேறு தெரிவு இருந்திருக்கவில்லை.அனால் கே.பியின் நிலைமையோ வேறு விதமாக இருந்தது.அவர் ஏற்கனவே சர்வதேச புலனாய்வுத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தார்.அவரது ஒவ்வொரு அசைவும் புலிகளின் தலைமையுடனான உரையாடல்களும் கண்காணிக்கப் பட்டுக்கொண்டிருந்தது.தான் கண்காணிக்கப் படுகிறேன் என்பதை அறிந்திருந்தும் அதனையும் மீறி புலிகளின் தலைமையை காப்பாற்ற கே. பி சில முயற்சிகளை எடுத்தார் ஆனால் அவைகள் சர்வதேச புலனாய்வுத்துறையினரால் முறியடிக்கப்பட்டது.அதன் பின்னர் ஆயுதங்களை கைவிட்டு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை ஆனால் சரணடைபவர்களின் உயிருக்கு உத்தரவாதமளிக்க தொடர்ந்தும் இந்தியா மற்றும் வெளி நாடுகளோடும் ஐ.நா சபை அதிகாரிகளோடும் பேசிக்கொண்டு இருப்பதாகவும் கட்டம் கட்டமாக சரணடைய புலிகள் அணியை தயார் படுத்துமாறு புலிகளின் தலைமைக்கு அவரால் ஆலோசனை வழங்கப்பட்டது .இந்தப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் தரப்பில் கலந்துகொண்ட கே.பி. மற்றும் உருத்திரகுமாரன் (இன்றைய நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர்) தரப்பினர் ஆமோதிப்புடன், உலக நாடுகளால் முன்மொழியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு - சரணாகதி திட்டத்தை அதிகாரபூர்வமயப்படுத்தும் அறிக்கை ஒன்று, 03.02.2009 அன்று இணைத்தலைமை நாடுகளால் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதே நிலைப்பாட்டுடன் 05.02.2009 அன்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரால் ஊடக அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து புலிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் நடந்தது. எம்மால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், அண்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்தது, ஒரு தளபதியால் குறிப்பிடப்பட்டது. ‘இப்போதும் அப்படியொரு நிலைப்பாட்டை எடுக்கலாம். ஈழம் கொள்கையைக் கைவிட்டால் இந்தியாவால் எந்தவிதத்தில் உதவ முடிகிறது என்று பார்க்கலாம்’ என்பது சில தளபதிகளின் கருத்து. இந்நிலையில், ‘ஈழம் கொள்கையைக் கைவிடுவது தொடர்பான எமது அறிவிப்பை (அல்லது ப்ரபோசலை) புதுடில்லியே தயாரிக்கட்டும். அதை அவர்கள் எமக்கு அனுப்பி வைத்தால், நாம் படித்துப் பார்த்துவிட்டு, ஏற்றுக்கொள்ளும் வகையில் அது இருந்தால் வெளியிடலாம்’ என்று பிரபாகரன் தன் முடிவை அறிவித்தார்.
இதையடுத்து, புலிகள் வெளியிடுவதற்கான ப்ரபோசலை டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாமே தம் கைப்படத் தயாரித்தார். மிக ரகசியமாகத் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணத்தைக் கொடுப்பதற்கு முன், சிதம்பரம் விதித்த நிபந்தனை, ‘இந்த ப்ரபோசலை புலிகள் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, இந்த ஆவணத்தில் உள்ள விபரம் குறித்து எக்காரணம் கொண்டும் இந்தியாவில் உள்ள யாருக்கும் தெரிவிக்கக்கூடாது’ என்பதுதான். சிதம்பரம் நிபந்தனையைப் பா.நடேசன் சீரியசாக எடுக்கவில்லையா அல்லது தமிழகத்தில் உள்ள தமக்குத் தெரிந்தவர்களுக்குக் கூறினால் தப்பில்லை என்று நினைத்தாரா தெரியவில்லை… விஷயத்தை வைகோவிடம் கூறிவிட்டார் .அதே ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நடக்கவிருந்தன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியும், மத்தியில் பா.ஜ.க. கூட்டணியும் அமோக வெற்றிபெறும் என்ற விதத்தில் இருந்தன. இந்நிலையில் , ‘நீங்கள் எக்காரணம் கொண்டும் காங்கிரஸ்காரர்களை நம்ப வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருக்கப் போவதே இன்னமும் சில மாதங்கள்தான். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வரப்போகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிப் பெறப்போகிறது. ஜெயலலிதா, ஈழத்துக்கு ஆதரவாக உள்ளார். இந்த நேரத்தில் ‘ஈழம் கொள்கையைக் கைவிடுகிறோம்’ என்று கூறி எல்லாவற்றையும் கெடுத்து விடாதீர்கள். மத்தியில் ஆட்சி மாறட்டும். மறுநாளே யுத்தத்தை நிறுத்திவிடலாம்’ என்றார் வைகோ .. குழம்பிப் போனார் நடேசன். செய்தி பிரபாகரனுக்கு தெரிவிக்கப் பட்டது. சில நிமிடங்கள் யோசித்த பிரபாகரன், தனது உதவியாளர் ஒருவரை அழைத்து, சிதம்பரம் தயாரித்துக் கொடுத்த ஆவணத்தில், ‘நிராகரிக்கப்பட்டது’ என எழுதி, கையெழுத்திட்டு, நடேசனிடம் கொடுத்தார்.அதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நகரங்கள் ஒவ்வொன்றாக ராணுவத்திடம் வீழ்ந்தன. புலிகள், சிறிய பகுதி ஒன்றுக்குள் முடக்கப்பட்டார்கள். அந்தப் பகுதியையும் ராணுவம் நெருங்கி வரத்தொடங்கியது. இந்த நிலையில், புலிகள் மீண்டும் இந்தியாவைத் தொடர்புகொள்ள முயன்றார்கள். இந்தியாவுடன் மீண்டும் பேசிப் பார்க்கும்படி கேபியிடம் பிரபாகரன் சொன்னார். ஆனால் தேர்தலுக்காக இந்தியா நாடாளுமன்றம் கலைக்கப் பட்டிருந்தது அங்கு யாருடனும் காத்திரமாக பேசமுடியாத நிலை .
மே மாதம் எட்டாம் ஒன்பதாம் திகதிகளில் புலிகள் அமைப்பு தங்களின் இறுதி முடிவுநெருங்கி விட்டது சரணடைபவர்கள் சரணடையலாம் மற்றையவர்கள் இறுதி வரை போராடுவது என்கிற முடிவை பலர் எடுத்த பின்னர் முக்கிய தளபதிகளின் மனைவிகள் மற்றும் அவர்களது பிள்ளைகளைகள் என சுமார் 56 பேர்வரையில் எப்படியாவது பத்திரமாக நாட்டை விட்டு வெளியேற்றிவிட முடிவுசெய்துகடற்புலிகளின் ஒரு பிரிவினர் அதற்கான வேலைகளில் இறங்கியிருந்தார்கள். அவர்களது முதலாவது தெரிவாக தமிழ்நாடு இருந்தது அங்கு கொண்டுபோய் சேர்த்து விட்டால் அவர்கள் சாதாரண அகதிகளைப் போல உயிர் பிழைத்து வாழ்ந்து விடுவார்கள் என்று நம்பினார்கள்.அது மட்டுமல்லாமல் அந்த இறுதிக கணங்களிலும் தங்களிற்கு ஆதரவான தமிழ்நாட்டுத் தலைவர்களிடம் அவர்களிற்கு நம்பிக்கையிருந்து கொண்டேதான் இருந்தது.அதே நேரம் தமிழ் நாட்டு தலைவர்களது தொலைபேசிகள் அனைத்தும் ஒட்டுக் கேட்கப் படும் என்பதால் புலிகள் அவர்களோடு நேடியாக தொடர்புகளை ஏற்படுத்தாமல் ஜரோப்பிய நாடுகளில் இருந்தவர்கள் மூலமாக தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.
ஜரோப்பாவிலிருந்து வை.கோ வை தொடர்பு கொண்டவர்கள் நிமையை அவரிற்கு சொல்லி கடற்புலிகள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது பெண்களையும் குழந்தைகளையும் தமிழ் நாட்டுகரைகளில் இறக்கி விடுவார்கள் நீங்கள் அதற்கு உதவவேண்டும் என்றதும்.எனக்கு இப்போ தேர்தல் வேலைகள் அதிகம் ஊர் ஊராக பயணம் செய்யவேண்டும் அதெல்லாம் முடியாது என்று தனது தொலைபேசியை நிறுத்தி விட்டிருந்தார்.அதே போல திருமாவளவன்.சு.ப.வீரபாண்டியன் .நெடுமாறன்.என்று தொடர்புகொண்ட ஈழத் தமிழ் ஆதரவுத் தலைவர்கள் பட்டியல் நீளமானது.தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லையென இப்போது அவர்கள் மறுப்பறிக்கை விடலாம் அவர்கள்தான் அறிக்கைகள் விடும் அரசியல் வாதிகளாச்சே.. .தமிழ் நாட்டு தலைவர்களிடம் இருந்து சாதகமான பதில்கள் எதாவது வரும் என காத்திருந்தபோதுதான் மே.11 ந்திகதி இலங்கை இராணுவத்தின் மோசமான செல் தாக்குதலில் பலர் கொல்லப் படவே இனியும் இந்த தமிழ்நாட்டு தலைவர்களை நம்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை என முடிவெடுத்து. பின்னர் தனிப்பட்ட நட்புகள் மூலம் தொர்புகள் ஏற்படுத்தப் பட்டு சிறிய படகுகள் மூலம்பலர் தமிழ் நாட்டிற்கும் பலர் இந்தோனேசியா தீவுகளிற்கும் கொண்டு போய் சேர்க்கப் பட்டனர்.சிலர் கடற்படையினரின் தாக்குதலில் இறந்து போனார்கள்.இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் ஜெயித்தது. அதன்பின்னர் தமிழகத்தோடு மட்டுமல்ல இந்தியாவில் யாரோடும் தொடர்புகொள்வதில் பிரயோசனம் இல்லை என்கிற நிலைமை. புலிகளின் தலைமையும் சுமார் ஒரு லட்சம் மக்களும் சுமார் ஒன்றரை சதுர கிலோமீட்டர் பரப்புக்குள் சுற்றி வளைக்கப் பட்டு பெட்டியடிக்கப் படுகிறார்கள். புலிகளின் தலைமை தங்கள் சுற்றி வளைப்புக்குள் அகப்பட்டு விட்டது என்பதை உறுதி செய்த இராணுவம் அப்போ ஜோர்தான் நாட்டுக்கு சென்றிருந்த மகிந்தா ராஜபக்சேவுக்கு தகவல் அனுப்புகிறார்கள்.அவசரமாக நாடு திரும்பிய மகிந்தா முப்பதாண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பயங்கரவாதத்தை தோற்கடித்து விட்டேன் என்று விமான நிலையத்திலேயே நிலத்தில் விழுந்து மண்ணை முத்தமிடுகிறார்.
அடுத்த நாள் இரவு நான்கு பக்கமும் இராணுவத்தால் சூழப்பட்ட நிலையில் நந்திக்கடல் பகுதியில் சுமார் இருபது படகுகளில் கடற் புலிகள் மற்றும் கரும்புலிகள் பிரபாகரனை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டுமென எந்த இலக்குமற்று ஒரு ஊடறுப்பை நடத்துகிறார்கள் .. அந்தச் சண்டையில் பிரபாகரன் இறந்து போகிறார் .அவர் சண்டையில் இறந்தாரா தற்கொலை செய்தாரா என்பது இன்றுவரை தொடரும் சர்ச்சை .காரணம் அவருடன் இறுதியாக நின்றிருந்த எவரும் உயிரோடு இல்லை ..மே 18ஆம் தேதி காலை இலங்கை ராணுவத்தின் 53ஆம் டிவிஷனின் கீழ் செயல்பட்ட 4ஆம் விஜயபாகு ரெஜிமென்ட் படைப்பிரிவு, லெப்டினென்ட் கர்னல் ரொஹித அலுவிஹர தலைமையில் தேடுதலை மேற்கொண்டபோது, நந்திக்கடல் ஓரம், கோரைப் புற்களில் சிக்கிய நிலையில் பிரபாகரனின் உடல் கிடைத்ததாக இலங்கை ராணுவம் மே 19ஆம் தேதி அறிவித்தது.அத்தோடு விடுதலைப் புலிகளுக்கு எதிரான முப்பதாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்தது.
அன்று தமிழ்நாட்டு தலைவர்கள் உதவ மறுத்து தங்கள் கைத் தொலைபேசிகளையும் நிறுத்தி வைத்தபோது கட்டுக்கடங்காத கோபமே அவர்கள் மீது வந்திருந்தது ஆனால் பின்னர் ஆறுதலாக ஆழமாகச் சிந்தித்து பார்தத்தில் ஒரு உண்மை புரிந்தது அவர்களால் ஈழத் தமிழர்கள் பற்றியும் புலிகள் பற்றியும்.பிரபாகரன் பற்றியும்.மேடைகளில் அடுக்கு வசனங்களில் உணர்ச்சி பொங்க பேசவும் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடவும் மட்டுமே முடியும்.நடைமுறை அல்லது செயல் என்று வரும்போது பாவம் அவர்களால் அங்கு எதுவுமே செய்ய முடியாது.அப்படி ஏதாவது செய்ய நினைத்தால் மத்திய.மானில உளவுப் பிரிவினர் ஏதாவது ஒரு வழக்கில் அவர்களை உள்ளே தள்ளிவிடுவார்கள்.அதே நேரம் அன்று முதலமைச்சராக இருந்த கலைஜர் புலிகளோடு பேச்சுவார்த்தை மேசையில் தீர்வை வைத்து அது சரிவராத பட்சத்தில் அவர்களை முற்றாக அழித்து இலங்கைத் தீவில் ஆயுத மோதலை கொண்டுவருவதற்காக உலக நாடுகள் பெரும்பாலானவை 2001 ம் ஆண்டு மிக நுணுக்கமாக திட்டமிட்டு நகர்த்தத் தொடங்கியிருந்தார்கள்.அதில் பெரும்பங்கு மேற்குலகத்தினுடையது.இங்கு இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலென்ன பி.ஜே .பி இருந்தாலென்ன எல்லாம் ஏற்கனவே திட்டமிட்டபடியே தான் நடந்து முடிந்திருக்கும்.இங்கு . உலகமயமாக்கல்.புதிய பொருளாதாரக்கொள்கை.சர்வதேச அரசியல் என்று அவைகளைப் புரிந்து அதன் நெளிவு சுளிவுகளோடு தம்மை நம்பிய மக்களின் அபிலாசைகளை அரசியல் ரீதியாக வென்றெடுத்து தங்களையும் பாதுகாத்து பயணிக்க பல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தும் அத்தனையையும் தட்டி விட்டு..உலகத்தில் எவரையுமே நம்பாது கொண்ட கொள்கைக்காக இறுதிவரை ஆயுதத்தையே நம்பி தாங்களும் அழிந்ததோடு ஈழத் தமிழர் அரசியல் எதிர்காலத்தையும் சூனியத்தில் தள்ளி விட்டு சென்றது மட்டுமல்லாமல் உலகத்திலேயே விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் தொடங்கிய அனைத்து குழுக்களுக்கு முன்னுதாரணமா இருந்தது மட்டுமல்லாது முப்படைகளையும் கட்டியெழுப்பி ஒரு நிழல் அரசையும் நடத்திக்காட்டியதோடு மட்டுமல்லாமல். தோற்றுப் போய் இப்படியான ஒரு மோசமான அழிவை சந்திக்கக் கூடாது என்பதற்கும் ஒரு முன்னுதாரணமாக புலிகள் அமைப்பு எப்போதும் வரலாற்றில் எழுதி நிக்கும் ..பிரபாகரன் என்கிற பெயர் என்றென்றும் உலகத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு குறியீடு ....
இந்த வாய்ப்பை எனக்களித்த புதிய தலைமுறை ஆசிரியர் குழுமத்துக்கு நன்றிகள் அன்புடன் சாத்திரி ..
