Friday, 24 June 2016


25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்
- ஜ்ஜூலை 13, 1989 அன்றுதான், புகழ்பெற்ற ஸ்ரீலங்கா தமிழ் தலைவர்
A.amirthalingamஅப்பாபிள்ளை அமிர்தலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளினால்(எல்.ரீ.ரீ.ஈ) படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் எதிர்கட்சித் தலைவரான அவர் கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டபோது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் (ரி.யு.எல்.எப்) ஒரு தேசிய பட்டியல் பாரளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
அமிர்தலிங்கம், முன்னாள் ரி.யு.எல்.எப் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிவேலு யோகேஸ்வரனுடன் சேர்த்து 25 வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். புலிகளின் கொலையாளிகள் அமிர்தலிங்கம்  மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரைச் சுட்டுக்கொன்றபோதுகூட, புலிகளின் உத்தியோகபூர்வ தூதுக்குழுவுக்கும் மற்றும்; ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் அரசாங்கத்துக்கும் கொழும்பில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எல்.ரீ.ரீ.ஈயின் சுயரூபம் என்ன என்பதை அமிர்தலிங்கத்தின் படுகொலை உலகத்துக்கு பெருமளவு தெளிவாக எடுத்துக் காட்டியிருந்தது.
கொலை நடைபெற்ற சூழ்நிலையை விளங்கிக் கொள்வதற்கு, அந்த நேரத்தில் நிலவிய அரசியல் பின்னணி பற்றிய சில விபரங்களை அறியவேண்டியது அவசியம். ஜூலை 29,1987ல் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜூனியஸ் ரிச்சட் ஜெயவர்தன ஆகியோரால் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதின் விளைவாக, வடக்கு மற்றும் கிழக்கில் அமைதி காப்பவர்களாக இந்திய இராணுவத்தினர் அறிமுகப் படுத்தப்பட்டார்கள். இந்திய அமைதி காக்கும் படையாக (ஐ.பி.கே.எப்) நியமிக்கப் பட்டவர்களுக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ க்கும் இடையில் போர் மூண்டது.
இராணுவ ஆய்வுகள் தெரிவிப்பதன்படி, அதிக அழுத்தத்துக்கு ஆளான புலிகள் சுவாசிப்பதற்கு பிராணவாயு வேண்டி அந்த சமயத்தில் திணறினார்கள். ஸ்ரீலங்காவில் இந்திய இராணுவத்தின் பிரசன்னம் சிங்கள தேசியவாதிகள் மத்தியில் பெரிய சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது, அது ஒரு இறையாண்மை மீறல் என அவர்கள் கருதினார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரேமதாஸ,மிகக் குறுகிய பெரும்பான்மையுடன் ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தார். தான் தெரிவு செய்யப்பட்டால் இந்திய இராணுவத்தை திருப்பி அனுப்புவதாக அவர் வாக்குறுதி வழங்கியிருந்தார். ஜனதா விமுக்தி பெரமுனவினால் (ஜேவிபி) ஒரு வன்முறைப் பிரச்சாரமும் தலை தூக்கியிருந்தது. இந்தக் கட்டத்தில்தான் மரபு வழிகளை பின்பற்றாதவரான பிரேமதாஸ ஜேவிபி மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆகிய இருபகுதியினரையும் நோக்கி நேசக் கரம் நீட்டினார். அந்த வாய்ப்பினை ஜேவிபி அலட்சியம் செய்த அதேவேளை, திணறிக் கொண்டிருந்த எல்.ரீ.ரீ.ஈ அதை பற்றிக் கொண்டது. வடக்கிலும் மற்றும் கிழக்கிலும், இந்திய இராணுவம் எல்.ரீ.ரீ.ஈயுடன் யுத்தம் செய்து கொண்டிருந்த வேளையில், கொழம்பில் அரசாங்கத்துக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈக்கும் இடையில் பேச்சுக்கள் ஆரம்பமாகின, மற்றும் ஜனாதிபதி பிரேமதாஸ மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆகிய இரு பகுதியினருக்கும் பொதுவான ஒரு நோக்கமே இருந்தது. வித்தியாசமான காரணங்களுக்காக இரு பகுதியினரும் இந்திய இராணுவத்தை வெளியேற்ற விரும்பினார்கள்.
 எல்.ரீ.ரீ.ஈ உடன் அரசியல் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமானதை தொடர்ந்து  ஜனாதிபதி பிரேமதாஸ, இந்திய இராணுவம் ஸ்ரீலங்காவை விட்டு வெளியேற ஒரு காலக்கெடுவை நியமிக்கும்படி கோரிக்கை விடுக்க ஆரம்பித்தார். இந்த காரியத்தை கெடுக்கக்கூடிய ஒருவராக இரு பகுதியினரும் மனத்தால் உணர்ந்த நபர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் ஆவார்.  ரி.யு.எல்.எப் இன் செயலாளா நாயகம், இந்தோ - லங்கா ஒப்பந்தத்துக்கும் மற்றும் இந்திய இராணுவம் ஸ்ரீலங்காவில் இருப்பதையும் உறுதியாக ஆதரித்தவராவார். தனது வன்முறை மற்றும் அழிக்கும் திறன் என்பனவற்றால் எல்.ரீ.ரீ.ஈ ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தை பெற்றிருந்தாலும்,  வன்முறைத் தன்மையற்ற அரசியல் தலைவரான அமிர்தலிங்கம் தனது அரசியல் நல்லெண்ணம் மற்றும் அந்தஸ்து காரணமாக சர்வதேச ரீதியாக நற் சான்றுகளைப் பெற்றுள்ளார் என்கிற கருத்து நிலவி வந்தது. 1989ல், இந்தக் கட்டத்தில் இந்திய இராணுவத்தை ஸ்ரீலங்காவிலிருந்து  திருப்பி அனுப்பக்கூடாது என்று அமிர்தலிங்கம் நா வன்மையுடன் வாதிட்டதால், அரசாங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆகியோர் அடைந்துள்ள அச்சத்தின் ஒரு பகுதியை உணரக் கூடியதாக இருந்தது.
யாழ்ப்பாணம் பண்ணாகத்தை சேர்ந்த அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் ஆகஸ்ட் 26,1927ல் பிறந்தார். அவர்வசீகரத் தன்மையும் துடிப்பான இயக்கமும் கொண்ட அரசியல்வாதி, ஈழத்து காந்தி என அழைக்கப்படும் மதிப்புக்குரிய தமிழ் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் தலைமைத் தளபதியாக பல வருடங்கள் பணியாற்றியுள்ளார். தொழிலால் ஒரு வழக்கறிஞரான அமிர்தலிங்கம் 1956 முதல்1970 வரை வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினராகவும் 1977 முதல் 1983 வரை காங்கேசன் துறை பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1989 தேர்தலின் பின்னர் அவர் ரி.யு.எல்.எப் இனது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர்
அமிர்தலிங்கம் ஒரு காலத்தில் தமிழ் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானவராகamirthalingam funeralஇருந்ததுடன், தமிழ் அரசியலில் கடும் போக்காளராகவும் கருதப்பட்டார். அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் முருகேசு சிவசிதம்பரம் ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ் 1977 பாராளுமன்ற தேர்தலில், ரி.யு.எல்.எப் 18 ஆசனங்களை வென்றது, ஐதேக 141 ஆசனத்தை  வென்றபோது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்ற ஆசனங்களின் தொகை 8 ஆக குறைவடைந்தது. இதனால் 168 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் ரி.யு.எல்.எப் பிரதான எதிர்கட்சியாக மாறியது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறும் முதலாவது ஸ்ரீலங்கா தமிழர் என்கிற பெருமையை அமிர்தலிங்கம் பெற்றார்.
1983ம் ஆண்டின் தமிழர் விரோத படுகொலைகள் மற்றும் பிரிவினை வாதத்தை அனுமதிக்க மறுக்கும்  அரசியலமைப்பின் ஆறாவது சட்டத் திருத்தம் என்பனவற்றின் விளைவாக ரி.யு.எல்.எப் பாராளுமன்றத்தை புறக்கணித்ததால் அவர்களது ஆசனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அமிர்தலிங்கம் மற்றும் சில ரி.யு.எல்.எப் தலைவர்களும் சேர்ந்து சுயமாக நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு சென்றார்கள். பல தமிழ் போராளிக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் உந்துதல் பெற்றது. இந்தோ - லங்கா ஒப்பந்தம் ஏற்பட்டதன் காரணமாக ஒரு யுத்த நிறுத்தம் கொண்டுவரப்பட்டாலும் அது அதிக காலத்துக்கு நீடிக்கவில்லை. அதேவேளை ரி.யு.எல்.எப் மற்றும் ஏனைய போராளிக் குழுக்கள் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதுடன் தமிமீழம் என்கிற இலக்கையும் கைவிட்டன, அனால் எல்.ரீ.ரீ.ஈ மட்டும் தொடர்ந்து போராட்டம் நடத்தியது. இப்போது எல்.ரீ.ரீ.ஈ யின் பிரதான இராணுவ விரோதி இந்திய இராணுவமே தவிர ஸ்ரீலங்கா இராணுவம் அல்ல.
இதேவேளை தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு மற்;றும் கிழக்கு மாகாணசபைக்கு மிகவும் அதிருப்தியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. ரி.யு.எல்.எப் போட்டியிட மறுத்து விட்டதால், இந்தியா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை (ஈபிஆர்எல்எப்) சேர்ந்த, அண்ணாமலை வரதராஜப்பெருமாளை வடக்கு - கிழக்கு மாகாணசபையின் முதலாவது(அது மட்டுமே) முதலமைச்சராக நியமித்தது. 1989ல் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றபோது இந்தியாவின் கட்டாயத்தால் ரி.யு.எல்.எப்பும் போட்டியிட்டது. இந்தியா, ஈபிஆர்எல்எப், ரெலோ, மற்றும் ஈ.என்.டி.எல்.எப் போன்ற போராளிக் குழுக்களை ஒன்றுதிரட்டி மிதவாத ரி.யு.எல்.எப் உடன் சேர்ந்து ரி.யு.எல்.எப் கட்சியின் கீழ் அதன் சின்னமான கூரியனின் கீழ் போட்டியிட வைத்தது.
அமிர்தலிங்கம், மற்றும் அவரது சொந்த வழியில் அரசியலில் நன்கு பிரபலமான அவர் மனைவி மங்கையர்க்கரசி ஆகியோர் சென்னையிலிருந்து கொழும்புக்கு வந்தார்கள். இந்தியாவிற்கு சுயம் மேற்கொண்ட நாடுகடத்தலில் இருந்து முதலில் திரும்ப வந்தவர் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிவேலு யோகேஸ்வரன் ஆவார். இநதியாவில் தனது மனைவி சரோஜினியுடன் (பின்னர் யாழ்ப்பாண மேயராக பதவியேற்ற இவரும்கூட எல்.ரீ.ரீ.ஈயினால் கொல்லப்பட்டார்) வசித்து வந்த பிரபலமான யோகேஸ்வரன் இந்தோ - லங்கா ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு பல மாதங்களுக்கு முன்பே தனியாக யாழ்ப்பாணத்துக்கு திரும்பிவிட்டார். அப்படிச் செய்வதற்கு முன்பு சென்னையில் இருந்த எல்.ரீ.ரீ.ஈ உயர்மட்டத் தலைவரிடம் அதற்கான உத்தரவை அவர் கேட்டுப் பெற்றிருந்தார்.
யோகேஸ்வரன்
எனினும் யோகேஸ்வரன் யாழ்ப்பாணத்துக்கு திரும்பியபிறகு கிட்டத்தட்ட எல்.ரீ.ரyogeswaranீ.ஈயினால் வீட்டுக் காவலில்  வைக்கப்பட்டதை போன்ற நிலையிலேயே இருந்தார். அவரது நகர்வுகள் கட்டுப் படுத்தப்பட்டன. குறிப்பிட்ட சில வருகையாளர்களுக்கு மாத்திரம் அவரை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்திய இராணுவத்தின் வருகை வரைக்கும் யோகேஸ்வரன் ஒரு சூழ்நிலை கைதியை போலவே அடைபட்டுக் கிடந்தார். அதன் பின் அவர் கொழும்புக்குச் சென்று பம்பலப்பிட்டி,கொத்தலாவல டெரசில்; உள்ள ஒர உறவினரின் வீட்டில் வசித்து வந்தார். அதைத் தொடர்ந்த அவரது மனைவி சரோஜினியும் அவருடன் இணைந்து கொண்டார்.
அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் தம்பதியினர்கள் கொழும்புக்கு திரும்பியதுடன், அவர்களுக்கும் மற்றம் எனைய ரி.யு.எல்.எப் அங்கத்தவர்களும் தங்குவதற்கு பாதுகாப்பான ஒரு வீடு தேவைப்பட்டது. எல்.ரீ.ரீ.ஈ பகைமையை காட்டுவதால் அவர்களில் யாருக்கும் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பாக தங்க முடியவில்லை. எனவே பாதுகாப்பான ஒரு வீடு அவசியமாக இருந்தது. முன்னாள் மன்னார் பாராளுமன்ற உறுப்பினரான  பி. சூசைதாசன் அவர்களும் மற்றும் முன்னாள் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி. நீலன் திருச்செல்வம் அவர்களும் கொழும்பு - 7, பௌத்தாலோக மாவத்த(புல்லர்ஸ் வீதி) யில் உள்ள 342 - 2 ம் இலக்க வீட்டை அவர்களுக்காக ஒழுங்கு செய்தார்கள். அது ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மன்னாரை சேர்ந்த பிரபலமான ஒரு முஸ்லிம் வியாபாரிக்கு சொந்தமானதாக இருந்தது. முன்னாள் மகாவலி அபிவிருத்தி அமைச்சரான காமினி திசாநாயக்கா இந்திய - இலங்கை ஒப்பந்தத்தையும் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சமாதான முயற்சிகளையும் தீவிரமாக ஆதரித்தார். அவர் ஜேஆர். ஜெயவர்தனா அரசாங்கத்தின் கடைசிப் பகுதிகளில் சுயமாக நாட்டை விட்டு வெளியேறியிருந்த ரி.யு.எல்.எப் தலைவர்கள் நாட்டுக்குத் திரும்பி, பிரதான அரசியல் நீரோட்டத்தில் மீண்டும் சேர்ந்து கொள்வதற்கான முயற்சியில் முக்கிய பங்கை வகித்திருந்தார்.
1988ல் காமினி திசாநாயக்கா அமைச்சராக இருந்த காலத்தில், ரி.யு.எல்.எப் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். மகாவலி அமைச்சின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஆறு அங்கத்தவர்கள் மற்றும் காவல்துறையினர் அந்த வளாகத்தில் நிலை கொண்டிருந்தார்கள்.
ஒரு காலத்தில் நாவலர் மற்றும் தளபதி என்றெல்லாம் இளம் ஆதரவாளர்களால் அழைக்கப்பட்ட அமிர்தலிங்கம் பிற்காலத்தில் எல்.ரீ.ரீ.ஈயினரின் குற்றச்சாட்டுக்கு இலக்கானார். ஐக்கிய ஸ்ரீலங்காவுக்குள் பேச்சு வார்த்தை மூலமான ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளை, தமிழீழக் கனவை அவர் விலை பேசும் முயற்சியில் இறங்கியிருப்பதாக புலிகள் கருதினார்கள். ஒரு காலத்தில் முன்னணி தமிழ் தலைவராக இருந்த அமீர் அண்ணன்தான், தமிழீழ விடயத்துக்கு துணை செய்தவரும் மற்றும் இந்த பத்தியின் எழுத்தாளர் உட்பட ஒரு தலைமுறையை சேர்ந்த தமிழ் இளைஞர்களின் மனதில் பிரிவினைவாத கற்பனைக்கு தீ மூட்டியவரும் ஆவார். பின்னைய வருடங்களில் அவர் பின்பற்றிய நடைமுறைக்கேற்ற அணுகுமுறை இளைஞர்கள் குறிப்பாக தங்கள் இலட்சியத்தை அடைவதற்காக ஆயுதம் ஏந்தியவர்களின் மயக்கத்தை கலைத்தது.
துரோகி அல்லது காட்டிக் கொடுப்பவர்
இதன்படி கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து இருந்தவர்களை துரோகி அல்லது காட்டிக் கொடுப்பவன் எனப் பெயரிட்ட அமிர்தலிங்கம் அவர்களையே இப்போது எல்.ரீ.ரீ.ஈ மற்றும் அவர்களைப் போன்ற இதர தீவிரவாத இளைஞர்கள் துரோகி என அழைத்தார்கள். போராளிகளின் விரோதம் அமிர்தலிங்கத்தை நோக்கி திரும்பவதற்கான மற்றொரு காரணமும் இருந்தது, அது அவரது உண்மையான அல்லது கற்பனையான தமிழீழ காட்டிக் கொடுப்புடன் எந்தவித தொடர்பும் இல்லாதது. தமிழ் போராளித் தலைவர்களால் தங்கள் ஆயுதங்கள் மூலம் கட்டளைகளை பிறப்பிக்க முடியுமாக இருந்தது, ஆனால் அவர்களில் யாருக்கும் அமிர்தலிங்கத்தைப் போன்ற பரவலான தலைமைத்துவ சான்றுக்கான அங்கீகாரம் இருக்கவில்லை. பதவியில் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் மிகவும் மதிக்கப்பட்ட ஸ்ரீலங்கா தமிழ் தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள்தான். அவர் உயிரோடு இருந்தவரை அந்த சிம்மாசனத்தை எந்த ஏமாற்றுக்காரராலும் எளிதில் கைப்பற்ற முடியவில்லை. அமிர்தலிங்கத்தின் மரணத்தின் பின்னர்தான் எல்.ரீ.ரீ.ஈ கூட்டாளிகள் பிரபாகரனை தேசிய தலைவர் என அழைக்க ஆரம்பித்தார்கள். ஸ்ரீலங்காவில் தனக்காக காத்திருக்கும் ஆபத்தைப் பற்றி அமிர்தலிங்கம் நன்றாக அறிந்திருந்தார்.
இந்தியாவிலிருந்து ஸ்ரீலங்காவை நோக்கிய தனது நிரந்தரமான புறப்படுகைக்கு முன்னர் அமிர்தலிங்கம் சென்னையில் வைத்து முன்னாள் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினரான வீரசிங்கம் ஆனந்த சங்கரியை சந்தித்திருந்தார். உரையாடலுக்கு மத்தியில்,” ஸ்ரீலங்காவில் எங்களுக்காக என்ன தேக்கி வைக்கப்பட்டுள்ளது என்று எங்களில் சிலர் அறிவார்கள் சங்கரி! ஆனால் நாங்கள் எங்கள் மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் அதை எதிர்கொண்டே ஆகவேண்டும்” என்று அமிர்தலிங்கம் குறிப்பிட்டாராம். இந்தப் பின்னணியில்தான் 25 வருடங்களுக்கு  முன்பு அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலை நடந்தேறியது. அது நடைபெற்ற சமயம் நான் கனடாவிலிருந்தேன். எனினும் பலவேறு சந்தர்ப்பங்களில் ரி.யு.எல்.எப் உடன் தொடர்புள்ள, எம்.சிவசிதம்பரம், கலாநிதி.நீலன் திருச்செல்வம், திருமதி சரோஜினி யோகேஸ்வரன், போன்ற பல்வேறு நபர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தேன், மற்றும் திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், கலாநிதி.பகீரதன் அமிர்தலிங்கம், திரு.வி.ஆனந்தசங்கரி,மற்றும் திரு.பி.சூசைதாசன், மற்றும் திரு சோமசுந்தரம் (மாவை)சேனாதிராஜா அகியோருடன் இந்த சம்பவம் பற்றி விசாரித்துமிருந்தேன். அந்த சம்பாஷணைகளின் அடிப்படையிலும் மற்றும் இது தொடர்பான ஊடக அறிக்கைகள் மூலமாகவும் பெற்ற அறிவிலிருந்து இப்போது அந்த படுகொலையின் உடற்கூற்றியலை எழுதுகிறேன்.
புதுதில்லியின் கோபத்துக்கு அஞ்சி,அமிர்தலிங்கத்துக்கோ அல்லது இதர முக்கிய ரி.யு.எல்.எப் தலைவர்களுக்கோ இந்திய மண்ணில் வைத்து தீங்கிழைக்க எல்.ரீ.ரீ.ஈ முயற்சி செய்யவில்லை. (அதேவேளை தமிழ்நாட்டு மண்ணில் வைத்து ராஜீவ் காந்தியை கொல்வதற்கு இந்த எச்சரிக்கையை எல்.ரீ.ரீ.ஈ அலட்சியப் படுத்தியதால்,அப்படிச் செய்ததற்கான விலையை தொடர்ந்து கொடுக்க வேண்டியிருந்தது). அமிர்தலிங்கம் ஸ்ரீலங்காவுக்கு திரும்பியதும் அவர் அதன் இலக்காக மாறினார். தமிழ்  தலைவர்களை அவர்களது பாதுகாவலர்களிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியாக எல்.ரீ.ரீ.ஈ, ரி.யு.எல்.எப் உடன் நேசத் தொடர்பு முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தது. ரி.யு.எல்.எப் தலைவர்களிலேயே எளிதில் ஏமாறும் இயல்புள்ளவரான யோகேஸ்வரனை, எல்.ரீ.ரீ.ஈ தெரிவு செய்து அவரை அணுகியது. அன்பான யோகேஸ்வரன் எப்போதும் பையன்களில் சிலரினால் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களைக் கூட பொருட்படுத்தாது அவர்களிடத்து எப்போதும் ஒரு பரிவினைக் கொண்டிருந்தார். தமிழர்களிடத்து ஒரு பரந்த ஒற்றுமை ஏற்படுத்த வேண்டுமென்கிற ஆர்வம் உள்ளவராகவும் அதற்காக ரி.யு.எல்.எப் உடனும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ உட்பட அனைத்து தமிழ் குழுக்களிடையேயும் சமரசத்தை ஏற்படுத்த அயராது உழைத்தவர்.
சிவகுமார் அல்லது அறிவு
யோகேஸ்வரனை முதலில் அணுகியவர் அறிவு என்றழைக்கப்படும் சிவகுமார் என்கிற எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் ஆவார், அவர் கொழும்பல் மற்றொரு பெயரில் தங்கியிருந்து எல்.ரீ.ரீ.ஈக்காக உளவு பார்த்து வந்தார். வன்னியில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ தலைமை அவரைச் சந்தித்து  தமிர்களின் ஒற்றுமைக்கான கருத்து மற்றும் வழிகள் பற்றி கலந்துரையாட விரும்புவதாக தன்னிடம் தெரிவிக்கப் படடதாக அறிவு யோகேஸ்வரனிடம் சொன்னார். கொள்கையளவில் எப்போதும் ஒற்றுமையை எற்படுத்த ஆவலாக உள்ளவர் யோகேஸ்வரன். அதன் பின்னர் வவுனியாவில் உள்ள எல்.ரீ.ரீ.ஈயில் இருந்து விக்னா என அழைக்கப்படும் ஒருவர் தொலைபேசி மூலம் யோகேஸ்வரனைத் தெடர்பு கொண்டார். இயலுமானால் அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோரையும் அவருடன் வவுனியாவுக்கு அழைத்து வருமாறு யோகேஸ்வரன் கேட்கப்பட்டார். அப்போது சிவசிதம்பரம் ரி.யு.எல்.எப் இன் தலைவராகவும் மற்றும் அமிர்தலிங்கம் அதன் செயலாளர் நாயகம் ஆகவும் இருந்தார்கள்.
