இந்திராகாந்தி மரணம் எவ்வாறு நிகழ்ந்தது ?
விமான விபத்தில் சஞ்சய் காந்தி மரணம்
அரசியலில் இந்திரா காந்திக்குத் துணையாக இருந்தவர், அவருடைய இளைய மகன் சஞ்சய் காந்தி. இந்திராவின் அரசியல் வாரிசு என்று கருதப்பட்டவர். துணிச்சல் மிக்கவர். அரசியல் வியூகங்களை வகுப்பதில் வல்லவர். ஜனதாவை முறியடித்து, இந்திரா காந்தி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற 6 மாத காலத்தில், சஞ்சய் காந்தி எதிர்பாராத விதமாக விமான விபத்தில், 33_வது வயதில் மரணம் அடைந்தது, நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்தது.
அரசியலில் இந்திரா காந்திக்குத் துணையாக இருந்தவர், அவருடைய இளைய மகன் சஞ்சய் காந்தி. இந்திராவின் அரசியல் வாரிசு என்று கருதப்பட்டவர். துணிச்சல் மிக்கவர். அரசியல் வியூகங்களை வகுப்பதில் வல்லவர். ஜனதாவை முறியடித்து, இந்திரா காந்தி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற 6 மாத காலத்தில், சஞ்சய் காந்தி எதிர்பாராத விதமாக விமான விபத்தில், 33_வது வயதில் மரணம் அடைந்தது, நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்தது.
இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி, விமானம் ஓட்டுவதில் பயிற்சி பெற்று, விமானி (பைலட்) ஆக வேலை பார்த்தார். அரசியலில் தாயாருக்குத் துணையாக இருந்து வந்த சஞ்சய் காந்தி, “மாருதி” கார் தொழிற்சாலையைத் தொடங்கினார். அத்துடன் சிறிய விமானங்களை ஓட்டுவதற்குப் பயிற்சி பெற்றுத்தேறினார். விமான ஓட்டுவோருக்கான சங்கத்தில் (“பிளையிங் கிளப்”) உறுப்பினராக இருந்தார். காலை வேளையில், சிறிய விமானத்தில் ஏறி, டெல்லியை ஒரு சுற்று சுற்றி விட்டுத் திரும்புவது சஞ்சய் காந்தியின் பொழுது போக்கு. 1980 ஜுன் 23_ந்தேதி காலை, சிறிய விமானத்தில் ஏறி டெல்லி மீது பறந்தார்.
சஞ்சய் பயணம் செய்த விமானம் “புஷ்பக்” என்ற சிறிய பயிற்சி விமானம் ஆகும். சஞ்சய் காந்தியுடன், விமானப் பயிற்சியாளர் சக்சேனாவும் பயணம் செய்தார். விமானத்தை சஞ்சய் காந்தி ஓட்டினார். காலை 8 மணிக்கு விமானம் புறப்பட்டது. இந்திரா காந்தி வீட்டுக்கு மேல் விமானம் பறந்து சென்றது. சிறிது நேரத்திற்கெல்லாம், விமானம் நொறுங்கி விழுந்தது. “12, வெலிங்டன் கிரசென்ட்” என்ற இடத்தில் உள்ள சஞ்சய் வீட்டுக்குப் பின்புறத்திலேயே விமானம் விழுந்தது. விபத்து நடந்த இடம் பாராளுமன்றத்தில் இருந்து 2 மைல். விமானம் மூன்று முறை வட்டமிட்டதாகவும், 4_வது முறை வட்டமிடும்போது மரத்தில் மோதி நொறுங்கி விழுந்ததாகவும், விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். விபத்து நடந்த இடத்திலேயே சஞ்சய் காந்தி இறந்துவிட்டார்.