Saturday, 25 June 2016
Friday, 24 June 2016
25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்
- ஜ்ஜூலை 13, 1989 அன்றுதான், புகழ்பெற்ற ஸ்ரீலங்கா தமிழ் தலைவர்
அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளினால்(எல்.ரீ.ரீ.ஈ) படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் எதிர்கட்சித் தலைவரான அவர் கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டபோது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் (ரி.யு.எல்.எப்) ஒரு தேசிய பட்டியல் பாரளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
அமிர்தலிங்கம், முன்னாள் ரி.யு.எல்.எப் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிவேலு யோகேஸ்வரனுடன் சேர்த்து 25 வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். புலிகளின் கொலையாளிகள் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரைச் சுட்டுக்கொன்றபோதுகூட, புலிகளின் உத்தியோகபூர்வ தூதுக்குழுவுக்கும் மற்றும்; ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் அரசாங்கத்துக்கும் கொழும்பில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எல்.ரீ.ரீ.ஈயின் சுயரூபம் என்ன என்பதை அமிர்தலிங்கத்தின் படுகொலை உலகத்துக்கு பெருமளவு தெளிவாக எடுத்துக் காட்டியிருந்தது.
கொலை நடைபெற்ற சூழ்நிலையை விளங்கிக் கொள்வதற்கு, அந்த நேரத்தில் நிலவிய அரசியல் பின்னணி பற்றிய சில விபரங்களை அறியவேண்டியது அவசியம். ஜூலை 29,1987ல் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜூனியஸ் ரிச்சட் ஜெயவர்தன ஆகியோரால் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதின் விளைவாக, வடக்கு மற்றும் கிழக்கில் அமைதி காப்பவர்களாக இந்திய இராணுவத்தினர் அறிமுகப் படுத்தப்பட்டார்கள். இந்திய அமைதி காக்கும் படையாக (ஐ.பி.கே.எப்) நியமிக்கப் பட்டவர்களுக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ க்கும் இடையில் போர் மூண்டது.
இராணுவ ஆய்வுகள் தெரிவிப்பதன்படி, அதிக அழுத்தத்துக்கு ஆளான புலிகள் சுவாசிப்பதற்கு பிராணவாயு வேண்டி அந்த சமயத்தில் திணறினார்கள். ஸ்ரீலங்காவில் இந்திய இராணுவத்தின் பிரசன்னம் சிங்கள தேசியவாதிகள் மத்தியில் பெரிய சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது, அது ஒரு இறையாண்மை மீறல் என அவர்கள் கருதினார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரேமதாஸ,மிகக் குறுகிய பெரும்பான்மையுடன் ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தார். தான் தெரிவு செய்யப்பட்டால் இந்திய இராணுவத்தை திருப்பி அனுப்புவதாக அவர் வாக்குறுதி வழங்கியிருந்தார். ஜனதா விமுக்தி பெரமுனவினால் (ஜேவிபி) ஒரு வன்முறைப் பிரச்சாரமும் தலை தூக்கியிருந்தது. இந்தக் கட்டத்தில்தான் மரபு வழிகளை பின்பற்றாதவரான பிரேமதாஸ ஜேவிபி மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆகிய இருபகுதியினரையும் நோக்கி நேசக் கரம் நீட்டினார். அந்த வாய்ப்பினை ஜேவிபி அலட்சியம் செய்த அதேவேளை, திணறிக் கொண்டிருந்த எல்.ரீ.ரீ.ஈ அதை பற்றிக் கொண்டது. வடக்கிலும் மற்றும் கிழக்கிலும், இந்திய இராணுவம் எல்.ரீ.ரீ.ஈயுடன் யுத்தம் செய்து கொண்டிருந்த வேளையில், கொழம்பில் அரசாங்கத்துக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈக்கும் இடையில் பேச்சுக்கள் ஆரம்பமாகின, மற்றும் ஜனாதிபதி பிரேமதாஸ மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆகிய இரு பகுதியினருக்கும் பொதுவான ஒரு நோக்கமே இருந்தது. வித்தியாசமான காரணங்களுக்காக இரு பகுதியினரும் இந்திய இராணுவத்தை வெளியேற்ற விரும்பினார்கள்.
எல்.ரீ.ரீ.ஈ உடன் அரசியல் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமானதை தொடர்ந்து ஜனாதிபதி பிரேமதாஸ, இந்திய இராணுவம் ஸ்ரீலங்காவை விட்டு வெளியேற ஒரு காலக்கெடுவை நியமிக்கும்படி கோரிக்கை விடுக்க ஆரம்பித்தார். இந்த காரியத்தை கெடுக்கக்கூடிய ஒருவராக இரு பகுதியினரும் மனத்தால் உணர்ந்த நபர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் ஆவார். ரி.யு.எல்.எப் இன் செயலாளா நாயகம், இந்தோ - லங்கா ஒப்பந்தத்துக்கும் மற்றும் இந்திய இராணுவம் ஸ்ரீலங்காவில் இருப்பதையும் உறுதியாக ஆதரித்தவராவார். தனது வன்முறை மற்றும் அழிக்கும் திறன் என்பனவற்றால் எல்.ரீ.ரீ.ஈ ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தை பெற்றிருந்தாலும், வன்முறைத் தன்மையற்ற அரசியல் தலைவரான அமிர்தலிங்கம் தனது அரசியல் நல்லெண்ணம் மற்றும் அந்தஸ்து காரணமாக சர்வதேச ரீதியாக நற் சான்றுகளைப் பெற்றுள்ளார் என்கிற கருத்து நிலவி வந்தது. 1989ல், இந்தக் கட்டத்தில் இந்திய இராணுவத்தை ஸ்ரீலங்காவிலிருந்து திருப்பி அனுப்பக்கூடாது என்று அமிர்தலிங்கம் நா வன்மையுடன் வாதிட்டதால், அரசாங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆகியோர் அடைந்துள்ள அச்சத்தின் ஒரு பகுதியை உணரக் கூடியதாக இருந்தது.
யாழ்ப்பாணம் பண்ணாகத்தை சேர்ந்த அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் ஆகஸ்ட் 26,1927ல் பிறந்தார். அவர்வசீகரத் தன்மையும் துடிப்பான இயக்கமும் கொண்ட அரசியல்வாதி, ஈழத்து காந்தி என அழைக்கப்படும் மதிப்புக்குரிய தமிழ் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் தலைமைத் தளபதியாக பல வருடங்கள் பணியாற்றியுள்ளார். தொழிலால் ஒரு வழக்கறிஞரான அமிர்தலிங்கம் 1956 முதல்1970 வரை வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினராகவும் 1977 முதல் 1983 வரை காங்கேசன் துறை பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1989 தேர்தலின் பின்னர் அவர் ரி.யு.எல்.எப் இனது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர்
அமிர்தலிங்கம் ஒரு காலத்தில் தமிழ் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானவராக
இருந்ததுடன், தமிழ் அரசியலில் கடும் போக்காளராகவும் கருதப்பட்டார். அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் முருகேசு சிவசிதம்பரம் ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ் 1977 பாராளுமன்ற தேர்தலில், ரி.யு.எல்.எப் 18 ஆசனங்களை வென்றது, ஐதேக 141 ஆசனத்தை வென்றபோது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்ற ஆசனங்களின் தொகை 8 ஆக குறைவடைந்தது. இதனால் 168 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் ரி.யு.எல்.எப் பிரதான எதிர்கட்சியாக மாறியது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறும் முதலாவது ஸ்ரீலங்கா தமிழர் என்கிற பெருமையை அமிர்தலிங்கம் பெற்றார்.
1983ம் ஆண்டின் தமிழர் விரோத படுகொலைகள் மற்றும் பிரிவினை வாதத்தை அனுமதிக்க மறுக்கும் அரசியலமைப்பின் ஆறாவது சட்டத் திருத்தம் என்பனவற்றின் விளைவாக ரி.யு.எல்.எப் பாராளுமன்றத்தை புறக்கணித்ததால் அவர்களது ஆசனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அமிர்தலிங்கம் மற்றும் சில ரி.யு.எல்.எப் தலைவர்களும் சேர்ந்து சுயமாக நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு சென்றார்கள். பல தமிழ் போராளிக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் உந்துதல் பெற்றது. இந்தோ - லங்கா ஒப்பந்தம் ஏற்பட்டதன் காரணமாக ஒரு யுத்த நிறுத்தம் கொண்டுவரப்பட்டாலும் அது அதிக காலத்துக்கு நீடிக்கவில்லை. அதேவேளை ரி.யு.எல்.எப் மற்றும் ஏனைய போராளிக் குழுக்கள் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதுடன் தமிமீழம் என்கிற இலக்கையும் கைவிட்டன, அனால் எல்.ரீ.ரீ.ஈ மட்டும் தொடர்ந்து போராட்டம் நடத்தியது. இப்போது எல்.ரீ.ரீ.ஈ யின் பிரதான இராணுவ விரோதி இந்திய இராணுவமே தவிர ஸ்ரீலங்கா இராணுவம் அல்ல.
இதேவேளை தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு மற்;றும் கிழக்கு மாகாணசபைக்கு மிகவும் அதிருப்தியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. ரி.யு.எல்.எப் போட்டியிட மறுத்து விட்டதால், இந்தியா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை (ஈபிஆர்எல்எப்) சேர்ந்த, அண்ணாமலை வரதராஜப்பெருமாளை வடக்கு - கிழக்கு மாகாணசபையின் முதலாவது(அது மட்டுமே) முதலமைச்சராக நியமித்தது. 1989ல் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றபோது இந்தியாவின் கட்டாயத்தால் ரி.யு.எல்.எப்பும் போட்டியிட்டது. இந்தியா, ஈபிஆர்எல்எப், ரெலோ, மற்றும் ஈ.என்.டி.எல்.எப் போன்ற போராளிக் குழுக்களை ஒன்றுதிரட்டி மிதவாத ரி.யு.எல்.எப் உடன் சேர்ந்து ரி.யு.எல்.எப் கட்சியின் கீழ் அதன் சின்னமான கூரியனின் கீழ் போட்டியிட வைத்தது.
அமிர்தலிங்கம், மற்றும் அவரது சொந்த வழியில் அரசியலில் நன்கு பிரபலமான அவர் மனைவி மங்கையர்க்கரசி ஆகியோர் சென்னையிலிருந்து கொழும்புக்கு வந்தார்கள். இந்தியாவிற்கு சுயம் மேற்கொண்ட நாடுகடத்தலில் இருந்து முதலில் திரும்ப வந்தவர் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிவேலு யோகேஸ்வரன் ஆவார். இநதியாவில் தனது மனைவி சரோஜினியுடன் (பின்னர் யாழ்ப்பாண மேயராக பதவியேற்ற இவரும்கூட எல்.ரீ.ரீ.ஈயினால் கொல்லப்பட்டார்) வசித்து வந்த பிரபலமான யோகேஸ்வரன் இந்தோ - லங்கா ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு பல மாதங்களுக்கு முன்பே தனியாக யாழ்ப்பாணத்துக்கு திரும்பிவிட்டார். அப்படிச் செய்வதற்கு முன்பு சென்னையில் இருந்த எல்.ரீ.ரீ.ஈ உயர்மட்டத் தலைவரிடம் அதற்கான உத்தரவை அவர் கேட்டுப் பெற்றிருந்தார்.
யோகேஸ்வரன்
எனினும் யோகேஸ்வரன் யாழ்ப்பாணத்துக்கு திரும்பியபிறகு கிட்டத்தட்ட எல்.ரீ.ர
ீ.ஈயினால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதை போன்ற நிலையிலேயே இருந்தார். அவரது நகர்வுகள் கட்டுப் படுத்தப்பட்டன. குறிப்பிட்ட சில வருகையாளர்களுக்கு மாத்திரம் அவரை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்திய இராணுவத்தின் வருகை வரைக்கும் யோகேஸ்வரன் ஒரு சூழ்நிலை கைதியை போலவே அடைபட்டுக் கிடந்தார். அதன் பின் அவர் கொழும்புக்குச் சென்று பம்பலப்பிட்டி,கொத்தலாவல டெரசில்; உள்ள ஒர உறவினரின் வீட்டில் வசித்து வந்தார். அதைத் தொடர்ந்த அவரது மனைவி சரோஜினியும் அவருடன் இணைந்து கொண்டார்.
அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் தம்பதியினர்கள் கொழும்புக்கு திரும்பியதுடன், அவர்களுக்கும் மற்றம் எனைய ரி.யு.எல்.எப் அங்கத்தவர்களும் தங்குவதற்கு பாதுகாப்பான ஒரு வீடு தேவைப்பட்டது. எல்.ரீ.ரீ.ஈ பகைமையை காட்டுவதால் அவர்களில் யாருக்கும் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பாக தங்க முடியவில்லை. எனவே பாதுகாப்பான ஒரு வீடு அவசியமாக இருந்தது. முன்னாள் மன்னார் பாராளுமன்ற உறுப்பினரான பி. சூசைதாசன் அவர்களும் மற்றும் முன்னாள் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி. நீலன் திருச்செல்வம் அவர்களும் கொழும்பு - 7, பௌத்தாலோக மாவத்த(புல்லர்ஸ் வீதி) யில் உள்ள 342 - 2 ம் இலக்க வீட்டை அவர்களுக்காக ஒழுங்கு செய்தார்கள். அது ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மன்னாரை சேர்ந்த பிரபலமான ஒரு முஸ்லிம் வியாபாரிக்கு சொந்தமானதாக இருந்தது. முன்னாள் மகாவலி அபிவிருத்தி அமைச்சரான காமினி திசாநாயக்கா இந்திய - இலங்கை ஒப்பந்தத்தையும் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சமாதான முயற்சிகளையும் தீவிரமாக ஆதரித்தார். அவர் ஜேஆர். ஜெயவர்தனா அரசாங்கத்தின் கடைசிப் பகுதிகளில் சுயமாக நாட்டை விட்டு வெளியேறியிருந்த ரி.யு.எல்.எப் தலைவர்கள் நாட்டுக்குத் திரும்பி, பிரதான அரசியல் நீரோட்டத்தில் மீண்டும் சேர்ந்து கொள்வதற்கான முயற்சியில் முக்கிய பங்கை வகித்திருந்தார்.
1988ல் காமினி திசாநாயக்கா அமைச்சராக இருந்த காலத்தில், ரி.யு.எல்.எப் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். மகாவலி அமைச்சின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஆறு அங்கத்தவர்கள் மற்றும் காவல்துறையினர் அந்த வளாகத்தில் நிலை கொண்டிருந்தார்கள்.
ஒரு காலத்தில் நாவலர் மற்றும் தளபதி என்றெல்லாம் இளம் ஆதரவாளர்களால் அழைக்கப்பட்ட அமிர்தலிங்கம் பிற்காலத்தில் எல்.ரீ.ரீ.ஈயினரின் குற்றச்சாட்டுக்கு இலக்கானார். ஐக்கிய ஸ்ரீலங்காவுக்குள் பேச்சு வார்த்தை மூலமான ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளை, தமிழீழக் கனவை அவர் விலை பேசும் முயற்சியில் இறங்கியிருப்பதாக புலிகள் கருதினார்கள். ஒரு காலத்தில் முன்னணி தமிழ் தலைவராக இருந்த அமீர் அண்ணன்தான், தமிழீழ விடயத்துக்கு துணை செய்தவரும் மற்றும் இந்த பத்தியின் எழுத்தாளர் உட்பட ஒரு தலைமுறையை சேர்ந்த தமிழ் இளைஞர்களின் மனதில் பிரிவினைவாத கற்பனைக்கு தீ மூட்டியவரும் ஆவார். பின்னைய வருடங்களில் அவர் பின்பற்றிய நடைமுறைக்கேற்ற அணுகுமுறை இளைஞர்கள் குறிப்பாக தங்கள் இலட்சியத்தை அடைவதற்காக ஆயுதம் ஏந்தியவர்களின் மயக்கத்தை கலைத்தது.
துரோகி அல்லது காட்டிக் கொடுப்பவர்
இதன்படி கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து இருந்தவர்களை துரோகி அல்லது காட்டிக் கொடுப்பவன் எனப் பெயரிட்ட அமிர்தலிங்கம் அவர்களையே இப்போது எல்.ரீ.ரீ.ஈ மற்றும் அவர்களைப் போன்ற இதர தீவிரவாத இளைஞர்கள் துரோகி என அழைத்தார்கள். போராளிகளின் விரோதம் அமிர்தலிங்கத்தை நோக்கி திரும்பவதற்கான மற்றொரு காரணமும் இருந்தது, அது அவரது உண்மையான அல்லது கற்பனையான தமிழீழ காட்டிக் கொடுப்புடன் எந்தவித தொடர்பும் இல்லாதது. தமிழ் போராளித் தலைவர்களால் தங்கள் ஆயுதங்கள் மூலம் கட்டளைகளை பிறப்பிக்க முடியுமாக இருந்தது, ஆனால் அவர்களில் யாருக்கும் அமிர்தலிங்கத்தைப் போன்ற பரவலான தலைமைத்துவ சான்றுக்கான அங்கீகாரம் இருக்கவில்லை. பதவியில் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் மிகவும் மதிக்கப்பட்ட ஸ்ரீலங்கா தமிழ் தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள்தான். அவர் உயிரோடு இருந்தவரை அந்த சிம்மாசனத்தை எந்த ஏமாற்றுக்காரராலும் எளிதில் கைப்பற்ற முடியவில்லை. அமிர்தலிங்கத்தின் மரணத்தின் பின்னர்தான் எல்.ரீ.ரீ.ஈ கூட்டாளிகள் பிரபாகரனை தேசிய தலைவர் என அழைக்க ஆரம்பித்தார்கள். ஸ்ரீலங்காவில் தனக்காக காத்திருக்கும் ஆபத்தைப் பற்றி அமிர்தலிங்கம் நன்றாக அறிந்திருந்தார்.