மனக்கிளர்ச்சி அடைந்த யோகேஸ்வரன் அந்தப் பணியை ஏற்றெடுக்கும் ஆபத்தைBalasingamஎதிர்கொள்ள முடிவு செய்தார், அது தமிழர்களின் பாரிய ஒற்றுமைக்கான நலன்களுக்கு வேண்டி செய்யப்படவதாக அவர் எண்ணினார். எல்.ரீ.ரீ.ஈ அந்த விடயத்தில் உண்மையாகவே வேட்கையுடன் உள்ளதா என்பதை நிச்சயப்படுத்தும் வரை அந்த விடயத்தை மறைத்து வைக்க அவர் தீர்மானித்தார். எனவே பெப்ரவரி 1989ல் யோகேஸ்வரன் தனது சகபாடிகளிடம் தான் மலைநாட்டுக்கு ஒரு குறுகிய விஜயம் மேற்கொள்ளப் போவதாக சொல்லிவிட்டு ஒரு ஜீப் வண்டியில் தனது மனைவி சரோஜினியுடனும் மற்றும் நம்பிக்கையான ஒரு சாரதியுடனும் கொழும்பை விட்டுப் புறப்பட்டார். கண்டிக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் வசிக்கும் ஒரு உறவுக்காரரின் வீட்டில் சரோஜினியை இறக்கி விட்டு, பின்னர் அவர் வடக்கு நோக்கிப் பயணமானார். வவுனியா நகரத்திலிருந்து வடக்கே சில மைல்கள் தொலைவில் உள்ள பாண்டிக்குளம் என்கிற கிராமத்தில் உள்ள ஒரு இரகசிய இடத்தில் யோகேஸ்வரன் புலிகளைச் சந்தித்தார்.
பாண்டிக்குளத்தில் வைத்துத்தான் தன்னை தொலைபேசியில் அங்கு வரும்படி அழைத்த விக்னாவின் அடையாளத்தை யோகேஸ்வரன் கண்டுபிடித்தார். விக்னா வேறுயாருமல்ல வவுனியா எல்.ரீ.ரீ.ஈ அரசியல் பிரிவு தலைவராக பதில் கடமையாற்றி வரும் பீற்றர் லியோன் அலோசியஸ் என்பவர்தான். அலோசியஸ் யோகேஸ்வரனை மனப்பூர்வமாக வரவேற்றாலும் அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோர் வராததையிட்டு  தனது ஏமாற்றத்தை தெரிவித்தார். அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோர் வந்ததும் அவர்களைச் சந்திப்பதற்காக எல்.ரீ.ரீ.ஈ துணைத் தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜா தயாராக இருப்பதாக அலோசியஸ் யோகேஸ்வரனிடம் தெரிவித்தார். அவர்கள் வர முடியாததுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட யோகேஸ்வரன் முதலில் தான் தனியாக வந்தது ரி.யு.எல்.எப் தலைவர்களுடனான சந்திப்பு தொடர்பான ஏற்பாடுகளை இறுதி செய்வதற்காக என்று தெரிவித்தார். அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோருடன் தான் விரைவிலேயே பாண்டிக்குளம் திரும்பி வருவதாக அவர் சொன்னார்.
எல்.ரீ.ரீ.ஈயினரால் யோகேஸ்வரன் நன்கு உபசரிக்கப்பட்டார், மற்றும் அவருக்கு சுவையான கறியுடன் கூடிய உணவு பரிமாறப்பட்டது. புலிகளினால் வழங்கப்பட்ட வரவேற்பையிட்டு மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்த யோகேஸ்வரன், மனைவி சரோஜினியையும் அழைத்துக் கொண்டு கண்டி வழியாக கொழுமபு திரும்பினார். கொழும்புக்கு திரும்பி வந்ததும் ஆரம்பத்தில் தான் மலைநாட்டுக்கு மட்டுமே போய்வந்ததாக யோகேஸ்வரன் காட்டிக் கொண்டார். இருந்தும் அவர் சொன்ன சில பொய்கள் அவரது கோரிக்கையில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. புத்திசாலியான ஆனந்தசங்கரிதான் யோகேஸ்வரனது வண்டிச் சக்கரங்களில் ஒட்டியிருந்த சிவப்பு நிற மண் அடையாளங்கள் மலைநாட்டை அடையாளப் படுத்துவதல்ல, மாறாக வடக்கை அடையாளம் காட்டுவது என்று கண்டுபிடித்தார். மேலும் யோகேஸ்வரன் மலைநாட்டு மரக்கறியோ பழங்களோ கொண்டு வராது வடக்கை சேர்ந்த பலாப்பழ வகையை கொண்டு வந்திருந்தார். சங்கரி, யோகேசிடம் அவரது பயணத்தை பற்றி தொடர்ந்து கேள்விகளை கேட்டு வற்புறுத்தியபோது, முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறப்பினர் தான் சில காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக வடக்கே சென்றிருந்ததாகச் சொன்னார். எல்.ரீ.ரீ.ஈ உடனான தனது சந்திப்பை பற்றி அவர் அப்போது தனது சகாக்களிடம் வெளியடவில்லை.
பாண்டிக்குளம்
எனினும் எல்.ரீ.ரீ.ஈ உடனான சந்திப்புக்குப் பிறகு யோகேஸ்வரன் புலிகளிடமிருந்து அதிக அழுத்தங்களை எதிர்கொள்ளத் தொடங்கினார். பாண்டிக்குளத்தில் எல்.ரீ.ரீ.ஈ யினரை சந்திப்பதற்கு அமிர்தலிங்கம் மற்றம் சிவசிதம்பரம் ஆகியோரை எப்போது அழைத்து வரப்போகிறீர்கள் என அடிக்கடி வவுனியாவில் இருந்து அவருக்கு தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமாக இருந்தன. கொழும்பில் இருந்த அறிவு என்கிற சிவகுமாரும் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு அதே விடயம் பற்றி வினாவிக் கொண்டிருந்தார். எனினும் யோகேஸ்வரனுக்;கு ரி.யு.எல்.எப் தலைவர் மற்றும் செயலாளரிடம் சொல்வதற்கு தயக்கமாக இருந்தபடியால் விடயத்தை இழுத்துக் கொண்டே போனார்.
ஒரு கட்டத்தில் சிவசிதம்பரம் சென்னைக்குச் சென்றார் அங்கு அவரது மனைவி, அவரது மகள் மற்றும் மருமகனுடன் வசித்து வருகிறார். யோகேஸ்வரன் இதைப்பற்றி எல்.ரீ.ரீ.ஈயிடம் சொன்னபோது, சிவசிதம்பரத்துக்காக காத்து காலத்தை வீணடிக்காமல் அமிர்தலிங்கத்தையும் கூட்டிக்கொண்டு வவுனியாவுக்கு வரும்படி அவரிடம் சொல்லப்பட்டது. இறுதியாக யோகேஸ்வரன் இரகசியமாக அமிர்தலிங்கத்திடம் என்ன நடந்தது என்று சொல்லி எல்.ரீ.ரீ.ஈ அவரை சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். திடீர் கோபத்துக்கு பெயர்பெற்ற அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் மீது ஆத்திரம் கொண்டு அவரை மோசமாக திட்டித்தீர்த்தார். தான் எல்.ரீ.ரீ.ஈயினை வடக்கில் வைத்து சந்திக்கவேண்டும் என்கிற யோசனயை முன்னாள் எதிhக்கட்சித் தலைவர் உறுதியாக நிராகரித்து விட்டார். யோகேஸ்வரன் இப்பொழுது பிரச்சினையில் மாடடிக் கொண்டார்.
இந்தக் கட்டத்தில் விடயங்கள் ஒரு வித்தியாசமான திருப்பத்தை அடைந்தன, ஜனாதிபதி பிரேமதாஸவின் அரசாங்கம் எல்.ரீ.ரீ.ஈயுடன் நேரடியாக பேச்சு வார்த்தையில் இறங்கியது. புலிகளின் அரசியல் ஆலோசகர், அன்ரன் ஸ்ரனிஸ்லாஸ் பாலசிங்கம் தலைமையில் மற்றும் அப்போதைய எல்.ரீ.ரீ.ஈ அரசியல் பிரிவு தலைவர் யோகி என்கிற நரேந்திரன் உட்பட புலிகளின் குழுவொன்று பேச்சக்களுக்காக கொழும்பு வந்தது. நேரடியாக பேச்சு வாhத்தையில் ஈடுபடாத பல புலி அங்கத்தவர்களும் அவர்களுடன சேர்ந்து கொழும்புக்கு வந்தார்கள். இவர்களுக்கு மத்தியில் விக்னா என்கிற பீற்றர் லியோன் அலோசியசும் இருந்தார். பேச்சுக்களை ஒரு கவசமாக பயன்படுத்திக்கொண்டு புலிகள் முறைப்படி கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்குள் ஊடுருவினார்கள். அலோசியஸ் தான் தங்குவதற்கு நாரகேன்பிட்டியாவில் நிரந்தரமாக ஒரு இடத்தை கண்டுபிடித்துக் கொண்டார். அவர் திட்டமிட்டுள்ள அமிர்தலிங்கத்துடனான சந்திப்பை ஏற்பாடு செய்வது பற்றி யோகேஸ்வரனுக்கு தொல்லை கொடுக்கத் தொடங்கினார். அமிர்தலிங்கம் மறுத்துவிட்டார் என்பதை சொல்லவும் இயலாமல் மற்றும் சொல்லவும் விரும்பாமல் யோகேஸ்வரன் ஒரு கடினமானதும் இறுக்கமானதுமான நிலைமையில் தத்தளித்தார். இதனால் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார். யோகேஸ்வரன் வைத்தியசாலையில் இருந்த வேளையில் விசு என்கிற மற்றொரு புலித் தலைவருடன் அலோசியஸ் அவரை வந்து பார்த்தார்.
அரவிந்தராஜா என்கிற விசு
யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சி பகுதியை சேர்ந்த வதிரியில் உள்ள amirthalingam nisang3ஒரு உயர்தர நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர் இராசையா அரவிந்தராஜா என்கிற விசு. 1983 ஜூலையில் நடந்த தமிழர் விரோத படுகொலைகளின் பின்னர் அவர் தனது உயர் படிப்பினைக் கைவிட்டு எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்தார். எல்.ரீ.ரீ.ஈயின் இரண்டாவது தொகுதி அங்கத்தவர்களுக்கு வட இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஜூவாலமுகியில் இந்திய இராணுவம் பயிற்சி அளித்தபோது அதில் ஒருவனாக விசு தனது ஆயுதப் பயிற்சியை பெற்றுக் கொண்டார்;.
பயிற்சியின் பின்னர் விசு ஸ்ரீலங்காவுக்கு திரும்பிவந்து அந்த நேரம் வன்னி பிரதேச எல்.ரீ.ரீ.ஈ தளபதியாக இருந்த மாத்தையா என்கிற கோபாலசாமி மகேந்திரராஜாவின் கீழ் பணியாற்றி வந்தார். மாத்தையா வன்னியின் கிளிநொச்சி,வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பாக இருந்த அதேவேளை மன்னார் தனியான ஒன்றாக வேறு தளபதியின் கீழ் அப்போது இருந்தது. விசு மாத்தையாவின் நெருங்கிய நம்பிக்கைக்கு உரியவராக மாறியிருந்தார்.
1987 ஜனவரி 5ல் எல்.ரீ.ரீ.ஈயின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் திரும்புவதை காண முடிந்தது. அதன் சில நாட்களின் பின்னர் ஸ்ரீலங்கா ஆயுதப் படையினர் வன்னியில் இராணுவ தாக்குதலை முடுக்கி விட்டனர். எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை திரும்ப கைப்பற்றுவதற்காக யாழ்ப்பாணத்தின் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட விரிவான தயாரெடுப்புகளை அடுத்து இது தொடரப்பட்டது. இந்த முன்னேற்றங்களின் விளைவாக, எதிர்பார்த்துள்ள இராணுவ நடவடிக்கையை எதிர்க்கும் நோக்குடன் வன்னியில் இருந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் யாழ்ப்பாணத்துக்கு இடம் பெயர்ந்தார்கள்.
விசு மாத்தையாவுடன் சேர்ந்து யாழ்ப்பாணம் சென்றார். பிரபாகரனால் எல்.ரீ.ரீ.ஈயின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட மாத்தையா பீற்றா - 2 என்கிற ஒரு விசேட உளவுத்துறை பிரிவு ஒன்றை உருவாக்கினார். விசு அதற்கு பொறுப்பாக நியமிக்கப் பட்டார். இந்திய இராணுவத்துக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈக்கும் இடையில் யுத்தம் வெடித்ததின் பின்னர், விசு தமிழ் நாட்டுக்கு கடந்து சென்றார். அங்கு அவர் சென்னையில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ அலுவலகத்தை நடத்த ஆரம்பித்தார்.
சாஸ்திரிகூழாங்குளம்
ஜூன் 1988ல் இந்திய இராணுவத்தின் 8வது மகார் படைப்பிரிவை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரை எல்.ரீ.ரீ.ஈ திரும்ப ஒப்படைத்தது, அவரை அவர்கள் வவுனியா நெலுக்குளத்தில் வைத்து பிடித்திருந்தார்கள். கொழும்ப மற்றும் சென்னை ஆகிய இடங்களிலிருந்து ஊடகவியலாளர்கள் சாஸ்திரிகூழாங்குளம் எனும் இடத்தில் நடந்த அந்த கையளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்கள். ‘த ஐலன்ட்’ பத்திரிகையின் பிரதிநிதியாக நானும்கூட அங்கு சமூகமளித்திருந்தேன். அப்போது இந்திய இராணுவ உளவுப் பிரிவில் இணைந்திருந்த நன்கு பிரபலமான ஆய்வாளரும் மற்றும் விமர்சகருமான கேணல்.ஆர்.ஹரிஹரனும் அப்போது அங்கு இருந்தார்.
அப்போதைய இந்திய அதிகாரிகளினால் சென்னையிலிருந்து வவுனியாவுக்கு இரண்டு எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் கஸ்ட்ரோ, அவர் பின்னாட்களில் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்புகளுக்கு பொறுப்பான எல்.ரீ.ரீ.ஈ தலைவராக மாறினார். மற்றவர் விசு. இதுதான் விசுவை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்த முதலாவதான ஒரே சந்திப்பு. அவர் பளபளப்பான தோற்றமுடைய உயரமான திடகாத்திர தேகத்தை கொண்டிருந்தார். நாங்கள் சில வார்த்தைகளை பரிமாறிக் கொண்டபோது, என்னை அங்கு கண்டது மகிழ்ச்சியளிப்பதாக விசு என்னிடம் சொன்னார், மேலும் இந்தக் கையளிப்புக்கு சாட்சிகளாக நானும் இக்பால் அத்தாஸ் அவர்களும் வரவேண்டும் என்று எல்.ரீ.ரீ.ஈ தலைமை விசேடமாக விரும்பியதாகவும் அவர் சொன்னார். விரும்பியதாகவும் அவர் சொன்னார்.
எல்.ரீ.ரீ.ஈயின் பீற்றா - 2க்கு தலைவரான இந்த விசுதான் அலோசியசுடன் சேர்ந்து யோகேஸ்வரனைக் காண வைத்தியசாலைக்கு வந்திருந்தார். விசு யோகேஸ்வரனை முன்னமே அறிவார். எல்.ரீ.ரீ.ஈ இரட்டையர்கள் யோகேஸ்வரனிடம் வருகை தந்தபோது முன்னாள் மன்னார் பாராளுமன்ற உறப்பினரான சூசைதாசனும் அங்கு இருந்தார். 55 வயதான முன்னாள் பாராளுமன்ற உறப்பினர் சுகவீனமுற்று வைத்தியசாலை கட்டிலில் படுத்திருந்த வேளையிலும் அந்த இரண்டு புலி உறுப்பினர்களும் அவரிடம் கடுமையாக பேசியதாக அவர் என்னிடம் சொன்னார். வெளிப்படையாக அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோருடன் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதையிட்டு எல்.ரீ.ரீ.ஈ எரிச்சல் அடைந்திருந்தது.
யோகேஸ்வரன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி புல்லர்ஸ் வீதியில் உள்ள வீட்டுக்குச் சென்ற பின்னும் அலோசியஸ் மற்றும் சிவகுமார் ஆகியோர் அந்த வீட்டுக்கே பலமுறை வருகை செய்துள்ளனர். விசு அவாகளுடன் வரவில்லை. அந்த வருகைக்கான வெளிப்படையான காரணம் யோகேஸ்வரனின் உடல்நிலை பற்றி நலம் விசாரிப்பது என்பதாக இருந்தது. இந்த வருகைகள் நீண்ட நேரம் நீடிக்கவில்லை மற்றும் அவை யோகேஸ்வரனை துயரத்திலும் மற்றும் விரக்தியிலும் ஆழ்த்தியருந்தன. இந்த வருகைகளின்போது வேறு எந்த ரி.யு.எல்.எப் அங்கத்தவரும் அங்கிருக்கவில்லை. துரதிருஸ்டமான ஐந்தாவது வருகை நடைபெற்ற ஜூலை 13 1989க்கு முன்பு இவ்வாறான நான்கு சந்திப்புகள் இடம்பெற்றன.
மங்;கையர்க்கரசி
ஒருமுறை அமிர்தலிங்கம் மற்றும் அவரது மனைவி மங்;கையர்க்கரசி அமிர்தலிங்கம் ஆகிய இருவரும் வீட்டுக்கு வெளியே ஒரு மாலைநேர நடை பயின்று கொண்டிருந்த சமயத்தில் எல்.ரீ.ரீ.ஈயினை சேர்ந்த இருவர் வந்தார்கள். அவர்கள் வேண்டுமென்றே அமிர்தலிங்கத்தை பார்த்து முறைத்தார்கள.; இதை பல வருடங்களுக்கப் பிறகு திருமதி. அமிர்தலிங்கம் கனடாவில் வைத்து என்னிடம் சொன்னார், அவர்களது அச்சுறுத்தும் பார்வையால் கலக்கமடைந்த அவர் தனது கணவரிடம் தனக்குப் பயமாக இருக்கிறது, ஏனெனில் அவர்கள் உங்களைப் பார்த்த விதம் குழப்பம் தருவதாக உள்ளது எனக் கூறினாராம். அதற்கு அமிர் “தவம் (தனது மனைவியை அமிர் செல்லமாக அப்படித்தான் அழைப்பதுண்டாம்) நீ எப்போதும் தேவையில்லாமல் கவலைப் படுகிறாய். அவர்கள் போராளிகள், அதனால் அவர்களது தோற்றம் கடினமானதாகத்தான் இருக்கும். அவர்களை அப்படியே இருக்க விடுவோம்” என மனைவியை கடிந்து கொண்டாராம்.
இதற்கிடையில் சிவசிதம்பரம் சென்னையில் இருந்து கொழும்பு திரும்பினார். எல்.ரீ.ரீ.amir-mankaiஈ தொடர்ந்தும் அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோர் வவுனியாவுக்கு வந்து பாண்டிக்குளத்தில் வைத்து எல்.ரீ.ரீ.ஈ தலைவரை சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தது. இடைவிடாத புலிகளின் அழுத்தத்தை தாங்க முடியாத யோகேஸ்வரன், அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோரை சமாதானப்படுத்தி புலிகளை குறைந்தது கொழும்பிலாவது சந்திக்க வேண்டும் எனக் கேட்டு அதற்கு சம்மதிக்க வைத்தார். யோகேஸ்வரன், நியாயப்படி நினைத்தது, முழுத் தமிழர்களிடையேயும் ஒற்றுமையை எற்படுத்துவதில் எல்.ரீ.ரீ.ஈ ஆர்வமாக உள்ளது, மற்றும் புலிகளுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வருவது ரி.யு.எல்.எப் புக்கும் நன்மை பயக்கும் என்று. யதேச்சையாக எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரன் சென்னையில் வைத்து கால்பந்து விளையாட்டு பரிபாஷையில், யோகேஸ்வரன் தன் பக்கமே பந்தை உதைத்து கோலைப் போடும் ஒரு மனிதர் எனக் குறிப்பிட்டாராம்.
அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினை கொழும்பில் வைத்துச் சந்திக்கத் தயார் என்று யோகேஸ்வரன் சிவகுமாருக்கு அறிவித்தார். ஒரு சந்திப்பை அவர்கள் வீட்டில் வைத்தே நடத்த ஏற்பாடு செய்யலாம் எனவும் அவர் சொன்னார். புலிகள் இந்த விடயத்தை ஆராய்ந்து அவர்களின் முடிவை அவருக்கு அறிவிப்பார்கள்; என சிவகுமார் யோகேஸ்வரனிடம் சொன்னாராம். 1989 ஜூலை 13 ந்திகதி வியாழக்கிழமை, காலை சுமார் 10 மணியளவில் அலோசியஸ் யோகேஸ்வரனை தொலைபேசியில் அழைத்து அவரது ஆலோசனை எல்.ரீ.ரீ.ஈக்கு சம்மதமாக உள்ளது. கூட்டம் அதேதினம் மாலை 6 மணிக்கு நடத்த திட்டமிடப் பட்டுள்ளதாகத் தெரிவிததார்.
இதை அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரத்திடம் யோகேஸ்வரன் அறிவித்தார். அதில் ஒரு சிக்கல் இருந்தது, அவர்கள் இருவரும் அப்போது இந்திய உயர் ஸ்தானிகராக கொழும்பில் இருந்த லேக்கான் லால் மெஹ்ரோத்ரா, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அன்றிரவு அளிக்கவிருக்கும் இராப்போசன விருந்தொன்றில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அந்த விருந்து இந்திய அமைச்சரவை செயலாளராக கடமையாற்றி பின்னர் பிரதம மந்திரியின் முதன்மைச் செயலாளராhக ராஜீவ் காந்தியின் கீழ் கடமையாற்றும், பிஜி.தேஷ்முக் அவர்களை கௌரவிக்கும் விதத்தில் நடத்தப்படும் ஒன்று. தேஷ்முக் இந்திய பிரதமரின் விசேட தூதுவராக அவரது கடிதமொன்றை ஜனாதிபதி பிரேமதாஸவிடம் கையளிப்பதற்காக அப்போது கொழும்புக்கு வந்திருந்தார். இரண்டு ரி.யு.எல்.எப் தலைவர்களிடமும்  பி.ப 6 மணியளவில் புலிகளைச் சந்தித்து விட்டு நேரத்தோடு துர்துவரின் விருந்துக்கு செல்லும்படி யோகேஸ்வரன் கேட்டுக் கொண்டார். அவர்களும் அதற்குச் சம்மதித்தார்கள்.
நரேந்திரன் என்கிற யோகி
கிட்டத்தட்ட பி.ப 4 மணியளவில் அலோசியசிடம் இருந்து ஒரு இரண்டாவது தொலைபேசி அழைப்பு யோகேஸ்வரனுக்கு வந்தது. அதில் அலோசியஸ், எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவு தலைவர் நரேந்திரன் என்கிற யோகி அந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளும் சாத்தியம் இருப்பதாக யோகேஸ்வரனிடம் தெரிவித்தார்.யோகி, அன்ரன் பாலசிங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ தூதுக் குழுவை சேர்ந்த இதர அங்கத்தவர்கள் யாவரும்  கலதாரி மெரிடியன் ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். எல்.ரீ.ரீ.ஈ அங்கு  பி.ப 6.30 க்கும் மற்றும் 7 மணிக்கும் இடையில் வருவார்கள் முன்பு அறிவித்ததை போல 6 மணிக்கு அல்ல எனவும் அலோசியஸ் தெரிவித்தார். மேலும் அவருக்கு யோகேஸ்வரனிடம் தெரிவிக்க ஒரு வேண்டுகோளும் இருந்தது. பாதுகாப்பு கடமையில் இருப்பவர்களிடம் எல்.ரீ.ரீ.ஈ குழு வந்ததும் அவர்களை மறைவாக உள்ள ஆயுதங்களை தேட நடத்தும் உடற் சோதனையோ அல்லது வேறு சோதனையோ நடத்த வேண்டாம் என்று சொல்லும்படி யோகேஸ்வரனிடம் கேட்கப்பட்டது, ஏனென்றால் யோகியை போன்ற ஒரு தலைவரின் அந்தஸ்துக்கு அந்தச் செய்கை அவரை அவமதிப்பது போல உணரச் செய்துவிடும் என்றும் சொல்லப்பட்டது.