சஞ்சய் காந்தியுடன் பயணம் செய்த சக்சேனாவும் அங்கேயே மரணம் அடைந்தார். விமானம் தரையில் மோதிய வேகத்தில், சஞ்சய் காந்தியின் தலை நொறுங்கி விட்டது. கை_கால் எலும்புகள் நொறுங்கிப் போய்விட்டன. உடலில் தலை முதல் கால் வரை காயங்கள் இருந்தன. ரத்த வெள்ளத்தில் கிடந்தார். விமானம் நொறுங்கி விழுந்த செய்தி கிடைத்ததும், தீயணைக்கும் படையினர் விரைந்து சென்றார்கள். நொறுங்கிய விமான பாகங்களை உடைத்தும், அறுத்தும் உள்ளே ரத்த வெள்ளத்தில் கிடந்த சஞ்சய் காந்தியின் உடலையும், சக்சேனா உடலையும் வெளியே எடுத்தார்கள். விமானம் நொறுங்கிய தகவல், இந்திரா காந்திக்கு டெலிபோன் மூலம் தெரிவிக்கப்பட்டது. அவர், விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தார். இதற்குள் சஞ்சய், சக்சேனா உடல்கள் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு விட்டன. ஆம்புலன்ஸ் வண்டி, ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்தது. டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, சஞ்சய் காந்தி ஏற்கனவே இறந்துவிட்டார் என்றும், காலை 8.15 மணி அளவில் அவர் இறந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சஞ்சய் காந்தி உடல் சிதைந்து போயிருந்ததால், டாக்டர்கள் பல மணி நேரம் ஆபரேஷன் செய்து, சிதைந்த பாகங்களை ஒன்று சேர்த்து தையல் போட்டனர். நெற்றியில் பெரிய தையல் போடப்பட்டது. சஞ்சய் உடல், இந்திரா காந்தி வீட்டுக்கு பகல் 1.40 மணி அளவில் கொண்டு செல்லப்பட்டது. சஞ்சய் காந்தியின் உடலைப் பார்த்ததும் இந்திரா காந்தி துயர மிகுதியால் கதறினார். பின்னர் சோகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார். எனினும், கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. சஞ்சய் காந்தியின் உடலைப் பார்த்து, அவர் மனைவி மேனகா கதறித் துடித்தார். சஞ்சய் காந்தியின் திடீர் மரணம், இந்தியாவையே அதிர்ச்சி அடையச் செய்தது. டெல்லியில் கடைகள் மூடப்பட்டன. மந்திரிகள், “எம்.பி”க்கள், பொதுமக்கள் சாரிசாரியாக இந்திரா காந்தி வீட்டுக்குச் சென்று சஞ்சய் காந்திக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
விமானம் நொறுங்கிக்கிடந்த இடத்துக்கு, இந்திரா காந்தி இரண்டு முறை சென்று பார்த்தார். நொறுங்கிக்கிடந்த பாகங்களில் எதையோ தேடினார். (சஞ்சய் காந்தியின் கெடிகாரத்தையும், சாவிக்கொத்தையும்தான் இந்திரா தேடினார் என்றும், சுவிஸ் பாங்கியில் சஞ்சய் காந்தி கணக்கு வைத்திருந்தார் என்றும், அதன் நெம்பர் சாவியிலோ, கெடிகாரத்திலோ இருந்திருக்கலாம் என்றும், பின்னர் சில பத்திரிகைகள் எழுதின.) விபத்து நடந்தபோது, ராஜீவ் காந்தி இத்தாலி நாட்டில் இருந்தார். அவருக்கு டெலிபோனில் இந்திரா தகவல் தெரிவித்தார். உடனே, விமானம் மூலம் ராஜீவ் டெல்லிக்குப் புறப்பட்டார். மறுநாள் இறுதி ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட டிரக் வண்டியில், சஞ்சய் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மந்திரிகளும், “எம்.பி”க்களும், லட்சக்கணக்கான பொதுமக்களும் ஊர்வலத்தில் நடந்து சென்றனர். ஊர்வலம், யமுனை நதிக்கரையை அடைந்தது. அங்கு, நேரு சமாதிக்கு அருகே அமைக்கப்பட்ட “சிதை”யில் சஞ்சய் காந்தி உடல் தகனம் செய்யப்பட்டது.
சஞ்சய் காந்தியின் ஒரே மகன் வருண். சஞ்சய் இறந்தபோது, வருண் மூன்று மாதக்குழந்தை. எனவே, “சிதை”க்கு ராஜீவ் காந்தி தீ மூட்டினார். முன்னதாக, துணை ஜனாதிபதி இதயதுல்லா, பாராளுமன்ற சபாநாயகர் பலராம் ஜாக்கர், “எல்லை காந்தி” கான் அப்துல் கபார்கான், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி, மாநில முதல்_மந்திரிகள், கவர்னர்கள், மத்திய மந்திரிகள், “எம்.பி”க்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். “சிதை”யில் வைக்கப்பட்ட சஞ்சய் முகத்தை இந்திரா காந்தி கடைசி முறையாகப் பார்த்தபோது, துயர மிகுதியால் கதறினார்.