இந்தியாவிலிருந்து ஸ்ரீலங்காவை நோக்கிய தனது நிரந்தரமான புறப்படுகைக்கு முன்னர் அமிர்தலிங்கம் சென்னையில் வைத்து முன்னாள் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினரான வீரசிங்கம் ஆனந்த சங்கரியை சந்தித்திருந்தார். உரையாடலுக்கு மத்தியில்,” ஸ்ரீலங்காவில் எங்களுக்காக என்ன தேக்கி வைக்கப்பட்டுள்ளது என்று எங்களில் சிலர் அறிவார்கள் சங்கரி! ஆனால் நாங்கள் எங்கள் மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் அதை எதிர்கொண்டே ஆகவேண்டும்” என்று அமிர்தலிங்கம் குறிப்பிட்டாராம். இந்தப் பின்னணியில்தான் 25 வருடங்களுக்கு முன்பு அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலை நடந்தேறியது. அது நடைபெற்ற சமயம் நான் கனடாவிலிருந்தேன். எனினும் பலவேறு சந்தர்ப்பங்களில் ரி.யு.எல்.எப் உடன் தொடர்புள்ள, எம்.சிவசிதம்பரம், கலாநிதி.நீலன் திருச்செல்வம், திருமதி சரோஜினி யோகேஸ்வரன், போன்ற பல்வேறு நபர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தேன், மற்றும் திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், கலாநிதி.பகீரதன் அமிர்தலிங்கம், திரு.வி.ஆனந்தசங்கரி,மற்றும் திரு.பி.சூசைதாசன், மற்றும் திரு சோமசுந்தரம் (மாவை)சேனாதிராஜா அகியோருடன் இந்த சம்பவம் பற்றி விசாரித்துமிருந்தேன். அந்த சம்பாஷணைகளின் அடிப்படையிலும் மற்றும் இது தொடர்பான ஊடக அறிக்கைகள் மூலமாகவும் பெற்ற அறிவிலிருந்து இப்போது அந்த படுகொலையின் உடற்கூற்றியலை எழுதுகிறேன்.
புதுதில்லியின் கோபத்துக்கு அஞ்சி,அமிர்தலிங்கத்துக்கோ அல்லது இதர முக்கிய ரி.யு.எல்.எப் தலைவர்களுக்கோ இந்திய மண்ணில் வைத்து தீங்கிழைக்க எல்.ரீ.ரீ.ஈ முயற்சி செய்யவில்லை. (அதேவேளை தமிழ்நாட்டு மண்ணில் வைத்து ராஜீவ் காந்தியை கொல்வதற்கு இந்த எச்சரிக்கையை எல்.ரீ.ரீ.ஈ அலட்சியப் படுத்தியதால்,அப்படிச் செய்ததற்கான விலையை தொடர்ந்து கொடுக்க வேண்டியிருந்தது). அமிர்தலிங்கம் ஸ்ரீலங்காவுக்கு திரும்பியதும் அவர் அதன் இலக்காக மாறினார். தமிழ் தலைவர்களை அவர்களது பாதுகாவலர்களிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியாக எல்.ரீ.ரீ.ஈ, ரி.யு.எல்.எப் உடன் நேசத் தொடர்பு முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தது. ரி.யு.எல்.எப் தலைவர்களிலேயே எளிதில் ஏமாறும் இயல்புள்ளவரான யோகேஸ்வரனை, எல்.ரீ.ரீ.ஈ தெரிவு செய்து அவரை அணுகியது. அன்பான யோகேஸ்வரன் எப்போதும் பையன்களில் சிலரினால் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களைக் கூட பொருட்படுத்தாது அவர்களிடத்து எப்போதும் ஒரு பரிவினைக் கொண்டிருந்தார். தமிழர்களிடத்து ஒரு பரந்த ஒற்றுமை ஏற்படுத்த வேண்டுமென்கிற ஆர்வம் உள்ளவராகவும் அதற்காக ரி.யு.எல்.எப் உடனும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ உட்பட அனைத்து தமிழ் குழுக்களிடையேயும் சமரசத்தை ஏற்படுத்த அயராது உழைத்தவர்.
சிவகுமார் அல்லது அறிவு
யோகேஸ்வரனை முதலில் அணுகியவர் அறிவு என்றழைக்கப்படும் சிவகுமார் என்கிற எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் ஆவார், அவர் கொழும்பல் மற்றொரு பெயரில் தங்கியிருந்து எல்.ரீ.ரீ.ஈக்காக உளவு பார்த்து வந்தார். வன்னியில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ தலைமை அவரைச் சந்தித்து தமிர்களின் ஒற்றுமைக்கான கருத்து மற்றும் வழிகள் பற்றி கலந்துரையாட விரும்புவதாக தன்னிடம் தெரிவிக்கப் படடதாக அறிவு யோகேஸ்வரனிடம் சொன்னார். கொள்கையளவில் எப்போதும் ஒற்றுமையை எற்படுத்த ஆவலாக உள்ளவர் யோகேஸ்வரன். அதன் பின்னர் வவுனியாவில் உள்ள எல்.ரீ.ரீ.ஈயில் இருந்து விக்னா என அழைக்கப்படும் ஒருவர் தொலைபேசி மூலம் யோகேஸ்வரனைத் தெடர்பு கொண்டார். இயலுமானால் அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோரையும் அவருடன் வவுனியாவுக்கு அழைத்து வருமாறு யோகேஸ்வரன் கேட்கப்பட்டார். அப்போது சிவசிதம்பரம் ரி.யு.எல்.எப் இன் தலைவராகவும் மற்றும் அமிர்தலிங்கம் அதன் செயலாளர் நாயகம் ஆகவும் இருந்தார்கள்.
மனக்கிளர்ச்சி அடைந்த யோகேஸ்வரன் அந்தப் பணியை ஏற்றெடுக்கும் ஆபத்தை
எதிர்கொள்ள முடிவு செய்தார், அது தமிழர்களின் பாரிய ஒற்றுமைக்கான நலன்களுக்கு வேண்டி செய்யப்படவதாக அவர் எண்ணினார். எல்.ரீ.ரீ.ஈ அந்த விடயத்தில் உண்மையாகவே வேட்கையுடன் உள்ளதா என்பதை நிச்சயப்படுத்தும் வரை அந்த விடயத்தை மறைத்து வைக்க அவர் தீர்மானித்தார். எனவே பெப்ரவரி 1989ல் யோகேஸ்வரன் தனது சகபாடிகளிடம் தான் மலைநாட்டுக்கு ஒரு குறுகிய விஜயம் மேற்கொள்ளப் போவதாக சொல்லிவிட்டு ஒரு ஜீப் வண்டியில் தனது மனைவி சரோஜினியுடனும் மற்றும் நம்பிக்கையான ஒரு சாரதியுடனும் கொழும்பை விட்டுப் புறப்பட்டார். கண்டிக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் வசிக்கும் ஒரு உறவுக்காரரின் வீட்டில் சரோஜினியை இறக்கி விட்டு, பின்னர் அவர் வடக்கு நோக்கிப் பயணமானார். வவுனியா நகரத்திலிருந்து வடக்கே சில மைல்கள் தொலைவில் உள்ள பாண்டிக்குளம் என்கிற கிராமத்தில் உள்ள ஒரு இரகசிய இடத்தில் யோகேஸ்வரன் புலிகளைச் சந்தித்தார்.
பாண்டிக்குளத்தில் வைத்துத்தான் தன்னை தொலைபேசியில் அங்கு வரும்படி அழைத்த விக்னாவின் அடையாளத்தை யோகேஸ்வரன் கண்டுபிடித்தார். விக்னா வேறுயாருமல்ல வவுனியா எல்.ரீ.ரீ.ஈ அரசியல் பிரிவு தலைவராக பதில் கடமையாற்றி வரும் பீற்றர் லியோன் அலோசியஸ் என்பவர்தான். அலோசியஸ் யோகேஸ்வரனை மனப்பூர்வமாக வரவேற்றாலும் அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோர் வராததையிட்டு தனது ஏமாற்றத்தை தெரிவித்தார். அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோர் வந்ததும் அவர்களைச் சந்திப்பதற்காக எல்.ரீ.ரீ.ஈ துணைத் தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜா தயாராக இருப்பதாக அலோசியஸ் யோகேஸ்வரனிடம் தெரிவித்தார். அவர்கள் வர முடியாததுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட யோகேஸ்வரன் முதலில் தான் தனியாக வந்தது ரி.யு.எல்.எப் தலைவர்களுடனான சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகளை இறுதி செய்வதற்காக என்று தெரிவித்தார். அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோருடன் தான் விரைவிலேயே பாண்டிக்குளம் திரும்பி வருவதாக அவர் சொன்னார்.
எல்.ரீ.ரீ.ஈயினரால் யோகேஸ்வரன் நன்கு உபசரிக்கப்பட்டார், மற்றும் அவருக்கு சுவையான கறியுடன் கூடிய உணவு பரிமாறப்பட்டது. புலிகளினால் வழங்கப்பட்ட வரவேற்பையிட்டு மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்த யோகேஸ்வரன், மனைவி சரோஜினியையும் அழைத்துக் கொண்டு கண்டி வழியாக கொழுமபு திரும்பினார். கொழும்புக்கு திரும்பி வந்ததும் ஆரம்பத்தில் தான் மலைநாட்டுக்கு மட்டுமே போய்வந்ததாக யோகேஸ்வரன் காட்டிக் கொண்டார். இருந்தும் அவர் சொன்ன சில பொய்கள் அவரது கோரிக்கையில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. புத்திசாலியான ஆனந்தசங்கரிதான் யோகேஸ்வரனது வண்டிச் சக்கரங்களில் ஒட்டியிருந்த சிவப்பு நிற மண் அடையாளங்கள் மலைநாட்டை அடையாளப் படுத்துவதல்ல, மாறாக வடக்கை அடையாளம் காட்டுவது என்று கண்டுபிடித்தார். மேலும் யோகேஸ்வரன் மலைநாட்டு மரக்கறியோ பழங்களோ கொண்டு வராது வடக்கை சேர்ந்த பலாப்பழ வகையை கொண்டு வந்திருந்தார். சங்கரி, யோகேசிடம் அவரது பயணத்தை பற்றி தொடர்ந்து கேள்விகளை கேட்டு வற்புறுத்தியபோது, முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறப்பினர் தான் சில காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக வடக்கே சென்றிருந்ததாகச் சொன்னார். எல்.ரீ.ரீ.ஈ உடனான தனது சந்திப்பை பற்றி அவர் அப்போது தனது சகாக்களிடம் வெளியடவில்லை.
பாண்டிக்குளம்
எனினும் எல்.ரீ.ரீ.ஈ உடனான சந்திப்புக்குப் பிறகு யோகேஸ்வரன் புலிகளிடமிருந்து அதிக அழுத்தங்களை எதிர்கொள்ளத் தொடங்கினார். பாண்டிக்குளத்தில் எல்.ரீ.ரீ.ஈ யினரை சந்திப்பதற்கு அமிர்தலிங்கம் மற்றம் சிவசிதம்பரம் ஆகியோரை எப்போது அழைத்து வரப்போகிறீர்கள் என அடிக்கடி வவுனியாவில் இருந்து அவருக்கு தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமாக இருந்தன. கொழும்பில் இருந்த அறிவு என்கிற சிவகுமாரும் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு அதே விடயம் பற்றி வினாவிக் கொண்டிருந்தார். எனினும் யோகேஸ்வரனுக்;கு ரி.யு.எல்.எப் தலைவர் மற்றும் செயலாளரிடம் சொல்வதற்கு தயக்கமாக இருந்தபடியால் விடயத்தை இழுத்துக் கொண்டே போனார்.
ஒரு கட்டத்தில் சிவசிதம்பரம் சென்னைக்குச் சென்றார் அங்கு அவரது மனைவி, அவரது மகள் மற்றும் மருமகனுடன் வசித்து வருகிறார். யோகேஸ்வரன் இதைப்பற்றி எல்.ரீ.ரீ.ஈயிடம் சொன்னபோது, சிவசிதம்பரத்துக்காக காத்து காலத்தை வீணடிக்காமல் அமிர்தலிங்கத்தையும் கூட்டிக்கொண்டு வவுனியாவுக்கு வரும்படி அவரிடம் சொல்லப்பட்டது. இறுதியாக யோகேஸ்வரன் இரகசியமாக அமிர்தலிங்கத்திடம் என்ன நடந்தது என்று சொல்லி எல்.ரீ.ரீ.ஈ அவரை சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். திடீர் கோபத்துக்கு பெயர்பெற்ற அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் மீது ஆத்திரம் கொண்டு அவரை மோசமாக திட்டித்தீர்த்தார். தான் எல்.ரீ.ரீ.ஈயினை வடக்கில் வைத்து சந்திக்கவேண்டும் என்கிற யோசனயை முன்னாள் எதிhக்கட்சித் தலைவர் உறுதியாக நிராகரித்து விட்டார். யோகேஸ்வரன் இப்பொழுது பிரச்சினையில் மாடடிக் கொண்டார்.
இந்தக் கட்டத்தில் விடயங்கள் ஒரு வித்தியாசமான திருப்பத்தை அடைந்தன, ஜனாதிபதி பிரேமதாஸவின் அரசாங்கம் எல்.ரீ.ரீ.ஈயுடன் நேரடியாக பேச்சு வார்த்தையில் இறங்கியது. புலிகளின் அரசியல் ஆலோசகர், அன்ரன் ஸ்ரனிஸ்லாஸ் பாலசிங்கம் தலைமையில் மற்றும் அப்போதைய எல்.ரீ.ரீ.ஈ அரசியல் பிரிவு தலைவர் யோகி என்கிற நரேந்திரன் உட்பட புலிகளின் குழுவொன்று பேச்சக்களுக்காக கொழும்பு வந்தது. நேரடியாக பேச்சு வாhத்தையில் ஈடுபடாத பல புலி அங்கத்தவர்களும் அவர்களுடன சேர்ந்து கொழும்புக்கு வந்தார்கள். இவர்களுக்கு மத்தியில் விக்னா என்கிற பீற்றர் லியோன் அலோசியசும் இருந்தார். பேச்சுக்களை ஒரு கவசமாக பயன்படுத்திக்கொண்டு புலிகள் முறைப்படி கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்குள் ஊடுருவினார்கள். அலோசியஸ் தான் தங்குவதற்கு நாரகேன்பிட்டியாவில் நிரந்தரமாக ஒரு இடத்தை கண்டுபிடித்துக் கொண்டார். அவர் திட்டமிட்டுள்ள அமிர்தலிங்கத்துடனான சந்திப்பை ஏற்பாடு செய்வது பற்றி யோகேஸ்வரனுக்கு தொல்லை கொடுக்கத் தொடங்கினார். அமிர்தலிங்கம் மறுத்துவிட்டார் என்பதை சொல்லவும் இயலாமல் மற்றும் சொல்லவும் விரும்பாமல் யோகேஸ்வரன் ஒரு கடினமானதும் இறுக்கமானதுமான நிலைமையில் தத்தளித்தார். இதனால் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார். யோகேஸ்வரன் வைத்தியசாலையில் இருந்த வேளையில் விசு என்கிற மற்றொரு புலித் தலைவருடன் அலோசியஸ் அவரை வந்து பார்த்தார்.
அரவிந்தராஜா என்கிற விசு
யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சி பகுதியை சேர்ந்த வதிரியில் உள்ள
ஒரு உயர்தர நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர் இராசையா அரவிந்தராஜா என்கிற விசு. 1983 ஜூலையில் நடந்த தமிழர் விரோத படுகொலைகளின் பின்னர் அவர் தனது உயர் படிப்பினைக் கைவிட்டு எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்தார். எல்.ரீ.ரீ.ஈயின் இரண்டாவது தொகுதி அங்கத்தவர்களுக்கு வட இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஜூவாலமுகியில் இந்திய இராணுவம் பயிற்சி அளித்தபோது அதில் ஒருவனாக விசு தனது ஆயுதப் பயிற்சியை பெற்றுக் கொண்டார்;.