யோகி பேச்சுக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதை கேட்டு யோகேஸ்வரன் மகிழ்ச்சியடைந்தார். அவர் உடனடியாகவே பாதுகாப்பு உதவி கண்காணிப்பாளர் தம்பிராஜா கந்தசாமியிடம் திட்டமிட்டபடி மாலை வரவிருக்கும் எல்.ரீ.ரீ.ஈ குழுவினரை சோதனையிட வேண்டாம், அதனால் அவர்கள் சங்கடப்படுவார்கள் என அறிவுறுத்தல் வழங்கினார். கந்தசாமி இந்த ஆட்களை நம்ப முடியாது ஐயா என மறுப்பு தெரிவித்தார். எதுவும் நடக்காது என யோகேஸ்வரன் அவருக்கு உத்தரவாதம் வழங்கினார். ஒரு மூத்த எல்.ரீ.ரீ.ஈ தலைவரை எதிர்பாhக்கிறோம்,மற்றும் தான் அவமானப்பட்டு விட்டதாக அவர் நினைக்கக் கூடாது.” அவர்கள் எங்கள் விருந்தாளிகள் ஆனபடியால் நாங்கள் அவாகளை மரியாதையாக நடத்த வேண்டும், அவர்கள் அவமானப் படுத்தப்பட்டதாக உணர்ந்தால் எதிர்காலத்தில் அவர்கள் வரமாட்டார்கள் மற்றும் எங்கள் கலந்துரையாடல் தோற்றுவிடும்” என யோகேஸ் அவரிடம் தெரிவித்தார். ஒருவித தயக்கத்துடன் அதற்கு சம்மதித்த கந்தசாமி தனது உதவியாளர்களுக்கும் அதை அறிவித்தார்.
யோகேஸ்வரனும் அவரது மனைவியும் அவர்களுடன் கூட சிவசிதம்பரமும் வீட்டின் மேல்தளத்தில்; குடியிருந்தவேளை, அமிர்தலிங்கம் தம்பதியினரும் மற்றும் மாவை சேனாதிராஜாவும் கீழ் தளத்தில் வசித்துவந்தார்கள். தற்சமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு மூத்த பாரளுமன்ற உறுப்பினராக உள்ள சேனாதிராஜா அப்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. அமிர்தலிங்கத்தின் இளைய மகனான ரவி என்றழைக்கப்படும் பகீரதன் மற்றும் அவரது மனைவி மலர்விழி ஆகியோர் புதிதாகப் பிறந்துள்ள அவர்களது மூத்த மகனுடன் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்திருந்தார்கள். அவர்களது புதிய பேரனை அமிர்தலிங்கம் தம்பதியினர் இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறார்கள். அவர்கள் 12ந் திகதி திரும்பவும் பிரித்தானியாவுக்கு திரும்பி விட்டார்கள். அமிர்தலிங்கம் அவரது மகன் லண்டனுக்கு போய்ச் சேர்ந்ததும் அழைக்கவிருக்கும் தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
பீற்றர் லீயொன் அலோசியஸ்
நேரம் பி.ப 6.40 ஆன பொழுது எல்.ரீ.ரீ.ஈ மூவர் குழு ஒரு மஞ்சள் நிற சீருந்துவில் வந்தார்கள். எதிhபார்ப்புக்கு முரணாக யோகி பிரசன்னமாகி இருக்கவில்லை. மூன்று புலிகளும் விசு என்கிற இராசையா அரவிந்தாஜா, விக்னா என்கிற பீற்றர் லீயொன் அலோசியஸ் மற்றும் சிவகுமார் என்கிற அறிவு ஆகியோர்களYogeswaran-2ாவர். முன் கதவில் காவலிருந்த காவல்துறை உத்தியோகத்தரான சத்தியமூர்த்தி அந்த மூவரையும் சோதனை செய்யாமல் உள்ளே அனுமதித்தார். அவர்களின் வரவைப் பற்றி கந்தசாமிக்கு சத்தியமூர்த்தி அறிவித்ததும் அவர்களை யோகேஸ்வரனைச் சந்திக்க மேலே அனுப்பும்படி அவர் சொன்னார். விசு மற்றும் அலோசியஸ் மேலே சென்றபோது கீழ் படிக்கட்டின் அருகே அறிவு நிலையுறுத்திக் கொண்டார். யோகேஸ்வரன் மேலே தனது மனைவியுடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். புலிகள் வந்துவிட்டார்கள் என அறிவித்தல் வந்ததும் அவர் படிகளில் இறங்கிச் சென்று பாதி வழியலேயே விசுவையும் அலோசியசையும் சந்தித்தார். யோகி வராததையிட்டு யோகேஸ்வரன் ஏமாற்றமடைந்தாலும் விசுவையும் அலோசியசையும் வாழ்த்தி வரவேற்றார். அவர்கள் அமர்ந்து பேசத் தொடங்கினார்கள். சரோஜினி அவர்களுக்கு சாப்பிட ஏதாவது தயாரிக்கச் சென்றார். யோகேஸ்வரன் அங்கிருந்த வேலைக்காரப் பையன் ராஜூ மூலமாக  கீழே, தனது மனைவி, சேனாதிராஜா மற்றும் சிவசிதம்பரம் ஆகியோருடன் சேர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அமிர்தலிங்கத்துக்கு ஒரு குறிப்பு அனுப்பினார். இந்திய தூதரின் விருந்துக்குச் செல்வதற்காக ஆடையணிந்து கொண்டிருந்த சிவாவும் அமிரும் மேல் தட்டுக்கு சென்றபோது, மங்கையர்க்கரசியும் சேனாதிராஜாவும் தொடர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அமிர்தலிங்கம் தனது மனைவியிடம் அவர்களது மகன் ரவி லண்டனில் இருந்து தொலைபேசி அழைப்பு விடுத்தால் தனக்கு சொல்லியனுப்புமாறு சொல்லிச் சென்றார்.  அமிரும் சிவாவும் உள்நுழைந்தபோது இரண்டு புலிகளும் எழுந்து நின்றார்கள். அமிர்தலிங்கம் அவர்களின் தோள்களில் தட்டிவிட்டு அவர்களுக்கு இடையில் இருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தார். சிவசிதம்பரம் சற்று தள்ளி அமர்ந்து கொண்டாh. யோகேஸ்வரன் எழுந்து சென்று தனது மனைவி தயாரிக்கும் தீன்பண்டங்களுக்கு உதவி செய்யச் சென்று விட்டார். சரோஜினி தக்காளி சான்ட்விச்சுகளும் மற்றும் பிஸ்கெட்டுகளும் கொண்டுவந்தார். அவர்களுக்கு குடிப்பதற்கு என்ன வேண்டும் என்று அவர் கேட்டார். இரண்டு புலிகளும் தங்களுக்க ஏதாவது மென்பானம் வேண்டுமென்றார்கள், அமிர்தலிங்கம் தனக்கு தேனீர் வேண்டுமென்றார், சிவாவும் மற்றும் யோகேசும் தங்களுக்கு எதுவும் வேண்டாமென்றார்கள். சரோஜினி இரண்டு பசன்பழப் பானங்களும் மற்றும் ஒரு கோப்பையில் தேனீரும் தயாரித்து வைத்துவிட்டு தனது அறைக்குப் போய்விட்டார்.
யோகேஸ்வரன் அறிமுகம் செய்து வைத்த பின்னர், தாங்கள் ரி.யு.எல்.எப் தலைவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாக புலிகள் தெரிவித்தார்கள். அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோரும் பிரதி உபகாரமாக அதே உணர்வுகளை பிரதிபலிக்கும் சொற்களை தெரிவித்தனர். இரண்டு தலைவர்களும் தமிழ் போராளிகளின் அர்ப்பணிப்ப மற்றும் தியாகம் என்பனவற்றை கண்டு தாங்கள் வியப்பும் மற்றும் மரியாதையும கொள்வதாகத் தெரிவித்தார்கள். இப்போது அனைத்து தமிழ் குழுக்களும ஒன்றாகச் சேர்ந்து தங்கள் ஐக்கியத்தை வெளிப்படுத்தி ஒரு பொதுவான அணுகுமுறையை தேர்ந்தெடுக்க வேண்டும் இல்லாவிட்டால் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தால் பெறப்பட்ட நன்மைகள் யாவும் வீணாகி விடும் என மேலும் தெரிவித்தார்கள். எந்தவிதமான அரசியல் ஏற்பாடுகளும் எல்.ரீ.ரீ.ஈக்கு பெருமையளிக்கும் விதத்திலேயே இடம்பெறும் என அமிர்தலிங்கம் புலிகளுக்கு உத்தரவாதம் அளித்தார்.
புலிகளின் தலைமை
இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை தான் புலிகளின் தலைமைக்கு அறிவிப்பதாக விசு சொன்னார். எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பாண்டிக்குளத்தில் வைத்து அவர்களைச் சந்தித்து இந்த விடயங்கள் பற்றி கலந்துரையாட ஆவலாக இருந்ததாகவும் மேலும் தெரிவித்த அவர், “நீங்கள் ஏன் வரவில்லை” என அமிர்தலிங்கத்தை பார்த்து நேரடியாகவே கேட்டார். யோகேஸ்வரனின் சுகவீனம் காரணமாகவும் மற்றும் சிவசிதம்பரம் இந்தியாவுக்குச் சென்றதாலும் விடயங்கள் தாமதமானதாக அமிர்தலிங்கம் பதிலளித்தார். மேலும் பாண்டிக்குளம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடியதும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ முகாம் உள்ள வெளிப்படையாக அறியப்பட்ட இடமாகவும் உள்ளதால் அங்கு வைத்து சந்திப்பை நடத்துவது உசிதமான யோசனையாகப் படவில்லை, என்று அமிர்தலிங்கம் மேலும் தெரிவித்தார்.
அப்போது விசு, மூத்த எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் ரி.யு.எல்.எப் உடன் மேலும் சந்திப்பை ஏற்படுத்தி கலந்துரையாட தயாராக உள்ளதாகவும், ஆனால் அந்த சந்திப்பை ரி.யு.எல்.எப் இன் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நடத்த முடியாது. மூத்த எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் ரி.யு.எல்.எப்பை மற்றொரு இடத்தில் வைத்து சந்திக்க முடியும் என்றும் தெரிவித்து கொழும்பிலுள்ள ஒரு விடுதியின் பெயரை இரண்டாவது சுற்று பேச்சுக்களுக்காக பரிந்துரையும் செய்தார். அமிர்தலிங்கம் அந்த இடம் பாதுகாப்பானதோ, கட்டுக்கோப்பானதோ அல்லது ஒதுக்குப் புறமானதோ அல்ல எனக்கூறி அந்த ஆலோசனையை நிராகரித்தார். அப்போது சிவசிதம்பரம் கொழும்பிலுள்ள நடுநிலையான ஒரு இல்லத்தில் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக சந்திப்பு நடப்பதற்கு முன்னர் அந்த இடத்தை தாங்கள் பார்வையிட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் விசு அந்த யோசனைக்குச் சம்மதித்தார்.
உரையாடல் மிகவும் சுமுகமாக நடைபெற்றது. பெரும்பாலான பேச்சுக்கள் அமிர், சிவா இருவராலும் மற்றும் விசுவாலுமே நடத்தப்பட்டன. யோகேஸ்வரன் மற்றும் அலோசியஸ் ஆகியோர் பொதுவாக மௌனமாக இருந்தனர். ஒரு கட்டத்தில் அமிர்தலிங்கம், எல்.ரீ.ரீ.ஈ ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்பவேண்டிய காலம் இதுதான், என மென்மையாக குறிப்பிட்டார்.”ஜனநாயகம் என்பது இளைஞர்ளாகிய உங்களுக்கு பழைய ஒரு பாணியாக தோன்றக்கூடும், ஆனால் தயவு செய்து வயதானவர்களாகிய நாங்கள் உங்களுக்கு சொல்வதையும் நீங்கள் கேட்கவேண்டும்” என சிவசிதம்பரம் குறிப்பிட்டார். அரசாங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ இடையே நடக்கும் பேச்சுக்களின் முன்னேற்றம் எப்படி உள்ளது எனக் கேட்டபோது “இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டு பேசி வருகிறார்கள்” என விசு வேடிக்கையாகச் சொன்னார். இது அனைவரிடத்தும் சிரிப்பை வரவழைத்தது.
இதற்கிடையில் கீழ் தளத்தில் சில பரபரப்புகள் இடம்பெற்றன. கீழே காத்திருந்த அறிவு என்கிற சிவகுமார் பி.ப 7 மணிக்குப் பிறகு குழப்பமடையத் தொடங்கினார். அவர் தனது கடிகாரத்தை பார்ப்பதும் அமைதியற்ற முறையில் பரபரப்புடன் அங்கும் இங்கும் செல்வதுடன் அடிக்கடி ஆவலாக மேலே பார்ப்பதுமாக இருந்தார். அங்கு கடமையிலிருந்த காவலர்களில் ஒருவருக்கு சிவகுமாரின் நடத்தையில் சந்தேகம் தட்டியது. அவரது பெயர் நிஸ்ஸங்க திப்பொட்டுமுனுவ,  அவரது சொந்த இடம் கோகாலை மாவட்டத்தில் உள்ள ஹெட்டிமுல்லவில் உள்ள அக்கிரியாகல ஆகும். நிஸ்ஸங்க மகாவலி அமைச்சினால் அமிர்தலிங்கத்தின் பாதுகாப்புக்காக வழிமொழியப் பட்டு அழைக்கப்பட்டவராவார்.
தம்பிராஜா கந்தசாமி
நிஸ்ஸங்க திப்பொட்டுமுனுவ மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் சிவகுமாரை வலுக்கட்டாயமாக சோதனையிட்டதில் அவரிடத்தில் ஒரு கிறனைட் மற்றும் உபயோகிக்க கூடிய துப்பாக்கி ரவைகள் என்பன இருப்பதைக் கண்டார்கள். இது பற்றி தம்பிராஜா கந்தசாமிக்கு அறிவிக்கப்பட்டது. சத்தியமூர்த்தியின் பாதுகாப்பில் சிவகுமாரை விட்டுவிட்டு, நிஸ்ஸங்கவும் கந்தசாமியும் மெதுவாக மேலே சென்றார்கள். கந்தசாமி படிகளின் உச்சியில் நின்ற அதே சமயம் நிஸ்ஸங்க பல்கனி பக்கமாகச் சென்று  பிரதான அறையில் உள்ளே இருப்பவர்களுக்கு தெரியாத வண்ணம் அங்கேயே நின்று கொண்டார். அவர்கள் இருவரும் உள்ளே நடந்து கொண்டிருக்கும் கலந்துரையாடலை குழப்ப விரும்பவில்லை ஆனால் சிவகுமாரிடத்து கிறனைட் மற்றும் ரவைகள் இருப்பதைக் கண்டு அவர்கள் எச்சரிக்கை அடைந்திருந்தார்கள்.
உள்ளே இயல்பான நிலையில கலந்துரையாடல்; தொடர்ந்து கொண்டிருந்தது. மற்றும் அப்போதுதான் அது நடந்தது. நேரம் கிட்டத்தட்ட பி.ப7.20. விசு தனது பானத்தை அருந்தி முடித்துவிட்டு வெற்று கண்ணாடிக் குவளையை மேசையில் வைப்பதற்காக எழுந்தார். பின்னர் அவர் திரும்பி அமிர்தலிங்கத்தை பார்த்து “ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள் புலிகளாகிய நாங்கள்தான் அரக்கர்கள் என்று ஆனால் உண்மையில் நீங்கள் எல்லோரும்தான் உண்மையான அரக்கர்கள்” என்று சொன்னார். ரி.யு.எல்.எப் இன் மூவரும், விசு கேலி செய்கிறார் என்றே நினைத்தார்கள். அமிரும் சிவாவும் புன்னகை செய்த அதே சமயம், யோகேஸ்வரன் சத்தமாக சிரித்தார். உடனே விசு ஒரு துப்பாக்கியை உருவி அமிர்தலிங்கத்தை நோக்கிச் சுடத் தொடங்கினார். யோகேஸ்வரன் சத்தமிட்டபடி தனது கதிரையில் இருந்து எழுந்தார். அலோசியஸ் ஒரு துப்பாக்கியை வெளியே எடுத்து அவரை நோக்கி சுட்டார். சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த சிவசிதம்பரம் அதிர்ச்சியடைந்து எழுந்து நின்றபடி ‘வேண்டாம், வேண்டாம்…’ என சத்தமிட்டார். விசு அவரை நோக்கி சுட்டபோது அது அவரது வலது தோளில் பாய்ந்தது.
துப்பாக்கி சூட்டு சத்தத்தை கேட்ட நிஸ்ஸங்க உள்ளே எட்டிப் பார்த்தார். உள்ளே என்ன நடக்கிறது என்பதை கண்டதும் பலகணியின் கண்ணாடி ஊடாக அவர் சுட ஆரம்பித்தார். அவர் சுட்டு அவாகள் இரவரையும் காயப்படுத்தினார். அப்போது விசுவும் அலோசியசும் வெளியே ஓடினார்கள். கந்தசாமியும் துப்பாக்கி சூட்டு சத்தத்தை கேட்டிருந்ததால் துப்பாக்கியால் சுட்டபடி அவர்களை நோக்கி ஓடிவந்தார். காயமடைந்த விசுவும் அலோசியசும் திருப்பி சுட்டபடி  படிகளில் இறங்கி கீழே ஓட முயற்சித்தார்கள், ஆனால் நிஸ்ஸங்கவிடம் இரண்டாவதாக மற்றொரு துப்பாக்கியும் இருந்தபடியால் சுற்றி வந்து சுட ஆரம்பித்தார். அவாகள் இருவரையும் அவர் கொன்றார். துப்பாக்கி சத்தத்தை கேட்டதுமே சத்திய மூர்த்தி சிவகுமாரை இழத்துப் பிடித்துக் கொண்டார். சிவகுமார் அவரிடமிருந்து விடுபடுவதற்காக கட்டிப் புரள ஆரம்பித்தான். தன்னை சுதந்திரமாக்கிக் கெண்ட அறிவு என்கிற சிவகுமார், முன்னர் தன்னிடமிருந்து பறித்தெ:டுத்த கிறனைட்டை கைப்பற்ற முயற்சித்தான்;. அவன் அதை எட்டுவதற்கு முன்பே ஓடி வந்த நிஸ்ஸங்க அவனை சுட்டு காயப்படுத்தினார். அப்போது சிவகுமார் ஓட முயற்சித்தான் ஆனால் நிஸ்ஸங்க திரும்பவும் சுட்டு அவனை கீழே வீழ்த்தினார். கொலைகாரர்கள் மூவரும் நிஸ்ஸங்கவினால் ஸ்தலத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
பாஸ்டர்ட்ஸ், பாஸ்டர்ட்ஸ்
மங்கையர்க்கரசி, சரோஜினி மற்றும் சேனாதிராஜா ஆகியோர் துப்பாக்கிச் சுட்டு சத்தம் கேட்டு பின்பக்க படிக்கடடு வழியாக மேலே ஓடினார்கள். இரத்தம் வழிந்தோட சலனமற்று அமிர்தலிங்கம் தனது ஆசனத்திலேயே இருந்தார். அவர் இறந்ததை அறியாத அவர் மனைவி அவரது தலைக்கு பின்னால் ஒரு சிறிய குஷன் தலையணையை வைத்து அவரை தாங்கிப் பிடித்துக் கொண்டார். இரத்த வெள்ளத்தின் நடுவே நிலத்தில் கிடந்தபடி செத்துக் கொண்டிருந்த யோகேஸ்வரன் “பாஸ்டர்ட்ஸ், பாஸ்டர்ட்ஸ்” என்று ஆங்கிலத்தில் முணுமுணுத்துக் கொண்டிருந்தார், அவரது அருகில் சரோஜினி மண்டியிட்டு அமர்ந்தார். சிவசிதம்பரம் பேச்சற்று வெறித்துப் பார்த்தபடி சுவரோடு சாய்ந்து கிடந்தார். அம்புலன்ஸ் வண்டிகள் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றன.
கொழும்பு சட்ட வைத்தியஅதிகாரி மருத்துவர் சல்காடோ, அமிர்தலிங்கம் மீதான பிரேத பரிசோதனையை நடத்தியபிறகு, தலையிலும் மார்பிலும் ஏற்பட்ட காயங்களால் மரணம் சம்பவித்ததாக அறிவித்தாh. துணை மருத்துவ அதிகாரி மருத்துவர் எல்பிஎல்.அல்விஸ் யோகேஸ்வரன் மீதான பிரேத பரிசோதனையை நடத்திய பிறகு இதயத்திலும் ஈரலிலும் துப்பாக்கி ரவையினால் எற்படுத்தப் பட்ட காயங்களின் விளைவாக மரணம் ஏற்பட்டதாக அறிவித்தார். சிவசிதம்பரம் உயிர் பிழைத்தார் மற்றும் அந்த மோசமான இரவில் என்ன நடந்தது என்பதற்கான ஒரே சாட்சி அவர். அதற்கு பல வருடங்களுக்குப் பிறகு 2000 ஆண்டில் சிவா மரணமடைந்தார்.
இதுதான், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், வெற்றிவேலு யோகேஸ்வரனுடன் சேர்த்து தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட சோகமான கதை. லசந்த விக்ரமதுங்க, இந்த சம்பவம் பற்றி அப்போதைய எதிர்கட்சித் தலைவர் திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கு அறிவித்ததும், அவர் அவசர அவசரமாக யார் இதை செய்தார்கள்? எனக் கேட்டார். அது எல்.ரீ.ரீ.ஈ எனச் சொல்லப்பட்டதும் ஆறுதலடைந்து நிம்மதி பெருமூச்சு விட்ட திருமதி. பண்டாரநாயக்க, எந்த ஒரு சிங்களவரும் அவரை கொலை செய்யாதது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றாராம். அநேக சிங்களவர்கள் அமிர்தலிங்கத்தின் அரசியலை வெறுத்திருக்கலாம், ஆனால் அவர்கள் யாரும் அவரைக் கொல்லவில்லை. முன்னர் அவரை ஒரு பெரிய வீரன் எனக் கருதிய தமிழ் இளைஞர்களாலேயே அவர் கொல்லப்பட்டார்.
நிஸ்ஸங்க திப்பொட்டுமுனுவMrs. Amirthalingam
இந்த துயரம் தோய்ந்த படுகொலை சரித்திரத்தில் ஒரே வீரனாக கருதப்படுபவர் சிங்கள காவல்துறை உத்தியோகத்தரான நிஸ்ஸங்க திப்பொட்டுமுனுவ, அந்த மூன்று கொலைகாரப் புலிகளையும் அவர் சுட்டுக் கொன்றார். அதுதான் சம்பத்துடன் தொடர்புடைய அனைத்து புலி கொலையாளிகளையும் சுட்டுக் கொன்ற முதலாவது சம்பவம், சிலவேளைகளில் ஒரே ஒரு சம்பவமாகவும் இருக்கலாம். எனினும் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் அகிய இருவரையும் தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்று அவர் ஆழமான வருத்தம் அடைந்திருந்தார்.
அமிர்தலிங்கத்தின் இரண்டாவத மகன் பகீரதன் இங்கிருந்து பிரித்தானியாவுக்கு பறப்பட்டுச் சென்றது ஜூலை 12ல். நிஸ்ஸங்கவும் அவருடன் கட்டுநாயக்கா விமானநிலையத்துக்கு கூடச் சென்றிருந்தார். அவருக்கு பிரியாவிடை சொல்லும்போது, அப்பாவை பற்றி; கவலைப்பட வேண்டாம் என்று மகனுக்கு உத்தரவாதமளித்ததுடன் தனது உயிரைக் கொடுத்தாவது அவரைப் பாதுகாப்பேன் எனவும் நிஸ்ஸங்க சொல்லியிருந்தார்.
ஜூலை 13ல் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டு விட்டார். பகீரதன் மரணத்தின் பின் ஜூலை 15ல் ஸ்ரீலங்காவுக்கு திரும்பி வந்தார். விமான நிலையத்தில் அவருக்காக காத்திருந்த நிஸ்ஸங்க அவரது காலில் விழுந்து, அவருக்கு வாக்கு கொடுத்தபடி அமிர்தலிங்கத்தை பாதுகாக்க முடியாமற் போனதுக்காக தன்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டாராம். இதை என்னிடம் சொல்லும்போது பகீரதனின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
அமிர்தலிங்கம் கொலை செயயப்பட்ட 21 வருடங்களின் பின் சப்பிரகமுவா மாகாணத்தில் உணர்ச்சிப் பிரவாகமான ஒரு மிள் சந்திப்பு நடைபெற்றது. திருமதி அமிர்தலிங்கம் மற்றும் கலாநிதி பகீரதன் அமிர்தலிங்கம் ஆகியோர் நிஸ்ஸங்க திப்பொட்டுமுனுவவை சந்திப்பதற்காக கேகாலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றார்கள். நிஸ்ஸங்க இப்போது ஓய்வு பெறறுவிட்டார் மற்றும் அவரது மனைவியான சியாமளா பிரமீளா குமாரி, தாயையும் மகனையும் வரவேற்றார். திருமதி அமிhதலிங்கம் மற்றும் பகிரதன் ஆகியோர் நிஸ்ஸங்கவை கட்டித் தழுவியதுடன் மற்றும் அவரைக் கண்டு வாய்விட்டு அழுதார்கள்.