சஞ்சய் மனைவி மேனகா அழுதபடி மயக்கம் அடைந்தார். தனது அரசியல் வாரிசாக உருவாகி வந்த சஞ்சய் காந்தி திடீரென்று மரணம் அடைந்தது, இந்திராவுக்குத் தாங்கமுடியாத துயரம் அளித்தபோதிலும், மனதைத் திடப்படுத்திக்கொண்டார். விமானம் ஓட்டும் பைலட்டாக வேலை பார்த்த ராஜீவ்காந்தியை ராஜினாமா செய்யச்சொன்னார். அதன்படி வேலையை விட்டு விலகிய ராஜீவ் காந்தி, தாயாருடைய பணிகளில் அவருக்கு உதவியாக இருந்து வந்தார்.
இந்திராகாந்தியின் கடைசி பேச்சு
இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள் (30_10_1984) ஒரிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார். 1967 தேர்தலின்போது, ஒரிசாவில் பிரசாரம் செய்த நேரத்தில்தான் அவருக்கு எதிராக பெரும் வன்முறை மூண்டு, கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். அவர் மூக்கில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இம்முறை, அதே மாநிலத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்றிரவு ஒரிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திரா பேசினார். அவர் பேச்சு உணர்ச்சி மயமானதாக இருந்தது. சொற்பொழிவுப்பிரிவு செயலாளர் சாரதா பிரசாத் தயாரித்துக் கொடுத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் பேசினார்.
இந்திராகாந்தியின் கடைசி பேச்சு
இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள் (30_10_1984) ஒரிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார். 1967 தேர்தலின்போது, ஒரிசாவில் பிரசாரம் செய்த நேரத்தில்தான் அவருக்கு எதிராக பெரும் வன்முறை மூண்டு, கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். அவர் மூக்கில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இம்முறை, அதே மாநிலத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்றிரவு ஒரிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திரா பேசினார். அவர் பேச்சு உணர்ச்சி மயமானதாக இருந்தது. சொற்பொழிவுப்பிரிவு செயலாளர் சாரதா பிரசாத் தயாரித்துக் கொடுத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் பேசினார்.
இந்தியாவின் பெருமை மிக்க வரலாறு சுதந்திரத்துக்காக நடைபெற்ற போராட்டம். இந்தியாவை எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் முத லியவற்றைக் குறிப் பிட்டுவிட்டு, தயாரிக்கப்பட்ட பேச்சிலிருந்து விலகி புதிதாகப் பேசத் தொடங்கினார். உணர்ச்சி மிகுதியில் குரல் தழுதழுக்க அவர் கூறினார்: “இன்று நான் இங்கிருக்கிறேன். நாளை இருப்பேனா என்று தெரியாது… என்னை சுட்டுக் கொல்ல எத்தனை முயற்சிகள் நடைபெற்றன என்பதை யாரும் அறியமாட்டார்கள். வாழ்வு, சாவு பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு இரண்டும் ஒன்றுதான். நான் கணிசமான காலம் வாழ்ந்து விட்டேன். அந்தக் காலத்தை, நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் செலவிட்டதில் பெருமைப்படுகிறேன். இது ஒன்றுதான் எனக்குப் பெருமையே தவிர, வேறு எதற்காகவும் நான் பெருமைப்படவில்லை. என் கடைசி மூச்சு உள்ளவரை நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்வேன்.
நான் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்த நாட்டை வளப்படுத்தும்; பலப்படுத்தும்.” _இவ்வாறு இந்திரா காந்தி கூறினார். இந்திராவின் பேச்சை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்த மக்கள், “இந்திரா வாழ்க” என்று குரல் எழுப்பினர். அடுத்த நாள் நடக்கப்போகும் விபரீதத்தை அவர்கள் அறியவில்லை. கூட்டம் முடிந்ததும் இந்திரா காந்தி, கவர்னர் பி.என்.பாண்டேயின் இல்லத்துக்குச் சென்று தங்கினார்.