பயிற்சியின் பின்னர் விசு ஸ்ரீலங்காவுக்கு திரும்பிவந்து அந்த நேரம் வன்னி பிரதேச எல்.ரீ.ரீ.ஈ தளபதியாக இருந்த மாத்தையா என்கிற கோபாலசாமி மகேந்திரராஜாவின் கீழ் பணியாற்றி வந்தார். மாத்தையா வன்னியின் கிளிநொச்சி,வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பாக இருந்த அதேவேளை மன்னார் தனியான ஒன்றாக வேறு தளபதியின் கீழ் அப்போது இருந்தது. விசு மாத்தையாவின் நெருங்கிய நம்பிக்கைக்கு உரியவராக மாறியிருந்தார்.
1987 ஜனவரி 5ல் எல்.ரீ.ரீ.ஈயின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் திரும்புவதை காண முடிந்தது. அதன் சில நாட்களின் பின்னர் ஸ்ரீலங்கா ஆயுதப் படையினர் வன்னியில் இராணுவ தாக்குதலை முடுக்கி விட்டனர். எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை திரும்ப கைப்பற்றுவதற்காக யாழ்ப்பாணத்தின் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட விரிவான தயாரெடுப்புகளை அடுத்து இது தொடரப்பட்டது. இந்த முன்னேற்றங்களின் விளைவாக, எதிர்பார்த்துள்ள இராணுவ நடவடிக்கையை எதிர்க்கும் நோக்குடன் வன்னியில் இருந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் யாழ்ப்பாணத்துக்கு இடம் பெயர்ந்தார்கள்.
விசு மாத்தையாவுடன் சேர்ந்து யாழ்ப்பாணம் சென்றார். பிரபாகரனால் எல்.ரீ.ரீ.ஈயின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட மாத்தையா பீற்றா - 2 என்கிற ஒரு விசேட உளவுத்துறை பிரிவு ஒன்றை உருவாக்கினார். விசு அதற்கு பொறுப்பாக நியமிக்கப் பட்டார். இந்திய இராணுவத்துக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈக்கும் இடையில் யுத்தம் வெடித்ததின் பின்னர், விசு தமிழ் நாட்டுக்கு கடந்து சென்றார். அங்கு அவர் சென்னையில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ அலுவலகத்தை நடத்த ஆரம்பித்தார்.
சாஸ்திரிகூழாங்குளம்
ஜூன் 1988ல் இந்திய இராணுவத்தின் 8வது மகார் படைப்பிரிவை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரை எல்.ரீ.ரீ.ஈ திரும்ப ஒப்படைத்தது, அவரை அவர்கள் வவுனியா நெலுக்குளத்தில் வைத்து பிடித்திருந்தார்கள். கொழும்ப மற்றும் சென்னை ஆகிய இடங்களிலிருந்து ஊடகவியலாளர்கள் சாஸ்திரிகூழாங்குளம் எனும் இடத்தில் நடந்த அந்த கையளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்கள். ‘த ஐலன்ட்’ பத்திரிகையின் பிரதிநிதியாக நானும்கூட அங்கு சமூகமளித்திருந்தேன். அப்போது இந்திய இராணுவ உளவுப் பிரிவில் இணைந்திருந்த நன்கு பிரபலமான ஆய்வாளரும் மற்றும் விமர்சகருமான கேணல்.ஆர்.ஹரிஹரனும் அப்போது அங்கு இருந்தார்.
அப்போதைய இந்திய அதிகாரிகளினால் சென்னையிலிருந்து வவுனியாவுக்கு இரண்டு எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் கஸ்ட்ரோ, அவர் பின்னாட்களில் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்புகளுக்கு பொறுப்பான எல்.ரீ.ரீ.ஈ தலைவராக மாறினார். மற்றவர் விசு. இதுதான் விசுவை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்த முதலாவதான ஒரே சந்திப்பு. அவர் பளபளப்பான தோற்றமுடைய உயரமான திடகாத்திர தேகத்தை கொண்டிருந்தார். நாங்கள் சில வார்த்தைகளை பரிமாறிக் கொண்டபோது, என்னை அங்கு கண்டது மகிழ்ச்சியளிப்பதாக விசு என்னிடம் சொன்னார், மேலும் இந்தக் கையளிப்புக்கு சாட்சிகளாக நானும் இக்பால் அத்தாஸ் அவர்களும் வரவேண்டும் என்று எல்.ரீ.ரீ.ஈ தலைமை விசேடமாக விரும்பியதாகவும் அவர் சொன்னார். விரும்பியதாகவும் அவர் சொன்னார்.
எல்.ரீ.ரீ.ஈயின் பீற்றா - 2க்கு தலைவரான இந்த விசுதான் அலோசியசுடன் சேர்ந்து யோகேஸ்வரனைக் காண வைத்தியசாலைக்கு வந்திருந்தார். விசு யோகேஸ்வரனை முன்னமே அறிவார். எல்.ரீ.ரீ.ஈ இரட்டையர்கள் யோகேஸ்வரனிடம் வருகை தந்தபோது முன்னாள் மன்னார் பாராளுமன்ற உறப்பினரான சூசைதாசனும் அங்கு இருந்தார். 55 வயதான முன்னாள் பாராளுமன்ற உறப்பினர் சுகவீனமுற்று வைத்தியசாலை கட்டிலில் படுத்திருந்த வேளையிலும் அந்த இரண்டு புலி உறுப்பினர்களும் அவரிடம் கடுமையாக பேசியதாக அவர் என்னிடம் சொன்னார். வெளிப்படையாக அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோருடன் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதையிட்டு எல்.ரீ.ரீ.ஈ எரிச்சல் அடைந்திருந்தது.
யோகேஸ்வரன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி புல்லர்ஸ் வீதியில் உள்ள வீட்டுக்குச் சென்ற பின்னும் அலோசியஸ் மற்றும் சிவகுமார் ஆகியோர் அந்த வீட்டுக்கே பலமுறை வருகை செய்துள்ளனர். விசு அவாகளுடன் வரவில்லை. அந்த வருகைக்கான வெளிப்படையான காரணம் யோகேஸ்வரனின் உடல்நிலை பற்றி நலம் விசாரிப்பது என்பதாக இருந்தது. இந்த வருகைகள் நீண்ட நேரம் நீடிக்கவில்லை மற்றும் அவை யோகேஸ்வரனை துயரத்திலும் மற்றும் விரக்தியிலும் ஆழ்த்தியருந்தன. இந்த வருகைகளின்போது வேறு எந்த ரி.யு.எல்.எப் அங்கத்தவரும் அங்கிருக்கவில்லை. துரதிருஸ்டமான ஐந்தாவது வருகை நடைபெற்ற ஜூலை 13 1989க்கு முன்பு இவ்வாறான நான்கு சந்திப்புகள் இடம்பெற்றன.
மங்;கையர்க்கரசி
ஒருமுறை அமிர்தலிங்கம் மற்றும் அவரது மனைவி மங்;கையர்க்கரசி அமிர்தலிங்கம் ஆகிய இருவரும் வீட்டுக்கு வெளியே ஒரு மாலைநேர நடை பயின்று கொண்டிருந்த சமயத்தில் எல்.ரீ.ரீ.ஈயினை சேர்ந்த இருவர் வந்தார்கள். அவர்கள் வேண்டுமென்றே அமிர்தலிங்கத்தை பார்த்து முறைத்தார்கள.; இதை பல வருடங்களுக்கப் பிறகு திருமதி. அமிர்தலிங்கம் கனடாவில் வைத்து என்னிடம் சொன்னார், அவர்களது அச்சுறுத்தும் பார்வையால் கலக்கமடைந்த அவர் தனது கணவரிடம் தனக்குப் பயமாக இருக்கிறது, ஏனெனில் அவர்கள் உங்களைப் பார்த்த விதம் குழப்பம் தருவதாக உள்ளது எனக் கூறினாராம். அதற்கு அமிர் “தவம் (தனது மனைவியை அமிர் செல்லமாக அப்படித்தான் அழைப்பதுண்டாம்) நீ எப்போதும் தேவையில்லாமல் கவலைப் படுகிறாய். அவர்கள் போராளிகள், அதனால் அவர்களது தோற்றம் கடினமானதாகத்தான் இருக்கும். அவர்களை அப்படியே இருக்க விடுவோம்” என மனைவியை கடிந்து கொண்டாராம்.
இதற்கிடையில் சிவசிதம்பரம் சென்னையில் இருந்து கொழும்பு திரும்பினார். எல்.ரீ.ரீ.
ஈ தொடர்ந்தும் அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோர் வவுனியாவுக்கு வந்து பாண்டிக்குளத்தில் வைத்து எல்.ரீ.ரீ.ஈ தலைவரை சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தது. இடைவிடாத புலிகளின் அழுத்தத்தை தாங்க முடியாத யோகேஸ்வரன், அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோரை சமாதானப்படுத்தி புலிகளை குறைந்தது கொழும்பிலாவது சந்திக்க வேண்டும் எனக் கேட்டு அதற்கு சம்மதிக்க வைத்தார். யோகேஸ்வரன், நியாயப்படி நினைத்தது, முழுத் தமிழர்களிடையேயும் ஒற்றுமையை எற்படுத்துவதில் எல்.ரீ.ரீ.ஈ ஆர்வமாக உள்ளது, மற்றும் புலிகளுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வருவது ரி.யு.எல்.எப் புக்கும் நன்மை பயக்கும் என்று. யதேச்சையாக எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரன் சென்னையில் வைத்து கால்பந்து விளையாட்டு பரிபாஷையில், யோகேஸ்வரன் தன் பக்கமே பந்தை உதைத்து கோலைப் போடும் ஒரு மனிதர் எனக் குறிப்பிட்டாராம்.
அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினை கொழும்பில் வைத்துச் சந்திக்கத் தயார் என்று யோகேஸ்வரன் சிவகுமாருக்கு அறிவித்தார். ஒரு சந்திப்பை அவர்கள் வீட்டில் வைத்தே நடத்த ஏற்பாடு செய்யலாம் எனவும் அவர் சொன்னார். புலிகள் இந்த விடயத்தை ஆராய்ந்து அவர்களின் முடிவை அவருக்கு அறிவிப்பார்கள்; என சிவகுமார் யோகேஸ்வரனிடம் சொன்னாராம். 1989 ஜூலை 13 ந்திகதி வியாழக்கிழமை, காலை சுமார் 10 மணியளவில் அலோசியஸ் யோகேஸ்வரனை தொலைபேசியில் அழைத்து அவரது ஆலோசனை எல்.ரீ.ரீ.ஈக்கு சம்மதமாக உள்ளது. கூட்டம் அதேதினம் மாலை 6 மணிக்கு நடத்த திட்டமிடப் பட்டுள்ளதாகத் தெரிவிததார்.
இதை அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரத்திடம் யோகேஸ்வரன் அறிவித்தார். அதில் ஒரு சிக்கல் இருந்தது, அவர்கள் இருவரும் அப்போது இந்திய உயர் ஸ்தானிகராக கொழும்பில் இருந்த லேக்கான் லால் மெஹ்ரோத்ரா, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அன்றிரவு அளிக்கவிருக்கும் இராப்போசன விருந்தொன்றில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அந்த விருந்து இந்திய அமைச்சரவை செயலாளராக கடமையாற்றி பின்னர் பிரதம மந்திரியின் முதன்மைச் செயலாளராhக ராஜீவ் காந்தியின் கீழ் கடமையாற்றும், பிஜி.தேஷ்முக் அவர்களை கௌரவிக்கும் விதத்தில் நடத்தப்படும் ஒன்று. தேஷ்முக் இந்திய பிரதமரின் விசேட தூதுவராக அவரது கடிதமொன்றை ஜனாதிபதி பிரேமதாஸவிடம் கையளிப்பதற்காக அப்போது கொழும்புக்கு வந்திருந்தார். இரண்டு ரி.யு.எல்.எப் தலைவர்களிடமும் பி.ப 6 மணியளவில் புலிகளைச் சந்தித்து விட்டு நேரத்தோடு துர்துவரின் விருந்துக்கு செல்லும்படி யோகேஸ்வரன் கேட்டுக் கொண்டார். அவர்களும் அதற்குச் சம்மதித்தார்கள்.
நரேந்திரன் என்கிற யோகி
கிட்டத்தட்ட பி.ப 4 மணியளவில் அலோசியசிடம் இருந்து ஒரு இரண்டாவது தொலைபேசி அழைப்பு யோகேஸ்வரனுக்கு வந்தது. அதில் அலோசியஸ், எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவு தலைவர் நரேந்திரன் என்கிற யோகி அந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளும் சாத்தியம் இருப்பதாக யோகேஸ்வரனிடம் தெரிவித்தார்.யோகி, அன்ரன் பாலசிங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ தூதுக் குழுவை சேர்ந்த இதர அங்கத்தவர்கள் யாவரும் கலதாரி மெரிடியன் ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். எல்.ரீ.ரீ.ஈ அங்கு பி.ப 6.30 க்கும் மற்றும் 7 மணிக்கும் இடையில் வருவார்கள் முன்பு அறிவித்ததை போல 6 மணிக்கு அல்ல எனவும் அலோசியஸ் தெரிவித்தார். மேலும் அவருக்கு யோகேஸ்வரனிடம் தெரிவிக்க ஒரு வேண்டுகோளும் இருந்தது. பாதுகாப்பு கடமையில் இருப்பவர்களிடம் எல்.ரீ.ரீ.ஈ குழு வந்ததும் அவர்களை மறைவாக உள்ள ஆயுதங்களை தேட நடத்தும் உடற் சோதனையோ அல்லது வேறு சோதனையோ நடத்த வேண்டாம் என்று சொல்லும்படி யோகேஸ்வரனிடம் கேட்கப்பட்டது, ஏனென்றால் யோகியை போன்ற ஒரு தலைவரின் அந்தஸ்துக்கு அந்தச் செய்கை அவரை அவமதிப்பது போல உணரச் செய்துவிடும் என்றும் சொல்லப்பட்டது.
யோகி பேச்சுக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதை கேட்டு யோகேஸ்வரன் மகிழ்ச்சியடைந்தார். அவர் உடனடியாகவே பாதுகாப்பு உதவி கண்காணிப்பாளர் தம்பிராஜா கந்தசாமியிடம் திட்டமிட்டபடி மாலை வரவிருக்கும் எல்.ரீ.ரீ.ஈ குழுவினரை சோதனையிட வேண்டாம், அதனால் அவர்கள் சங்கடப்படுவார்கள் என அறிவுறுத்தல் வழங்கினார். கந்தசாமி இந்த ஆட்களை நம்ப முடியாது ஐயா என மறுப்பு தெரிவித்தார். எதுவும் நடக்காது என யோகேஸ்வரன் அவருக்கு உத்தரவாதம் வழங்கினார். ஒரு மூத்த எல்.ரீ.ரீ.ஈ தலைவரை எதிர்பாhக்கிறோம்,மற்றும் தான் அவமானப்பட்டு விட்டதாக அவர் நினைக்கக் கூடாது.” அவர்கள் எங்கள் விருந்தாளிகள் ஆனபடியால் நாங்கள் அவாகளை மரியாதையாக நடத்த வேண்டும், அவர்கள் அவமானப் படுத்தப்பட்டதாக உணர்ந்தால் எதிர்காலத்தில் அவர்கள் வரமாட்டார்கள் மற்றும் எங்கள் கலந்துரையாடல் தோற்றுவிடும்” என யோகேஸ் அவரிடம் தெரிவித்தார். ஒருவித தயக்கத்துடன் அதற்கு சம்மதித்த கந்தசாமி தனது உதவியாளர்களுக்கும் அதை அறிவித்தார்.