IPKF மறைக்கபட்ட உண்மைகள் -


1) வடமராட்சியில் அன்றைய முள்ளிவாய்க்காலாக பிரபாகரனை சிங்கள படை வளைத்துகொள்ள, மில்லரின் தாக்குதலில் 20 ராணுவத்தினர் மட்டும் செத்தனர், வெறிகொண்ட ராணுவம் புலிகளை மொத்தமாக அழிக்க தொடங்க, புலிகள் மக்களை கேடயமாக்க , இந்திய மனிதாபிமான உதவி படகுகளை சிங்கள கடற்படை தடுக்க அதன் பின்னே விமானம் மூலம் பொருள் வீசி இந்தியா களம்புகுந்தது, இல்லாவிட்டால் புலி அன்றே முடிந்திருக்கும்
2) என்னது 1990க்கு முன் ஈழம் கிடைத்திருக்குமா? 2009ல் ஏன் கிடைக்கவில்லை? அடேய் மடையா, இந்தியா தலையிடவில்லை என்றால் இன்னொரு நாடு, அமெரிக்கா, பாகிஸ்தான் என இன்னொரு நாடு வந்து அழித்திருக்குமே அன்றி ஈழம் சாத்தியமில்லை

3) ஆமாண்டா, மதிவதனி உண்ணாவிரதம் இருந்தால் கடத்தி திருமணம் செய்த புலிகள் தலைவர், திலீபனை மட்டும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க செய்ததேன்? ஏன் காப்பாற்ற முயற்சிக்கவில்லை, மதிவதனிக்கு ஒரு நியாயம், திலிபனுக்கு சாவா?
4) புலேந்திரனும் குமாரப்பாவும் சிங்கள புத்தாண்டு அன்று 300 பேர் கொல்லபட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள், அன்றியும் அவர்கள் கைது செய்யபடும்போது சயனைடு இல்லை, பாலசிங்கம் சந்தித்த பின்னே சயனைடு கொடுக்கபட்டு கொல்லபட்டனர், கொன்றது யார்?
5) ஆரம்பத்தில் ஆரத்தி எடுத்த மக்களை பின் இந்திய அமைதிபடைகு எதிராக திருப்பி அழிவினை கொடுத்தது யார்? பெண்கள் உள்ளாடையில் குண்டு அனுப்பினால் என்ன செய்வது?
6) இந்திய ராணுவத்தினர் 1500 பேர் சாகவில்லையா? கைகளை கட்டிய எமது ராணுவம் அழிவினை குறைத்தது
7) சரி அப்படி மாவீர புலிகள் ஏன் 1995ல் யாழ்பாணத்தை விட்டும், 2009ல் உலகை விட்டும் மறைந்தனர், அவ்வளவு தானா வீரம்????
8) இந்தியா கொடுத்த உரிமைகளையும் கிழித்து எறிந்துவிட்டு, மக்களை அனாதையாக்கி அழித்த இயக்கத்திற்கு வக்கலாத்து வேறா?
9) ராஜிவ் இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் கொடுமை நடந்திருக்குமா? விட்டிருப்பாரா? 