அப்போது கவர்னர், “வன்முறையால் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற பொருள்பட பொதுக்கூட்டத்தில் பேசினீர்களே. ஏன்? அதைக்கேட்டு நான் ரொம்பவும் கவலையும், அதிர்ச்சியும் அடைந்தேன்” என்று இந்திராவிடம் கூறினார். “நான் என் மனதில் பட்டதைச் சொன்னேன். என் தாத்தாவும், அம்மாவும் அணு அணுவாக இறப்பதைக் கண்ணால் கண்டு, மனம் நொந்தவள் நான். நோய்வாய்ப்பட்டு, துயரப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சாவது மிகவும் கொடுமை. ஆரோக்கியமாக இருக்கும்போது, திடீரென்று மரணத்தைத் தழுவுவதையே நான் விரும்புகிறேன்” என்று இந்திரா பதிலளித்தார்.
இந்தச் சமயத்தில், டெல்லியில் இருந்து இந்திராவுக்கு டெலிபோன் வந்தது. பிரியங்காவும், ராகுலும் வீட்டிலிருந்து பள்ளிக்குப் போகும் போது கார் விபத்தில் சிக்கினார்கள் என்று, போனில் சோனியா தெரிவித்தார். பொற்கோவில் போரைத் தொடர்ந்து, தன் பேரக்குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படலாம், அல்லது கடத்தப்படலாம் என்று இந்திரா எதிர்பார்த்தார். எனவே, விபத்தில் சிக்கினார்கள் என்ற செய்தி கேட்டு, அவர் பதற்றம் அடைந்தார். “இது சிறிய விபத்துதான். யாருக்கும் காயம் இல்லை. நன்றாக இருக்கிறார்கள். உங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே சொன்னேன். கவலைப்படாதீர்கள். திட்டமிட்டபடி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினால் போதும்” என்று சோனியா எவ்வளவோ கூறியும், இந்திராவுக்கு நிம்மதி ஏற்படவில்லை. சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டு, உடனே டெல்லிக்குத் திரும்பத் தீர்மானித்தார். அதன்படி, அவருடைய சுற்றுப்பயணம்ரத்து செய்யப்பட்டது.
இரவோடு இரவாக, விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டார். நள்ளிரவுக்குப்பின் டெல்லியை அடைந்தார். நேராக காரில் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தபோது, பேரக்குழந்தைகள் இருவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். “அவர்களுக்கு காயம் எதுவுமில்லை. கவலைப்படாதீர்கள்” என்று இந்திராவிடம் கூறினார், சோனியா. இந்திரா, தன் செயலாளர் பி.சி.அலெக்சாண்டரை அழைத்துப் பேசினார். இந்திரா மிகவும் களைப்புடன் இருப்பதைக் கண்ட அலெக்சாண்டர், பேச்சை சுருக்கமாக முடித்துக்கொள்ள விரும்பினார்.
ஆனாலும், காஷ்மீர் பற்றியும், பஞ்சாப் பற்றியும் விரிவாக விவாதித்த பிறகே, அலெக்சாண்டரை அனுப்பினார். பிறகு செயலாளர் ஆர்.கே.தவானை அழைத்தார். மறுநாள் என்னென்ன நிகழ்ச்சிகள் தனக்கு இருக்கின்றன என்று கேட்டறிந்தார். முக்கியமானவற்றைத் தவிர, மற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்து விடும்படி கூறினார். நள்ளிரவு இரண்டு மணிக்குத்தான் படுக்கச்சென்றார். விடியற்காலை 4 மணிக்கு சோனியா எழுந்து பார்த்தபோது, இந்திரா ஏற்கனவே எழுந்துவிட்டதையும், குளிக்கத் தயாராகிக்கொண்டிருப்பதையும் கண்டார்.
இந்திரா காந்தி சுட்டுக் கொலை
மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான நிகழச்சி பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி அவருடைய வீட்டில் பாதுகாவலர்களாலேயே (சீக்கியர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டார்.
மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான நிகழச்சி பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி அவருடைய வீட்டில் பாதுகாவலர்களாலேயே (சீக்கியர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டார்.
சீக்கியர் பொற்கோவிலில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த போருக்குப்பிறகு, இந்திரா மீது சீக்கியர்களில் பலர் ஆத்திரம் கொண்டிருந்தனர். அதன் காரணமாக, இந்திரா காந்தியின் வீட்டில் காவல் பணியில் சீக்கியர்களை அமர்த்தக் கூடாது என்று ரகசியத்துறை டைரக்டர் கருத்து தெரிவித்தார்.