யோகேஸ்வரனும் அவரது மனைவியும் அவர்களுடன் கூட சிவசிதம்பரமும் வீட்டின் மேல்தளத்தில்; குடியிருந்தவேளை, அமிர்தலிங்கம் தம்பதியினரும் மற்றும் மாவை சேனாதிராஜாவும் கீழ் தளத்தில் வசித்துவந்தார்கள். தற்சமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு மூத்த பாரளுமன்ற உறுப்பினராக உள்ள சேனாதிராஜா அப்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. அமிர்தலிங்கத்தின் இளைய மகனான ரவி என்றழைக்கப்படும் பகீரதன் மற்றும் அவரது மனைவி மலர்விழி ஆகியோர் புதிதாகப் பிறந்துள்ள அவர்களது மூத்த மகனுடன் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்திருந்தார்கள். அவர்களது புதிய பேரனை அமிர்தலிங்கம் தம்பதியினர் இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறார்கள். அவர்கள் 12ந் திகதி திரும்பவும் பிரித்தானியாவுக்கு திரும்பி விட்டார்கள். அமிர்தலிங்கம் அவரது மகன் லண்டனுக்கு போய்ச் சேர்ந்ததும் அழைக்கவிருக்கும் தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
பீற்றர் லீயொன் அலோசியஸ்
நேரம் பி.ப 6.40 ஆன பொழுது எல்.ரீ.ரீ.ஈ மூவர் குழு ஒரு மஞ்சள் நிற சீருந்துவில் வந்தார்கள். எதிhபார்ப்புக்கு முரணாக யோகி பிரசன்னமாகி இருக்கவில்லை. மூன்று புலிகளும் விசு என்கிற இராசையா அரவிந்தாஜா, விக்னா என்கிற பீற்றர் லீயொன் அலோசியஸ் மற்றும் சிவகுமார் என்கிற அறிவு ஆகியோர்கள
ாவர். முன் கதவில் காவலிருந்த காவல்துறை உத்தியோகத்தரான சத்தியமூர்த்தி அந்த மூவரையும் சோதனை செய்யாமல் உள்ளே அனுமதித்தார். அவர்களின் வரவைப் பற்றி கந்தசாமிக்கு சத்தியமூர்த்தி அறிவித்ததும் அவர்களை யோகேஸ்வரனைச் சந்திக்க மேலே அனுப்பும்படி அவர் சொன்னார். விசு மற்றும் அலோசியஸ் மேலே சென்றபோது கீழ் படிக்கட்டின் அருகே அறிவு நிலையுறுத்திக் கொண்டார். யோகேஸ்வரன் மேலே தனது மனைவியுடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். புலிகள் வந்துவிட்டார்கள் என அறிவித்தல் வந்ததும் அவர் படிகளில் இறங்கிச் சென்று பாதி வழியலேயே விசுவையும் அலோசியசையும் சந்தித்தார். யோகி வராததையிட்டு யோகேஸ்வரன் ஏமாற்றமடைந்தாலும் விசுவையும் அலோசியசையும் வாழ்த்தி வரவேற்றார். அவர்கள் அமர்ந்து பேசத் தொடங்கினார்கள். சரோஜினி அவர்களுக்கு சாப்பிட ஏதாவது தயாரிக்கச் சென்றார். யோகேஸ்வரன் அங்கிருந்த வேலைக்காரப் பையன் ராஜூ மூலமாக கீழே, தனது மனைவி, சேனாதிராஜா மற்றும் சிவசிதம்பரம் ஆகியோருடன் சேர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அமிர்தலிங்கத்துக்கு ஒரு குறிப்பு அனுப்பினார். இந்திய தூதரின் விருந்துக்குச் செல்வதற்காக ஆடையணிந்து கொண்டிருந்த சிவாவும் அமிரும் மேல் தட்டுக்கு சென்றபோது, மங்கையர்க்கரசியும் சேனாதிராஜாவும் தொடர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அமிர்தலிங்கம் தனது மனைவியிடம் அவர்களது மகன் ரவி லண்டனில் இருந்து தொலைபேசி அழைப்பு விடுத்தால் தனக்கு சொல்லியனுப்புமாறு சொல்லிச் சென்றார். அமிரும் சிவாவும் உள்நுழைந்தபோது இரண்டு புலிகளும் எழுந்து நின்றார்கள். அமிர்தலிங்கம் அவர்களின் தோள்களில் தட்டிவிட்டு அவர்களுக்கு இடையில் இருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தார். சிவசிதம்பரம் சற்று தள்ளி அமர்ந்து கொண்டாh. யோகேஸ்வரன் எழுந்து சென்று தனது மனைவி தயாரிக்கும் தீன்பண்டங்களுக்கு உதவி செய்யச் சென்று விட்டார். சரோஜினி தக்காளி சான்ட்விச்சுகளும் மற்றும் பிஸ்கெட்டுகளும் கொண்டுவந்தார். அவர்களுக்கு குடிப்பதற்கு என்ன வேண்டும் என்று அவர் கேட்டார். இரண்டு புலிகளும் தங்களுக்க ஏதாவது மென்பானம் வேண்டுமென்றார்கள், அமிர்தலிங்கம் தனக்கு தேனீர் வேண்டுமென்றார், சிவாவும் மற்றும் யோகேசும் தங்களுக்கு எதுவும் வேண்டாமென்றார்கள். சரோஜினி இரண்டு பசன்பழப் பானங்களும் மற்றும் ஒரு கோப்பையில் தேனீரும் தயாரித்து வைத்துவிட்டு தனது அறைக்குப் போய்விட்டார்.
யோகேஸ்வரன் அறிமுகம் செய்து வைத்த பின்னர், தாங்கள் ரி.யு.எல்.எப் தலைவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாக புலிகள் தெரிவித்தார்கள். அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோரும் பிரதி உபகாரமாக அதே உணர்வுகளை பிரதிபலிக்கும் சொற்களை தெரிவித்தனர். இரண்டு தலைவர்களும் தமிழ் போராளிகளின் அர்ப்பணிப்ப மற்றும் தியாகம் என்பனவற்றை கண்டு தாங்கள் வியப்பும் மற்றும் மரியாதையும கொள்வதாகத் தெரிவித்தார்கள். இப்போது அனைத்து தமிழ் குழுக்களும ஒன்றாகச் சேர்ந்து தங்கள் ஐக்கியத்தை வெளிப்படுத்தி ஒரு பொதுவான அணுகுமுறையை தேர்ந்தெடுக்க வேண்டும் இல்லாவிட்டால் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தால் பெறப்பட்ட நன்மைகள் யாவும் வீணாகி விடும் என மேலும் தெரிவித்தார்கள். எந்தவிதமான அரசியல் ஏற்பாடுகளும் எல்.ரீ.ரீ.ஈக்கு பெருமையளிக்கும் விதத்திலேயே இடம்பெறும் என அமிர்தலிங்கம் புலிகளுக்கு உத்தரவாதம் அளித்தார்.
புலிகளின் தலைமை
இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை தான் புலிகளின் தலைமைக்கு அறிவிப்பதாக விசு சொன்னார். எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பாண்டிக்குளத்தில் வைத்து அவர்களைச் சந்தித்து இந்த விடயங்கள் பற்றி கலந்துரையாட ஆவலாக இருந்ததாகவும் மேலும் தெரிவித்த அவர், “நீங்கள் ஏன் வரவில்லை” என அமிர்தலிங்கத்தை பார்த்து நேரடியாகவே கேட்டார். யோகேஸ்வரனின் சுகவீனம் காரணமாகவும் மற்றும் சிவசிதம்பரம் இந்தியாவுக்குச் சென்றதாலும் விடயங்கள் தாமதமானதாக அமிர்தலிங்கம் பதிலளித்தார். மேலும் பாண்டிக்குளம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடியதும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ முகாம் உள்ள வெளிப்படையாக அறியப்பட்ட இடமாகவும் உள்ளதால் அங்கு வைத்து சந்திப்பை நடத்துவது உசிதமான யோசனையாகப் படவில்லை, என்று அமிர்தலிங்கம் மேலும் தெரிவித்தார்.
அப்போது விசு, மூத்த எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் ரி.யு.எல்.எப் உடன் மேலும் சந்திப்பை ஏற்படுத்தி கலந்துரையாட தயாராக உள்ளதாகவும், ஆனால் அந்த சந்திப்பை ரி.யு.எல்.எப் இன் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நடத்த முடியாது. மூத்த எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் ரி.யு.எல்.எப்பை மற்றொரு இடத்தில் வைத்து சந்திக்க முடியும் என்றும் தெரிவித்து கொழும்பிலுள்ள ஒரு விடுதியின் பெயரை இரண்டாவது சுற்று பேச்சுக்களுக்காக பரிந்துரையும் செய்தார். அமிர்தலிங்கம் அந்த இடம் பாதுகாப்பானதோ, கட்டுக்கோப்பானதோ அல்லது ஒதுக்குப் புறமானதோ அல்ல எனக்கூறி அந்த ஆலோசனையை நிராகரித்தார். அப்போது சிவசிதம்பரம் கொழும்பிலுள்ள நடுநிலையான ஒரு இல்லத்தில் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக சந்திப்பு நடப்பதற்கு முன்னர் அந்த இடத்தை தாங்கள் பார்வையிட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் விசு அந்த யோசனைக்குச் சம்மதித்தார்.
உரையாடல் மிகவும் சுமுகமாக நடைபெற்றது. பெரும்பாலான பேச்சுக்கள் அமிர், சிவா இருவராலும் மற்றும் விசுவாலுமே நடத்தப்பட்டன. யோகேஸ்வரன் மற்றும் அலோசியஸ் ஆகியோர் பொதுவாக மௌனமாக இருந்தனர். ஒரு கட்டத்தில் அமிர்தலிங்கம், எல்.ரீ.ரீ.ஈ ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்பவேண்டிய காலம் இதுதான், என மென்மையாக குறிப்பிட்டார்.”ஜனநாயகம் என்பது இளைஞர்ளாகிய உங்களுக்கு பழைய ஒரு பாணியாக தோன்றக்கூடும், ஆனால் தயவு செய்து வயதானவர்களாகிய நாங்கள் உங்களுக்கு சொல்வதையும் நீங்கள் கேட்கவேண்டும்” என சிவசிதம்பரம் குறிப்பிட்டார். அரசாங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ இடையே நடக்கும் பேச்சுக்களின் முன்னேற்றம் எப்படி உள்ளது எனக் கேட்டபோது “இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டு பேசி வருகிறார்கள்” என விசு வேடிக்கையாகச் சொன்னார். இது அனைவரிடத்தும் சிரிப்பை வரவழைத்தது.
இதற்கிடையில் கீழ் தளத்தில் சில பரபரப்புகள் இடம்பெற்றன. கீழே காத்திருந்த அறிவு என்கிற சிவகுமார் பி.ப 7 மணிக்குப் பிறகு குழப்பமடையத் தொடங்கினார். அவர் தனது கடிகாரத்தை பார்ப்பதும் அமைதியற்ற முறையில் பரபரப்புடன் அங்கும் இங்கும் செல்வதுடன் அடிக்கடி ஆவலாக மேலே பார்ப்பதுமாக இருந்தார். அங்கு கடமையிலிருந்த காவலர்களில் ஒருவருக்கு சிவகுமாரின் நடத்தையில் சந்தேகம் தட்டியது. அவரது பெயர் நிஸ்ஸங்க திப்பொட்டுமுனுவ, அவரது சொந்த இடம் கோகாலை மாவட்டத்தில் உள்ள ஹெட்டிமுல்லவில் உள்ள அக்கிரியாகல ஆகும். நிஸ்ஸங்க மகாவலி அமைச்சினால் அமிர்தலிங்கத்தின் பாதுகாப்புக்காக வழிமொழியப் பட்டு அழைக்கப்பட்டவராவார்.
தம்பிராஜா கந்தசாமி
நிஸ்ஸங்க திப்பொட்டுமுனுவ மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் சிவகுமாரை வலுக்கட்டாயமாக சோதனையிட்டதில் அவரிடத்தில் ஒரு கிறனைட் மற்றும் உபயோகிக்க கூடிய துப்பாக்கி ரவைகள் என்பன இருப்பதைக் கண்டார்கள். இது பற்றி தம்பிராஜா கந்தசாமிக்கு அறிவிக்கப்பட்டது. சத்தியமூர்த்தியின் பாதுகாப்பில் சிவகுமாரை விட்டுவிட்டு, நிஸ்ஸங்கவும் கந்தசாமியும் மெதுவாக மேலே சென்றார்கள். கந்தசாமி படிகளின் உச்சியில் நின்ற அதே சமயம் நிஸ்ஸங்க பல்கனி பக்கமாகச் சென்று பிரதான அறையில் உள்ளே இருப்பவர்களுக்கு தெரியாத வண்ணம் அங்கேயே நின்று கொண்டார். அவர்கள் இருவரும் உள்ளே நடந்து கொண்டிருக்கும் கலந்துரையாடலை குழப்ப விரும்பவில்லை ஆனால் சிவகுமாரிடத்து கிறனைட் மற்றும் ரவைகள் இருப்பதைக் கண்டு அவர்கள் எச்சரிக்கை அடைந்திருந்தார்கள்.
உள்ளே இயல்பான நிலையில கலந்துரையாடல்; தொடர்ந்து கொண்டிருந்தது. மற்றும் அப்போதுதான் அது நடந்தது. நேரம் கிட்டத்தட்ட பி.ப7.20. விசு தனது பானத்தை அருந்தி முடித்துவிட்டு வெற்று கண்ணாடிக் குவளையை மேசையில் வைப்பதற்காக எழுந்தார். பின்னர் அவர் திரும்பி அமிர்தலிங்கத்தை பார்த்து “ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள் புலிகளாகிய நாங்கள்தான் அரக்கர்கள் என்று ஆனால் உண்மையில் நீங்கள் எல்லோரும்தான் உண்மையான அரக்கர்கள்” என்று சொன்னார். ரி.யு.எல்.எப் இன் மூவரும், விசு கேலி செய்கிறார் என்றே நினைத்தார்கள். அமிரும் சிவாவும் புன்னகை செய்த அதே சமயம், யோகேஸ்வரன் சத்தமாக சிரித்தார். உடனே விசு ஒரு துப்பாக்கியை உருவி அமிர்தலிங்கத்தை நோக்கிச் சுடத் தொடங்கினார். யோகேஸ்வரன் சத்தமிட்டபடி தனது கதிரையில் இருந்து எழுந்தார். அலோசியஸ் ஒரு துப்பாக்கியை வெளியே எடுத்து அவரை நோக்கி சுட்டார். சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த சிவசிதம்பரம் அதிர்ச்சியடைந்து எழுந்து நின்றபடி ‘வேண்டாம், வேண்டாம்…’ என சத்தமிட்டார். விசு அவரை நோக்கி சுட்டபோது அது அவரது வலது தோளில் பாய்ந்தது.
துப்பாக்கி சூட்டு சத்தத்தை கேட்ட நிஸ்ஸங்க உள்ளே எட்டிப் பார்த்தார். உள்ளே என்ன நடக்கிறது என்பதை கண்டதும் பலகணியின் கண்ணாடி ஊடாக அவர் சுட ஆரம்பித்தார். அவர் சுட்டு அவாகள் இரவரையும் காயப்படுத்தினார். அப்போது விசுவும் அலோசியசும் வெளியே ஓடினார்கள். கந்தசாமியும் துப்பாக்கி சூட்டு சத்தத்தை கேட்டிருந்ததால் துப்பாக்கியால் சுட்டபடி அவர்களை நோக்கி ஓடிவந்தார். காயமடைந்த விசுவும் அலோசியசும் திருப்பி சுட்டபடி படிகளில் இறங்கி கீழே ஓட முயற்சித்தார்கள், ஆனால் நிஸ்ஸங்கவிடம் இரண்டாவதாக மற்றொரு துப்பாக்கியும் இருந்தபடியால் சுற்றி வந்து சுட ஆரம்பித்தார். அவாகள் இருவரையும் அவர் கொன்றார். துப்பாக்கி சத்தத்தை கேட்டதுமே சத்திய மூர்த்தி சிவகுமாரை இழத்துப் பிடித்துக் கொண்டார். சிவகுமார் அவரிடமிருந்து விடுபடுவதற்காக கட்டிப் புரள ஆரம்பித்தான். தன்னை சுதந்திரமாக்கிக் கெண்ட அறிவு என்கிற சிவகுமார், முன்னர் தன்னிடமிருந்து பறித்தெ:டுத்த கிறனைட்டை கைப்பற்ற முயற்சித்தான்;. அவன் அதை எட்டுவதற்கு முன்பே ஓடி வந்த நிஸ்ஸங்க அவனை சுட்டு காயப்படுத்தினார். அப்போது சிவகுமார் ஓட முயற்சித்தான் ஆனால் நிஸ்ஸங்க திரும்பவும் சுட்டு அவனை கீழே வீழ்த்தினார். கொலைகாரர்கள் மூவரும் நிஸ்ஸங்கவினால் ஸ்தலத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
பாஸ்டர்ட்ஸ், பாஸ்டர்ட்ஸ்
மங்கையர்க்கரசி, சரோஜினி மற்றும் சேனாதிராஜா ஆகியோர் துப்பாக்கிச் சுட்டு சத்தம் கேட்டு பின்பக்க படிக்கடடு வழியாக மேலே ஓடினார்கள். இரத்தம் வழிந்தோட சலனமற்று அமிர்தலிங்கம் தனது ஆசனத்திலேயே இருந்தார். அவர் இறந்ததை அறியாத அவர் மனைவி அவரது தலைக்கு பின்னால் ஒரு சிறிய குஷன் தலையணையை வைத்து அவரை தாங்கிப் பிடித்துக் கொண்டார். இரத்த வெள்ளத்தின் நடுவே நிலத்தில் கிடந்தபடி செத்துக் கொண்டிருந்த யோகேஸ்வரன் “பாஸ்டர்ட்ஸ், பாஸ்டர்ட்ஸ்” என்று ஆங்கிலத்தில் முணுமுணுத்துக் கொண்டிருந்தார், அவரது அருகில் சரோஜினி மண்டியிட்டு அமர்ந்தார். சிவசிதம்பரம் பேச்சற்று வெறித்துப் பார்த்தபடி சுவரோடு சாய்ந்து கிடந்தார். அம்புலன்ஸ் வண்டிகள் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றன.