ஈழ போராளியின் ஈரமனமும் கோரமரணமும் 


இந்திய அமைதிபடை ஆக்கிரமிக்கவோ அல்லது கற்பழிப்பதையோ நோக்கமாக கொண்டு ஈழத்தில் காலடி எடுத்துவைக்கவில்லை, பலவிதமான உலக நெருக்கல்கள், ஐ.நா அமைதிபடையோ அல்லது அமெரிக்க படையோ இலங்கையில் காலூன்றுவதை தடுக்க அவசர அவசரமாக செய்யபட்ட ஏற்பாடு.
இலங்கையில் அமைதி திரும்புவதை பெரிதும் விரும்பிய பத்மநாபா, இந்திய படையினரோடு அமைதி திரும்ப கடும் ஒத்துழைப்பு கொடுத்தார்.
இந்திய இலங்கை ஒப்பந்தபடி இலங்கையின் 4 மாகாணங்களில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயக நிலமென்றும், அது இரண்டையும் இணைத்து ஒரே மாகாணமாக்கி ஒரு முதல்வரையும், அதாவது "தமிழ்" முதல்வரையும் வைக்கவேண்டும் என ஏற்பாடாகி இருந்தது.
இப்படியாக வடக்கும் கிழக்கும் இணைந்த ஈழமாநிலம் உண்டாயிற்று.
அதாவது இந்தியாவில் தமிழ்நாடுபோல இலங்கையில் ஈழம், அதுவரை கிடைக்காத ஈழமாநில அந்தஸ்து, இந்தியாவால் அந்நேரம் உதவகூடிய ஆக உச்சகட்ட‌ உதவி அவ்வளவுதான், காரணம் உலக காலநிலை அப்படி.
வங்கம் பிரிந்த்தால் அடிபட்ட பாம்பாக உறுமிய பாகிஸ்தான், அப்பாம்ம்பிற்கு பால்வார்க்கும் அமெரிக்கா எல்லாம் எப்படியாவது காஷ்மீரை பிரித்தெடுக்க கங்கணம் கட்டிகொட்டு விரதமிருந்தன.
ஆனால் புலிகளுக்கு பிடிக்கவில்லை, மக்களில் ஒரு பிரிவினருக்கும் பிடிக்கவில்லை, ஆண்டவனுக்கும் அவர்களுக்கும் மட்டுமே காரணம் தெரியும்.
இன்றும் தமிழ்தேசியம் பேசுவோர், குதிரைக்கு அடியில் சிலைவைப்போர், முஷ்டி முழக்குவோ, அண்ணனே...... என கதறுவோர் இவர்கள் யாரிடமாவது ஏன் ஈழத்தில் வடக்கு தமிழரையும், கிழக்கு தமிழரையும் இணைக்ககூடாது என கேளுங்கள், பதிலிருக்காது.
யாரிடமும் இருக்காது, இவர்கள் புரிந்துகொண்டது யாழ்பாணம், ஈழம்,பிரபாகரன், இந்தியா,சோனியா, கலைஞர் (இப்பொழுது கனிமொழி) துரோகம் அவ்வளவுதான், அதனை தாண்டி யோசிக்கமாட்டார்கள்.
வடக்கும் தமிழர்கள், கிழக்கும் தமிழர்கள் இரண்டையும் இணைத்தால்தான் என்ன? அது கூடாதாம். தனி ஈழம் வேண்டுமாம் அதில் இரண்டு மாநிலமும் தனி தனியாக இருக்குமாம்.
டெல்லிக்கு இது மிகவித்தியாசமாக தெரிந்தது, வாய்விட்டு கேட்டார்கள், "நாளை ஈழம் அமையும் பட்சத்தில் இரண்டு ஈழமாக அமைப்பீர்களா?" யாரிடமும் பதில் இல்லை.
ஈழம்தானே, தனி தமீழீழம் தானே, அதில் என்ன கிழக்கு வடக்கு பிரிவினை? என கேட்டால் யாரிடமும் பதில் இல்லை.
புலிகள் இதனை ஏற்க மறுத்தார்கள், மக்களில் ஒரு ஆதிக்கபிரிவும் அவர்களோடு இணைந்தது, விளைவு ஈழம் இந்தியாவின் வியட்நாம் ஆயிற்று. புலிகள் இந்தியராணுவம் மோதல் தொடங்கியது.
புலிகளை ஒரு தீவிரவாத இயக்கமாக நினைத்துத்தான் இந்திய ராணுவம் களத்தில் சும்மா குதித்தது, அதன்பின் புரிந்துகொண்டது இந்திய ராணுவத்தை விட புலிகளிடம் இருக்கும் தொலைதொடர்பு வசதியும், சில வெடிமருந்துகளும் மிக நவீனமானவை. ஒரு பெரிய அரசாங்க ராணுவ தயாரிப்பு, அந்த அரசின் அனுமதி இல்லாமல் இவை புலிகளுக்கு கிடைத்திருக்காது, ஆனால் அந்த நாடு ஜெயவர்த்தனேவின் இலங்கை அல்ல.
சுதாரிப்பதற்குள் இந்திய ராணுவம் அடிமேல் அடிவாங்க ஆரம்பித்தது, கழுகு வழிகாட்ட புலி பாய்ந்தது, ஒரு பக்கம் உலகெல்லாம் ஊடகங்கள் இந்தியராணுவம் கற்பழிப்பில் ஈடுபடவே வாத்சாயனர் புத்தகங்களை எல்லாம் கொண்டு சென்றார்கள் எனும் அளவிற்கு உலகெல்லாம் போட்டுதாக்கின.
ஒரு செய்தி 10 ஆக்கபட்டது, களநிலமை இந்திய ராணுவத்திற்கு புதிது. ராணுவ யுத்தம் தெரியுமே தவிர கொரில்லா யுத்தம் பழக்கபடாதது. ரோந்துவரும் இந்திய கவசவாகனத்திற்கு சந்தோஷாக கைகாட்டும் பாட்டி, வாகனம் கடந்தபின் சுருக்குபையில் இருக்கும் ரிமோட்டை இயக்கி கன்னிவெடியை இயக்கி வாகனத்தை தூள் தூளாக்கினால்..
பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் அல்லது சிறுவர் (100 பேரில் ஒருவர்) எங்கு ஆயுதம் வைத்திருப்பார்கள் என தெரியாது, திடீரென சாலை சோதனையில் ஈடுபடும் இந்தியராணும் மீது கை குண்டு விழும்.
இப்படியாக பாதிக்கபடும் ராணுவம் அந்தபாட்டி கூட்டத்தையும், மாணவி கூட்டத்தையும் விசாரித்தால், அய்யகோ கற்பழிக்கும் கொடுமை பாரீர் என உலகெல்லாம் மீடியாக்கள் அலறும்.
5000பேர் தங்கும் மருத்துமனையில் ஒரு புலி சென்று படுத்துகொள்வார், சாலையில் செல்லும் இந்தியராணுவத்தை தாக்குவார். இந்தியராணுவம் மருத்துவமனையில் நுழையும், எங்கிருந்தோ குண்டு விழும், சகலமும் பஸ்பம்.
யாழில் மருத்துவமனை தகர்ப்பு, இந்தியபடை அட்டூழியம் என செய்திவரும், எல்லா ஊடகங்களும் அப்படித்தான் எழுதி தள்ளின, உண்மை வெகு தூரத்தில் இருந்தது.
சதாம் உசேனையும், மூமர் கடாபியையும் உலக வில்லன்கள் ஆக்கினார்கள் அல்லவா? போராளி யாசர் அராபத்தை தீவிரவாதி ஆக்கினார்கள் அல்லவா அப்படி.
இந்தியராணுவம் அடிவாங்க, புலிகளுக்கும் பாதிப்பு இருக்க, தமிழர்களும் மகா சிக்கலில் மாட்ட அப்பொழுது மிக பாதுகாப்பாக இருந்துகொண்டு செத்தவர் கணக்ககை குறித்துகொண்டிருந்தது இலங்கைராணுவம், அவர்களுக்கென்ன யார் செத்தாலும் சரி, இந்திய வீரனோ புலிகளோ இல்லை அப்பாவி தமிழரோ யார் செத்தாலும் மகிழ்ச்சி. அப்படித்தான் இருந்தது நிலை.
ஆனாலும் அவமானத்தோடு போராடிய இந்தியா, வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்திற்கு முதல்வருக்கு தேர்தல் நடத்தியது, புலிகள் தேர்தலில் நிற்கவில்லை (என்றுதான் அவர்கள் மக்கள்முன் நின்றார்கள்?), புலிகளுக்கு பயந்தும் யாரும் நிற்கவில்லை.
ஆனால் பத்மநாபா துணிந்து நின்றார், அந்த தேர்தலில் மகத்தான வெற்றியும் பெற்றார், மக்களின் ஆதரவு அப்படி. ஆனாலும் பதவியை தனது கட்சிக்காரர் வரதராஜ பெருமாளிடம் ஒப்படைத்துவிட்டு மக்கள் பணியிலே இருந்தார்.
பத்மநாபாவும், வரதராஜபெருமாளும் அழிக்கவேண்டிய அசுரர்களாக புலிகள் குறித்துகொண்டனர்.
30 ஆண்டுகாலம் தனிபோராட்டம் நடத்திய அராபத் இப்படித்தான் பாலஸ்தீன் சுயாட்சிக்கு ஒப்புகொண்டார், பெரும் அதிகாரம் இல்லைதான். ஆனால் வகுத்து வைத்த எல்லைகோடு இருக்கின்றது. காசாவும் மேற்குகரையும் பாலஸ்தீனருக்கு எனும் அடையாளம் இருக்கின்றது. இஸ்ரேல் எப்படியெல்லாம் நாடகமாடினாலும் அதனை அழிக்கமுடியவில்லை, முடியவும் முடியாது.
நாளை பாலஸ்தீனம் மலரும் பட்சத்தில் சிக்கல் இல்லை, இதனைத்தான் அன்றே ஈழத்தில் பத்மநாபா சொன்னார். இதுதான் தொலைநோக்கு,சாதுர்யம், வாய்பினை பயன்படுத்திகொள்ளும் சூட்சுமம்.
இன்று பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லீம்களை போட்டு விரட்டுகின்றனர்? எந்த உலகநாடு உள்நுழைத்திருக்கின்றது? ஒருவருமில்லை இப்படித்தான் ஈழநிலையும் இருந்தது, ஆனால் இந்தியா நுழைந்தது. அதனை விரட்டினார்கள் இந்தியா ஒதுங்கி கொண்டது.
இந்திய வழிகாட்டலில் ஈழமாகாணத்தை முன்னேற்றும் திட்டத்தில் கடுமையாக பத்மநாபா உழைத்துகொண்டிருக்கும் பொழுதுதான், பிரேமதாச அதிபர் ஆனார்.
எந்த சிங்கள ராணுவத்தை எதிர்த்து புலிகள் துப்பாக்கி தூக்கினார்களோ அந்த ராணுவத்தோடு இணைந்துகொண்டார்கள். (இதுதான் மேதகு தேசியதலைவரின் வழிகாட்டல்)
தனக்கு ஆகாதவர்கள் யாராயினும் ஒழித்துகட்டும் புலிகள், பத்மநாபாவிற்கு தற்கொலை போராளியை குண்டைகட்டி அனுப்பினார்கள். பத்மநாபாவை சந்திக்கும் முன் அவர் அகப்பட்டுகொண்டார், அவரை கொல்லும் நோக்குடன் துப்பாக்கி தூக்கியவர்களை தடுத்து சொன்னார் நாபா.
"நாம் உன்னை கொல்லமாட்டோம், நீனும் தமிழர்,நானும் தமிழர். உங்கள் தலைவரை போல எமக்கு தலமை ஆசையோ, உயிர்பயமோ இல்லை. சிங்களனுடனான போரில் என் உயிர் போகட்டும், தமிழன் கையால் இருக்க கூடாது" என மன்னித்து உயிரோடு திருப்பி அனுப்பினார் நாபா.
புலிகளுக்கு மனசாட்சி என ஒன்று இருந்தால் இந்த இடத்தில் எப்படி சிந்தித்து இருப்பார்கள்?, ஒரு பெரும் தூக்கு தண்டனை கைதி கூட சிந்தித்து பார்க்கும் இடம் இது, பத்மநாபா இவ்வளவு மகத்தானவரா? என்று ,புலிகளிடம் அதனை எதிர்பார்த்து என்ன செய்ய? சகதோழனின் கொலையில் தொடங்கிய இயக்கம் அது.
பத்மநாபாவோ மனிதர்களை நேசித்த மானிடநேயமிக்க போராளி
(இதே புலிதலமை என்ன செய்தது? 15 ஆண்டுகாலம் தன்னோடு இருந்த, தனக்கு அடுத்த தலமையான மாத்தையா மீது பொய்யான குற்றசாட்டு சொல்லபட்டபொழுது ஒப்பற்ற அர்பணிப்பான போராளியான மாத்தையாவை 500 போராளிகளோடு சுட்டுகொன்று எரித்தது)
தமக்கு பயிற்சியும்,பணமும்,உணவும்,இடமும் தந்த இந்தியாவினை புலிகள் மூர்க்கமாக எதிர்க்க ஆரம்பித்தார்கள், உலக நிலையும் மாற (ரஷ்யா சிதற்), இந்திய அரசியலும் மாற (விபி சிங்), தமிழகத்து அழுத்தமும் (திராவிட கழகங்கள், இன்று தமிழ்தேசியம் பேசுவோர் அன்று புலிகளுக்கு திராவிட இயக்கங்கள் செய்த உதவிகளை எல்லாம் மறந்துவிட்டார்கள்) கூட, இந்திய ராணுவம் வாபசானது.
இந்திய உடன்படிக்கை செல்லாது என பிரேமதாசா அறிவித்தார், இணைந்த வடக்கு கிழக்கு மறுபடியும் இரு மாகாணமாக பிரிக்கபட்டது. புலிகளும் அந்த ஆளும் தமிழ் வர்க்கமும் ஒப்பற்றமகிழ்ச்சி அடைந்தது.
இந்திய ராணுவம் 1500வீரர்களை இழந்து அவமானத்தோடு வெளியேறிய இந்தியா பத்மநாபாவோடு சென்னை வந்தது, எதிர்காலம் தெரியாத நிலையிலும், கம்யூனிச தாய்வீடான ரஷ்யா சிதறிய நிலையிலும் சொன்னார்.
"உண்மை சாகாது, வன்முறை வெல்லாது, ஒருகாலம் நிச்சயம் ஈழமக்கள் அமைதியாக வாழ்வார்கள்"
வரதராஜபெருமாளை ராஜஸ்தானில் தங்கவைத்த இந்தியா, பத்மநாபாவை வடஇந்தியாவில் தங்குமாறோ அல்லது வெளிநாட்டுக்கு செல்லுமாறோ கேட்க சென்னையிலே வாழதுணிந்தார்.
பாதுகாப்பான வாழ்க்கைத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார். ஆனால் 1500 இந்தியவீரர்களை இழந்தும் புலிகளுக்கு இந்தியாவில் தடை இல்லா காலமது.
அன்னை இந்திரா டெல்லியில் ஒரு அரசுவிழாவில் தன் அருகில் அமிர்தலிங்கத்தை அமரவைத்து "ஏதோ" சொல்லவந்ததை குறித்துகொண்டபுலிகள் பின்னாளில் அவரை கொன்றார்கள், அதுவும் அவர் வீட்டிற்கு சென்று, அவர் மனைவி கொடுத்த தேநீரை குடித்துவிட்டு அப்பெண்மணியின் தாலியை அறுத்தார்கள், அவர்கள் பயிற்சி அப்படி.
ஈழதேர்தலில் வெற்றிபெற்ற பத்மநாபாவை விடுவார்களா? ஈழம் என்றால் புலிகள், ஆட்சி என்றால் புலிகள், மக்களாவது? தேர்தலாவது? ஜனநாயகமாவது?
பிரபாகரனே சொன்னார் ஒரு பத்திரிகையாளரின் இப்படியான கேள்விக்கு "சுதந்திர தமிழ்ஈழத்தில் எம்மாதிரியான அரசு அமையும் என சொல்லமுடியுமா?"
மேதகு சொன்னார் "நிச்சயமாக சர்வாதிகார ஆட்சிதான்"
பின்னர் எப்படி பத்மநாபாவை விடுவார்கள்? ப‌லமுறை முயற்சித்தார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியாக பின்லேடனுக்கு கிடைத்த மூர்க்கமான மனிதாபிமானமே இல்லாத ரம்ஸி யூசுப் எனும் கோடூரமனம் படைத்தவரைபோல (பின்னாளில் பின்லேடன் ஒழிக்கபட்டதிற்கும் இவனே காரணம்) புலிகளுக்கும் ஒருவர் கிடைத்தார்.