ஆனால் அந்த யோசனையை இந்திரா ஏற்கவில்லை. டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியின் வீடு ஒரே காம்பவுண்டுக்குள் அமைந்த இரு கட்டிடங்களைக் கொண்டதாகும். இவற்றில் பிரதமர் வசிக்கும் இல்லத்தின் வாசல், சப்தர்ஜங் ரோட்டில் உள்ளது. இந்த இல்லத்தை அடுத்த கட்டிடம், பிரதமரின் அலுவலகமாகும். இதன் வாசல் அக்பர் ரோட்டில் உள்ளது.
ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்துக்குள்ள தூரம் சுமார் 300 அடியாகும். இரண்டுக்கும் இடையில் உள்ள பாதை வழியே கார் செல்ல முடியும் என்றாலும், இந்திரா நடந்தே செல்வது வழக்கம். 1984 அக்டோபர் 31_ந்தேதி காலை 8 மணிக்கு, இந்திரா காந்தி பற்றி டெலிவிஷன் படம் ஒன்றை எடுப்பதற்காக, வெளிநாட்டுப் படப்பிடிப்பாளர் ஒருவர் வந்து, பிரதமரின் அலுவலகத்தில் காத்திருந்தார். அவருக்குப் பேட்டியளிக்க இந்திரா காந்தி தன் இல்லத்திலிருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்றார்.
இரண்டு கட்டிடங்களுக்கும் இடையே ஒரு நடைபாதை உள்ளது. அதில் அவர் நடந்து செல்ல, அவருக்கு சுமார் 7, 8 அடி தூரத்தில் பாதுகாப்பு அதிகாரி தினேஷ் பட் மற்றும் 5 மெய்க்காப்பாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னால், பிரதமரின் அந்தரங்கச் செயலாளர் ஆர்.கே.தவான் வந்து கொண்டிருந்தார். பாதையின் வலது புறத்தில் புதர் போன்ற செடிகளுக்குப் பின்னால் பிரதமரின் இல்ல பாதுகாவலர்கள் பியாந்த்சிங் (சப்_இன்ஸ்பெக்டர்), சத்வந்த்சிங் (கான்ஸ்டபிள்) ஆகியோர் நின்றிருந்தனர்.
இந்திரா காந்தி நடந்து வந்து கொண்டிருந்தபோது, பியாந்த்சிங் (வயது 33) தன் கைத்துப் பாக்கியை உருவி எடுத்து, இந்திரா காந்தியை நோக்கி ஐந்து முறை சுட்டான். அதே சமயம் சத்வந்த்சிங் (26) இயந்திரத் துப்பாக்கியால் (ஸ்டேன்கன்) சரமாரியாகச் சுட்டான். கண்மூடிக் கண் திறப்பதற்குள் இவ்வளவும் நடந்து விட்டன. இந்திரா காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்தன. ரத்தம் பீறிட அவர் கீழே சாய்ந்தார். (இந்திரா காந்தியை நோக்கி பியாந்த்சிங்கும், சத்வந்த்சிங்கும் திரும்பிய போது, இந்திராவின் பின்னால் வந்த மெய்க்காப்பாளர்கள் அதை கவனிக்கவே செய்தனர். ஆனால் அந்த இருவரும் இந்திரா காந்தியை நோக்கி வணங்குவதாகவே அவர்கள் நினைத்துவிட்டனர்.) இந்திரா காந்தி சுடப்பட்டு விட்டார் என்பதை தெரிந்து கொண்டதும், கொலையாளிகளை நோக்கி கமாண்டோ படையினர் சுட்டனர். இதில் பியாந்த்சிங் மரணம் அடைந்தான். சத்வந்த்சிங் படுகாயம் அடைந்தான்.
வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த சோனியா, துப்பாக்கி சத்தம் கேட்டு அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தார். இந்திரா காந்தி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக்கண்டு “அம்மா!” என்று கதறினார். இந்திரா காந்தியை ஆஸ்பத்திரிக்கு காரில் கொண்டு சென்றார்கள். பின் இருக்கையில் இந்திரா படுக்க வைக்கப்பட்டார். அவர் தலையை, தன் மடி மீது வைத்துக்கொண்டார் சோனியா. ஆஸ்பத்திரியில் இந்திராவுக்கு அவசர “ஆபரேஷன்” நடந்தது. இந்திரா உடலில் 22 குண்டுகள் பாய்ந்திருந்தன. அவற்றில் 8 குண்டுகள் உடம்பைத் துளைத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தன. இந்திராவைக் காப்பாற்ற டாக்டர்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஆனால் பலன் இல்லை. 2.25 மணிக்கு இந்திரா இறந்து விட்டார்” என்று டாக்டர்கள் அறிவித்தனர். எனினும் அகில இந்திய ரேடியோ மாலை 6 மணிக்குத்தான் இந்திராவின் மரணச்செய்தியை அறிவித்தது.