கொழும்பு சட்ட வைத்தியஅதிகாரி மருத்துவர் சல்காடோ, அமிர்தலிங்கம் மீதான பிரேத பரிசோதனையை நடத்தியபிறகு, தலையிலும் மார்பிலும் ஏற்பட்ட காயங்களால் மரணம் சம்பவித்ததாக அறிவித்தாh. துணை மருத்துவ அதிகாரி மருத்துவர் எல்பிஎல்.அல்விஸ் யோகேஸ்வரன் மீதான பிரேத பரிசோதனையை நடத்திய பிறகு இதயத்திலும் ஈரலிலும் துப்பாக்கி ரவையினால் எற்படுத்தப் பட்ட காயங்களின் விளைவாக மரணம் ஏற்பட்டதாக அறிவித்தார். சிவசிதம்பரம் உயிர் பிழைத்தார் மற்றும் அந்த மோசமான இரவில் என்ன நடந்தது என்பதற்கான ஒரே சாட்சி அவர். அதற்கு பல வருடங்களுக்குப் பிறகு 2000 ஆண்டில் சிவா மரணமடைந்தார்.
இதுதான், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், வெற்றிவேலு யோகேஸ்வரனுடன் சேர்த்து தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட சோகமான கதை. லசந்த விக்ரமதுங்க, இந்த சம்பவம் பற்றி அப்போதைய எதிர்கட்சித் தலைவர் திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கு அறிவித்ததும், அவர் அவசர அவசரமாக யார் இதை செய்தார்கள்? எனக் கேட்டார். அது எல்.ரீ.ரீ.ஈ எனச் சொல்லப்பட்டதும் ஆறுதலடைந்து நிம்மதி பெருமூச்சு விட்ட திருமதி. பண்டாரநாயக்க, எந்த ஒரு சிங்களவரும் அவரை கொலை செய்யாதது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றாராம். அநேக சிங்களவர்கள் அமிர்தலிங்கத்தின் அரசியலை வெறுத்திருக்கலாம், ஆனால் அவர்கள் யாரும் அவரைக் கொல்லவில்லை. முன்னர் அவரை ஒரு பெரிய வீரன் எனக் கருதிய தமிழ் இளைஞர்களாலேயே அவர் கொல்லப்பட்டார்.
நிஸ்ஸங்க திப்பொட்டுமுனுவ
![]()
இந்த துயரம் தோய்ந்த படுகொலை சரித்திரத்தில் ஒரே வீரனாக கருதப்படுபவர் சிங்கள காவல்துறை உத்தியோகத்தரான நிஸ்ஸங்க திப்பொட்டுமுனுவ, அந்த மூன்று கொலைகாரப் புலிகளையும் அவர் சுட்டுக் கொன்றார். அதுதான் சம்பத்துடன் தொடர்புடைய அனைத்து புலி கொலையாளிகளையும் சுட்டுக் கொன்ற முதலாவது சம்பவம், சிலவேளைகளில் ஒரே ஒரு சம்பவமாகவும் இருக்கலாம். எனினும் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் அகிய இருவரையும் தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்று அவர் ஆழமான வருத்தம் அடைந்திருந்தார்.
அமிர்தலிங்கத்தின் இரண்டாவத மகன் பகீரதன் இங்கிருந்து பிரித்தானியாவுக்கு பறப்பட்டுச் சென்றது ஜூலை 12ல். நிஸ்ஸங்கவும் அவருடன் கட்டுநாயக்கா விமானநிலையத்துக்கு கூடச் சென்றிருந்தார். அவருக்கு பிரியாவிடை சொல்லும்போது, அப்பாவை பற்றி; கவலைப்பட வேண்டாம் என்று மகனுக்கு உத்தரவாதமளித்ததுடன் தனது உயிரைக் கொடுத்தாவது அவரைப் பாதுகாப்பேன் எனவும் நிஸ்ஸங்க சொல்லியிருந்தார்.
ஜூலை 13ல் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டு விட்டார். பகீரதன் மரணத்தின் பின் ஜூலை 15ல் ஸ்ரீலங்காவுக்கு திரும்பி வந்தார். விமான நிலையத்தில் அவருக்காக காத்திருந்த நிஸ்ஸங்க அவரது காலில் விழுந்து, அவருக்கு வாக்கு கொடுத்தபடி அமிர்தலிங்கத்தை பாதுகாக்க முடியாமற் போனதுக்காக தன்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டாராம். இதை என்னிடம் சொல்லும்போது பகீரதனின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
அமிர்தலிங்கம் கொலை செயயப்பட்ட 21 வருடங்களின் பின் சப்பிரகமுவா மாகாணத்தில் உணர்ச்சிப் பிரவாகமான ஒரு மிள் சந்திப்பு நடைபெற்றது. திருமதி அமிர்தலிங்கம் மற்றும் கலாநிதி பகீரதன் அமிர்தலிங்கம் ஆகியோர் நிஸ்ஸங்க திப்பொட்டுமுனுவவை சந்திப்பதற்காக கேகாலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றார்கள். நிஸ்ஸங்க இப்போது ஓய்வு பெறறுவிட்டார் மற்றும் அவரது மனைவியான சியாமளா பிரமீளா குமாரி, தாயையும் மகனையும் வரவேற்றார். திருமதி அமிhதலிங்கம் மற்றும் பகிரதன் ஆகியோர் நிஸ்ஸங்கவை கட்டித் தழுவியதுடன் மற்றும் அவரைக் கண்டு வாய்விட்டு அழுதார்கள்.
|
IPKF மறைக்கபட்ட உண்மைகள் -
1) வடமராட்சியில் அன்றைய முள்ளிவாய்க்காலாக பிரபாகரனை சிங்கள படை வளைத்துகொள்ள, மில்லரின் தாக்குதலில் 20 ராணுவத்தினர் மட்டும் செத்தனர், வெறிகொண்ட ராணுவம் புலிகளை மொத்தமாக அழிக்க தொடங்க, புலிகள் மக்களை கேடயமாக்க , இந்திய மனிதாபிமான உதவி படகுகளை சிங்கள கடற்படை தடுக்க அதன் பின்னே விமானம் மூலம் பொருள் வீசி இந்தியா களம்புகுந்தது, இல்லாவிட்டால் புலி அன்றே முடிந்திருக்கும்
2) என்னது 1990க்கு முன் ஈழம் கிடைத்திருக்குமா? 2009ல் ஏன் கிடைக்கவில்லை? அடேய் மடையா, இந்தியா தலையிடவில்லை என்றால் இன்னொரு நாடு, அமெரிக்கா, பாகிஸ்தான் என இன்னொரு நாடு வந்து அழித்திருக்குமே அன்றி ஈழம் சாத்தியமில்லை
3) ஆமாண்டா, மதிவதனி உண்ணாவிரதம் இருந்தால் கடத்தி திருமணம் செய்த புலிகள் தலைவர், திலீபனை மட்டும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க செய்ததேன்? ஏன் காப்பாற்ற முயற்சிக்கவில்லை, மதிவதனிக்கு ஒரு நியாயம், திலிபனுக்கு சாவா?
4) புலேந்திரனும் குமாரப்பாவும் சிங்கள புத்தாண்டு அன்று 300 பேர் கொல்லபட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள், அன்றியும் அவர்கள் கைது செய்யபடும்போது சயனைடு இல்லை, பாலசிங்கம் சந்தித்த பின்னே சயனைடு கொடுக்கபட்டு கொல்லபட்டனர், கொன்றது யார்?
5) ஆரம்பத்தில் ஆரத்தி எடுத்த மக்களை பின் இந்திய அமைதிபடைகு எதிராக திருப்பி அழிவினை கொடுத்தது யார்? பெண்கள் உள்ளாடையில் குண்டு அனுப்பினால் என்ன செய்வது?
6) இந்திய ராணுவத்தினர் 1500 பேர் சாகவில்லையா? கைகளை கட்டிய எமது ராணுவம் அழிவினை குறைத்தது
7) சரி அப்படி மாவீர புலிகள் ஏன் 1995ல் யாழ்பாணத்தை விட்டும், 2009ல் உலகை விட்டும் மறைந்தனர், அவ்வளவு தானா வீரம்????
8) இந்தியா கொடுத்த உரிமைகளையும் கிழித்து எறிந்துவிட்டு, மக்களை அனாதையாக்கி அழித்த இயக்கத்திற்கு வக்கலாத்து வேறா?
9) ராஜிவ் இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் கொடுமை நடந்திருக்குமா? விட்டிருப்பாரா?
ஈழ போராளியின் ஈரமனமும் கோரமரணமும்
இந்திய அமைதிபடை ஆக்கிரமிக்கவோ அல்லது கற்பழிப்பதையோ நோக்கமாக கொண்டு ஈழத்தில் காலடி எடுத்துவைக்கவில்லை, பலவிதமான உலக நெருக்கல்கள், ஐ.நா அமைதிபடையோ அல்லது அமெரிக்க படையோ இலங்கையில் காலூன்றுவதை தடுக்க அவசர அவசரமாக செய்யபட்ட ஏற்பாடு.
இலங்கையில் அமைதி திரும்புவதை பெரிதும் விரும்பிய பத்மநாபா, இந்திய படையினரோடு அமைதி திரும்ப கடும் ஒத்துழைப்பு கொடுத்தார்.
இந்திய இலங்கை ஒப்பந்தபடி இலங்கையின் 4 மாகாணங்களில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயக நிலமென்றும், அது இரண்டையும் இணைத்து ஒரே மாகாணமாக்கி ஒரு முதல்வரையும், அதாவது "தமிழ்" முதல்வரையும் வைக்கவேண்டும் என ஏற்பாடாகி இருந்தது.
இப்படியாக வடக்கும் கிழக்கும் இணைந்த ஈழமாநிலம் உண்டாயிற்று.
அதாவது இந்தியாவில் தமிழ்நாடுபோல இலங்கையில் ஈழம், அதுவரை கிடைக்காத ஈழமாநில அந்தஸ்து, இந்தியாவால் அந்நேரம் உதவகூடிய ஆக உச்சகட்ட உதவி அவ்வளவுதான், காரணம் உலக காலநிலை அப்படி.
வங்கம் பிரிந்த்தால் அடிபட்ட பாம்பாக உறுமிய பாகிஸ்தான், அப்பாம்ம்பிற்கு பால்வார்க்கும் அமெரிக்கா எல்லாம் எப்படியாவது காஷ்மீரை பிரித்தெடுக்க கங்கணம் கட்டிகொட்டு விரதமிருந்தன.
ஆனால் புலிகளுக்கு பிடிக்கவில்லை, மக்களில் ஒரு பிரிவினருக்கும் பிடிக்கவில்லை, ஆண்டவனுக்கும் அவர்களுக்கும் மட்டுமே காரணம் தெரியும்.
இன்றும் தமிழ்தேசியம் பேசுவோர், குதிரைக்கு அடியில் சிலைவைப்போர், முஷ்டி முழக்குவோ, அண்ணனே...... என கதறுவோர் இவர்கள் யாரிடமாவது ஏன் ஈழத்தில் வடக்கு தமிழரையும், கிழக்கு தமிழரையும் இணைக்ககூடாது என கேளுங்கள், பதிலிருக்காது.
யாரிடமும் இருக்காது, இவர்கள் புரிந்துகொண்டது யாழ்பாணம், ஈழம்,பிரபாகரன், இந்தியா,சோனியா, கலைஞர் (இப்பொழுது கனிமொழி) துரோகம் அவ்வளவுதான், அதனை தாண்டி யோசிக்கமாட்டார்கள்.
வடக்கும் தமிழர்கள், கிழக்கும் தமிழர்கள் இரண்டையும் இணைத்தால்தான் என்ன? அது கூடாதாம். தனி ஈழம் வேண்டுமாம் அதில் இரண்டு மாநிலமும் தனி தனியாக இருக்குமாம்.
டெல்லிக்கு இது மிகவித்தியாசமாக தெரிந்தது, வாய்விட்டு கேட்டார்கள், "நாளை ஈழம் அமையும் பட்சத்தில் இரண்டு ஈழமாக அமைப்பீர்களா?" யாரிடமும் பதில் இல்லை.
ஈழம்தானே, தனி தமீழீழம் தானே, அதில் என்ன கிழக்கு வடக்கு பிரிவினை? என கேட்டால் யாரிடமும் பதில் இல்லை.
புலிகள் இதனை ஏற்க மறுத்தார்கள், மக்களில் ஒரு ஆதிக்கபிரிவும் அவர்களோடு இணைந்தது, விளைவு ஈழம் இந்தியாவின் வியட்நாம் ஆயிற்று. புலிகள் இந்தியராணுவம் மோதல் தொடங்கியது.
புலிகளை ஒரு தீவிரவாத இயக்கமாக நினைத்துத்தான் இந்திய ராணுவம் களத்தில் சும்மா குதித்தது, அதன்பின் புரிந்துகொண்டது இந்திய ராணுவத்தை விட புலிகளிடம் இருக்கும் தொலைதொடர்பு வசதியும், சில வெடிமருந்துகளும் மிக நவீனமானவை. ஒரு பெரிய அரசாங்க ராணுவ தயாரிப்பு, அந்த அரசின் அனுமதி இல்லாமல் இவை புலிகளுக்கு கிடைத்திருக்காது, ஆனால் அந்த நாடு ஜெயவர்த்தனேவின் இலங்கை அல்ல.
சுதாரிப்பதற்குள் இந்திய ராணுவம் அடிமேல் அடிவாங்க ஆரம்பித்தது, கழுகு வழிகாட்ட புலி பாய்ந்தது, ஒரு பக்கம் உலகெல்லாம் ஊடகங்கள் இந்தியராணுவம் கற்பழிப்பில் ஈடுபடவே வாத்சாயனர் புத்தகங்களை எல்லாம் கொண்டு சென்றார்கள் எனும் அளவிற்கு உலகெல்லாம் போட்டுதாக்கின.
ஒரு செய்தி 10 ஆக்கபட்டது, களநிலமை இந்திய ராணுவத்திற்கு புதிது. ராணுவ யுத்தம் தெரியுமே தவிர கொரில்லா யுத்தம் பழக்கபடாதது. ரோந்துவரும் இந்திய கவசவாகனத்திற்கு சந்தோஷாக கைகாட்டும் பாட்டி, வாகனம் கடந்தபின் சுருக்குபையில் இருக்கும் ரிமோட்டை இயக்கி கன்னிவெடியை இயக்கி வாகனத்தை தூள் தூளாக்கினால்..
பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் அல்லது சிறுவர் (100 பேரில் ஒருவர்) எங்கு ஆயுதம் வைத்திருப்பார்கள் என தெரியாது, திடீரென சாலை சோதனையில் ஈடுபடும் இந்தியராணும் மீது கை குண்டு விழும்.
இப்படியாக பாதிக்கபடும் ராணுவம் அந்தபாட்டி கூட்டத்தையும், மாணவி கூட்டத்தையும் விசாரித்தால், அய்யகோ கற்பழிக்கும் கொடுமை பாரீர் என உலகெல்லாம் மீடியாக்கள் அலறும்.
5000பேர் தங்கும் மருத்துமனையில் ஒரு புலி சென்று படுத்துகொள்வார், சாலையில் செல்லும் இந்தியராணுவத்தை தாக்குவார். இந்தியராணுவம் மருத்துவமனையில் நுழையும், எங்கிருந்தோ குண்டு விழும், சகலமும் பஸ்பம்.
யாழில் மருத்துவமனை தகர்ப்பு, இந்தியபடை அட்டூழியம் என செய்திவரும், எல்லா ஊடகங்களும் அப்படித்தான் எழுதி தள்ளின, உண்மை வெகு தூரத்தில் இருந்தது.
சதாம் உசேனையும், மூமர் கடாபியையும் உலக வில்லன்கள் ஆக்கினார்கள் அல்லவா? போராளி யாசர் அராபத்தை தீவிரவாதி ஆக்கினார்கள் அல்லவா அப்படி.