இயக்கபெயர் பாக்கியநாதன், பத்மநாபாவை ஒழித்துகட்ட அவருக்கு இட்டபெயர் ரகுவரன். இரண்டு பெயர் உண்டே தவிர கண் ஒன்றே ஒன்றுதான்.
அவரேதான் அவர் பெயர் சாகும்பொழுது "ஒற்றைகண் சிவராசன்".
எவ்வளவு தந்திரமாக பத்மநாபாவை கொன்றோழித்தார்கள் என்பது தனிபதிவாக காணவேண்டியது, அவ்வளவு தந்திரமும்,நன்றிகெட்ட தனமும் நிறைந்த கொலை அது, இதே ஜூன் 19 1990ல் நடந்த கொலை அது.

பலத்த பாதுகாப்போடு சென்னையில் இருந்தாலும் தமிழகம் வந்த அகதிகளுடனும், தமிழக அரசியல்வாதிகளினுடம், நல்ல தொடர்பில் இருந்தார் பத்மநாபா. அகதிகள் பிரச்சினையில் முன்னின்று குறைகேட்டு களைய முயற்சிப்பார்.
கலைஞர் அப்பொழுதுதான் முதல்வராக கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த நேரம், ஆனால் பத்மநாபா அவருக்கு நண்பர் என்றாலும், புலிகளை தமிழகத்தில் சுதந்திரமாக உலவவிட்டுருந்தார் அதற்கு அந்த கட்சியில் அப்போது பலமாக இருந்தபலபேர் காரணம்.
புலிகளின் தகவல் தொடர்பு, ஆயுதம்,பெட்ரோல், மருந்து என எல்லாம் டாஸ்மாக் சரக்குபோல மிக சரளமாக நடமாடிய நேரம். மத்திய அரசு புலிகளை முறைத்துகொண்டிருந்தபொழுதே கலைஞர் அரசு இதனை காணாமல்தான் விட்டு இருந்தது.
வரதராஜபெருமாளுக்கு மத்திய உளவுதுறை கொடுத்தபாதுகாப்பில் கொஞ்சம்கூட பத்மநாபாவிற்கு தமிழகத்தில் கொடுக்கபடவில்லை, பத்மநாபா அதை விரும்பவும் இல்லை.
இந்நிலையில் சிவராசன் அதாவது ரகுவரன் எனும் பெயருடன் வந்த ஒற்றைக்கண் சிவராசனுக்கு பத்மநாபாவை கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டான், இன்னொரு காலில்லாத புலி உறுப்பினர் செயற்கைகால் பொருந்த ராஜஸ்தானுக்கு வந்ததாக சொல்லிகொண்டு வரதராஜ பெருமாளை தேடிகொண்டிருந்தார்.
சென்னையில் ஒரு இளம்புலி உறுப்பினரை அகதிகள் முகாமில் ஊடுருவ செய்தார் சிவராசன், அந்த புலியும் மிக பிரமாதமாக நடித்தது, அதாவது தான் அகதியாய் வந்ததாகவும், படிப்பை தொடரவிரும்புவதாகவும், கார்ல்மாக்ஸின் பேரனாக மாற இருப்பதாகவும் கண்டவர்கள் முன்னால் எல்லாம் புலம்பிற்று.
மிக பரிதாபகரமான தோற்றத்துடன் இருந்த அவரை சில ஈழ ஆதரவாளர்கள் கண்டு பத்மநாபா உனக்கு உதவுவார் என ஆறுதல் கூறி அழைத்துசென்றனர்.
வந்தவன் கோலத்தை கண்டு உணவிட்டார் நாபா, சென்னையின் மிக முக்கிய கல்லூரியில் செர்த்து படிக்கவும் வைத்து, செலவினை பத்மநாபாவின் இயக்கம் ஏற்றுகொள்ளும் எனவும் அறிவித்தார். அதோடு அந்த சந்திப்பு முடிந்தது.
"எம்மை ஆதரிக்காதவரெல்லாம் எமது எதிரிகள், அவர்களை உயிரோடு விடகூடாது, இரக்கம் கூடாது, கொல்... கொல்" என மனதை இறுக்கும் பயிற்சிபெற்ற புலிக்கு நன்றிஉணர்வு எப்படி இருக்கும்?
இரண்டாம் கட்ட தலைவர்களுடன் நெருங்கி பழகிய புலி, பத்மநாபா நெருங்கிய தோழர்களுடன் நடத்தபோகும் கூட்டம்பற்றி சிவராசனுக்கு சொல்லிவிட்டு பத்மநாபா குழுவினருடனே தேநீர் குடித்துகொண்டிருந்தது.
மிக துல்லியமாக "துரோக" புலி கணித்துகொடுத்த நேரத்தில் கோடம்பாக்கத்திற்கு வெள்ளை மாருதிவேனில் பயங்கர ஆயுதங்களோடு வந்த சிவராசன் குழு வாட்ச்மேனை (அது அடுக்குமாடி வீடு) கொன்று உள்புகுந்து பத்மநாபா உள்பட 17 பேரை கண நேரத்தில் சுட்டுகொன்று மின்னல்வேகத்தில் வெளியேறியது.
பெரும் கனவுகளோடு லண்டன் உல்லாச வாழ்க்கையை விட்டு ஈழத்திற்கு போராட வந்த அந்த மேதை கோடம்பாக்கத்தில் பிணமானார், அவர் சாம்பல் கூட அவர் நேசித்த ஈழத்தில் பரவ இறைவன் அனுமதிக்கவில்லை.
அவசரமாக வேதாரண்யம் சென்று தப்பிக்க சென்ற சிவராசன் மறித்த‌ 3 போலிசாரை தாக்கி பின் கைதுசெய்யபட்டதும், உயர் அரசியல் அழுத்தங்களால் அவன் விடுவிக்கபட்டதாகவும் அதிகாரபூர்வமில்லா தகவல் உண்டு.
புலிகளின் தமிழ்க நடுமாட்டத்தை கடும் வெறுப்புடன் கண்காணித்த மத்திய அரசு, சட்டம் ஒழுங்கை காப்பாற்றாத தமிழக‌ அரசு என அறிவித்து கலைஞர் அரசை டிஸ்மிஸ் செய்தது.
எம்.ஜி.ஆர் எனும் பெரும் சக்திக்குபின் அப்பொழுதுதான் ஆட்சிக்கு வந்திருந்த கலைஞருக்கு எப்படி இருந்திருக்கும்? மனிதர் அன்றே வெறுத்துவிட்டார், இவ்வளவிற்கு பத்மநாபா படுகொலை வழக்கு என்று ஒன்றோ அல்லது விசாரணை என ஒன்றோ கிடையாது.
அவ்வளவு சலுகை புலிகளுக்கு, வந்தார்கள் சுட்டார்கள், சென்றார்கள். இறந்ததில் 3 சென்னை தமிழரும் உண்டு.
பராரியாய் பாமரகோலத்தில் படிப்பிற்காய் வந்ததாக பத்மநாபாவை காட்டிகொடுத்த புலி பின் புலிகள் இயக்கத்தில் கவுரவிக்கபட்டது, சிவராசன் பெரும் ஹீரோவாக கொண்டாடபட்டார்.
கொன்றவர்கள் புலிகள்தான் என பலர் சொன்னபொழுதும் வழக்கம் போல புலிதலமை சொன்னது "எமது விடுதலையின் தடைகல் அகற்றபட்டது"
ஈழத்தின் படிக்கல்லான பத்மநாபாவை தடைக்கல் என வர்ணித்த புலிகள் அதன் பிறகும் திருந்தவில்லை, மிக சரியாக 11 மாதத்தில் ராஜிவ்காந்தியை வீழ்த்தினார்கள்.
தமிழகம் அவர்கள் விரும்பியவர்களை கொல்லும் காடாக மாறிற்று, பத்மநாபா கொலையோடு தமிழகத்தில் புலிகளை ஓடுக்கியிருந்தால் ராஜிவ் கொல்லபட்டிருப்பதை தடுத்திருக்கலாம் என்பதும் தியரி. பத்மநாபா கொலையில் ஒரு தடையோ கண்டனமோ பெறாத தைரியம்தான் அவர்களை ராஜிவ் வரை நீளச்செய்தது.
ராஜிவ் கொலை வழக்கு தீவிரமாக விசாரிக்கபடும் பொழுதுதான், பத்மநாபா கொலை உண்மையும் வெளிவந்தது. ஆனால் 1990ல் "ரா" முழு பத்மநாபா கொலை சிவராசன் சரித்திரத்தையே தெரிந்து வைத்திருந்ததை பின்னாளில் சிபிஐ இடம் கூடம் தெரிவிக்கவில்லை, இதுதான் "ரா".
தெய்வம் நின்று கொல்லும் அல்லவா?
அசட்டு தைரியத்தில், என்ன ஆட்டம் போட்டாலும் தமிழகம் பின்வரும் என்ற திமிரில் சிவராசன் ராஜிவை வீழ்த்த, மத்திய போலிசார் மிக திறமையாக உண்மைய கண்டறிந்தனர், சிவராசனும் தற்கொலை செய்துகொண்டான், பெரும் கொலைகாரனான அவன் ராஜிவ்கொலைக்குபின்னும் ராஜஸ்தானில் வரதராஜ பெருமாளை கொல்லும் திட்டத்தோடுதான் வடக்குநோக்கி நகர்ந்தான், அவ்வளவு வெறி.
நளியின் வாழ்க்கை, பேரரிவாளனின் பரிதாபம், அன்னை லூர்தம்மாளின் தீரா சோகம், தமிழக முழுக்க தி.க பிரமுகர்களுக்கு இன்றும் மறைமுக கண்காணிப்பு என எல்லா சோகங்களுக்கும் காரணகர்த்தா இந்த சிவராசன்.
ராஜிவ் கொலையோடு கொல்லபட்ட ஹரிபாபு, நமது பகுதி ஆ.திருமலாபுரத்துக்காரர் இன்ஸ்பெக்டர் ராஜகுரு குடும்பம் வரை இவனால் பாதிக்கபட்டது, பெங்களூரில் தனக்கு இடமளித்த ரங்கநாத்தின் குடும்பம் நாசமானது வரை இவரது சாதனை அல்லது "போராட்டம்" நீளும்.
சிவராசனாலோ அல்லது அந்த இயக்கத்தாலோ யாராவது ஒருவர் வாழ்ந்தார்களா? அல்லது வாழவைக்கபட்டார்களா? (தமிழக அரசியல்வாதிகள் திடீர் தமிழ்போராளிகளை விடுங்கள்) என்றால் இல்லை, நிச்சயம் இல்லை. ஆதரித்த அனைவரும் காலி, இதுதான் அவர்கள் சித்தாந்தம். அவர்களுக்கு ஆக்க தெரியாது, அழிக்கமட்டும் தெரியும்.
ஒவ்வொரு படுகொலையின் பொழுதும் "தடைகல் அகற்றம்" என சொல்லும் புலிகள், ராஜிவ் கொலைக்கு அதுவும் சொல்லவில்லை. இறுதிவரை கனத்த மவுனம்.
இப்படியாக யாரும் எமக்கு வேண்டாம், சகலரையும் எதிர்த்து ஈழநாடு அடைவோம் என சகட்டுமேனிக்கு கொலைகளை புலிகள் புரிந்தனர்.
முன்பு உயிர்காத்த பத்மநாபா, வடமராட்சியில் உயிர்காத்த ராஜிவ், மணலாற்றில் உயிர்காத்த பிரேமதாசா என வரிசைகட்டி துரோகதனமாக கொன்றுவிட்டு அவர்களுக்கு இவர்கள் வைத்தபெயர் "துரோகிகள்".
சபாரத்தினம், ராஜிவ்,பத்மநாபா,பிரேமதாசா என எல்லோரையும் வரிசைகட்டி கொன்றுவிட்ட பின்னும் புலிகளுக்கு 20 ஆண்டுகள் காலம் இருந்தது? என்ன சாதித்தார்கள்? ஒன்றுமில்லை.
"நீங்கள் ஒரு முடிவிற்கும் வரமாட்டீர்கள், நாட்டை உருவாக்கி துப்பாக்கி குழுவிடம் கொடுப்பது எவ்வளவு பெரும் விபரீதம், உலகம் இதனை ஒப்பாது, அரசியலுக்கு திரும்புங்கள்" என்று 23 வருடங்களுக்கு முன்பே இந்தியா சொன்னதன் விளைவு பத்மநாபா,ராஜிவ் படுகொலை.
காலசூழல் மாறுவதை கூட கணிக்காமல் முள்ளிவாய்க்காலில் முடங்கி கடைசி நொடியில் ஆயுதங்களை மவுனித்து சிங்களரிடம் சரணடைய சென்றார்கள்.
இவர்கள் தந்திரமாக பத்மநாபாவை சாய்த்ததை போல சிங்களம் அவர்களை நயவஞ்சகமாக சரித்து இயக்க கதையை முடித்தது,
ஆனால் பத்மநாபா கொலையில் அதாவது அவருக்கு பாதுகாப்பு கொடுக்காமல், கொலை குற்றவாளிகளை கண்டும் காணாமல் விட்டு செய்த பாவம் பின்னாளில் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் கலைஞர் மீது பெரும் பழிச்சுமையாக விழுந்து கிடக்கின்றது, இதுதான் விசித்திரம்.
பத்மநாபாவின் நினைவுநாள் இன்று உண்மையான மானிடநேயமிக்க தமிழுணர்வாளருக்கு "ஈழதியாகிகள்" தினம். அந்தோ பரிதாபம் இந்த உண்மையான போராளிக்கு யாரும் அஞ்சலி செலுத்தமாட்டார்கள், கடல்கரையில் மெழுகுவர்த்தி பிடிக்கமாட்டார்கள், ஊர்வலம் செல்லமாட்டார்கள், அவர் கொல்லபட்ட வீடு சென்னையில்தானே இருக்கின்றது அந்த திசையை நோக்கி ஒரு ஊதுபத்திகூட கொழுத்தமாட்டார்கள்.
சமீபத்தில் தமிழனத்திற்கு வழிகாட்டி என ஹிட்லர் முதல் திப்புசுல்தான் வரை சம்பந்தமே இல்லாமல் சகட்டுமேனிக்கு பேனர் வைத்திருந்தார்கள். ஒருவேளை தமிழர்களுக்கு வழிகாட்டியருக்கு ஒரு பேனர் வைக்கவேண்டுமென்றால் நிச்சயம் பத்மநாபாவிற்குத்தான் வைத்திருக்கவேண்டும்.
அவர் எப்படி புலிகளோடு சேர்ந்து தற்கொலைகுண்டு, சயனைடு கடிக்காமல் அல்லது வெள்ளைகொடி பிடிக்காமல் மனிதநேயம், மக்கள் வாழ்வு என பேசி மக்களை திரட்டலாம். துப்பாக்கி,சயனைடு,கன்னிவெடி,தற்கொலை பெல்ட் இறுதியாக வெள்ளைகொடி .
இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் எப்படி தமிழரின் வழிகாட்டியாக இருக்கமுடியும்? முடியவே முடியாது. சிந்திக்க தெரிந்த தமிழன், சாகதீர்கள் அல்லது கொல்லாதீர்கள் என சொல்லும் தமிழன் எல்லாம் "துரோகி".
அப்படி ஒரு போராளி இருந்தான், ஒருங்கிணைந்த ஈழமாநிலத்தை 1 வருடம் ஜனநாயக "மக்கள் முதல்வராக" ஆண்டான் என்பது கூட நினைவு கூற ஆளில்லாத இனமான தமிழகமாக இது ஆகிவிட்டது.
பத்மநாபா கொல்லபட்டபொழுது தனக்கும் நாள்குறிக்கபட்டதை அறியா ராஜிவ்காந்தி இப்படி சொன்னார் "பத்மநாபாவும் எனது தாயார் இந்திராகாந்தியும் ஒரே நாளில் அதாவது நவம்பர் 19ம் தேதி பிறந்தவர்கள், இருவரும் ஈழமக்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தவர்கள், அவர்களை வாழவைக்க எண்ணியவர்கள்"
மிக நிதர்சனமான உண்மை இது.
இந்திராகாந்தியும், பத்மநாபாவையும் தவிர உண்மையாக ஈழமக்களை நேசித்தவர்கள் யாருமில்லை.
அப்படி நேசித்திருந்தால் முள்ளிவாய்க்கால், இனப்படுகொலை, கடலில் ஈழதமிழர் படகு, வடக்கில் ராணுவ குவியல் போன்ற வார்த்தைகளுக்கும் அது கொடுத்த கொடுத்துகொண்டிருக்கும் எண்ணற்ற வலிகளுக்கு இடமிருந்திருக்காது.
தன்னலம் துறந்த மானுடநேயமிக்க போராளிகள் ஒருநாளும் மறைவதில்லை. உறுதியாக சொல்லலாம் அவர் "ஈழத்து சேகுவாரா".