இந்திரா கொல்லப்பட்ட போது, ஜனாதிபதி ஜெயில்சிங் வெளிநாட்டில் இருந்தார். ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக, மேற்கு வங்காளத்துக்குச் சென்றிருந்தார். மூத்த மந்திரியான பிரணாப் முகர்ஜியும் அவருடன் இருந்தார். அவர்கள் சென்று கொண்டிருந்த காரை, ஒரு போலீஸ் ஜீப் வழி மறித்தது. “பிரதமர் வீëட்டில் ஒரு விபத்து நடந்துள்ளது. சுற்றுப் பயணத்தை நிறுத்திவிட்டு, உடனே டெல்லிக்குத் திரும்புங்கள்” என்ற செய்தி ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே ராஜீவ் காந்தியும், பிரணாப் முகர்ஜியும் ஒரு ஹெலிகாப்டர் மூலம் கல்கத்தாவுக்குச் சென்றனர். அங்கு “இந்தியன் ஏர்லைன்ஸ்” விமானம் ஒன்று தயாராக காத்துக்கொண்டிருந்தது. அதில் இருவரும் டெல்லிக்குப் பயணமானார்கள்
ராஜீவ் காந்தி பிரதமரானார்
கல்கத்தாவில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ராஜீவ் காந்தி, பெரும்பாலும் விமானிகள் அறையிலேயே இருந்தார். டெல்லியில் இருந்து, வயர்லெஸ் மூலம் அவருக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்திரா காந்தி இறந்து விட்டதாக பிற்பகல் 2.30 மணிக்கு தகவல் வந்தது. தன் உணர்ச்சிகளை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார், ராஜீவ்காந்தி. அவர் டெல்லி போய்ச்சேர்ந்தபோது, விமானநிலையத்தில் மந்திரிகளும், காங்கிரஸ் தலைவர்களும் கூடியிருந்தனர். அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்திருந்தனர்.
கல்கத்தாவில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ராஜீவ் காந்தி, பெரும்பாலும் விமானிகள் அறையிலேயே இருந்தார். டெல்லியில் இருந்து, வயர்லெஸ் மூலம் அவருக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்திரா காந்தி இறந்து விட்டதாக பிற்பகல் 2.30 மணிக்கு தகவல் வந்தது. தன் உணர்ச்சிகளை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார், ராஜீவ்காந்தி. அவர் டெல்லி போய்ச்சேர்ந்தபோது, விமானநிலையத்தில் மந்திரிகளும், காங்கிரஸ் தலைவர்களும் கூடியிருந்தனர். அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்திருந்தனர்.
நேரு மறைந்தபோதும் லால்பகதூர் சாஸ்திரி இறந்தபோதும், மூத்த மந்திரியான நந்தா, இடைக்கால பிரதமராகப் பதவி ஏற்றார். பிறகு பிரதமர் தேர்தல் நடைபெற்றது. அதே மாதிரி தன்னை இடைக்காலப் பிரதமராக ஆக்குவார்கள் என்று பிரணாப் முகர்ஜி எதிர்பார்த்தார். ராஜீவ் காந்தியைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதை அறிந்ததும் அவர் ஏமாற்றம் அடைந்தார். எனினும், அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மன்றக் குழு (பார்லிமெண்டரி போர்டு) கூடி, புதிய பிரதமராக ராஜீவ் காந்தியை தேர்ந்தெடுக்க முடிவு செய்தது. ஆட்சி மன்றக் குழுவில் மொத்தம் ஐந்து பேர் இடம் பெற்று இருந்தனர். அவர்களில் பிரதமர் இறந்துவிட்டார். 2 பேர் அப்போது டெல்லியில் இல்லை.