இந்தியராணுவம் அடிவாங்க, புலிகளுக்கும் பாதிப்பு இருக்க, தமிழர்களும் மகா சிக்கலில் மாட்ட அப்பொழுது மிக பாதுகாப்பாக இருந்துகொண்டு செத்தவர் கணக்ககை குறித்துகொண்டிருந்தது இலங்கைராணுவம், அவர்களுக்கென்ன யார் செத்தாலும் சரி, இந்திய வீரனோ புலிகளோ இல்லை அப்பாவி தமிழரோ யார் செத்தாலும் மகிழ்ச்சி. அப்படித்தான் இருந்தது நிலை.
ஆனாலும் அவமானத்தோடு போராடிய இந்தியா, வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்திற்கு முதல்வருக்கு தேர்தல் நடத்தியது, புலிகள் தேர்தலில் நிற்கவில்லை (என்றுதான் அவர்கள் மக்கள்முன் நின்றார்கள்?), புலிகளுக்கு பயந்தும் யாரும் நிற்கவில்லை.
ஆனால் பத்மநாபா துணிந்து நின்றார், அந்த தேர்தலில் மகத்தான வெற்றியும் பெற்றார், மக்களின் ஆதரவு அப்படி. ஆனாலும் பதவியை தனது கட்சிக்காரர் வரதராஜ பெருமாளிடம் ஒப்படைத்துவிட்டு மக்கள் பணியிலே இருந்தார்.
பத்மநாபாவும், வரதராஜபெருமாளும் அழிக்கவேண்டிய அசுரர்களாக புலிகள் குறித்துகொண்டனர்.
30 ஆண்டுகாலம் தனிபோராட்டம் நடத்திய அராபத் இப்படித்தான் பாலஸ்தீன் சுயாட்சிக்கு ஒப்புகொண்டார், பெரும் அதிகாரம் இல்லைதான். ஆனால் வகுத்து வைத்த எல்லைகோடு இருக்கின்றது. காசாவும் மேற்குகரையும் பாலஸ்தீனருக்கு எனும் அடையாளம் இருக்கின்றது. இஸ்ரேல் எப்படியெல்லாம் நாடகமாடினாலும் அதனை அழிக்கமுடியவில்லை, முடியவும் முடியாது.
நாளை பாலஸ்தீனம் மலரும் பட்சத்தில் சிக்கல் இல்லை, இதனைத்தான் அன்றே ஈழத்தில் பத்மநாபா சொன்னார். இதுதான் தொலைநோக்கு,சாதுர்யம், வாய்பினை பயன்படுத்திகொள்ளும் சூட்சுமம்.
இன்று பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லீம்களை போட்டு விரட்டுகின்றனர்? எந்த உலகநாடு உள்நுழைத்திருக்கின்றது? ஒருவருமில்லை இப்படித்தான் ஈழநிலையும் இருந்தது, ஆனால் இந்தியா நுழைந்தது. அதனை விரட்டினார்கள் இந்தியா ஒதுங்கி கொண்டது.
இந்திய வழிகாட்டலில் ஈழமாகாணத்தை முன்னேற்றும் திட்டத்தில் கடுமையாக பத்மநாபா உழைத்துகொண்டிருக்கும் பொழுதுதான், பிரேமதாச அதிபர் ஆனார்.
எந்த சிங்கள ராணுவத்தை எதிர்த்து புலிகள் துப்பாக்கி தூக்கினார்களோ அந்த ராணுவத்தோடு இணைந்துகொண்டார்கள். (இதுதான் மேதகு தேசியதலைவரின் வழிகாட்டல்)
தனக்கு ஆகாதவர்கள் யாராயினும் ஒழித்துகட்டும் புலிகள், பத்மநாபாவிற்கு தற்கொலை போராளியை குண்டைகட்டி அனுப்பினார்கள். பத்மநாபாவை சந்திக்கும் முன் அவர் அகப்பட்டுகொண்டார், அவரை கொல்லும் நோக்குடன் துப்பாக்கி தூக்கியவர்களை தடுத்து சொன்னார் நாபா.
"நாம் உன்னை கொல்லமாட்டோம், நீனும் தமிழர்,நானும் தமிழர். உங்கள் தலைவரை போல எமக்கு தலமை ஆசையோ, உயிர்பயமோ இல்லை. சிங்களனுடனான போரில் என் உயிர் போகட்டும், தமிழன் கையால் இருக்க கூடாது" என மன்னித்து உயிரோடு திருப்பி அனுப்பினார் நாபா.
புலிகளுக்கு மனசாட்சி என ஒன்று இருந்தால் இந்த இடத்தில் எப்படி சிந்தித்து இருப்பார்கள்?, ஒரு பெரும் தூக்கு தண்டனை கைதி கூட சிந்தித்து பார்க்கும் இடம் இது, பத்மநாபா இவ்வளவு மகத்தானவரா? என்று ,புலிகளிடம் அதனை எதிர்பார்த்து என்ன செய்ய? சகதோழனின் கொலையில் தொடங்கிய இயக்கம் அது.
பத்மநாபாவோ மனிதர்களை நேசித்த மானிடநேயமிக்க போராளி
(இதே புலிதலமை என்ன செய்தது? 15 ஆண்டுகாலம் தன்னோடு இருந்த, தனக்கு அடுத்த தலமையான மாத்தையா மீது பொய்யான குற்றசாட்டு சொல்லபட்டபொழுது ஒப்பற்ற அர்பணிப்பான போராளியான மாத்தையாவை 500 போராளிகளோடு சுட்டுகொன்று எரித்தது)
தமக்கு பயிற்சியும்,பணமும்,உணவும்,இடமும் தந்த இந்தியாவினை புலிகள் மூர்க்கமாக எதிர்க்க ஆரம்பித்தார்கள், உலக நிலையும் மாற (ரஷ்யா சிதற்), இந்திய அரசியலும் மாற (விபி சிங்), தமிழகத்து அழுத்தமும் (திராவிட கழகங்கள், இன்று தமிழ்தேசியம் பேசுவோர் அன்று புலிகளுக்கு திராவிட இயக்கங்கள் செய்த உதவிகளை எல்லாம் மறந்துவிட்டார்கள்) கூட, இந்திய ராணுவம் வாபசானது.
இந்திய உடன்படிக்கை செல்லாது என பிரேமதாசா அறிவித்தார், இணைந்த வடக்கு கிழக்கு மறுபடியும் இரு மாகாணமாக பிரிக்கபட்டது. புலிகளும் அந்த ஆளும் தமிழ் வர்க்கமும் ஒப்பற்றமகிழ்ச்சி அடைந்தது.
இந்திய ராணுவம் 1500வீரர்களை இழந்து அவமானத்தோடு வெளியேறிய இந்தியா பத்மநாபாவோடு சென்னை வந்தது, எதிர்காலம் தெரியாத நிலையிலும், கம்யூனிச தாய்வீடான ரஷ்யா சிதறிய நிலையிலும் சொன்னார்.
"உண்மை சாகாது, வன்முறை வெல்லாது, ஒருகாலம் நிச்சயம் ஈழமக்கள் அமைதியாக வாழ்வார்கள்"
வரதராஜபெருமாளை ராஜஸ்தானில் தங்கவைத்த இந்தியா, பத்மநாபாவை வடஇந்தியாவில் தங்குமாறோ அல்லது வெளிநாட்டுக்கு செல்லுமாறோ கேட்க சென்னையிலே வாழதுணிந்தார்.
பாதுகாப்பான வாழ்க்கைத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார். ஆனால் 1500 இந்தியவீரர்களை இழந்தும் புலிகளுக்கு இந்தியாவில் தடை இல்லா காலமது.
அன்னை இந்திரா டெல்லியில் ஒரு அரசுவிழாவில் தன் அருகில் அமிர்தலிங்கத்தை அமரவைத்து "ஏதோ" சொல்லவந்ததை குறித்துகொண்டபுலிகள் பின்னாளில் அவரை கொன்றார்கள், அதுவும் அவர் வீட்டிற்கு சென்று, அவர் மனைவி கொடுத்த தேநீரை குடித்துவிட்டு அப்பெண்மணியின் தாலியை அறுத்தார்கள், அவர்கள் பயிற்சி அப்படி.
ஈழதேர்தலில் வெற்றிபெற்ற பத்மநாபாவை விடுவார்களா? ஈழம் என்றால் புலிகள், ஆட்சி என்றால் புலிகள், மக்களாவது? தேர்தலாவது? ஜனநாயகமாவது?
பிரபாகரனே சொன்னார் ஒரு பத்திரிகையாளரின் இப்படியான கேள்விக்கு "சுதந்திர தமிழ்ஈழத்தில் எம்மாதிரியான அரசு அமையும் என சொல்லமுடியுமா?"
மேதகு சொன்னார் "நிச்சயமாக சர்வாதிகார ஆட்சிதான்"
பின்னர் எப்படி பத்மநாபாவை விடுவார்கள்? பலமுறை முயற்சித்தார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியாக பின்லேடனுக்கு கிடைத்த மூர்க்கமான மனிதாபிமானமே இல்லாத ரம்ஸி யூசுப் எனும் கோடூரமனம் படைத்தவரைபோல (பின்னாளில் பின்லேடன் ஒழிக்கபட்டதிற்கும் இவனே காரணம்) புலிகளுக்கும் ஒருவர் கிடைத்தார்.
இயக்கபெயர் பாக்கியநாதன், பத்மநாபாவை ஒழித்துகட்ட அவருக்கு இட்டபெயர் ரகுவரன். இரண்டு பெயர் உண்டே தவிர கண் ஒன்றே ஒன்றுதான்.
அவரேதான் அவர் பெயர் சாகும்பொழுது "ஒற்றைகண் சிவராசன்".
எவ்வளவு தந்திரமாக பத்மநாபாவை கொன்றோழித்தார்கள் என்பது தனிபதிவாக காணவேண்டியது, அவ்வளவு தந்திரமும்,நன்றிகெட்ட தனமும் நிறைந்த கொலை அது, இதே ஜூன் 19 1990ல் நடந்த கொலை அது.
பலத்த பாதுகாப்போடு சென்னையில் இருந்தாலும் தமிழகம் வந்த அகதிகளுடனும், தமிழக அரசியல்வாதிகளினுடம், நல்ல தொடர்பில் இருந்தார் பத்மநாபா. அகதிகள் பிரச்சினையில் முன்னின்று குறைகேட்டு களைய முயற்சிப்பார்.
கலைஞர் அப்பொழுதுதான் முதல்வராக கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த நேரம், ஆனால் பத்மநாபா அவருக்கு நண்பர் என்றாலும், புலிகளை தமிழகத்தில் சுதந்திரமாக உலவவிட்டுருந்தார் அதற்கு அந்த கட்சியில் அப்போது பலமாக இருந்தபலபேர் காரணம்.
புலிகளின் தகவல் தொடர்பு, ஆயுதம்,பெட்ரோல், மருந்து என எல்லாம் டாஸ்மாக் சரக்குபோல மிக சரளமாக நடமாடிய நேரம். மத்திய அரசு புலிகளை முறைத்துகொண்டிருந்தபொழுதே கலைஞர் அரசு இதனை காணாமல்தான் விட்டு இருந்தது.
வரதராஜபெருமாளுக்கு மத்திய உளவுதுறை கொடுத்தபாதுகாப்பில் கொஞ்சம்கூட பத்மநாபாவிற்கு தமிழகத்தில் கொடுக்கபடவில்லை, பத்மநாபா அதை விரும்பவும் இல்லை.
இந்நிலையில் சிவராசன் அதாவது ரகுவரன் எனும் பெயருடன் வந்த ஒற்றைக்கண் சிவராசனுக்கு பத்மநாபாவை கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டான், இன்னொரு காலில்லாத புலி உறுப்பினர் செயற்கைகால் பொருந்த ராஜஸ்தானுக்கு வந்ததாக சொல்லிகொண்டு வரதராஜ பெருமாளை தேடிகொண்டிருந்தார்.
சென்னையில் ஒரு இளம்புலி உறுப்பினரை அகதிகள் முகாமில் ஊடுருவ செய்தார் சிவராசன், அந்த புலியும் மிக பிரமாதமாக நடித்தது, அதாவது தான் அகதியாய் வந்ததாகவும், படிப்பை தொடரவிரும்புவதாகவும், கார்ல்மாக்ஸின் பேரனாக மாற இருப்பதாகவும் கண்டவர்கள் முன்னால் எல்லாம் புலம்பிற்று.
மிக பரிதாபகரமான தோற்றத்துடன் இருந்த அவரை சில ஈழ ஆதரவாளர்கள் கண்டு பத்மநாபா உனக்கு உதவுவார் என ஆறுதல் கூறி அழைத்துசென்றனர்.
வந்தவன் கோலத்தை கண்டு உணவிட்டார் நாபா, சென்னையின் மிக முக்கிய கல்லூரியில் செர்த்து படிக்கவும் வைத்து, செலவினை பத்மநாபாவின் இயக்கம் ஏற்றுகொள்ளும் எனவும் அறிவித்தார். அதோடு அந்த சந்திப்பு முடிந்தது.
"எம்மை ஆதரிக்காதவரெல்லாம் எமது எதிரிகள், அவர்களை உயிரோடு விடகூடாது, இரக்கம் கூடாது, கொல்... கொல்" என மனதை இறுக்கும் பயிற்சிபெற்ற புலிக்கு நன்றிஉணர்வு எப்படி இருக்கும்?
இரண்டாம் கட்ட தலைவர்களுடன் நெருங்கி பழகிய புலி, பத்மநாபா நெருங்கிய தோழர்களுடன் நடத்தபோகும் கூட்டம்பற்றி சிவராசனுக்கு சொல்லிவிட்டு பத்மநாபா குழுவினருடனே தேநீர் குடித்துகொண்டிருந்தது.
மிக துல்லியமாக "துரோக" புலி கணித்துகொடுத்த நேரத்தில் கோடம்பாக்கத்திற்கு வெள்ளை மாருதிவேனில் பயங்கர ஆயுதங்களோடு வந்த சிவராசன் குழு வாட்ச்மேனை (அது அடுக்குமாடி வீடு) கொன்று உள்புகுந்து பத்மநாபா உள்பட 17 பேரை கண நேரத்தில் சுட்டுகொன்று மின்னல்வேகத்தில் வெளியேறியது.
பெரும் கனவுகளோடு லண்டன் உல்லாச வாழ்க்கையை விட்டு ஈழத்திற்கு போராட வந்த அந்த மேதை கோடம்பாக்கத்தில் பிணமானார், அவர் சாம்பல் கூட அவர் நேசித்த ஈழத்தில் பரவ இறைவன் அனுமதிக்கவில்லை.
அவசரமாக வேதாரண்யம் சென்று தப்பிக்க சென்ற சிவராசன் மறித்த 3 போலிசாரை தாக்கி பின் கைதுசெய்யபட்டதும், உயர் அரசியல் அழுத்தங்களால் அவன் விடுவிக்கபட்டதாகவும் அதிகாரபூர்வமில்லா தகவல் உண்டு.
புலிகளின் தமிழ்க நடுமாட்டத்தை கடும் வெறுப்புடன் கண்காணித்த மத்திய அரசு, சட்டம் ஒழுங்கை காப்பாற்றாத தமிழக அரசு என அறிவித்து கலைஞர் அரசை டிஸ்மிஸ் செய்தது.
எம்.ஜி.ஆர் எனும் பெரும் சக்திக்குபின் அப்பொழுதுதான் ஆட்சிக்கு வந்திருந்த கலைஞருக்கு எப்படி இருந்திருக்கும்? மனிதர் அன்றே வெறுத்துவிட்டார், இவ்வளவிற்கு பத்மநாபா படுகொலை வழக்கு என்று ஒன்றோ அல்லது விசாரணை என ஒன்றோ கிடையாது.
அவ்வளவு சலுகை புலிகளுக்கு, வந்தார்கள் சுட்டார்கள், சென்றார்கள். இறந்ததில் 3 சென்னை தமிழரும் உண்டு.
பராரியாய் பாமரகோலத்தில் படிப்பிற்காய் வந்ததாக பத்மநாபாவை காட்டிகொடுத்த புலி பின் புலிகள் இயக்கத்தில் கவுரவிக்கபட்டது, சிவராசன் பெரும் ஹீரோவாக கொண்டாடபட்டார்.
கொன்றவர்கள் புலிகள்தான் என பலர் சொன்னபொழுதும் வழக்கம் போல புலிதலமை சொன்னது "எமது விடுதலையின் தடைகல் அகற்றபட்டது"
ஈழத்தின் படிக்கல்லான பத்மநாபாவை தடைக்கல் என வர்ணித்த புலிகள் அதன் பிறகும் திருந்தவில்லை, மிக சரியாக 11 மாதத்தில் ராஜிவ்காந்தியை வீழ்த்தினார்கள்.