Wednesday, 22 June 2016

இந்திராகாந்தி மரணம் எவ்வாறு  நிகழ்ந்தது ?


விமான விபத்தில் சஞ்சய் காந்தி மரணம் 
அரசியலில் இந்திரா காந்திக்குத் துணையாக இருந்தவர், அவருடைய இளைய மகன் சஞ்சய் காந்தி. இந்திராவின் அரசியல் வாரிசு என்று கருதப்பட்டவர். துணிச்சல் மிக்கவர். அரசியல் வியூகங்களை வகுப்பதில் வல்லவர். ஜனதாவை முறியடித்து, இந்திரா காந்தி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற 6 மாத காலத்தில், சஞ்சய் காந்தி எதிர்பாராத விதமாக விமான விபத்தில், 33_வது வயதில் மரணம் அடைந்தது, நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்தது.
இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி, விமானம் ஓட்டுவதில் பயிற்சி பெற்று, விமானி (பைலட்) ஆக வேலை பார்த்தார். அரசியலில் தாயாருக்குத் துணையாக இருந்து வந்த சஞ்சய் காந்தி, “மாருதி” கார் தொழிற்சாலையைத் தொடங்கினார். அத்துடன் சிறிய விமானங்களை ஓட்டுவதற்குப் பயிற்சி பெற்றுத்தேறினார். விமான ஓட்டுவோருக்கான சங்கத்தில் (“பிளையிங் கிளப்”) உறுப்பினராக இருந்தார். காலை வேளையில், சிறிய விமானத்தில் ஏறி, டெல்லியை ஒரு சுற்று சுற்றி விட்டுத் திரும்புவது சஞ்சய் காந்தியின் பொழுது போக்கு. 1980 ஜுன் 23_ந்தேதி காலை, சிறிய விமானத்தில் ஏறி டெல்லி மீது பறந்தார்.
சஞ்சய் பயணம் செய்த விமானம் “புஷ்பக்” என்ற சிறிய பயிற்சி விமானம் ஆகும். சஞ்சய் காந்தியுடன், விமானப் பயிற்சியாளர் சக்சேனாவும் பயணம் செய்தார். விமானத்தை சஞ்சய் காந்தி ஓட்டினார். காலை 8 மணிக்கு விமானம் புறப்பட்டது. இந்திரா காந்தி வீட்டுக்கு மேல் விமானம் பறந்து சென்றது. சிறிது நேரத்திற்கெல்லாம், விமானம் நொறுங்கி விழுந்தது. “12, வெலிங்டன் கிரசென்ட்” என்ற இடத்தில் உள்ள சஞ்சய் வீட்டுக்குப் பின்புறத்திலேயே விமானம் விழுந்தது. விபத்து நடந்த இடம் பாராளுமன்றத்தில் இருந்து 2 மைல். விமானம் மூன்று முறை வட்டமிட்டதாகவும், 4_வது முறை வட்டமிடும்போது மரத்தில் மோதி நொறுங்கி விழுந்ததாகவும், விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். விபத்து நடந்த இடத்திலேயே சஞ்சய் காந்தி இறந்துவிட்டார்.
சஞ்சய் காந்தியுடன் பயணம் செய்த சக்சேனாவும் அங்கேயே மரணம் அடைந்தார். விமானம் தரையில் மோதிய வேகத்தில், சஞ்சய் காந்தியின் தலை நொறுங்கி விட்டது. கை_கால் எலும்புகள் நொறுங்கிப் போய்விட்டன. உடலில் தலை முதல் கால் வரை காயங்கள் இருந்தன. ரத்த வெள்ளத்தில் கிடந்தார். விமானம் நொறுங்கி விழுந்த செய்தி கிடைத்ததும், தீயணைக்கும் படையினர் விரைந்து சென்றார்கள். நொறுங்கிய விமான பாகங்களை உடைத்தும், அறுத்தும் உள்ளே ரத்த வெள்ளத்தில் கிடந்த சஞ்சய் காந்தியின் உடலையும், சக்சேனா உடலையும் வெளியே எடுத்தார்கள். விமானம் நொறுங்கிய தகவல், இந்திரா காந்திக்கு டெலிபோன் மூலம் தெரிவிக்கப்பட்டது. அவர், விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தார். இதற்குள் சஞ்சய், சக்சேனா உடல்கள் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு விட்டன. ஆம்புலன்ஸ் வண்டி, ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்தது. டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, சஞ்சய் காந்தி ஏற்கனவே இறந்துவிட்டார் என்றும், காலை 8.15 மணி அளவில் அவர் இறந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சஞ்சய் காந்தி உடல் சிதைந்து போயிருந்ததால், டாக்டர்கள் பல மணி நேரம் ஆபரேஷன் செய்து, சிதைந்த பாகங்களை ஒன்று சேர்த்து தையல் போட்டனர். நெற்றியில் பெரிய தையல் போடப்பட்டது. சஞ்சய் உடல், இந்திரா காந்தி வீட்டுக்கு பகல் 1.40 மணி அளவில் கொண்டு செல்லப்பட்டது. சஞ்சய் காந்தியின் உடலைப் பார்த்ததும் இந்திரா காந்தி துயர மிகுதியால் கதறினார். பின்னர் சோகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார். எனினும், கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. சஞ்சய் காந்தியின் உடலைப் பார்த்து, அவர் மனைவி மேனகா கதறித் துடித்தார். சஞ்சய் காந்தியின் திடீர் மரணம், இந்தியாவையே அதிர்ச்சி அடையச் செய்தது. டெல்லியில் கடைகள் மூடப்பட்டன. மந்திரிகள், “எம்.பி”க்கள், பொதுமக்கள் சாரிசாரியாக இந்திரா காந்தி வீட்டுக்குச் சென்று சஞ்சய் காந்திக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
விமானம் நொறுங்கிக்கிடந்த இடத்துக்கு, இந்திரா காந்தி இரண்டு முறை சென்று பார்த்தார். நொறுங்கிக்கிடந்த பாகங்களில் எதையோ தேடினார். (சஞ்சய் காந்தியின் கெடிகாரத்தையும், சாவிக்கொத்தையும்தான் இந்திரா தேடினார் என்றும், சுவிஸ் பாங்கியில் சஞ்சய் காந்தி கணக்கு வைத்திருந்தார் என்றும், அதன் நெம்பர் சாவியிலோ, கெடிகாரத்திலோ இருந்திருக்கலாம் என்றும், பின்னர் சில பத்திரிகைகள் எழுதின.) விபத்து நடந்தபோது, ராஜீவ் காந்தி இத்தாலி நாட்டில் இருந்தார். அவருக்கு டெலிபோனில் இந்திரா தகவல் தெரிவித்தார். உடனே, விமானம் மூலம் ராஜீவ் டெல்லிக்குப் புறப்பட்டார். மறுநாள் இறுதி ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட டிரக் வண்டியில், சஞ்சய் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மந்திரிகளும், “எம்.பி”க்களும், லட்சக்கணக்கான பொதுமக்களும் ஊர்வலத்தில் நடந்து சென்றனர். ஊர்வலம், யமுனை நதிக்கரையை அடைந்தது. அங்கு, நேரு சமாதிக்கு அருகே அமைக்கப்பட்ட “சிதை”யில் சஞ்சய் காந்தி உடல் தகனம் செய்யப்பட்டது.
சஞ்சய் காந்தியின் ஒரே மகன் வருண். சஞ்சய் இறந்தபோது, வருண் மூன்று மாதக்குழந்தை. எனவே, “சிதை”க்கு ராஜீவ் காந்தி தீ மூட்டினார். முன்னதாக, துணை ஜனாதிபதி இதயதுல்லா, பாராளுமன்ற சபாநாயகர் பலராம் ஜாக்கர், “எல்லை காந்தி” கான் அப்துல் கபார்கான், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி, மாநில முதல்_மந்திரிகள், கவர்னர்கள், மத்திய மந்திரிகள், “எம்.பி”க்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். “சிதை”யில் வைக்கப்பட்ட சஞ்சய் முகத்தை இந்திரா காந்தி கடைசி முறையாகப் பார்த்தபோது, துயர மிகுதியால் கதறினார்.
சஞ்சய் மனைவி மேனகா அழுதபடி மயக்கம் அடைந்தார். தனது அரசியல் வாரிசாக உருவாகி வந்த சஞ்சய் காந்தி திடீரென்று மரணம் அடைந்தது, இந்திராவுக்குத் தாங்கமுடியாத துயரம் அளித்தபோதிலும், மனதைத் திடப்படுத்திக்கொண்டார். விமானம் ஓட்டும் பைலட்டாக வேலை பார்த்த ராஜீவ்காந்தியை ராஜினாமா செய்யச்சொன்னார். அதன்படி வேலையை விட்டு விலகிய ராஜீவ் காந்தி, தாயாருடைய பணிகளில் அவருக்கு உதவியாக இருந்து வந்தார்.
இந்திராகாந்தியின் கடைசி பேச்சு
இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள் (30_10_1984) ஒரிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார். 1967 தேர்தலின்போது, ஒரிசாவில் பிரசாரம் செய்த நேரத்தில்தான் அவருக்கு எதிராக பெரும் வன்முறை மூண்டு, கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். அவர் மூக்கில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இம்முறை, அதே மாநிலத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்றிரவு ஒரிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திரா பேசினார். அவர் பேச்சு உணர்ச்சி மயமானதாக இருந்தது. சொற்பொழிவுப்பிரிவு செயலாளர் சாரதா பிரசாத் தயாரித்துக் கொடுத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் பேசினார்.
இந்தியாவின் பெருமை மிக்க வரலாறு சுதந்திரத்துக்காக நடைபெற்ற போராட்டம். இந்தியாவை எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் முத லியவற்றைக் குறிப் பிட்டுவிட்டு, தயாரிக்கப்பட்ட பேச்சிலிருந்து விலகி புதிதாகப் பேசத் தொடங்கினார். உணர்ச்சி மிகுதியில் குரல் தழுதழுக்க அவர் கூறினார்: “இன்று நான் இங்கிருக்கிறேன். நாளை இருப்பேனா என்று தெரியாது… என்னை சுட்டுக் கொல்ல எத்தனை முயற்சிகள் நடைபெற்றன என்பதை யாரும் அறியமாட்டார்கள். வாழ்வு, சாவு பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு இரண்டும் ஒன்றுதான். நான் கணிசமான காலம் வாழ்ந்து விட்டேன். அந்தக் காலத்தை, நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் செலவிட்டதில் பெருமைப்படுகிறேன். இது ஒன்றுதான் எனக்குப் பெருமையே தவிர, வேறு எதற்காகவும் நான் பெருமைப்படவில்லை. என் கடைசி மூச்சு உள்ளவரை நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்வேன்.
நான் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்த நாட்டை வளப்படுத்தும்; பலப்படுத்தும்.” _இவ்வாறு இந்திரா காந்தி கூறினார். இந்திராவின் பேச்சை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்த மக்கள், “இந்திரா வாழ்க” என்று குரல் எழுப்பினர். அடுத்த நாள் நடக்கப்போகும் விபரீதத்தை அவர்கள் அறியவில்லை. கூட்டம் முடிந்ததும் இந்திரா காந்தி, கவர்னர் பி.என்.பாண்டேயின் இல்லத்துக்குச் சென்று தங்கினார்.
அப்போது கவர்னர், “வன்முறையால் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற பொருள்பட பொதுக்கூட்டத்தில் பேசினீர்களே. ஏன்? அதைக்கேட்டு நான் ரொம்பவும் கவலையும், அதிர்ச்சியும் அடைந்தேன்” என்று இந்திராவிடம் கூறினார். “நான் என் மனதில் பட்டதைச் சொன்னேன். என் தாத்தாவும், அம்மாவும் அணு அணுவாக இறப்பதைக் கண்ணால் கண்டு, மனம் நொந்தவள் நான். நோய்வாய்ப்பட்டு, துயரப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சாவது மிகவும் கொடுமை. ஆரோக்கியமாக இருக்கும்போது, திடீரென்று மரணத்தைத் தழுவுவதையே நான் விரும்புகிறேன்” என்று இந்திரா பதிலளித்தார்.
இந்தச் சமயத்தில், டெல்லியில் இருந்து இந்திராவுக்கு டெலிபோன் வந்தது. பிரியங்காவும், ராகுலும் வீட்டிலிருந்து பள்ளிக்குப் போகும் போது கார் விபத்தில் சிக்கினார்கள் என்று, போனில் சோனியா தெரிவித்தார். பொற்கோவில் போரைத் தொடர்ந்து, தன் பேரக்குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படலாம், அல்லது கடத்தப்படலாம் என்று இந்திரா எதிர்பார்த்தார். எனவே, விபத்தில் சிக்கினார்கள் என்ற செய்தி கேட்டு, அவர் பதற்றம் அடைந்தார். “இது சிறிய விபத்துதான். யாருக்கும் காயம் இல்லை. நன்றாக இருக்கிறார்கள். உங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே சொன்னேன். கவலைப்படாதீர்கள். திட்டமிட்டபடி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினால் போதும்” என்று சோனியா எவ்வளவோ கூறியும், இந்திராவுக்கு நிம்மதி ஏற்படவில்லை. சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டு, உடனே டெல்லிக்குத் திரும்பத் தீர்மானித்தார். அதன்படி, அவருடைய சுற்றுப்பயணம்ரத்து செய்யப்பட்டது.
இரவோடு இரவாக, விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டார். நள்ளிரவுக்குப்பின் டெல்லியை அடைந்தார். நேராக காரில் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தபோது, பேரக்குழந்தைகள் இருவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். “அவர்களுக்கு காயம் எதுவுமில்லை. கவலைப்படாதீர்கள்” என்று இந்திராவிடம் கூறினார், சோனியா. இந்திரா, தன் செயலாளர் பி.சி.அலெக்சாண்டரை அழைத்துப் பேசினார். இந்திரா மிகவும் களைப்புடன் இருப்பதைக் கண்ட அலெக்சாண்டர், பேச்சை சுருக்கமாக முடித்துக்கொள்ள விரும்பினார்.
ஆனாலும், காஷ்மீர் பற்றியும், பஞ்சாப் பற்றியும் விரிவாக விவாதித்த பிறகே, அலெக்சாண்டரை அனுப்பினார். பிறகு செயலாளர் ஆர்.கே.தவானை அழைத்தார். மறுநாள் என்னென்ன நிகழ்ச்சிகள் தனக்கு இருக்கின்றன என்று கேட்டறிந்தார். முக்கியமானவற்றைத் தவிர, மற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்து விடும்படி கூறினார். நள்ளிரவு இரண்டு மணிக்குத்தான் படுக்கச்சென்றார். விடியற்காலை 4 மணிக்கு சோனியா எழுந்து பார்த்தபோது, இந்திரா ஏற்கனவே எழுந்துவிட்டதையும், குளிக்கத் தயாராகிக்கொண்டிருப்பதையும் கண்டார்.
இந்திரா காந்தி சுட்டுக் கொலை 
மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான நிகழச்சி பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி அவருடைய வீட்டில் பாதுகாவலர்களாலேயே (சீக்கியர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டார்.
சீக்கியர் பொற்கோவிலில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த போருக்குப்பிறகு, இந்திரா மீது சீக்கியர்களில் பலர் ஆத்திரம் கொண்டிருந்தனர். அதன் காரணமாக, இந்திரா காந்தியின் வீட்டில் காவல் பணியில் சீக்கியர்களை அமர்த்தக் கூடாது என்று ரகசியத்துறை டைரக்டர் கருத்து தெரிவித்தார்.
ஆனால் அந்த யோசனையை இந்திரா ஏற்கவில்லை. டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியின் வீடு ஒரே காம்பவுண்டுக்குள் அமைந்த இரு கட்டிடங்களைக் கொண்டதாகும். இவற்றில் பிரதமர் வசிக்கும் இல்லத்தின் வாசல், சப்தர்ஜங் ரோட்டில் உள்ளது. இந்த இல்லத்தை அடுத்த கட்டிடம், பிரதமரின் அலுவலகமாகும். இதன் வாசல் அக்பர் ரோட்டில் உள்ளது.
ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்துக்குள்ள தூரம் சுமார் 300 அடியாகும். இரண்டுக்கும் இடையில் உள்ள பாதை வழியே கார் செல்ல முடியும் என்றாலும், இந்திரா நடந்தே செல்வது வழக்கம். 1984 அக்டோபர் 31_ந்தேதி காலை 8 மணிக்கு, இந்திரா காந்தி பற்றி டெலிவிஷன் படம் ஒன்றை எடுப்பதற்காக, வெளிநாட்டுப் படப்பிடிப்பாளர் ஒருவர் வந்து, பிரதமரின் அலுவலகத்தில் காத்திருந்தார். அவருக்குப் பேட்டியளிக்க இந்திரா காந்தி தன் இல்லத்திலிருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்றார்.
இரண்டு கட்டிடங்களுக்கும் இடையே ஒரு நடைபாதை உள்ளது. அதில் அவர் நடந்து செல்ல, அவருக்கு சுமார் 7, 8 அடி தூரத்தில் பாதுகாப்பு அதிகாரி தினேஷ் பட் மற்றும் 5 மெய்க்காப்பாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னால், பிரதமரின் அந்தரங்கச் செயலாளர் ஆர்.கே.தவான் வந்து கொண்டிருந்தார். பாதையின் வலது புறத்தில் புதர் போன்ற செடிகளுக்குப் பின்னால் பிரதமரின் இல்ல பாதுகாவலர்கள் பியாந்த்சிங் (சப்_இன்ஸ்பெக்டர்), சத்வந்த்சிங் (கான்ஸ்டபிள்) ஆகியோர் நின்றிருந்தனர்.
இந்திரா காந்தி நடந்து வந்து கொண்டிருந்தபோது, பியாந்த்சிங் (வயது 33) தன் கைத்துப் பாக்கியை உருவி எடுத்து, இந்திரா காந்தியை நோக்கி ஐந்து முறை சுட்டான். அதே சமயம் சத்வந்த்சிங் (26) இயந்திரத் துப்பாக்கியால் (ஸ்டேன்கன்) சரமாரியாகச் சுட்டான். கண்மூடிக் கண் திறப்பதற்குள் இவ்வளவும் நடந்து விட்டன. இந்திரா காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்தன. ரத்தம் பீறிட அவர் கீழே சாய்ந்தார். (இந்திரா காந்தியை நோக்கி பியாந்த்சிங்கும், சத்வந்த்சிங்கும் திரும்பிய போது, இந்திராவின் பின்னால் வந்த மெய்க்காப்பாளர்கள் அதை கவனிக்கவே செய்தனர். ஆனால் அந்த இருவரும் இந்திரா காந்தியை நோக்கி வணங்குவதாகவே அவர்கள் நினைத்துவிட்டனர்.) இந்திரா காந்தி சுடப்பட்டு விட்டார் என்பதை தெரிந்து கொண்டதும், கொலையாளிகளை நோக்கி கமாண்டோ படையினர் சுட்டனர். இதில் பியாந்த்சிங் மரணம் அடைந்தான். சத்வந்த்சிங் படுகாயம் அடைந்தான்.
வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த சோனியா, துப்பாக்கி சத்தம் கேட்டு அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தார். இந்திரா காந்தி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக்கண்டு “அம்மா!” என்று கதறினார். இந்திரா காந்தியை ஆஸ்பத்திரிக்கு காரில் கொண்டு சென்றார்கள். பின் இருக்கையில் இந்திரா படுக்க வைக்கப்பட்டார். அவர் தலையை, தன் மடி மீது வைத்துக்கொண்டார் சோனியா. ஆஸ்பத்திரியில் இந்திராவுக்கு அவசர “ஆபரேஷன்” நடந்தது. இந்திரா உடலில் 22 குண்டுகள் பாய்ந்திருந்தன. அவற்றில் 8 குண்டுகள் உடம்பைத் துளைத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தன. இந்திராவைக் காப்பாற்ற டாக்டர்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஆனால் பலன் இல்லை. 2.25 மணிக்கு இந்திரா இறந்து விட்டார்” என்று டாக்டர்கள் அறிவித்தனர். எனினும் அகில இந்திய ரேடியோ மாலை 6 மணிக்குத்தான் இந்திராவின் மரணச்செய்தியை அறிவித்தது.
இந்திரா கொல்லப்பட்ட போது, ஜனாதிபதி ஜெயில்சிங் வெளிநாட்டில் இருந்தார். ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக, மேற்கு வங்காளத்துக்குச் சென்றிருந்தார். மூத்த மந்திரியான பிரணாப் முகர்ஜியும் அவருடன் இருந்தார். அவர்கள் சென்று கொண்டிருந்த காரை, ஒரு போலீஸ் ஜீப் வழி மறித்தது. “பிரதமர் வீëட்டில் ஒரு விபத்து நடந்துள்ளது. சுற்றுப் பயணத்தை நிறுத்திவிட்டு, உடனே டெல்லிக்குத் திரும்புங்கள்” என்ற செய்தி ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே ராஜீவ் காந்தியும், பிரணாப் முகர்ஜியும் ஒரு ஹெலிகாப்டர் மூலம் கல்கத்தாவுக்குச் சென்றனர். அங்கு “இந்தியன் ஏர்லைன்ஸ்” விமானம் ஒன்று தயாராக காத்துக்கொண்டிருந்தது. அதில் இருவரும் டெல்லிக்குப் பயணமானார்கள்
ராஜீவ் காந்தி பிரதமரானார் 
கல்கத்தாவில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ராஜீவ் காந்தி, பெரும்பாலும் விமானிகள் அறையிலேயே இருந்தார். டெல்லியில் இருந்து, வயர்லெஸ் மூலம் அவருக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்திரா காந்தி இறந்து விட்டதாக பிற்பகல் 2.30 மணிக்கு தகவல் வந்தது. தன் உணர்ச்சிகளை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார், ராஜீவ்காந்தி. அவர் டெல்லி போய்ச்சேர்ந்தபோது, விமானநிலையத்தில் மந்திரிகளும், காங்கிரஸ் தலைவர்களும் கூடியிருந்தனர். அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்திருந்தனர்.
நேரு மறைந்தபோதும் லால்பகதூர் சாஸ்திரி இறந்தபோதும், மூத்த மந்திரியான நந்தா, இடைக்கால பிரதமராகப் பதவி ஏற்றார். பிறகு பிரதமர் தேர்தல் நடைபெற்றது. அதே மாதிரி தன்னை இடைக்காலப் பிரதமராக ஆக்குவார்கள் என்று பிரணாப் முகர்ஜி எதிர்பார்த்தார். ராஜீவ் காந்தியைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதை அறிந்ததும் அவர் ஏமாற்றம் அடைந்தார். எனினும், அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மன்றக் குழு (பார்லிமெண்டரி போர்டு) கூடி, புதிய பிரதமராக ராஜீவ் காந்தியை தேர்ந்தெடுக்க முடிவு செய்தது. ஆட்சி மன்றக் குழுவில் மொத்தம் ஐந்து பேர் இடம் பெற்று இருந்தனர். அவர்களில் பிரதமர் இறந்துவிட்டார். 2 பேர் அப்போது டெல்லியில் இல்லை.
நரசிம்மராவ் (உள்துறை மந்திரி), பிரணாப் முகர்ஜி (நிதி மந்திரி) ஆகிய இருவர் மட்டுமே இருந்தனர். அவர்கள் இருவரும், ராஜீவ் பெயரை அறிவித்தனர். யேமன் நாட்டுக்கு சென்றிருந்த ஜனாதிபதி ஜெயில்சிங், இந்திரா மரணச் செய்தியை அறிந்ததும் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக டெல்லிக்குப் புறப்பட்டார். அன்று மாலை டெல்லி வந்து சேர்ந்தார். அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முடிவுடன்தான் அவர் வந்தார். காங்கிரஸ் தலைவர்களும் அதே முடிவில் இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும், ராஜீவ் காந்தி பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யுமாறு உத்தரவிட்டார். அன்று மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில், இந்தியாவின் புதிய பிரதமராக ராஜீவ் காந்தி பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி ஜெயில்சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
“இந்திரா காந்தி மந்திரி சபையில் இடம் பெற்றிருந்த மந்திரிகள் அனைவரும் தொடர்ந்து நீடிப்பார்கள். புதிய மந்திரிகள் நியமனம் இல்லை. மந்திரிகளின் இலாகாக்களும் மாற்றப்படமாட்டாது” என்று ராஜீவ் அறிவித்தார். அன்றிரவு ராஜீவ் காந்தி ரேடியோவில் பேசினார். அவர் கூறியதாவது:-
“இந்திரா காந்தி, படுகொலை செய்யப்பட்டுவிட்டார். அவர் எனக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கே தாயாக விளங்கினார். தன்னுடைய கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை, இந்திய மக்களுக்காக அவர் பாடுபட்டார். நாம் அனைவரும் துயரத்தில் முழ்கியுள்ள நேரம் இது. இந்த துயரத்தை _ சோதனையை நாம் தைரியத்துடனும், மனோ வலிமையுடனும் எதிர்கொள்ள வேண்டும். இந்திரா காந்தி மறைந்துவிட்டார். ஆயினும் அவருடைய ஆன்மா நம்முடன் வாழ்கிறது. அவருடைய ஆன்மாவுக்கு மரணம் இல்லை. நம்முடைய இந்திய நாடு, வரலாற்றுச் சிறப்பு மிக்கது. நாம் ஒற்றுமையுடன் இருந்து, இந்தியாவின் ஸ்திரத்தன்மையைக் காப்போம்.” இவ்வாறு ராஜீவ் கூறினார்.
பின்னர், ராஜீவ் தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடந்தது. இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலத்தை எவ்வாறு நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. இந்திரா உடலை அன்றிரவு அவர் வீட்டில் வைத்திருந்து விட்டு, பிறகு இரண்டு நாட்கள் “தீன் மூர்த்தி” இல்லத்தில் (நேரு வசித்த வீடு) பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்கு வைத்திருப்பது என்றும், 3_ந்தேதி இறுதி ஊர்வலம் நடத்துவது என்றும், யமுனை நதிக்கரையில் நேரு சமாதி அருகே தகனம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்திரா மரணச்செய்தி டெல்லியில் காட்டுத்தீ போல பரவியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சாரி சாரியாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பெண்கள் கதறி அழுதார்கள். பலர் மயக்கம் அடைந்தார்கள். இந்திரா காந்தியுடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய அவர் மருமகள் மேனகா, இந்திரா மரணச் செய்தி அறிந்ததும் ஓடோடி வந்தார். மாமியார் உடலைக் கண்டு அலறித்துடித்தார். நாள் முழுவதும் கண்ணீர் விட்டபடி சோகத்துடன் அமர்ந்திருந்தார். அன்று இந்திரா வீட்டில் இருந்த எவரும் தூங்கவில்லை.
உறவினர்கள் இந்திரா உடல் அருகே கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்தனர். இந்திரா வீட்டைச் சுற்றிலும், தோட்டத்திலும், ரோடுகளிலும் ஏராளமானவர்கள் சோகத்துடன் கூடியிருந்தனர். மறுநாள் காலை இந்திரா காந்தியின் உடல் “தீன் மூர்த்தி” இல்லத்துக்குக் கொண்டு போகப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட “கிï” வரிசையில் நின்று, இறுதி மரியாதை செலுத்தினர். இதற்கிடையே, இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று ஆத்திரம் அடைந்தவர்கள், சீக்கியர்களின் கடைகளையும், வீடுகளையும் தாக்கினார்கள்.
ஏராளமான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பயந்துபோன சீக்கியர்கள், வீடு_வாசலை விட்டுவிட்டு பஞ்சாப் மாநிலத்துக்கு தப்பி ஓடினர். இந்த கலவரங்களில் இறந்த சீக்கியர்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரம் இருக்கும் என்றும், டெல்லியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பின்னர் வந்த தகவல்கள் கூறின. சுமார் 50 ஆயிரம் பேர், வீடு_ வாசலை இழந்து அகதிகளானார்கள். 2_ந்தேதி இரவு, ராஜீவ் காந்தி டெலிவிஷனில் பேசினார். “இப்போது நடைபெற்று வரும் கலவரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்தக் கலவரங்கள், இந்திரா காந்தி எந்த லட்சியங்களுக்காக வாழ்ந்தாரோ, அந்த லட்சியங்களுக்கு எதிரானவை.
கலவரம் அடங்காவிட்டால், அதை அடக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டார். வன்முறைக் கும்பலில் காலிகளும் ஊடுருவியிருந்தனர். அதனால் கலவரம் நீடித்தது. வன்முறையை ஒடுக்குமாறு ராணுவத்துக்கு ராஜீவ் காந்தி உத்தரவிட்டார். அதன்படி, ராணுவத்தினர் கலவரத்தை அடக்கினர். டெல்லியில் ராணுவத்தினர் டாங்கிகளில் ரோந்து வந்தனர். 3_ந்தேதி காலை, இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலம் நடந்தது. அவர் உடல் பீரங்கி வண்டியில் வைக்கப்பட்டு, ராணுவத்தினர் அணிவகுத்து செல்ல ஊர்வலம் புறப்பட்டது.
மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் இறுதி ஊர்வலம் சென்ற அதே பாதையில், இந்திராவின் இறுதி ஊர்வலமும் சென்றது. கலவர சூழ்நிலை காரணமாக, ஊர்வலத்தை காண ரோட்டின் இருபுறமும் கூடியிருந்தவர்கள் எண்ணிக்கை முன் அளவுக்கு இல்லாமல் குறைவாகவே இருந்தது. யமுனை நதிக்கரையில், காந்தி, நேரு ஆகியோரின் சமாதிகள் உள்ள இடத்திற்கு அருகே, சாந்தி வனம் என்ற இடம் இந்திரா காந்தியின் உடல் தகனத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது.
ஊர்வலம் அந்த இடத்தை அடைந்ததும், இந்திராவின் உடல் பீரங்கி வண்டியில் இருந்து இறக்கப் பட்டு, சந்தனக் கட்டைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த “சிதை”யில் வைக்கப்பட்டது. இங்கிலாந்து பிரதமர் மார்க்கரெட் தாட்சர், ஜப்பான் பிரதமர் நாக சோனே, பாகிஸ்தான் அதிபர் ஜியா, வங்காள தேச அதிபர் எர் ஷாத், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா, பாலஸ்தீன தலைவர் அராபத் மற்றும் ஜாம்பியா, உகாண்டா, பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், மாநில முதல்வர்கள், கவர்னர்கள், அன்னை தெரசா, திரை உலகப் பிரமுகர்கள் வந்திருந்து இந்திராவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். (இந்த சமயத்தில், தமிழக முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று, மாற்று சிறுநீரகம் பொருத்த ஏற்பாடு நடந்து வந்தது. இந்த நிலையில், இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட தகவலை அறிந்தால், அவர் உடல் நிலை மேலும் மோசமடையும் என்பதால், அந்தத் தகவல் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை.)
தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், ராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, மரியாதை செலுத்தினர். பின்னர், “சிதை”க்கு ராஜீவ்காந்தி தீ மூட்டினார். “சிதை” எரிந்த போது, கூடியிருந்தவர்கள் “இந்திரா அமரர் ஆனார்”, “இந்திராவின் புகழ் வாழ்க” என்று குரல் எழுப்பினர். மறுநாள் இந்திராவின் அஸ்தி (சாம்பல்) பல கலசங்களில் சேகரிக்கப்பட்டது. அஸ்தியின் ஒரு பகுதி திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்பட்டது. “நான் இறந்தபின், என் அஸ்தி இமயமலை மீது தூவப்பட வேண்டும்” என்று தன் விருப்பத்தை இந்திரா காந்தி ஏற்கனவே ராஜீவ் காந்தியிடம் தெரிவித்திருந்தார். அதன்படி, தாயாரின் அஸ்தியின் ஒரு பகுதியை, இந்திய விமானப்படை விமானத்தில் ராஜீவ் காந்தி எடுத்துச்சென்று, இமயமலைச் சாரலில் தூவினார்.

Saturday, 28 May 2016


LTTE பயங்கரவாதி பிரபாவின் நயவஞ்சகத்தில் சிக்கி அழிந்துபோன பயங்கரவாதி TNLA தலைவன் தமிழரசன் -

பயங்கரவாதி தமிழரசன் யார் ?