நரசிம்மராவ் (உள்துறை மந்திரி), பிரணாப் முகர்ஜி (நிதி மந்திரி) ஆகிய இருவர் மட்டுமே இருந்தனர். அவர்கள் இருவரும், ராஜீவ் பெயரை அறிவித்தனர். யேமன் நாட்டுக்கு சென்றிருந்த ஜனாதிபதி ஜெயில்சிங், இந்திரா மரணச் செய்தியை அறிந்ததும் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக டெல்லிக்குப் புறப்பட்டார். அன்று மாலை டெல்லி வந்து சேர்ந்தார். அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முடிவுடன்தான் அவர் வந்தார். காங்கிரஸ் தலைவர்களும் அதே முடிவில் இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும், ராஜீவ் காந்தி பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யுமாறு உத்தரவிட்டார். அன்று மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில், இந்தியாவின் புதிய பிரதமராக ராஜீவ் காந்தி பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி ஜெயில்சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
“இந்திரா காந்தி மந்திரி சபையில் இடம் பெற்றிருந்த மந்திரிகள் அனைவரும் தொடர்ந்து நீடிப்பார்கள். புதிய மந்திரிகள் நியமனம் இல்லை. மந்திரிகளின் இலாகாக்களும் மாற்றப்படமாட்டாது” என்று ராஜீவ் அறிவித்தார். அன்றிரவு ராஜீவ் காந்தி ரேடியோவில் பேசினார். அவர் கூறியதாவது:-
“இந்திரா காந்தி, படுகொலை செய்யப்பட்டுவிட்டார். அவர் எனக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கே தாயாக விளங்கினார். தன்னுடைய கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை, இந்திய மக்களுக்காக அவர் பாடுபட்டார். நாம் அனைவரும் துயரத்தில் முழ்கியுள்ள நேரம் இது. இந்த துயரத்தை _ சோதனையை நாம் தைரியத்துடனும், மனோ வலிமையுடனும் எதிர்கொள்ள வேண்டும். இந்திரா காந்தி மறைந்துவிட்டார். ஆயினும் அவருடைய ஆன்மா நம்முடன் வாழ்கிறது. அவருடைய ஆன்மாவுக்கு மரணம் இல்லை. நம்முடைய இந்திய நாடு, வரலாற்றுச் சிறப்பு மிக்கது. நாம் ஒற்றுமையுடன் இருந்து, இந்தியாவின் ஸ்திரத்தன்மையைக் காப்போம்.” இவ்வாறு ராஜீவ் கூறினார்.
பின்னர், ராஜீவ் தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடந்தது. இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலத்தை எவ்வாறு நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. இந்திரா உடலை அன்றிரவு அவர் வீட்டில் வைத்திருந்து விட்டு, பிறகு இரண்டு நாட்கள் “தீன் மூர்த்தி” இல்லத்தில் (நேரு வசித்த வீடு) பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்கு வைத்திருப்பது என்றும், 3_ந்தேதி இறுதி ஊர்வலம் நடத்துவது என்றும், யமுனை நதிக்கரையில் நேரு சமாதி அருகே தகனம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்திரா மரணச்செய்தி டெல்லியில் காட்டுத்தீ போல பரவியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சாரி சாரியாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பெண்கள் கதறி அழுதார்கள். பலர் மயக்கம் அடைந்தார்கள். இந்திரா காந்தியுடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய அவர் மருமகள் மேனகா, இந்திரா மரணச் செய்தி அறிந்ததும் ஓடோடி வந்தார். மாமியார் உடலைக் கண்டு அலறித்துடித்தார். நாள் முழுவதும் கண்ணீர் விட்டபடி சோகத்துடன் அமர்ந்திருந்தார். அன்று இந்திரா வீட்டில் இருந்த எவரும் தூங்கவில்லை.
உறவினர்கள் இந்திரா உடல் அருகே கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்தனர். இந்திரா வீட்டைச் சுற்றிலும், தோட்டத்திலும், ரோடுகளிலும் ஏராளமானவர்கள் சோகத்துடன் கூடியிருந்தனர். மறுநாள் காலை இந்திரா காந்தியின் உடல் “தீன் மூர்த்தி” இல்லத்துக்குக் கொண்டு போகப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட “கிï” வரிசையில் நின்று, இறுதி மரியாதை செலுத்தினர். இதற்கிடையே, இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று ஆத்திரம் அடைந்தவர்கள், சீக்கியர்களின் கடைகளையும், வீடுகளையும் தாக்கினார்கள்.