தமிழகம் அவர்கள் விரும்பியவர்களை கொல்லும் காடாக மாறிற்று, பத்மநாபா கொலையோடு தமிழகத்தில் புலிகளை ஓடுக்கியிருந்தால் ராஜிவ் கொல்லபட்டிருப்பதை தடுத்திருக்கலாம் என்பதும் தியரி. பத்மநாபா கொலையில் ஒரு தடையோ கண்டனமோ பெறாத தைரியம்தான் அவர்களை ராஜிவ் வரை நீளச்செய்தது.
ராஜிவ் கொலை வழக்கு தீவிரமாக விசாரிக்கபடும் பொழுதுதான், பத்மநாபா கொலை உண்மையும் வெளிவந்தது. ஆனால் 1990ல் "ரா" முழு பத்மநாபா கொலை சிவராசன் சரித்திரத்தையே தெரிந்து வைத்திருந்ததை பின்னாளில் சிபிஐ இடம் கூடம் தெரிவிக்கவில்லை, இதுதான் "ரா".
தெய்வம் நின்று கொல்லும் அல்லவா?
அசட்டு தைரியத்தில், என்ன ஆட்டம் போட்டாலும் தமிழகம் பின்வரும் என்ற திமிரில் சிவராசன் ராஜிவை வீழ்த்த, மத்திய போலிசார் மிக திறமையாக உண்மைய கண்டறிந்தனர், சிவராசனும் தற்கொலை செய்துகொண்டான், பெரும் கொலைகாரனான அவன் ராஜிவ்கொலைக்குபின்னும் ராஜஸ்தானில் வரதராஜ பெருமாளை கொல்லும் திட்டத்தோடுதான் வடக்குநோக்கி நகர்ந்தான், அவ்வளவு வெறி.
நளியின் வாழ்க்கை, பேரரிவாளனின் பரிதாபம், அன்னை லூர்தம்மாளின் தீரா சோகம், தமிழக முழுக்க தி.க பிரமுகர்களுக்கு இன்றும் மறைமுக கண்காணிப்பு என எல்லா சோகங்களுக்கும் காரணகர்த்தா இந்த சிவராசன்.
ராஜிவ் கொலையோடு கொல்லபட்ட ஹரிபாபு, நமது பகுதி ஆ.திருமலாபுரத்துக்காரர் இன்ஸ்பெக்டர் ராஜகுரு குடும்பம் வரை இவனால் பாதிக்கபட்டது, பெங்களூரில் தனக்கு இடமளித்த ரங்கநாத்தின் குடும்பம் நாசமானது வரை இவரது சாதனை அல்லது "போராட்டம்" நீளும்.
சிவராசனாலோ அல்லது அந்த இயக்கத்தாலோ யாராவது ஒருவர் வாழ்ந்தார்களா? அல்லது வாழவைக்கபட்டார்களா? (தமிழக அரசியல்வாதிகள் திடீர் தமிழ்போராளிகளை விடுங்கள்) என்றால் இல்லை, நிச்சயம் இல்லை. ஆதரித்த அனைவரும் காலி, இதுதான் அவர்கள் சித்தாந்தம். அவர்களுக்கு ஆக்க தெரியாது, அழிக்கமட்டும் தெரியும்.
ஒவ்வொரு படுகொலையின் பொழுதும் "தடைகல் அகற்றம்" என சொல்லும் புலிகள், ராஜிவ் கொலைக்கு அதுவும் சொல்லவில்லை. இறுதிவரை கனத்த மவுனம்.
இப்படியாக யாரும் எமக்கு வேண்டாம், சகலரையும் எதிர்த்து ஈழநாடு அடைவோம் என சகட்டுமேனிக்கு கொலைகளை புலிகள் புரிந்தனர்.
முன்பு உயிர்காத்த பத்மநாபா, வடமராட்சியில் உயிர்காத்த ராஜிவ், மணலாற்றில் உயிர்காத்த பிரேமதாசா என வரிசைகட்டி துரோகதனமாக கொன்றுவிட்டு அவர்களுக்கு இவர்கள் வைத்தபெயர் "துரோகிகள்".
சபாரத்தினம், ராஜிவ்,பத்மநாபா,பிரேமதாசா என எல்லோரையும் வரிசைகட்டி கொன்றுவிட்ட பின்னும் புலிகளுக்கு 20 ஆண்டுகள் காலம் இருந்தது? என்ன சாதித்தார்கள்? ஒன்றுமில்லை.
"நீங்கள் ஒரு முடிவிற்கும் வரமாட்டீர்கள், நாட்டை உருவாக்கி துப்பாக்கி குழுவிடம் கொடுப்பது எவ்வளவு பெரும் விபரீதம், உலகம் இதனை ஒப்பாது, அரசியலுக்கு திரும்புங்கள்" என்று 23 வருடங்களுக்கு முன்பே இந்தியா சொன்னதன் விளைவு பத்மநாபா,ராஜிவ் படுகொலை.
காலசூழல் மாறுவதை கூட கணிக்காமல் முள்ளிவாய்க்காலில் முடங்கி கடைசி நொடியில் ஆயுதங்களை மவுனித்து சிங்களரிடம் சரணடைய சென்றார்கள்.
இவர்கள் தந்திரமாக பத்மநாபாவை சாய்த்ததை போல சிங்களம் அவர்களை நயவஞ்சகமாக சரித்து இயக்க கதையை முடித்தது,
ஆனால் பத்மநாபா கொலையில் அதாவது அவருக்கு பாதுகாப்பு கொடுக்காமல், கொலை குற்றவாளிகளை கண்டும் காணாமல் விட்டு செய்த பாவம் பின்னாளில் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் கலைஞர் மீது பெரும் பழிச்சுமையாக விழுந்து கிடக்கின்றது, இதுதான் விசித்திரம்.
பத்மநாபாவின் நினைவுநாள் இன்று உண்மையான மானிடநேயமிக்க தமிழுணர்வாளருக்கு "ஈழதியாகிகள்" தினம். அந்தோ பரிதாபம் இந்த உண்மையான போராளிக்கு யாரும் அஞ்சலி செலுத்தமாட்டார்கள், கடல்கரையில் மெழுகுவர்த்தி பிடிக்கமாட்டார்கள், ஊர்வலம் செல்லமாட்டார்கள், அவர் கொல்லபட்ட வீடு சென்னையில்தானே இருக்கின்றது அந்த திசையை நோக்கி ஒரு ஊதுபத்திகூட கொழுத்தமாட்டார்கள்.
சமீபத்தில் தமிழனத்திற்கு வழிகாட்டி என ஹிட்லர் முதல் திப்புசுல்தான் வரை சம்பந்தமே இல்லாமல் சகட்டுமேனிக்கு பேனர் வைத்திருந்தார்கள். ஒருவேளை தமிழர்களுக்கு வழிகாட்டியருக்கு ஒரு பேனர் வைக்கவேண்டுமென்றால் நிச்சயம் பத்மநாபாவிற்குத்தான் வைத்திருக்கவேண்டும்.
அவர் எப்படி புலிகளோடு சேர்ந்து தற்கொலைகுண்டு, சயனைடு கடிக்காமல் அல்லது வெள்ளைகொடி பிடிக்காமல் மனிதநேயம், மக்கள் வாழ்வு என பேசி மக்களை திரட்டலாம். துப்பாக்கி,சயனைடு,கன்னிவெடி,தற்கொலை பெல்ட் இறுதியாக வெள்ளைகொடி .
இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் எப்படி தமிழரின் வழிகாட்டியாக இருக்கமுடியும்? முடியவே முடியாது. சிந்திக்க தெரிந்த தமிழன், சாகதீர்கள் அல்லது கொல்லாதீர்கள் என சொல்லும் தமிழன் எல்லாம் "துரோகி".
அப்படி ஒரு போராளி இருந்தான், ஒருங்கிணைந்த ஈழமாநிலத்தை 1 வருடம் ஜனநாயக "மக்கள் முதல்வராக" ஆண்டான் என்பது கூட நினைவு கூற ஆளில்லாத இனமான தமிழகமாக இது ஆகிவிட்டது.
பத்மநாபா கொல்லபட்டபொழுது தனக்கும் நாள்குறிக்கபட்டதை அறியா ராஜிவ்காந்தி இப்படி சொன்னார் "பத்மநாபாவும் எனது தாயார் இந்திராகாந்தியும் ஒரே நாளில் அதாவது நவம்பர் 19ம் தேதி பிறந்தவர்கள், இருவரும் ஈழமக்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தவர்கள், அவர்களை வாழவைக்க எண்ணியவர்கள்"
மிக நிதர்சனமான உண்மை இது.
இந்திராகாந்தியும், பத்மநாபாவையும் தவிர உண்மையாக ஈழமக்களை நேசித்தவர்கள் யாருமில்லை.
அப்படி நேசித்திருந்தால் முள்ளிவாய்க்கால், இனப்படுகொலை, கடலில் ஈழதமிழர் படகு, வடக்கில் ராணுவ குவியல் போன்ற வார்த்தைகளுக்கும் அது கொடுத்த கொடுத்துகொண்டிருக்கும் எண்ணற்ற வலிகளுக்கு இடமிருந்திருக்காது.
தன்னலம் துறந்த மானுடநேயமிக்க போராளிகள் ஒருநாளும் மறைவதில்லை. உறுதியாக சொல்லலாம் அவர் "ஈழத்து சேகுவாரா".
Subscribe to:
Posts (Atom)
அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளினால்(எல்.ரீ.ரீ.ஈ) படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் எதிர்கட்சித் தலைவரான அவர் கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டபோது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் (ரி.யு.எல்.எப்) ஒரு தேசிய பட்டியல் பாரளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
இருந்ததுடன், தமிழ் அரசியலில் கடும் போக்காளராகவும் கருதப்பட்டார். அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் முருகேசு சிவசிதம்பரம் ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ் 1977 பாராளுமன்ற தேர்தலில், ரி.யு.எல்.எப் 18 ஆசனங்களை வென்றது, ஐதேக 141 ஆசனத்தை வென்றபோது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்ற ஆசனங்களின் தொகை 8 ஆக குறைவடைந்தது. இதனால் 168 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் ரி.யு.எல்.எப் பிரதான எதிர்கட்சியாக மாறியது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறும் முதலாவது ஸ்ரீலங்கா தமிழர் என்கிற பெருமையை அமிர்தலிங்கம் பெற்றார்.
ீ.ஈயினால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதை போன்ற நிலையிலேயே இருந்தார். அவரது நகர்வுகள் கட்டுப் படுத்தப்பட்டன. குறிப்பிட்ட சில வருகையாளர்களுக்கு மாத்திரம் அவரை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்திய இராணுவத்தின் வருகை வரைக்கும் யோகேஸ்வரன் ஒரு சூழ்நிலை கைதியை போலவே அடைபட்டுக் கிடந்தார். அதன் பின் அவர் கொழும்புக்குச் சென்று பம்பலப்பிட்டி,கொத்தலாவல டெரசில்; உள்ள ஒர உறவினரின் வீட்டில் வசித்து வந்தார். அதைத் தொடர்ந்த அவரது மனைவி சரோஜினியும் அவருடன் இணைந்து கொண்டார்.
எதிர்கொள்ள முடிவு செய்தார், அது தமிழர்களின் பாரிய ஒற்றுமைக்கான நலன்களுக்கு வேண்டி செய்யப்படவதாக அவர் எண்ணினார். எல்.ரீ.ரீ.ஈ அந்த விடயத்தில் உண்மையாகவே வேட்கையுடன் உள்ளதா என்பதை நிச்சயப்படுத்தும் வரை அந்த விடயத்தை மறைத்து வைக்க அவர் தீர்மானித்தார். எனவே பெப்ரவரி 1989ல் யோகேஸ்வரன் தனது சகபாடிகளிடம் தான் மலைநாட்டுக்கு ஒரு குறுகிய விஜயம் மேற்கொள்ளப் போவதாக சொல்லிவிட்டு ஒரு ஜீப் வண்டியில் தனது மனைவி சரோஜினியுடனும் மற்றும் நம்பிக்கையான ஒரு சாரதியுடனும் கொழும்பை விட்டுப் புறப்பட்டார். கண்டிக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் வசிக்கும் ஒரு உறவுக்காரரின் வீட்டில் சரோஜினியை இறக்கி விட்டு, பின்னர் அவர் வடக்கு நோக்கிப் பயணமானார். வவுனியா நகரத்திலிருந்து வடக்கே சில மைல்கள் தொலைவில் உள்ள பாண்டிக்குளம் என்கிற கிராமத்தில் உள்ள ஒரு இரகசிய இடத்தில் யோகேஸ்வரன் புலிகளைச் சந்தித்தார்.
ஒரு உயர்தர நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர் இராசையா அரவிந்தராஜா என்கிற விசு. 1983 ஜூலையில் நடந்த தமிழர் விரோத படுகொலைகளின் பின்னர் அவர் தனது உயர் படிப்பினைக் கைவிட்டு எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்தார். எல்.ரீ.ரீ.ஈயின் இரண்டாவது தொகுதி அங்கத்தவர்களுக்கு வட இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஜூவாலமுகியில் இந்திய இராணுவம் பயிற்சி அளித்தபோது அதில் ஒருவனாக விசு தனது ஆயுதப் பயிற்சியை பெற்றுக் கொண்டார்;.
ஈ தொடர்ந்தும் அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோர் வவுனியாவுக்கு வந்து பாண்டிக்குளத்தில் வைத்து எல்.ரீ.ரீ.ஈ தலைவரை சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தது. இடைவிடாத புலிகளின் அழுத்தத்தை தாங்க முடியாத யோகேஸ்வரன், அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோரை சமாதானப்படுத்தி புலிகளை குறைந்தது கொழும்பிலாவது சந்திக்க வேண்டும் எனக் கேட்டு அதற்கு சம்மதிக்க வைத்தார். யோகேஸ்வரன், நியாயப்படி நினைத்தது, முழுத் தமிழர்களிடையேயும் ஒற்றுமையை எற்படுத்துவதில் எல்.ரீ.ரீ.ஈ ஆர்வமாக உள்ளது, மற்றும் புலிகளுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வருவது ரி.யு.எல்.எப் புக்கும் நன்மை பயக்கும் என்று. யதேச்சையாக எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரன் சென்னையில் வைத்து கால்பந்து விளையாட்டு பரிபாஷையில், யோகேஸ்வரன் தன் பக்கமே பந்தை உதைத்து கோலைப் போடும் ஒரு மனிதர் எனக் குறிப்பிட்டாராம்.
ாவர். முன் கதவில் காவலிருந்த காவல்துறை உத்தியோகத்தரான சத்தியமூர்த்தி அந்த மூவரையும் சோதனை செய்யாமல் உள்ளே அனுமதித்தார். அவர்களின் வரவைப் பற்றி கந்தசாமிக்கு சத்தியமூர்த்தி அறிவித்ததும் அவர்களை யோகேஸ்வரனைச் சந்திக்க மேலே அனுப்பும்படி அவர் சொன்னார். விசு மற்றும் அலோசியஸ் மேலே சென்றபோது கீழ் படிக்கட்டின் அருகே அறிவு நிலையுறுத்திக் கொண்டார். யோகேஸ்வரன் மேலே தனது மனைவியுடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். புலிகள் வந்துவிட்டார்கள் என அறிவித்தல் வந்ததும் அவர் படிகளில் இறங்கிச் சென்று பாதி வழியலேயே விசுவையும் அலோசியசையும் சந்தித்தார். யோகி வராததையிட்டு யோகேஸ்வரன் ஏமாற்றமடைந்தாலும் விசுவையும் அலோசியசையும் வாழ்த்தி வரவேற்றார். அவர்கள் அமர்ந்து பேசத் தொடங்கினார்கள். சரோஜினி அவர்களுக்கு சாப்பிட ஏதாவது தயாரிக்கச் சென்றார். யோகேஸ்வரன் அங்கிருந்த வேலைக்காரப் பையன் ராஜூ மூலமாக கீழே, தனது மனைவி, சேனாதிராஜா மற்றும் சிவசிதம்பரம் ஆகியோருடன் சேர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அமிர்தலிங்கத்துக்கு ஒரு குறிப்பு அனுப்பினார். இந்திய தூதரின் விருந்துக்குச் செல்வதற்காக ஆடையணிந்து கொண்டிருந்த சிவாவும் அமிரும் மேல் தட்டுக்கு சென்றபோது, மங்கையர்க்கரசியும் சேனாதிராஜாவும் தொடர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