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அருகில் உள்ள மதகளிர் மாணிக்கம் எனும் கிராமத்தில் துரைசாமி – பதூசி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1945 ஆம் ஆண்டு பிறந்தான் . இவனுக்கு ஒரு தங்கை உண்டு. கோவையில் B.E. ( Chemical Engr) வேதியியல் பொறியியல் படித்தான், இளம் வயதிலேயே கலூரியில் இருந்த காலத்தில் 1969 –ல் இந்திய கம்ஸயூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் (ML) என்ற நக்சல் இயக்கம் தோன்றிய காலகட்டம் அது, நக்சல் பிதாமகன்  பயங்கரவாதி மஜும்தார் பயங்கரவாத நக்சல் இயக்க கொள்கைகளை கடைபரப்பியதில் மூளை சலவைக்கு ஆளான பெரும்பாலும் வளர்ச்சியில் பின் தங்கிய, அரசாங்க வேலை கிடைக்காத வெறுப்பில் இருந்தவர்கள், சோம்பேறிகள், திருட்டு கொள்ளைகளை செய்து காவல் துறைக்கு ஒளிந்து வாழ்பவர்கள், ஏழை பழங்குடி இந்தியர்கள் அந்த நக்சல் இயக்கத்தில் சேர்ந்தனர், 
தமிழகத்தில் ஆசிரியராக இருந்து பின்பு ஒரு குற்ற செயலின் காரணமாக பனி இடை நீக்கம் செய்யப்பட்டு. பொழப்புக்கு முழு நேர முழுநேர கொள்ளைகாரனாக இருந்த புலவர்.கலியபெருமாள் என்பவன் இந்த நக்சல் சித்தாந்தம் கொண்டு தன் கொள்ளை, திருட்டு தொலிழலை நியாபடுத்தவும், ஆள்செர்ப்புக்கும் , பயன்படுத்திகொண்டான், தன்னை காவல்துறையிடம் இருந்து காப்ற்றிகொள்ள நக்சல் காட்பாதர் மேற்குவங்க மஜூம்தாரை தமிழகம் அழைத்து பெரும்பலூர் முந்திரி காட்டில் ரகசிய ஆலோசனை கூட்டம் போட்டு, ஆள் சேர்த்து நக்சல் இயக்க அடிப்படை கட்டுமானத்தை தமிழகத்தில் ஏற்படுத்தினான், ஆக தமிழகத்தின் நக்சல் பிதாமகன் கலியபெருமாள் என்றால் மிகையல்ல,
இதே காலகட்டத்தில் மாணவராக இருந்த தமிழரசன் களியபெருமாளுடன் சேர்ந்து சில சிறு சிறு கொள்ளை வழிப்பறி செயல்களில் ஈடுபடித்திகொண்டான், கலியபெருமாள் அழைப்பை ஏற்று நோகாமல் பணம் சம்பாரிக்கும் தொழிலுக்கு படிப்பை விட்டுவிட்டு கலியபெருமாள் குழுவில் தன்னை இணைத்து கொண்டான், பாதுகாப்புக்கு நக்சல் இயக்கம் என்ற பெயர், புலவர். காலியபெருமாள் கூட நெருங்கிய நட்ப்பு இருந்ததால் பொலிட் பீரோ உறுப்பினர் அந்தஸ்த்தை கொண்டு தன்னை தரம் உயர்த்திகொண்டான் தமிழரசன்,

மிசா காலத்தில் கைது - 
=====================
தமிழ்நாட்டு காவல் துறை Q branch தொடக்கம் முதல் தமிழரசன்  விசயங்களில் மிகுந்த முன்னேற் பாடுகளையும் முடிந்த அளவிற்கு ஆதாரங்களையும் திரட்டி வைத்திருந்தார்கள்.ஆகையால் மிசா காலக்கட்டத்தில்  கலியபெருமாள், மற்றும் தமிழரசன் கைது செய்யப்பட்டு  திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கபட்டனர், தமிழரசன், கலியபெருமாள் குழுவினர்  சிறையில் இருந்து தப்பிக்க முயன்று அனைவரும் பிடிப்பட்டனர். பின்பு மிசா முடிவுக்கு பின் விடுவிக்கப்பட்டனர்,

இலங்கை அகதிகள் வருகை LTTE பயங்கரவாதி பிரபாவின் தொடர்பு - 

1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தில் இலங்கை அகதிகள் தமிழகம் நோக்கி படையெடுத்து வந்தனர், ஆகையால் மனிதாபிமானத்தில் மத்திய,மாநில ஆரசுகளின், பொதுமக்களின் அனுதாபம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்டிருந்த காலம் அது,

1985ம் ஆண்டு தனி தமிழ் ஈழத்திற்கு ஆதராக போராளி குழுக்கள் பலர் தமிழகத்தில் மிக சுதந்திரமாக உளவிய காலம், மத்திய அரசே TELO,EPRLF,LTTE போன்ற பிரதான ஈழ இயக்கங்களுக்கு பயிற்சி கொடுத்து கொண்டிருந்த நேரம், இந்தியாவில் பல்வேறு இடங்களில் பயிற்சி முகாம்கள் இந்திய அரசால் தோற்றிவிக்கபட்டன,திராவிட கழக கொளத்தூர் மணியின் தோட்டத்திலும் பயிற்சி நடைபெற்றது, அங்கு பயிற்சி பெற்றுகொண்டிருந்தவர்கள் LTTE யினர், அங்கு பயிற்ச்சியை பார்வை இட வரும் பிரபாகரன் இந்தியர் கொளத்தூர் மணிக்கியுடன் தன் எதிர்கால திட்டங்களுக்களுகாக நட்ப்பை ஏற்படுத்திகொண்டான்,கொளத்தூர் மணியின் வழியே தமிழரசன் நக்சல் குழுவை அறிந்துகொண்ட பிரபாவின் கிரிமினல் மூளை வேலை செய்தது, 

தமிழகத்தில் தன் இயக்கத்துக்கு ரகசிய தளங்களை இந்திய அரசுக்கு தெரியாமல் ஏற்படுத்தும் திட்டத்துக்கு தமிழரசனை பயன்படுத்தி கொள்ள நினைத்த பிரபாவின் நயவஞ்சக திட்டமான இந்தியாவை உடைப்பது, தமிழக இளைய சமூகத்தை தன் இயக்கத்தின் வளர்ச்சிக்கி பயன்படுத்திகொள்வது, தமிழ் நாட்டை தன் கட்டுபாட்டில் கொண்டுவரும் நோக்கில் தமிழ்தேசிய என்ற ஒன்றைடான், சொல்லி தமிழகத்திலும் எங்களை போன்று போராட வாருங்கள் என்று அழைப்பு விடுத்தான், மேலும் பயிற்சி, பணம், ஆயுதம் கொடுபதாக ஆசை காட்டி நக்சல் வாதிகளான இவர்களை தமிழ் தேசியம் என்று மூளை சலவை செய்பட்டனர். இவர்களின் கொள்கையால் அதிர்ந்த நக்சல் வாதிகள், பொலிட்பீரோ கூட்டத்தில் அனல்பறந்தது விவாதம் காரணம் அப்போதுதான் பொலிட்பீரோ உறுபினராக தரம் உயர்த்தப்பட்டு இருந்தான் தமிழரசன், முடிவில் "நாம் போராடுவது முதாளித்துவ மேலான்மன்மைக்கு, இந்தியாவை மாவோ போன்று கம்யூனிச நாடாக மாற்றுவது நம் எண்ணம், பிரிவினை அல்ல என்று சொல்லி மக்கள் யுத்தக் குழு என்று சொல்ல பட்ட நக்சல் குழுவில் இருந்து தமிழரசன், புலவர் கலியபெருமாள் இருவரும் நீக்கப்பட்டனர். 

LTTE பயங்கரவாதி பிரபாவில் பிடியில் முழுதாக அகப்படும் தமிழரசன் குழுவினர் -

இதன் பிறகு பயங்கரவாதி பிரபாவின் ஆலோசனை வழியே தமிழ்நாடு மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியை இருவரும் துவங்கினர். இக் கட்சியின் ஆயுதப் பிரிவாக “தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA)” என்ற அமைப்பை பயங்கரவாதி தமிழரசன் தோற்றுவித்தான்,
இலங்கை போல இந்தியாவிலும் 1985ல் இருந்து 1987 வரை இந்த இயக்கம் சிறுசிறு குண்டுவெடிப்புகளிலும் சமூகத்தின் பகைவர்களாக அவர்கள் கருதும் நபர்களை கொலை செய்தும் வந்தார்கள். இதில் பல பேர் LTTE விரோதிகள் என்பது தனிக்கதை, ஆக LTTE யின் கூலிப்படையாக கிட்டத்தட்ட செயல்பட்டனர்,

1986 இன் தொடக்கத்தில் கொல்லிமலையில் நடந்த அமைப்பு மாநாட்டில், பயங்கரவாதி பிரபாவின் அறிவுறுத்தல் வழி இந்தியா ஈழத்தில் LTTE இயக்கத்தை முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், ஏனைய அமைப்புகளை புறகணிக்க வேண்டும் இதுவே தமிழக தமிழர்களின் முடிவு என்றது அவர்களின் மாநாட்டு தீர்மானம், இதன் நகல் மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டது, அதன் வழியே வெடி பொருட்களை LTTE பயங்கரவாதிகளுக்கு குறிப்பாக ஜெலட்டின் குச்சிகள் கடத்தி கொண்டு கொடுத்தார்கள்,கோவையில் சாதாரண லேத் பட்டறை ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்டது, நல்ல பணமும் தங்க பிஸ்கட்டுகளாக கிடைத்ததால் இன்னும் உத்வேகத்துடன் உழைத்தார்கள், பயங்கரவாதி பிரபா இந்தியர்களை வைத்தே இந்திய படைகளை தாக்கி கொண்டிருந்தான் என்பது வேதனை,
கெமிக்கல் பொறியியல் பயின்ற பயங்கரவாதி தமிழரசன் குண்டுகள் தயாரிப்பதிலும் வல்லவனாக இருந்தான். பிரபா வெளிநாட்டில் இருந்து கொண்டுவரும் ஆயுத தயாரிப்பு புத்தகங்கங்கள் தமிழரசனுக்கு வழங்கப்படும் அவைகளை படித்து வெகு நேர்த்தியாக ஆயுதம் தயாரித்து கொடுப்பான், இதற்காக பலமுறை இலங்கை சென்று வருவான், 1985ம் ஆண்டு துவங்கி 2000வரை கணக்கெடுத்தால் தமிழத்தின் பல இடங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளை இந்த இயக்கம் நடத்தியது. தன்னிடம் உள்ள ஆட்களை தக்க வைக்க பல்வேறு வழிபரி கொள்ளைகள் அரியலூர், பெரும்பலூர் பகுதிகளில் நடத்தினான்,

LTTE பயங்கரவாதி பிரபாவின் உளவாளி - 

திணேஸ் மாஸ்டர் என்ற LTTE உளவுத்துறை பயங்கரவாதி இவர்களுடன் தங்கி இருந்தான், ராணுவ பயிர்ச்சியாலனாக பயங்கரவாதி தமிழரசன்னிடம் சொல்லபட்டாலும், LTTE பயங்கரவாதி தினேசின் முக்கிய வேலை தமிழரசன் குழுவினரை சோர்வில்லாமல் வைப்பதும், இவர்களை கண்காணிப்பதும், மேலும் பலரை ஆள் சேர்ப்பது, நிறைய சேப் ஹவ்ஸ் ஏற்படுத்துவது, தேவையான வெடிபொருட்களை தமிழரசன் குழுவின் மூலம் கடத்துவது என்பதே, இவனது பங்களிப்பை தெரிந்துகொண்ட கியூ பிரிவு உளவுத்துறை போலிஸ் இவனை சுற்றி வளைத்து பிடிக்கும் திட்டம் போட்டபோது அப்போதைய தமிழக அரசின் LTTE ஆதரவு கரங்கள் இவனுக்கு தகவல் சொல்லி தப்பவைத்தார்கள்,


குடமுருட்டி ஆறு குண்டு வெடிப்பு மூலம் உளவுத்துறை கண்டுகொண்ட தினேஷ் மாஸ்டர் -

1986-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தால் தான் இந்தியாவின் ஒட்டு மொத்த பார்வையும் தமிழ்நாடு விடுதலைப் படையினரின் மீதுதிரும்பியது. 1986-ம் வருடம் ஜனவரி மாதம் திருவையாற்றில் நடந்த தியாகராஜர் ஆராதனை விழாவிற்கு ராஜீவ்காந்தி வந்திருந்தார். அந்த சமயத்தில் குடமுருட்டி பாலத்தில் பயங்கரசப்தத்துடன் வெடிகுண்டு ஒன்று வெடித்துச் சிதறியது. அதிர்ந்து போனார்கள் அதிகாரிகள்.காரணம் ராஜீவ்காந்தி அந்த பாலத்தைக்கடந்து சில நிமிடங்கள் தான் ஆகியிருந்தன. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் சில துண்டுகாகிதங்களும் பறந்து கிடந்தன. தமிழ்நாடு விடுதலைப்படை என்று அந்த காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இதன் பிறகுதான் இந்த தீவிரவாதிகளை அடக்க தனி க்யூ ப்ராஞ்ச்படைகள் அமைக்கப்பட்டனது.வழக்கு விசாரணையின்போது 'தமிழரசன், ஜெகந்நாதன் மற்றும் தினேஷ் மாஸ்டர் ’ என்று மூன்று  பயங்கரவாதிகள் காரணம் என்பதை கண்டு பிடித்தனர், அதுவும் இந்த தினேஷ் மாஸ்டர் இலங்கையை சேர்ந்த அந்நிய நாட்டு  பயங்கரவாத  குழுவான ltte என்றதும் அதிர்ந்து போனார்கள்,

அரியலூர் மருதையாற்று பாலம் தரப்பு -

வன்னி LTTE பயங்கரவாதி பிரபாவின் உத்தரவில் பயங்கரவாதி தமிழரசன் மேற்கொண்ட மருதையாற்று பாலம் மீதான வெடிகுண்டு தாக்குதல் முதல் பல சம்பவங்களுக்கு சட்டவிரோத பயங்கரவாத சம்பவங்களுக்கு LTTE பிரபாவின் மூலம் வந்த உத்தரவில் LTTE உளவாளி திணேஸ் தமிழரசனை கொண்டு நிறைவேற்றினான். 

தமிழீழத்தை அங்கீகரிக்குமாறும், ஈழ போராளி குழுக்களில் LTTE இயக்கத்தை மட்டும்   ஆதரிக்குமாறும்  கோரி 1987ல் அரியலூரில் மருதையாற்றுப் பாலத்தில் வெடிகுண்டு வைத்து தகர்தான் தமிழரசன்,
15.3.87 அன்று காலை 4.45 மணிக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் டிரைவர் வெள்ளையன், 'தன் இரவு ட்யூட்டி முடியப்​போகிறது (?!), காலையில் போய் நிம்மதியாகத் தூங்கலாம்’ என்ற எண்ணத்துடன் பாலத்தின் வட புறம் நுழைந்தபோதுதான், தென்புற மூலையில் திடீரென வெடிச் சத்தம். அவர் திடீர் பிரேக் போட்ட இரண்டு நிமிடங்களில் எல்லாமே முடிந்துவிட்டன.
குண்டு வெடித்த பிறகு, தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்பினால்தான் விபத்து ஏற்பட்டது என்பது ரயில்வே அதிகாரிகளின் கருத்து. எட்டுப் பெட்டிகள் ஒன்றுக்குள் ஒன்று நுழைந்து, அந்தரத்தில் தொங்கி - அந்தப் பயங்கரத்தை - விவரிக்க வார்த்தைகளால் முடியாது. பாலத்தின் தென் முனையில் இருந்த ஒரு தூணில் வெடிகுண்டு வைக்கப்பட்டு, அதனுடன் இணைக்கப்பட்ட ஒயர், அங்கு இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பனை மரத்துக்கு அருகில் வைக்கப்பட்டு இருந்த பெட்டி போன்ற மின் அமைப்புக் கருவியுடன் இணைக்கப்பட்டு இருந்தது.
அன்றைய ஜூனியர் விகடன் பதிப்பு இவ்வாறு சொன்னது  அந்த கோர செயலை, 

“மத்திய மாநில அரசுகளே தமிழீழத்தை அங்கீகரி, விடுதலை புலிகளை மட்டும்  போராளி குழுவாக ஆதரி !” என்ற பிரசுரங்களை தமிழ்நாடு விடுதலைப்படை என்னும் பெயரால் பாலத்தின் அருகில் ஒட்டி இருந்தனர். இது முழு இந்தியாவிலும் எதிரொலித்தது. இச் சம்பவத்தில் திருச்சி நோக்கி வந்த மலைக்கோட்டை எக்ஸ்;பிரஸ் ரயில் கவிழ்ந்து 35 அப்பாவி பயணிகள் மரமணமடைந்ததால் இது முழு இந்தியாவிலும் பரபரப்பான செய்தியானது.LTTE பிரபா வழமை போல்  தமிழரசன் கூட எந்த தொடர்ப்பும் இல்லை, இந்திய இறையாண்மைக்கு நாம் ஒருபோதும் பங்கம் ஏற்படுத்தமாடோம்  என்று அறிக்கை விட்டார்கள், பழி தமிழரசன் மேல் பயன் LTTE பயங்கரவாதிகளுக்கு, ஆனால் தமிழக உளவுத்துறை கையில் ஆதாரங்கள் இருந்தும் அவர்களை பல அப்பாவி தமிழர்கள் உயிர் இழந்த போதும் செயல்படவிடாமல் முடக்கி போட்டது தமிழக அரசு, ஆகையால்தான் பொன்பரப்பி வங்கி கொள்ளை சம்பவத்துக்கு முன் பாலம் தகர்ப்பில் மூளையாக இருந்த LTTE பயங்கரவாதி தினேஷ் உடனே இரகசியமாக இலங்கைக்கு படகு மூலம் தப்பிவிட்டான், அல்லது தப்பவைக்கப்ட்டான்,ராஜீவ் கொலைவரை இதே நிலைதான்,

வங்கி கொள்ளை தமிழரசன் முடிவு -

பாலம் தரப்பின் பின் LTTE தமிழரசன் குழுவுடன் உள்ள நேரடி தொடர்ப்பை குறைத்து கொண்டார்கள், ஆனால் தமிழக அரசியல் வாதிகள் வைகோ, கொளத்தூர் மணி வழியே மிக ரகசிய தொடர்பில் இருந்தார்கள், காரணம் இந்த சம்பவம் குறித்து RAW அமைப்பு "இந்தியாவில் பயங்கரவாதம் செய்தால் இல்லாது ஒழிக்க படுவீர்கள்" என்று எச்சரிக்கை செய்தார்கள் பிரபாகரனை,
இந்த நேரடி தொடர்பு இல்லாது போனதால் தன்னிடம் உள்ள குழுவை தக்க வைக்க தமிழரசனுக்கு பணம் தேவை பட்டது, இதற்க்கு உதவ என்ன செய்யலாம் என்று LTTEயினரை தொடர்புகொள்ள முயற்சித்து கொண்டிருந்த வேலை "LTTE ரகசிய தகவல் அனுப்பினார்கள் அதில் பிரபாகரன் ஆரம்ப காலத்தில் செய்த வங்கி கொள்ளைகள் போன்று கொள்ளையடித்து நிலைமையை சமாளிக்கவும், இங்கும் நிலமை சரியில்லை போர் உக்கிரமாக இருக்கிறது, வெகு விரைவில் ஒன்றிணைவோம் என்றது அந்த செய்தி,
தமிழரசன் LTTE தொடர்புக்கு பின் கொள்கை என்று எதுவும் இல்லாமல் மூளை மழுங்கடிகபட்டு LTTE கொடுத்த தங்க பிஸ்கட்கள் தமிழரசனை அவனது கொள்கைகள் சிதறடித்து பல சமூக விரோத மக்கள் விரோத செயல்பாடுகளை செய்து வந்தான் ஆகையால் தமிழரசனுக்கு பல வழிபரி கொள்ளைகள் செய்து பழக்கம் உண்டு, கூடுதலாக கட்டபஞ்சாயத்து, திருட்டு, கடத்தல், கூலிக்கு கொலை, வியாபாரிகளிடம் மாமூல் வசூலிப்பு சகஜம்தான், ஆகையால் பேங்கில் சென்று லம்பாக கொள்ளையடிக்கும் யோசனை பிடித்திருந்தது,

தமிழரசன் முதல் வங்கி கொள்ளை முயற்சி - 

வங்கி கொள்ளை அனுபவம் இல்லாது உட்கோட்டை வங்கியை கொள்ளையிட சென்றபோது அங்கிருந்த மக்கள் பயங்கரவாதி தமிழரசனையும் அவரது அவனது ஆட்ககளையும்  பொதுமக்கள் விரட்டினர். ஆனால் இவர்கள் காரில் ஏறி  இலகுவாக தப்பிச் செல்லக்கூடியதாக இருந்தது.
தமிழரசன் இரண்டாவது வங்கி கொள்ளையும் முடிவும் - 
முதல் வங்கி கொள்ளையில் தோல்வி அடைந்தாலும் அது சில படிப்பினைகள் தந்தது, வங்கி கொள்ளை என்பது எளிதல்ல என்றும் வங்கியின் உள்ளக செயல்பாடுகள், தப்பிக்கும் வழிகளை ஆராய்ந்து திட்டம் போட்டு செய்ய வேண்டும் என்பது, ஆகையால் தன் சொந்த ஊர் பொன்பரப்பியில் உள்ள ஸ்டேட் பேங்கில் வேலை செய்யும் நண்பர் ஒருவர் உதவியுடன் பலமுறை வங்கிக்கு சென்று உளவு பார்த்து இரண்டாவது முயற்சியாக 01.09.1987ம் அன்று பயங்கரவாதி தமிழரசன் சொந்த ஊரான பொன்பரப்பியில் ஸ்டேட் பேங்கில் கொள்ளையடிக்க முயன்ற பயங்கரவாதி தமிழரசன் அங்கும் சிக்கிகொண்டன், தமிழரசன் ஏற்கனவே அந்த பகுதியில் தமிழரசன் குழு தொடர்ந்து நடத்திய வழிப்பறி கொள்ளை அதனால் ஆத்திரம் அடைந்து இருந்த பொதுமக்கள் சிக்கிய தமிழரசன் உட்பட அவனது குழுவினர் ஜந்;துபேர் பொது மக்களால் சூழப்பட்டு அடித்தே கொல்லப்பட்டனர்,
கூடா நட்ப்பு கேடாய் முடிந்தது ..