ஏராளமான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பயந்துபோன சீக்கியர்கள், வீடு_வாசலை விட்டுவிட்டு பஞ்சாப் மாநிலத்துக்கு தப்பி ஓடினர். இந்த கலவரங்களில் இறந்த சீக்கியர்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரம் இருக்கும் என்றும், டெல்லியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பின்னர் வந்த தகவல்கள் கூறின. சுமார் 50 ஆயிரம் பேர், வீடு_ வாசலை இழந்து அகதிகளானார்கள். 2_ந்தேதி இரவு, ராஜீவ் காந்தி டெலிவிஷனில் பேசினார். “இப்போது நடைபெற்று வரும் கலவரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்தக் கலவரங்கள், இந்திரா காந்தி எந்த லட்சியங்களுக்காக வாழ்ந்தாரோ, அந்த லட்சியங்களுக்கு எதிரானவை.
கலவரம் அடங்காவிட்டால், அதை அடக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டார். வன்முறைக் கும்பலில் காலிகளும் ஊடுருவியிருந்தனர். அதனால் கலவரம் நீடித்தது. வன்முறையை ஒடுக்குமாறு ராணுவத்துக்கு ராஜீவ் காந்தி உத்தரவிட்டார். அதன்படி, ராணுவத்தினர் கலவரத்தை அடக்கினர். டெல்லியில் ராணுவத்தினர் டாங்கிகளில் ரோந்து வந்தனர். 3_ந்தேதி காலை, இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலம் நடந்தது. அவர் உடல் பீரங்கி வண்டியில் வைக்கப்பட்டு, ராணுவத்தினர் அணிவகுத்து செல்ல ஊர்வலம் புறப்பட்டது.
மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் இறுதி ஊர்வலம் சென்ற அதே பாதையில், இந்திராவின் இறுதி ஊர்வலமும் சென்றது. கலவர சூழ்நிலை காரணமாக, ஊர்வலத்தை காண ரோட்டின் இருபுறமும் கூடியிருந்தவர்கள் எண்ணிக்கை முன் அளவுக்கு இல்லாமல் குறைவாகவே இருந்தது. யமுனை நதிக்கரையில், காந்தி, நேரு ஆகியோரின் சமாதிகள் உள்ள இடத்திற்கு அருகே, சாந்தி வனம் என்ற இடம் இந்திரா காந்தியின் உடல் தகனத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது.
ஊர்வலம் அந்த இடத்தை அடைந்ததும், இந்திராவின் உடல் பீரங்கி வண்டியில் இருந்து இறக்கப் பட்டு, சந்தனக் கட்டைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த “சிதை”யில் வைக்கப்பட்டது. இங்கிலாந்து பிரதமர் மார்க்கரெட் தாட்சர், ஜப்பான் பிரதமர் நாக சோனே, பாகிஸ்தான் அதிபர் ஜியா, வங்காள தேச அதிபர் எர் ஷாத், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா, பாலஸ்தீன தலைவர் அராபத் மற்றும் ஜாம்பியா, உகாண்டா, பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், மாநில முதல்வர்கள், கவர்னர்கள், அன்னை தெரசா, திரை உலகப் பிரமுகர்கள் வந்திருந்து இந்திராவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். (இந்த சமயத்தில், தமிழக முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று, மாற்று சிறுநீரகம் பொருத்த ஏற்பாடு நடந்து வந்தது. இந்த நிலையில், இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட தகவலை அறிந்தால், அவர் உடல் நிலை மேலும் மோசமடையும் என்பதால், அந்தத் தகவல் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை.)
தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், ராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, மரியாதை செலுத்தினர். பின்னர், “சிதை”க்கு ராஜீவ்காந்தி தீ மூட்டினார். “சிதை” எரிந்த போது, கூடியிருந்தவர்கள் “இந்திரா அமரர் ஆனார்”, “இந்திராவின் புகழ் வாழ்க” என்று குரல் எழுப்பினர். மறுநாள் இந்திராவின் அஸ்தி (சாம்பல்) பல கலசங்களில் சேகரிக்கப்பட்டது. அஸ்தியின் ஒரு பகுதி திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்பட்டது. “நான் இறந்தபின், என் அஸ்தி இமயமலை மீது தூவப்பட வேண்டும்” என்று தன் விருப்பத்தை இந்திரா காந்தி ஏற்கனவே ராஜீவ் காந்தியிடம் தெரிவித்திருந்தார். அதன்படி, தாயாரின் அஸ்தியின் ஒரு பகுதியை, இந்திய விமானப்படை விமானத்தில் ராஜீவ் காந்தி எடுத்துச்சென்று, இமயமலைச் சாரலில் தூவினார்.
No comments:
Post a Comment